Monday, February 27, 2012

முகமது அலி (உலக குத்துச்சண்டை வீரர்) - வரலாற்று நாயகர்!

எந்த ஒரு துறையிலும் உச்சத்தை எட்டுவோருக்கு 'The Great' அல்லது   'The Greatest' என்ற உயரிய அங்கீகாரத்தை வழங்குகிறது வரலாறு. விளையாட்டுத் துறையில் அந்தத் தகுதியை எட்டிய ஒரு வீரரைப் பற்றி தெரிந்துகொள்ளவிருக்கிறோம். விளையாட்டுத் துறையில்  'The Greatest' என்ற தகுதியைப் பெற்ற ஒரே வீரர் குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னன் முகமது அலி. 1942 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி அமெரிக்காவில் ஒரு கருப்பினத்தவர் குடும்பத்தில் பிறந்தார் முகமது அலி. பிறந்தபோது அவருக்கு சூட்டப்பட்ட பெயர் Cassius Marcellus Clay.

Sunday, February 19, 2012

'தமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் - வரலாற்று நாயகர்!

அன்பின் நண்பர்களுக்கு இனிய வணக்கம், 

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் 158-ஆவது பிறந்தநாளான இன்று (19/02/2012) தமிழ்த்தாத்தாவை வணங்கி அவரது வாழ்க்கை வரலாற்றுப் பதிவை சமர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!

நம்மில் பலர் இருமொழி ஆற்றலைப் பெற்றிருந்தாலும் நம் தாய்மொழியான தமிழ்மொழியில் பேசிக்கொள்ளும் போது ஏற்படும் உணர்வு ஆங்கிலத்தில் பேசும்போது ஏற்படுவதில்லை. தாய்மொழியில் பேசிக்கொள்ளும் சுகமே அலாதியான ஒன்று. அது எந்த மொழிப் பிரிவினருக்கும் பொருந்தும். நமது தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி அறிவிக்கப்பட்டதை நினைத்து நாம் நியாயமாக மகிழலாம். ஆனால் மகிழ்வதோடு நின்றுவிட்டால் நாம் நன்றி மறந்தவர்களாவோம். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்ற ஒரு உண்மையே நமது மொழி 'செம்மொழி' தகுதி பெறுவதற்கு போதும் என்றாலும், அதனை அதிகாரப் பூர்வமாக பெற அது பல்வேறு இன்னல்களை கடக்க வேண்டியிருந்தது.

Sunday, February 12, 2012

சார்லஸ் டார்வின் ( "பரிணாமவியலாரின் தந்தை") - வரலாற்று நாயகர்!

வணக்கம் நண்பர்களே, 
இன்று (12/02/2012) பிப்ரவரி-12-ஆம் நாள் "பரிணாமவியலாரின் தந்தை" என்று போற்றப்படும் 'சார்லஸ் டார்வின்' பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாற்றுப்பதிவு ஒரு சமர்ப்பனம்!.


'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த இனம் தமிழினம்' என்ற சொற்றொடரை நம்மில் பலர் கேட்டிருப்போம். கல் தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றி விட்டான் என்பது கேட்பதற்கு சற்று அபத்தமாக இருந்தாலும் தமிழினம் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை எடுத்துக்கூற அப்படிப்பட்ட ஒரு மிகையான சொற்றொடர் உருவாக்கப்படிருக்கலாம். சரி கல்லும், மண்ணும் கிடக்கட்டும் மனிதன் எப்படி தோன்றினான் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டா? ஏதாவது ஒரு காலகட்டத்தில் எல்லோருக்கும் உதிக்கும் ஒரு கேள்விதான் அது. கிட்டதட்ட எல்லா மதங்களும் கடவுள்தான் மனிதனை படைத்தார் என்கின்றன. எனவே மத நம்பிக்கையற்ற சிறுபான்மையினரைத் தவிர்த்து உலகின் பெரும்பான்மையினர் தங்களை கடவுளின் படைப்பு என்று அன்றும் நம்பினர், இன்றும் நம்புகின்றனர். 


Monday, February 6, 2012

சார்லஸ் டிக்கென்ஸ் - வரலாற்று நாயகர்!

நாம் உயர்நிலைப்பள்ளியில் பயின்றபோது ஆங்கில பாடத்தில் Oliver Twist என்ற நாவலை மறந்திருக்க முடியாது. குடும்ப ஏழ்மையின் காரணமாக சிறு வயதிலேயே குழந்தைத் தொழிலாளியாக மாறி ஒரு சிறுவன் படும் இன்னல்களை சித்தரிக்கும் ஓர் அற்புத நாவல் அது. 'ஆலிவர் ட்விஸ்ட்' என்ற அந்த கதாபாத்திரமும் அந்த நாவலும் தத்ரூபமாக அமைந்ததற்கு முக்கிய காரணம் அந்த கதாசிரியர் தனது சொந்த அனுபவங்களை எழுதியிருப்பதுதான். பொதுவாக கற்பனைக் கதைகளைக் காட்டிலும் அனுபவக் கதைகளுக்கு வீரியம் அதிகமாக இருக்கும். அப்படி வீர்யமிக்க பல இலக்கிய படைப்புகளைத் தந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒரு எழுத்தாளரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.