Saturday, March 30, 2013

வின்செண்ட் வான் கோ - வரலாற்று நாயகர்!

தங்கள் வாழ்நாளில் இன்னல்களையும், சிரமங்களையும் சந்திக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்னல்களைத்தாண்டி சாதிப்பவர்களைத்தான் வரலாறும் நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. இன்னல் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தால் பரவாயில்லை ஆனால் இன்னலே வாழ்க்கையாக இருந்தால் எப்படியிருக்கும்? நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகர் அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். வாழ்ந்தபோது அவரது திறமையை துச்சமாக மதித்த உலகம் அவர் மறைந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு அவரது திறமையை மற்ற கலைஞர்களுக்கு அளவுகோலாக பயன்படுத்துகிறது. அவரது படைப்புகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்குகிறது. அவர்தான் 'Expressionism' என்ற ஓவியபாணியை உலகுக்கு அறிமுகம் செய்த பத்தொன்பதாம் நூற்றாண்டு ஓவியர் வின்செண்ட் வான் கோ (Vincent Van Gogh). 1853-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் Groot-Zundert-ல் பிறந்தார் Vincent Willem van Gogh. 

Monday, March 11, 2013

லூயி பாஸ்ச்சர் (நுண்ணுயிரியலின் தந்தை) (1822-1895) -வரலாற்று நாயகர்!

மனித வரலாறு எழுதப்படத் தொடங்கிய காலத்திலிருந்து உலகின் ஏதாவது ஒரு மூலையில் போர்களோ, சண்டையோ நிகழாமல் இருந்த நாட்களே கிடையாது. ஆனால் போர்கள் வாங்கிய உயிர்ப்பலியைக் காட்டிலும் இயற்கை வாங்கிய உயிர்ப்பலி அதிகம் என்பதுதான் உண்மை. ஆம் போர்களில் இறந்தவர்களைக்காட்டிலும் எண்ணிலடங்கா நோய்களுக்கு பலியானவர்கள்தான் அதிகம் என்கிறது வரலாறு. இயற்கை மனுகுலும் மீது தொடுக்கும் போர்தான் நோய். எனவேதான் அந்த நோய்களை தோற்கடித்து உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களும், மருந்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளும் கடவுள் அந்தஸ்த்திற்கு உயர்த்தப்படுகின்றனர்.