Friday, January 21, 2011

மாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - (வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே

வணக்கம் நண்பர்களே இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் வரலாற்று நாயகர் மாவீரன் அலெக்ஸாண்டர் (தி கிரேட்)


மாவீரன் அலெக்ஸாண்டரை இரும்புப்பறவை என்று வருணிக்கிறார் திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் அந்த இருப்புப்பறவையை மேலும் வருணிக்கிறார் இவ்வாறு:
  
இரத்தமும் யுத்தமும் இவன் தாய்ப்பால்
வீரமும் விவேகமும் இவன் ஆயுதம்
கம்பீரமும் அழகும் இவன் சக்தி
எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க 
வைத்த கிரேக்கப்புயல்!
உலக வரைபடத்தை நிர்ணயம் செய்யும் அளவில்
உலக தேசங்களை தன் எஃகு பாதையில் நசுக்கி வைத்திருந்த
ஓர் இரும்புப்பறவை!
ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானதென்றால்
ஒவ்வொரு அணுவையுமே ஆயுதமாக கொண்ட மனிதன்
எத்தகையவன் அந்த மனிதன்தான் அலெக்ஸாண்டர்
அலெக்ஸாண்டர் (THE GREAT )

கி.மு 356-ஆம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி மாஸிடோனியாவில மன்னர் பிலிப்ஸ்க்கு  மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந்தை. குழந்தை பிறந்த நேரம் பிலிப்ஸ் மன்னன் அகமகிழ்ந்தான் காரணம் அதே நேரம்தான் பிலிப்ஸின் ராசியான குதிரை ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றிபெற்றிருந்தது. அலெக்ஸாண்டர் இந்த உலகை கட்டி ஆள்வான் என்று அரச சோதிடர்கள் கணித்து சொன்னதும் மன்னன் பிலிப்ஸின் மகிழ்ச்சிக்கு காரணம்.

பிறந்ததிலிருந்தே அலெக்ஸாண்டரிடம் அறிவுக்கூர்மையும் அதீத வீரமும் குடிகொண்டிருந்தன. அலெக்ஸாண்டர் சிறுவயதாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. தன் தந்தை பிலிப்ஸ் சிலிரியா நாட்டில் படையெடுப்பு நடத்திக்கொண்டிருந்தபோது மாசிடோனியாவில் படைவீரர்கள் சில கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதை பார்த்த அலெக்ஸாண்டர் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். அங்கே அந்த கைதிகள் புரட்சியில் ஈடுபட்டதாக கூறி அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட்து. இளவரசன் அலெக்ஸாண்டர் நீதிபதியைப் பார்த்து நான் ஏதாவது சொல்லலாமா? என்று கேட்டார், இளவரசன் என்பதால் நீதிபதியும் இணங்கினார்.

அலெக்ஸாண்டர் கைதிகளுக்கு ஆளுக்கொரு கத்தியைக் கொடுத்து சிலிரியாவில் அரசர் பிலிப்ஸ் யுத்தத்தில் இருக்கிறார் அந்த யுத்தத்தில் பங்கெடுத்து நீங்கள் போரிட்டால் உங்களுக்கு விடுதலை. மரணவாயிலிருந்து தப்பிய கைதிகள் அலெக்ஸாண்டர் சொன்னபடியே போரில் கலந்துகொள்ளச் சென்றனர். உயிர் விலை மதிப்பற்றது அதனை இழப்பதென்றால் அது தேசத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று தனது தீர்ப்புக்கான காரணத்தை விளக்கினார் அலெக்ஸாண்டர். நீதிபதிகளுக்கே இந்த நீதியைச் சொன்னபோது அலெக்ஸாண்டருக்கு வயது என்ன தெரியுமா? வெறும் ஏழுதான்.

அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை பறைசாற்ற இன்னொரு சம்பவம் வரலாற்றிலேயே மிக புகழ்பெற்ற குதிரையின் பெயர் ஃபுசிபேலஸ் எல்லா வித்தைகளையும் அறிந்த அந்த குதிரை பிலிப்ஸ் மன்னனிடம் விற்கப்பட்டது. அந்த குதிரை யாருக்குமே அடங்காமல் திடலில் குதித்துக் கொண்டிருந்தது. உன்னால் முடியாது வேண்டாம் என்று மன்னர் பிலிப்ஸ் எவ்வளவோ தடுத்தும் அதனை தாம் அடக்குவதாக கூறி களம் இறங்கினார் அலெக்ஸாண்டர். குதிரை தன் நிழலையே பார்த்து மிரல்கிறது என்று சில நொடிகளில் புரிந்துகொண்ட அலெக்ஸாண்டர் சூரியனை நோக்கி குதிரையை திருப்பினார். குதிரையை மிரட்சியை மறந்து அமைதியானது கூடியிருந்தவர் அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை கண்டு வியந்தனர்.

மிகவும் பிடித்துப்போனதால் அந்தக் குதிரையையே தனது சொந்தக் குதிரையாக்கிக்கொண்டார் அலெக்ஸாண்டர். அவரது இறுதிகாலம் வரை கூடவே இணைந்திருந்தது ஃபுசிபேலஸ்  அதனால்தான் வரலாற்றிலேயே ஆக புகழ்பெற்ற குதிரை என்ற பெயர் அதற்கு கிடைத்தது.

உலகம் இதுவரை கண்டிருக்கும் மிகப்பெரிய சிந்தனைச் செப்புகளுள் ஒருவரான அரிஸ்டாடிலை தனது 13 ஆவது வயதில் ஆசிரியராக பெற்றார் அலெக்ஸாண்டர்.  என்னிடம் மாணவனாகும் தகுதி உனக்கு இருக்கிறதா என்று அரிஸ்டாடில் அலெக்ஸாண்டரை கேட்க, அதற்கும் சற்றும் சளைக்காமல் எனக்கு ஆசியரியராகும் தகுதி உங்களுக்கு உள்ளதென்றால் உங்களுக்கு மாணவனாகும் தகுதி எனக்கும் உள்ளது என்று பதில் கூறினார் அலெக்ஸாண்டர்.

ஒரு உலகாளும் கர்வம் அலெக்ஸாண்டரின் கண்களில் தெரிவதை கவணித்த அரிஸ்டாடில் நூற்றுக்கணக்கான நுணுக்கங்களை அவருக்கு கற்றுக்கொடுத்தார். கி.மு 336-ஆம் ஆண்டு மன்னன் பிலிப்ஸ் கொலை செய்யப்பட்ட பிறகு தனது 20-ஆவது வயதில் அரியனை ஏறினார் அலெக்ஸாண்டர். அடுத்த 13 ஆண்டுகளில் துருக்கி, எகிப்து, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பல் நாடுகளை தன் காலடியில் கொண்டு வந்தார். அவரின் கடைசி ஆண்டுகளில் அவரது கவணம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. இந்து சமவெளியை கடந்து பஞ்சாப் மன்னன் ஃபோரஷை கடுமையான போருக்குப்பின் முறியடித்தார் அலெக்ஸாண்டர்.

பின்னர் ஃபோரஷிடம் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அலெக்ஸாண்டர் கேட்க ஒரு மன்னனைப்போல் நடத்த வேண்டும் என்று ஃபோரஷ் கூறினார். உடனே தான் கைப்பற்றிய தேசத்தை அவரிடமே ஒப்படைத்து அதனை மாசிடோனியாவின்  பாதுகாப்பு உட்பட்ட தேசமாக அறிவித்தார் நன்னெஞ்சம் கொண்ட அலெக்ஸாண்டர். இந்த கால கட்டத்தில்தான் அவரின் வெற்றிகளுக்கெல்லாம் உறுதுனையாக இருந்த ஃபுஸிபேலஸ் குதிரை இறந்து போனது. அந்த துக்கத்தில் ஒருவாரம் உணவே இல்லாமல் அலெக்ஸாண்டர் துவண்டு கிடந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. அதன் பின்னரும் சில வெற்றிகளை குவித்தார் அலெக்ஸாண்டர்.

5 ஆண்டுகள் தொடர்ந்து போரிட்ட களைப்பிலும் 12 ஆயிரம் மைல்கள் கடந்து வந்த சோர்விலும் அடுத்து ஒரு படி அடியெடுத்து வைக்கமாட்டோம் என்றனர் அலெக்ஸாண்டரின் படை வீரர்கள். தன் படையின் பலமே தனது பலம் என்பதை உணர்ந்த அலெக்ஸாண்டர் தனது இலக்குகளை சுருக்கிகொண்டு பாபிலோன் நகர் திரும்புமாறு தனது படைக்கு உத்தரவிட்டார்.  பாபிலோன் திரும்பிய சில நாட்களில் ஒரு மாபெரும் விருந்தில் கலந்துகொண்டார் அலெக்ஸாண்டர். அந்த விருந்து நடந்த மூன்றாம் நாள் அதாவது கி.மு 323-ஆம் ஆண்டு ஜூன் 10 ந்தேதி தனது 33-ஆவது வயதில் காலமானார் மாவீரன் அலெக்ஸாண்டர். விருந்தில் அவருக்கு விஷம் வைக்கப்பட்டது என்று சில வதந்திகள் பரவின. அவர் உண்மையிலேயே விஷத்தால்தான் மாண்டாரா என்பதை சரித்திரத்தால் துல்லியமாக கூற முடியவில்லை.

இந்த உலகமே தனக்கு போதாது என்றவனுக்கு ஆறடி நிலமே போதுமானதாக இருந்தது என்று அலெக்ஸாண்டரை வருணிக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து  அலெக்ஸாண்டர் பேராசைக்காரன் என்ற பொருளை அந்த வரிகள் தந்தாலும் நாம் அந்த மாவீரனின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும் அவர் ஒட்டுமொத்த உலகையும் வெல்ல நினைத்தது உண்மைதான். ஆனால் வெற்றிகள் பல குவிந்தபோதும் அலெக்ஸாண்டர் அகம்பாவமோ ஆணவமோ கொள்ளவில்லை. மாறாக தான் கைப்பற்றிய தேசங்களையும், மன்னர்களையும், வீரர்களையும் கன்னியமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது.

உலக சரித்திரத்தில் அலெக்ஸாண்டரைப்போல் வேறு ஒரு மாவீரன் கிடையாது என்பதால்தான் அவரை 'அலெக்ஸாண்டர் தி கிரெட்' என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு. அப்படிப்பட்ட மாவீரனுக்கு வீரம் பலத்தை தந்தது, விவேகம் புகழை தந்தது. வீரமும் விவேகமும் சம அளவில் அலெக்ஸாண்டரிடம் இருந்ததால்தான் அவருக்கு அந்த வானமும் வசப்பட்டது. இந்த நியதி நமக்கும் நிச்சயம் பொருந்தும்.

அலெக்ஸாண்டரைப்போல் நமக்கு வீரமும் விவேகமும் இல்லையென்றாலும் நாம் எண்ணுகின்ற இலக்கினை நோக்கி விடாமுயற்சியோடும், கடின உழைப்போடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்.


தகவலில் உதவி - நன்றி திரு. அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

98 comments:

  1. மாவீரன் அலெக்ஸாண்டரை பற்றி பல அரிய தகவல்களை தெரிவித்ததற்கு நன்றி..நன்றி.. நன்றி..

    See,
    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9630.html.

    comment and vote me..

    ReplyDelete
  2. நல்ல ப்திவு

    ஆனவம் இல்ல மன்னன்
    எதிர்களை கூட மரியாதையாக நடத்திய வீரன்

    ReplyDelete
  3. அருமையான பதிவு :)

    ReplyDelete
  4. மாவீரன் - ரஜினி படம்
    அலெக்ஸாண்டர் - விஜயகாந்த் படம்
    வரலாறு - அஜித் படம்
    நாயகர்(ன்)- கமல் ச்சீ ஜேகே ரித்தீஷ் படம்
    வானம் வசப்படுமே- கார்த்திக்குமார் படம்.

    ஓ இது சினிமா விமர்சனமா? உங்கள் விமர்சனம் அருமை. உங்கள் பணி தொடரட்டும்

    ReplyDelete
  5. karthikkumar said...

    அருமையான பதிவு :)//

    எங்க இந்த பதிவை படிச்சதை பத்தி இன்னொருவாட்டி சொல்லு பாப்போம்

    ReplyDelete
  6. அலெக்ஸாண்டரைப்போல் நமக்கு வீரமும் விவேகமும் இல்லையென்றாலும் நாம் எண்ணுகின்ற இலக்கினை நோக்கி விடாமுயற்சியோடும் கடின உழைப்போடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்.

    .... Good one.

    ...very nice write-up!

    ReplyDelete
  7. // sakthistudycentre-கருன் said...
    Me the First//

    ஆமாம் பாஸ் நீங்கதான் பர்ஸ்ட்டு

    ReplyDelete
  8. // sakthistudycentre-கருன் said...
    மாவீரன் அலெக்ஸாண்டரை பற்றி பல அரிய தகவல்களை தெரிவித்ததற்கு நன்றி..நன்றி.. நன்றி..

    See,
    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9630.html.

    comment and vote me..//

    தங்களது மேலான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

    உங்கள் தளத்திற்கு வருகிறேன்...நன்றி

    ReplyDelete
  9. // Speed Master said...
    நல்ல ப்திவு

    ஆனவம் இல்ல மன்னன்
    எதிர்களை கூட மரியாதையாக நடத்திய வீரன்//

    உண்மைதான் நண்பரே கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  10. // karthikkumar said...
    அருமையான பதிவு :)//

    நன்றி பங்காளி...

    ReplyDelete
  11. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    மாவீரன் - ரஜினி படம்
    அலெக்ஸாண்டர் - விஜயகாந்த் படம்
    வரலாறு - அஜித் படம்
    நாயகர்(ன்)- கமல் ச்சீ ஜேகே ரித்தீஷ் படம்
    வானம் வசப்படுமே- கார்த்திக்குமார் படம்.

    ஓ இது சினிமா விமர்சனமா? உங்கள் விமர்சனம் அருமை. உங்கள் பணி தொடரட்டும்///

    ம்ம்ம் .....வெளங்கிருச்சு...

    யப்பா ராசா நான் தெரியாம எழுதிட்டேன்...இனி வரலாற்றுப்பதிவு எழுதுவ எழுதுவ????ஹிஹி

    ReplyDelete
  12. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    karthikkumar said...

    அருமையான பதிவு :)//

    எங்க இந்த பதிவை படிச்சதை பத்தி இன்னொருவாட்டி சொல்லு பாப்போம்//

    விடுங்கண்ணே உங்ககூட சேர்ந்தா அப்படித்தான் இருக்கும்...ஹிஹி

    ReplyDelete
  13. // Chitra said...
    அலெக்ஸாண்டரைப்போல் நமக்கு வீரமும் விவேகமும் இல்லையென்றாலும் நாம் எண்ணுகின்ற இலக்கினை நோக்கி விடாமுயற்சியோடும் கடின உழைப்போடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்.

    .... Good one.

    ...very nice write-up!//

    நன்றிங்க மேடம்...

    ReplyDelete
  14. அலெக்சாண்டர் பற்றி இவ்வளவு தகவல்கள்! மிக அருமை நண்பரே! மிக அருமை!

    ReplyDelete
  15. சிறப்பான பதிவு, அலெக்ஸ்சாண்டர் குதிரை போலவே நெப்போலியன் குதிரையான மாரங்கோவும் பிரபலமானது.

    அலெக்ஸ்சாண்டர் தான் இறந்த பின்னர் தன் கல்லறையில் தன் கைகளை வெளியே தெரியும்படி புதைக்க சொல்லி, அதில் "இவன் இந்த உலகத்தையே வென்றவன், ஆனால் போகும்போது எதையுமே கொண்டு செல்லவில்லை என்று பொறியுங்கள்" என்று கூறியது அலெக்ஸ்சாண்டர் வாழ்கையில் நமக்கு கிடைக்கும் மாபெரும் தத்துவம்.

    ReplyDelete
  16. //அலெக்ஸாண்டரைப்போல் நமக்கு வீரமும் விவேகமும் இல்லையென்றாலும் நாம் எண்ணுகின்ற இலக்கினை நோக்கி விடாமுயற்சியோடும் கடின உழைப்போடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்.//

    வானத்தை காலடிக்கு கொண்டு வந்து விடலாம்....
    சூப்பர் பதிவு....

    ReplyDelete
  17. வழக்கம் போல அருமையான பதிவு!

    சினிமா ஆர்வலர்களுக்கு: 'அபியும் நானும்' படததில் இன்டர்வ்யூவுக்கு தயாராகும் தகப்பன் கேட்டு பதில் சொன்ன குதிரை இதுதானே?

    ReplyDelete
  18. உண்மையிலேயே அவர் GREAT தான்

    ReplyDelete
  19. ஆஹா சூப்பர் மேட்டரு..

    அம்மாவீரன் பற்றிய ஒரு செய்தியை, இங்கும் (எனது வலைப்பூ ) , அதனை அமிழ்தினும் இனிய செம்மேழித் தமிழில் அங்கும் (நண்பர் பி.எஸ்.வி வலைப்பூ) காணலாம்.

    ReplyDelete
  20. அருமையான பதிவு நண்பரே

    ReplyDelete
  21. ரொம்ப நல்ல பகிர்வு மாணவன்.

    ReplyDelete
  22. கி.மு க்கு முன் 356 ஆம் ஆண்டு ஜூலை 20 ந்தேதி மாஸிடோனியாவில மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந்தை

    நான் 10-ம் வகுப்புக்குள்ளேயே இவரைப்பற்றி தெரிந்துகொண்டது.. கி.மு. 356 ஆம் ஆண்டை மறக்க முடியாது.. அந்த அளவுக்கு மனதில் நிறுத்தும் வண்ணம் எனது வரலாற்றாசிரியர் எங்களுக்கு பாடம் கற்பித்தார்.. கதையம்சத்துடன் அவர் பாடம் நடத்தும் விதம் எல்லோரையும் கவரும்.. மக்கு மாணவர்கள் கூட வரலாற்றுப் பாடத்தில் 75 மதிப்பெண்கள் பெறவைத்தவர்.. அவ்விதமே தங்களின் பதிவும் அமைந்துள்ளது.. படங்களுடன்.. பதிவிட்டமைக்கும், பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி! மாணவன் அவர்களே..!

    ReplyDelete
  23. மீண்டும் ஒரு அற்புத பதிவு...எனக்கு தெரியாத நிறைய தகவல்கள்...நன்றி சகோ..

    ReplyDelete
  24. நல்ல பதிவு சகோ..

    சுவாரஸ்யமாக இருந்தது..

    இதை போன்று நிறைய எழுத வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  25. எங்கிருந்துங்க புடிக்கறீங்க, அருமையான தகவல்கள்..

    ReplyDelete
  26. மாவீரர்கள் தோன்றுவதில்லை உருவாகிறார்கள் . அலெக்சாண்டர் பற்றிய உங்களின் பதிவு பாராட்டத்தக்கது

    ReplyDelete
  27. அருமை நண்பா! எனக்குப் பிடித்த ஒரு வரலாற்று நாயகன்!
    ஒரு சின்ன விஷயம்! அந்தக்காலத்தில பாகிஸ்தான் கிடையாது அதுவும் இந்தியாதான்!

    ReplyDelete
  28. அருமையான தகவல்கள்.

    நல்ல பதிவு சகோ.

    ReplyDelete
  29. அலெக்சாண்டர் கிழக்கையும் மேற்கையும் கலாசார ரீதியாக இணைத்த மாவீரன் .
    அவர் மூலம் தான் கிழக்கிலும் மேற்கிலும் பண்பாட்டு வளர்ச்சி ஏற்பட்டது........................

    ReplyDelete
  30. // எஸ்.கே said...
    அலெக்சாண்டர் பற்றி இவ்வளவு தகவல்கள்! மிக அருமை நண்பரே! மிக அருமை!//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  31. // தமிழ் உதயம் said...
    அருமை,,, அருமை....//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  32. // எப்பூடி.. said...
    சிறப்பான பதிவு, அலெக்ஸ்சாண்டர் குதிரை போலவே நெப்போலியன் குதிரையான மாரங்கோவும் பிரபலமானது.

    அலெக்ஸ்சாண்டர் தான் இறந்த பின்னர் தன் கல்லறையில் தன் கைகளை வெளியே தெரியும்படி புதைக்க சொல்லி, அதில் "இவன் இந்த உலகத்தையே வென்றவன், ஆனால் போகும்போது எதையுமே கொண்டு செல்லவில்லை என்று பொறியுங்கள்" என்று கூறியது அலெக்ஸ்சாண்டர் வாழ்கையில் நமக்கு கிடைக்கும் மாபெரும் தத்துவம்.//

    தங்கள் வருகைக்கும் விரிவான தகவலுக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  33. // MANO நாஞ்சில் மனோ said...
    //அலெக்ஸாண்டரைப்போல் நமக்கு வீரமும் விவேகமும் இல்லையென்றாலும் நாம் எண்ணுகின்ற இலக்கினை நோக்கி விடாமுயற்சியோடும் கடின உழைப்போடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்.//

    வானத்தை காலடிக்கு கொண்டு வந்து விடலாம்....
    சூப்பர் பதிவு....///

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  34. // middleclassmadhavi said...
    வழக்கம் போல அருமையான பதிவு!

    சினிமா ஆர்வலர்களுக்கு: 'அபியும் நானும்' படததில் இன்டர்வ்யூவுக்கு தயாராகும் தகப்பன் கேட்டு பதில் சொன்ன குதிரை இதுதானே?///

    வருகைக்கு நன்றிங்க சகோ...

    குதிரை... இருக்கலாம் நான் அந்த படம் பார்க்கவில்லை தெரிந்த நண்பர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கபா

    ReplyDelete
  35. // Samudra said...
    உண்மையிலேயே அவர் GREAT தான்///

    ஆமாம் நண்பா அவர் கிரேட்தான்...

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  36. // Madhavan Srinivasagopalan said...
    ஆஹா சூப்பர் மேட்டரு..

    அம்மாவீரன் பற்றிய ஒரு செய்தியை, இங்கும் (எனது வலைப்பூ ) , அதனை அமிழ்தினும் இனிய செம்மேழித் தமிழில் அங்கும் (நண்பர் பி.எஸ்.வி வலைப்பூ) காணலாம்.///

    நன்றி நண்பரே, உங்களின் தளத்திற்கும் நண்பர் பி எஸ் வி தளத்திற்கும் வருகிறேன் நண்பரே

    ReplyDelete
  37. // தினேஷ்குமார் said...
    அருமையான பதிவு நண்பரே///

    நன்றி நண்பரே

    ReplyDelete
  38. // சுசி said...
    ரொம்ப நல்ல பகிர்வு மாணவன்.//

    நன்றிங்க சகோ...

    ReplyDelete
  39. // தங்கம்பழனி said...
    கி.மு க்கு முன் 356 ஆம் ஆண்டு ஜூலை 20 ந்தேதி மாஸிடோனியாவில மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந்தை

    நான் 10-ம் வகுப்புக்குள்ளேயே இவரைப்பற்றி தெரிந்துகொண்டது.. கி.மு. 356 ஆம் ஆண்டை மறக்க முடியாது.. அந்த அளவுக்கு மனதில் நிறுத்தும் வண்ணம் எனது வரலாற்றாசிரியர் எங்களுக்கு பாடம் கற்பித்தார்.. கதையம்சத்துடன் அவர் பாடம் நடத்தும் விதம் எல்லோரையும் கவரும்.. மக்கு மாணவர்கள் கூட வரலாற்றுப் பாடத்தில் 75 மதிப்பெண்கள் பெறவைத்தவர்.. அவ்விதமே தங்களின் பதிவும் அமைந்துள்ளது.. படங்களுடன்.. பதிவிட்டமைக்கும், பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி! மாணவன் அவர்களே..!//

    மிக்க நன்றி நண்பரே தங்களின் பள்ளிப்பருவ நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டது அருமை நண்பரே நன்றி

    ReplyDelete
  40. // ஆனந்தி.. said...
    மீண்டும் ஒரு அற்புத பதிவு...எனக்கு தெரியாத நிறைய தகவல்கள்...நன்றி சகோ..//

    மிக்க நன்றிங்க சகோ

    ReplyDelete
  41. // ஜெ.ஜெ said...
    நல்ல பதிவு சகோ..

    சுவாரஸ்யமாக இருந்தது..

    இதை போன்று நிறைய எழுத வாழ்த்துக்கள்..//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சகோ,

    கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்...

    ReplyDelete
  42. // இரவு வானம் said...
    எங்கிருந்துங்க புடிக்கறீங்க, அருமையான தகவல்கள்..//

    எல்லாம் படித்த கேட்ட தகவல்கள்தான் நண்பரே, இதில் முக்கியமாக ஒலி வானொலிக்குதான் மிகப்பெரிய நன்றி சொல்லனும்...

    வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  43. // போளூர் தயாநிதி said...
    மாவீரர்கள் தோன்றுவதில்லை உருவாகிறார்கள் . அலெக்சாண்டர் பற்றிய உங்களின் பதிவு பாராட்டத்தக்கது///

    உண்மைதான் நண்பரே,

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  44. // ஜீ... said...
    அருமை நண்பா! எனக்குப் பிடித்த ஒரு வரலாற்று நாயகன்!
    ஒரு சின்ன விஷயம்! அந்தக்காலத்தில பாகிஸ்தான் கிடையாது அதுவும் இந்தியாதான்!//

    நன்றி நண்பா,

    ReplyDelete
  45. // ஆயிஷா said...
    அருமையான தகவல்கள்.

    நல்ல பதிவு சகோ.///

    நன்றிங்க சகோ...

    ReplyDelete
  46. // அஞ்சா சிங்கம் said...
    அலெக்சாண்டர் கிழக்கையும் மேற்கையும் கலாசார ரீதியாக இணைத்த மாவீரன் .
    அவர் மூலம் தான் கிழக்கிலும் மேற்கிலும் பண்பாட்டு வளர்ச்சி ஏற்பட்டது.....///

    தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி நண்பா

    ReplyDelete
  47. அலெக்சாண்டரைப்பற்றி போஸ்ட் போட்டது அருமை.. ரமேஷ் கமெண்ட் பற்றி கவலைப்படாதீங்க.. அவரு அலெக்சாண்ட்ரா போஸ்ட் போட்டா படிப்பாரு

    ReplyDelete
  48. தங்களின் பகிர்வு சிறப்பா இருக்கு....

    எனக்கு ஒரு அரிஸ்டாடில் கிடைச்சியிருந்தான் இதே இடத்தி என்னையும் எழுதியிருப்பிங்க.... என்னசெய்ய.

    ReplyDelete
  49. வீரமும் விவேகமும் ஒருங்கே இருந்ததால் தான் அலெக்ஸாண்டரால் சாதிக்க முடிந்தது. அதனால் தான் குதிரையை எளிதாக அடக்க முடிந்தது. நல்ல பயனுள்ள பதிவு.
    நல்ல விஷயங்களை வலைப்பூ வரை கொண்டு வந்து கொடுக்கிற உங்களுக்கு சல்யூட்..

    ReplyDelete
  50. கவிதையுடன் ஆரம்பித்த விதம் அருமை.

    ReplyDelete
  51. //அலெக்ஸ்சாண்டர் தான் இறந்த பின்னர் தன் கல்லறையில் தன் கைகளை வெளியே தெரியும்படி புதைக்க சொல்லி, அதில் "இவன் இந்த உலகத்தையே வென்றவன், ஆனால் போகும்போது எதையுமே கொண்டு செல்லவில்லை என்று பொறியுங்கள்" என்று கூறியது அலெக்ஸ்சாண்டர் வாழ்கையில் நமக்கு கிடைக்கும் மாபெரும் தத்துவம்//

    ReplyDelete
  52. மாவீரரை பற்றிய தகவல்கள் அருமை..! தொகுத்தளித்த விதமும் அருமை.! பகிர்வுக்கு நன்றி தல.

    ReplyDelete
  53. இரவு வானம் said...

    எங்கிருந்துங்க புடிக்கறீங்க, அருமையான தகவல்கள்..//

    ஆங் வலை வீசி பிடிச்சாரு///

    ReplyDelete
  54. சி.பி.செந்தில்குமார் said...

    அலெக்சாண்டரைப்பற்றி போஸ்ட் போட்டது அருமை.. ரமேஷ் கமெண்ட் பற்றி கவலைப்படாதீங்க.. அவரு அலெக்சாண்ட்ரா போஸ்ட் போட்டா படிப்பாரு//

    அடுத்ததாக சிபி அண்ணன் அலெக்சாண்ட்ரா பட விமர்சனம் எழுதுவார்(சீ காவியம் தீட்டுவார்)

    ReplyDelete
  55. //ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானதென்றால்
    ஒவ்வொரு அணுவையுமே ஆயுதமாக கொண்ட மனிதன்
    எத்தகையவன் அந்த மனிதன்தான் அலெக்ஸாண்டர்///

    ...இந்த வரிகளே அவரின் வீரத்திற்கு சான்று.. ரொம்ப அழகா, விரிவா.. எழுதி இருக்கீங்க.. பகிர்வுக்கு நன்றிங்க. :)

    ReplyDelete
  56. Hi friends...

    Watch "Oliver Stone's" Alexander movie by Colin Farrel, Anthony Hopkins and Angelina Jolie. Good film to watch...

    ReplyDelete
  57. நல்ல பதிவு மாணவரே .. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

    ReplyDelete
  58. // சி.பி.செந்தில்குமார் said...
    அலெக்சாண்டரைப்பற்றி போஸ்ட் போட்டது அருமை.. ரமேஷ் கமெண்ட் பற்றி கவலைப்படாதீங்க.. அவரு அலெக்சாண்ட்ரா போஸ்ட் போட்டா படிப்பாரு//

    நன்றி அண்ணே

    ReplyDelete
  59. // சி. கருணாகரசு said...
    தங்களின் பகிர்வு சிறப்பா இருக்கு....

    எனக்கு ஒரு அரிஸ்டாடில் கிடைச்சியிருந்தான் இதே இடத்தி என்னையும் எழுதியிருப்பிங்க.... என்னசெய்ய.//

    வாங்கண்ணே உங்க கமெண்ட் வந்தாலே மகிழ்ச்சிதான்... இப்ப மட்டும் என்னாண்ணே உங்களபற்றியும் எழுதிடுவோம்....

    ReplyDelete
  60. // பாரத்... பாரதி... said...
    வீரமும் விவேகமும் ஒருங்கே இருந்ததால் தான் அலெக்ஸாண்டரால் சாதிக்க முடிந்தது. அதனால் தான் குதிரையை எளிதாக அடக்க முடிந்தது. நல்ல பயனுள்ள பதிவு.
    நல்ல விஷயங்களை வலைப்பூ வரை கொண்டு வந்து கொடுக்கிற உங்களுக்கு சல்யூட்..//

    வருகைக்கும் அன்பு கலந்த வணக்கத்துக்கும் மிக்க நன்றிங்க பாரதி...

    ReplyDelete
  61. // பாரத்... பாரதி... said...
    கவிதையுடன் ஆரம்பித்த விதம் அருமை.//

    பா.விஜய் எழுதிய வரிகள் அந்த மாவீரனுக்கே உரிய வீரம் ஒவ்வொரு வரிகளிலும் உள்ளது சிறப்பு

    ReplyDelete
  62. // பாரத்... பாரதி... said...
    //அலெக்ஸ்சாண்டர் தான் இறந்த பின்னர் தன் கல்லறையில் தன் கைகளை வெளியே தெரியும்படி புதைக்க சொல்லி, அதில் "இவன் இந்த உலகத்தையே வென்றவன், ஆனால் போகும்போது எதையுமே கொண்டு செல்லவில்லை என்று பொறியுங்கள்" என்று கூறியது அலெக்ஸ்சாண்டர் வாழ்கையில் நமக்கு கிடைக்கும் மாபெரும் தத்துவம்//

    உண்மைதான் நாம் எல்லோரும் இதை புரிந்துகொள்ள வேண்டும்

    நன்றிங்க பாரதி

    ReplyDelete
  63. // பிரவின்குமார் said...
    மாவீரரை பற்றிய தகவல்கள் அருமை..! தொகுத்தளித்த விதமும் அருமை.! பகிர்வுக்கு நன்றி தல.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  64. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    இரவு வானம் said...

    எங்கிருந்துங்க புடிக்கறீங்க, அருமையான தகவல்கள்..//

    ஆங் வலை வீசி பிடிச்சாரு///

    ஹிஹிஹி

    ReplyDelete
  65. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    சி.பி.செந்தில்குமார் said...

    அலெக்சாண்டரைப்பற்றி போஸ்ட் போட்டது அருமை.. ரமேஷ் கமெண்ட் பற்றி கவலைப்படாதீங்க.. அவரு அலெக்சாண்ட்ரா போஸ்ட் போட்டா படிப்பாரு//

    அடுத்ததாக சிபி அண்ணன் அலெக்சாண்ட்ரா பட விமர்சனம் எழுதுவார்(சீ காவியம் தீட்டுவார்)//

    சரி இல்லன்னா நீங்க எழுதுங்க...

    ReplyDelete
  66. // Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
    //ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானதென்றால்
    ஒவ்வொரு அணுவையுமே ஆயுதமாக கொண்ட மனிதன்
    எத்தகையவன் அந்த மனிதன்தான் அலெக்ஸாண்டர்///

    ...இந்த வரிகளே அவரின் வீரத்திற்கு சான்று.. ரொம்ப அழகா, விரிவா.. எழுதி இருக்கீங்க.. பகிர்வுக்கு நன்றிங்க. :)//

    நன்றிங்க சகோ...

    ReplyDelete
  67. // tshankar89 said...
    Hi friends...

    Watch "Oliver Stone's" Alexander movie by Colin Farrel, Anthony Hopkins and Angelina Jolie. Good film to watch..//

    தங்கள் முதல் வருகைக்கு முதலில் நன்றி நண்பரே

    அலெக்ஸாண்டர் படம் பார்த்துவிட்டேன் நண்பரே தெரியாத நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன் நன்றாக இருந்தது

    உங்கள் தகவலுக்கு மீண்டும் என் நன்றிகள் பல...

    ReplyDelete
  68. // வெறும்பய said...
    நல்ல பதிவு மாணவரே .. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி..//

    அப்படியே ஆகட்டும்...

    ReplyDelete
  69. இப்போதான் உங்கள் பதிவைப் படிக்கிறேன்.

    வரலாறு என்றாலே எனக்கு தலை கிறுகிறுத்துவிடும். ஆனாலும் பதிவு எழுத ஆரம்பித்த பிறகுதான் இதுபோன்ற பதிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்கிறேன்.

    அலெக்ஸாண்டர் பத்தி நிறைய சொல்லியிருக்கிறீர்கள். அந்த மாவீரனைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி!

    ReplyDelete
  70. எனக்கு ரொம்ப பிடித்த வரலாட்ட்று நாயகன் ........... காரணம் அவனது மனிதாபிமானம்..........சுருக்கமா அழகா சொல்லி இருக்கீங்க ...

    ReplyDelete
  71. அலெக்சாண்டர் தி கிரேட்... நீங்களும் கூடத்தான் தம்பி ...

    ReplyDelete
  72. அருமை மாணவரே, தொடரட்டும் உங்கள் பொன்னான பணி!

    ReplyDelete
  73. very very nice good work
    i like to read all ur post

    ReplyDelete
  74. அலெக்சாண்டரின் மீதிருந்த பிரமிப்பை மேலும் கூட்டியது உங்கள் பதிவு.

    ReplyDelete
  75. //அலெக்சாண்டர் தி கிரேட்... நீங்களும் கூடத்தான் தம்பி ...//

    இவருகிட்ட பாராட்டு வாங்குறது தேசிய விருது வாங்குவது போல...

    ReplyDelete
  76. // Sriakila said...
    இப்போதான் உங்கள் பதிவைப் படிக்கிறேன்.

    வரலாறு என்றாலே எனக்கு தலை கிறுகிறுத்துவிடும். ஆனாலும் பதிவு எழுத ஆரம்பித்த பிறகுதான் இதுபோன்ற பதிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்கிறேன்.

    அலெக்ஸாண்டர் பத்தி நிறைய சொல்லியிருக்கிறீர்கள். அந்த மாவீரனைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி!//

    தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் ரொம்ப நன்றிங்க சகோ....

    ReplyDelete
  77. // மங்குனி அமைச்சர் said...
    எனக்கு ரொம்ப பிடித்த வரலாட்ட்று நாயகன் ........... காரணம் அவனது மனிதாபிமானம்..........சுருக்கமா அழகா சொல்லி இருக்கீங்க ...//

    வாங்க அமைச்சரே கருத்துக்கு நன்றிங்க...

    ReplyDelete
  78. // சசிகுமார் said...
    மிக அருமை நண்பா//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  79. // கே.ஆர்.பி.செந்தில் said...
    அலெக்சாண்டர் தி கிரேட்... நீங்களும் கூடத்தான் தம்பி ...//

    வாங்கண்ணே, தங்களின் வருகையும் பாராட்டும் ரொம்ப மகிழ்ச்சியாகவும் பெருமையாவும் இருக்குண்ணே....அதுவும் நீங்க பாராட்டுனது ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அண்ணே

    ReplyDelete
  80. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அருமை மாணவரே, தொடரட்டும் உங்கள் பொன்னான பணி!///

    உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு என்ன கவலை....ஹிஹி பணி தொடர்ந்துகொண்டே இருக்கும்

    ReplyDelete
  81. // பிரியமுடன் பிரபு said...
    very very nice good work
    i like to read all ur post///

    தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  82. // சிவகுமாரன் said...
    அலெக்சாண்டரின் மீதிருந்த பிரமிப்பை மேலும் கூட்டியது உங்கள் பதிவு.///

    நன்றி நண்பரே

    ReplyDelete
  83. // பாரத்... பாரதி... said...
    //அலெக்சாண்டர் தி கிரேட்... நீங்களும் கூடத்தான் தம்பி ...//

    இவருகிட்ட பாராட்டு வாங்குறது தேசிய விருது வாங்குவது போல...///

    உண்மைதான் பாரதி அண்ணன்கிட்ட பாராட்டு வாங்குறது நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்தான்...

    நன்றிங்க பாரதி

    ReplyDelete
  84. இன்னிக்குத்தான் பர்ஸ்ட் டைம் உங்க ஏரியாவுக்கு வர்றேன்! அலெக்சாண்டர் பத்தி அருமையா சொல்லி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  85. // மாத்தி யோசி said...
    இன்னிக்குத்தான் பர்ஸ்ட் டைம் உங்க ஏரியாவுக்கு வர்றேன்! அலெக்சாண்டர் பத்தி அருமையா சொல்லி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!!///

    தங்களின் முதல் வருகைக்கும் அன்பு கலந்த வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    தொடர்ந்து இணைந்திருங்கள்........

    ReplyDelete
  86. // பலே பிரபு said...
    அருமை அண்ணா//

    நன்றி பிரபு

    ReplyDelete
  87. கடைசியா வந்தமைக்கு என்னை மன்னியுங்கள் ....
    மாவிரனின் வரலாற்றை சுருக்கி அதே சமயத்தில் அதன்
    கருத்துக்களை அழகுற கூறிய உங்களுக்கு நன்றிகள் பல

    ReplyDelete
  88. அண்ணே அசதி புட்டிக ...

    தொடர்ந்து நிறைய கலக்கணும்

    ReplyDelete
  89. என்னிடம் மாணவனாகும் தகுதி உனக்கு இருக்கிறதா என்று அரிஸ்டாடில் அலெக்ஸாண்டரை கேட்க அதற்கும் சற்றும் சளைக்காமல் எனக்கு ஆசியரியராகும் தகுதி உங்களுக்கு உள்ளதென்றால் உங்களுக்கு மாணவனாகும் தகுதி எனக்கும் உள்ளது என்று பதில் கூறினார் அலெக்ஸாண்டர். //


    அது இதுதான் துணிச்சல் ...

    மாவீரன் மாவீரன் தான்

    ReplyDelete
  90. //அரசன் said...
    கடைசியா வந்தமைக்கு என்னை மன்னியுங்கள் ....
    மாவிரனின் வரலாற்றை சுருக்கி அதே சமயத்தில் அதன்
    கருத்துக்களை அழகுற கூறிய உங்களுக்கு நன்றிகள் பல//

    வாங்கண்ணே தாமதாமா வந்தததற்கு பரவாயில்லை அண்ணே நீங்க எப்ப வேணுமுனாலும் வந்து படிங்க...

    ReplyDelete
  91. // அரசன் said...
    அண்ணே அசதி புட்டிக ...

    தொடர்ந்து நிறைய கலக்கணும்///

    கண்டிப்பா... உங்களைபோன்றோர்களின் ஆதரவோடு தொடரும்.....

    ReplyDelete
  92. // அரசன் said...
    என்னிடம் மாணவனாகும் தகுதி உனக்கு இருக்கிறதா என்று அரிஸ்டாடில் அலெக்ஸாண்டரை கேட்க அதற்கும் சற்றும் சளைக்காமல் எனக்கு ஆசியரியராகும் தகுதி உங்களுக்கு உள்ளதென்றால் உங்களுக்கு மாணவனாகும் தகுதி எனக்கும் உள்ளது என்று பதில் கூறினார் அலெக்ஸாண்டர். //


    அது இதுதான் துணிச்சல் ...

    மாவீரன் மாவீரன் தான்///

    ஆமாம் அண்ணே இந்த துணிச்சலும் விவேகம் கலந்த வீரமும் இருந்ததனால் அவர் மாவீரானாக சரித்திரத்தில் இடம் பிடித்தார்...

    நன்றி அண்ணே

    ReplyDelete
  93. சிறப்பான பதிவு, அலெக்ஸ்சாண்டர் குதிரை போலவே நெப்போலியன் குதிரையான மாரங்கோவும் பிரபலமானது.

    அலெக்ஸ்சாண்டர் தான் இறந்த பின்னர் தன் கல்லறையில் தன் கைகளை வெளியே தெரியும்படி புதைக்க சொல்லி, அதில் "இவன் இந்த உலகத்தையே வென்றவன், ஆனால் போகும்போது எதையுமே கொண்டு செல்லவில்லை என்று பொறியுங்கள்" என்று கூறியது அலெக்ஸ்சாண்டர் வாழ்கையில் நமக்கு கிடைக்கும் மாபெரும் தத்துவம்

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.