Monday, September 26, 2011

மைக்கேல் ஃபாரடே (மின்சக்தியை கட்டுப்படுத்திய விஞ்ஞானியின் கதை) - வரலாற்று நாயகர்!

வரலாற்று நாயகர்கள் (பாகம் - 1) மின்புத்தக வடிவில்! தரவிறக்க

இருபதாம் நூற்றாண்டுக்கு அடிப்படையாகவும், ஆணிவேறாகவும் இருந்தது அறிவியல் வளர்ச்சிதான். அந்த அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஒரு சக்தி மின்சாரம். ஆரம்பகாலத்தில் மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம்போல் பாயக்கூடியக்கூடியதாக இருந்தது. அதனால் மின்சார சக்தியை சரிவர பயன்படுத்த முடியாமல்போனது. இப்போது நாம் பயன்படுத்தும் பல கருவிகள் மின்சாரத்தால் இயங்குகின்றன. நாம் விரும்பும்படி நம் கட்டளைப்படி அந்த கருவிகள் செயல்படுவதற்கு காரணம் மின்சாரத்தைக் கட்டுபடுத்த உதவும் மின் இயக்கி (Dynamo) மற்றும் மின்மாற்றி (Transformer) என்ற கருவிகள்தான். அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்ததன் மூலம் மின்சாரம் என்ற கட்டுக்கடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்டுத்தந்த ஒரு மாபெரும் விஞ்ஞானியைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். படிப்பறிவே இல்லாத ஒருவர் பார்போற்றும் விஞ்ஞானியான கதைதான் அவரது கதை. ஆம் அவர்தான் மைக்கேல் ஃபாரடே என்ற அறிவியல் மேதை.

Wednesday, September 21, 2011

வரலாற்று நாயகர்கள் பாகம் ஒன்று - உங்களுக்காக மின் புத்தக வடிவில்!

வணக்கம் நண்பர்களே, எனது வலைத்தளத்தில் (http://urssimbu.blogspot.com/) வரலாற்று நாயகர்கள் என்ற தலைப்பில் காலம் கடந்தும் வரலாறு நினைவுகூறும் மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்து வருகிறேன். இந்த பதிவு எழுத முக்கிய காரணம் எனது பள்ளிப்பருவ காலத்திலிருந்தே அறிவியலிலும் வரலாற்றிலும், வரலாற்றில் தடம்பதித்த மாமனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஈடுபாடும்தான், அதன் வெளிபாடுதான் இதுபோன்ற மாமனிதர்களின் வாழ்க்கை குறிப்பு தகவல்களை சேகரித்து பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் உதித்தது, 

Monday, September 12, 2011

அணுவைத் துளைத்த விஞ்ஞானியின் கதை - ('சர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு') வரலாற்று நாயகர்!

'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்' என்று திருக்குறளைப் புகழ்ந்துப் பாடினார் ஒளவையார். திருக்குறள் எவ்வுளவு சிறிய வடிவில் எவ்வுளவு பெரிய விசயங்களைச் சொல்கிறது என்பதை எடுத்துக்காட்டத்தான் அப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மனிதனுக்குத் தெரிந்த ஆகச் சிறியப் பொருள் அணுதான். அந்த அணுவைத் துளைத்து ஏழு கடலையும் புகுத்துவதென்றால் முடியக்கூடியக் காரியமா? ஆனால் ஒருவிதத்தில் அந்த சொற்றொடரைக் கூறிய ஒளவையாரைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால் உலகிலேயே ஆகச்சிறியப் பொருளான அணுவைத் துளைக்க முடியாதா? என்று அவர் சிந்தித்திருக்கிறார் அப்போது வேர்விட்ட அந்த சிந்தனை பல காலத்திற்குப் பிறகு உண்மை என்று நிரூபிக்கப்பட்டது அறிவியல் உலகில். ஆம் அணுவையும் துளைக்க முடியும் என்று செய்து காட்டினார் ஒரு விஞ்ஞானி.

Monday, September 5, 2011

ஸ்காட் ஹமில்டன் (figure skating championship) - வரலாற்று நாயகர்!

அனைவருக்கும் வணக்கம், 'இன்று ஆசிரியர் தினம்' அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு மாணவனாக ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!


நாம் சராசரியாக வாழும் 60 அல்லது 70 ஆண்டுகளில் இந்த பூமிக்கு வெறும் பாரமாக மட்டும் வாழ்ந்துவிட்டு மறைகிறோமா? அல்லது பாரமாக பல சுமைகள் நம் தோள்களில் கனத்தாலும் மற்றவர்கள் நம்மை தலை நிமிர்ந்து பார்க்கும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு செல்கிறோமா? என்பதைப் பொருத்துதான் வரலாறு நம் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்கிறது. நம்மில் பெரும்பாலோர் வரையறுக்கப்பட்டப் பாதைகளில் செல்லும் வழிப்போக்கர்களாக மட்டும் இருப்பதால் மக்கள் தொகையில் ஒரு புள்ளி விபரமாகவே இருந்துவிட்டு மறைகிறோம். ஒருசிலர்தான் தங்களுக்கு முன் இருக்கும் முட்புதர்களைக் களைந்து புதியப் பாதைகளை அமைத்து புதிய பயணங்களை மேற்கொள்ளும் போதுதான் 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற உண்மையை உலகம் உணருகிறது. அந்த உண்மை விளையாட்டுத் துறைக்கு அதிகமாகவே பொருந்தும்.