Monday, December 6, 2010

கல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்!

நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் ஒருசில பெரும் தலைவர்கள் தோன்றுகின்றனர். பொதுநலத்தை உயிராகப் போற்றி தங்கள் பணியை செவ்வெனச் செய்கின்றனர். அரசியலில் லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை மலிந்த ஒரு தேசத்தில் இப்படிப்பட்ட ஒரு மாமனிதன் இருந்திருக்கிறார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டிருக்கிறீர்களா! அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர் மூத்தத் தலைவர்கள் அரசியலில்  பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து  அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதவியையே துறந்தவர்.

'கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்' என்று கூறி பட்டித் தொட்டிகளெல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர். தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர், சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்கு தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாட்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர் கர்ம வீரர் காமராஜர்.

இவரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்திருந்தால் நமது மாநிலம் தரணிப் போற்றும் அளவுக்கு உயர்ந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. 1903 ஆம் ஆண்டு ஜீலை 15-ஆம் நாள் தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் காமராஜர், ஏழ்மையான குடும்ப ஏழ்மையின் காரணமாகவும், படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகள்தான் கல்வி கற்க முடிந்தது.

12-ஆவது வயதில் தனது தாய்மாமனின் துணிக்கடையில் வேலைப் பார்த்தார். அப்போது இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவருக்கு 15 வயதான போது ஜாலியன் வாலாபாக் படுகொலைப் பற்றிய செய்தி அவரின் காதுக்கு எட்டியது. அதே நேரம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று தனது 16-ஆவது வயதில் அவர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் சவுகர்யம், பதவி, வசதி என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.

1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார். 

மிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை. ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார். அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில்  நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு 

அப்படி அவர் என்ன செய்தார்? அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர் அரவனைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? “பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள் அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை அதனை தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள் நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள்” என்பதுதான்.


அவர் நல்லாட்சியில் கல்வித்துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார். பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார். எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார். ஏழை சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தார். 

ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார். அவ்ர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதன மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார். அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் அறிமுகம்  செய்யப்பட்டன. நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது.

காமராஜரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது. வைகை  அணை, மணிமுத்தாறு அணை, கீழ்பவானி அணை, பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன. தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார் காமராஜர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாயின. அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்.

இப்படிப்பட்ட சிறந்த நல்லாட்சியை வழங்கியதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வளவும் செய்த அவர் அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது. காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு  நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் பரிந்துரை செய்தார்.

இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் பணிக்குழு. அந்தத் திட்டத்திற்கு 'காமராஜர் திட்டம்' என்றே பெயரிடப்பட்டது. தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அந்த அதிசய தலைவர். அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய், எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தந்தார் ஜவகர்லால் நேரு, அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.


இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அந்த இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை 'கிங்மேக்கர்' என்று அழைத்தனர் பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும். தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே குறியாக இருந்தார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தனது 72-ஆவது அகவையில் காலமானார்.

அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரிய “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர். ஆம் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!


தன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா? சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய பந்தா எப்போதும் அவரிடம் இருந்ததே இல்லை எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும், கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு. அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?


முறையான கல்விகூட இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வுளவும் செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்” நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும், நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும், சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம். அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும். வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்!


“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”


(தகவலில் உதவி - நன்றி திரு. அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)


பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

76 comments:

 1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.

  நனைவோமா ?

  ReplyDelete
 2. அப்படி அவர் என்ன செய்தார் அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர் அரவனைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா! //
  அவரை போன்றோர் தான் இப்போது நம் தமிழகத்திற்கு தேவை

  ReplyDelete
 3. பல அறியத தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள் மிக்க நன்றி...

  ReplyDelete
 4. பதிவு அருமை நண்பா

  ReplyDelete
 5. இப்போ தான் உங்க பதிவ படிச்சேன்.... நல்லா எழுதி இருக்கீங்க...

  ReplyDelete
 6. அருமையா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. நல்ல பதிவு மாணவன் . இன்றைய அரசியவாதிகள் எவரும் காங்கிரஸ் காரர்கள் உட்பட அவரது பெயரை பயன்படுத்தகூடாது .

  ReplyDelete
 8. //“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
  ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”//
  nice! :-)

  ReplyDelete
 9. //தமிழக வரலாறு அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?//

  அப்படி சந்தித்தால் கண்டிப்பாக இந்தியா வல்லரசு என்ற அந்தஸ்து பெறும்

  நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. உபயோகமான பதிவு. கர்மவீரரை நினைவுப்படுத்தி நெகிழவைத்துவிட்டீர்கள்

  ReplyDelete
 11. //ம.தி.சுதா said...

  எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.//

  நல்ல திருப்தியா சாப்பிட்டு பசியாருங்க...

  முதல் நபராக வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

  தொடர்ந்து இணைந்திருங்கள்...

  ReplyDelete
 12. //karthikkumar said...

  அப்படி அவர் என்ன செய்தார் அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர் அரவனைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா! //
  அவரை போன்றோர் தான் இப்போது நம் தமிழகத்திற்கு தேவை//

  இனி அப்படி ஒருவர் வருவார் என்பது சந்தேகம்தான் நண்பா...
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

  தொடர்ந்து இணைந்திருங்கள்...

  ReplyDelete
 13. //ம.தி.சுதா said...

  பல அறியத தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள் மிக்க நன்றி...//

  இன்னும் தொடரும்...
  தொடர்ந்து இணைந்திருங்கள்...

  ReplyDelete
 14. //karthikkumar said...

  பதிவு அருமை நண்பா//

  தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பா
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 15. //Arun Prasath said...

  இப்போ தான் உங்க பதிவ படிச்சேன்.... நல்லா எழுதி இருக்கீங்க...//

  தங்கள் முதல் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பா
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 16. //பதிவுலகில் பாபு said...

  அருமையா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..//

  வாங்க நண்பரே தங்கள் முதல் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 17. //நா.மணிவண்ணன் said...

  நல்ல பதிவு மாணவன் . இன்றைய அரசியவாதிகள் எவரும் காங்கிரஸ் காரர்கள் உட்பட அவரது பெயரை பயன்படுத்தகூடாது //

  கர்மவீரர் காமராஜர் என்ற மாமனிதரின் பெயரை கண்டிப்பாக யாருக்கும் பயன்படுத்த அருகதை கிடையாது
  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 18. //ஜீ... said...

  //“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
  ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”//
  nice! :-)//

  நிச்சயமாக தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருங்கள்...
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

  தொடர்ந்து இணைந்திருங்கள்...

  ReplyDelete
 19. ////தமிழக வரலாறு அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?//

  அப்படி சந்தித்தால் கண்டிப்பாக இந்தியா வல்லரசு என்ற அந்தஸ்து பெறும்

  நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் //

  இனி அப்படி ஒருவரை தமிழகம் சந்திக்குமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது சகோ,
  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 20. //கவிதை காதலன் said...

  உபயோகமான பதிவு. கர்மவீரரை நினைவுப்படுத்தி நெகிழவைத்துவிட்டீர்கள்//

  அவரின் ஒலி வடிவத்தை கேளுங்கள் இன்னும் நெகிழ்ச்சியாக இருக்கும் நண்பரே,
  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 21. நல்ல தகவல்கள் மாணவன்!! வாழ்த்துக்கள்!! நன்றி!

  ReplyDelete
 22. நல்ல பதிவு மாணவன் . வாழ்த்துக்கள் தொடருங்கள் இது போல்

  ReplyDelete
 23. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 24. அருமையான தகவல்கள்....இது போன்ற தகவல்கள் வலைப்பதிவர்களின் மேன்மையை உலகிற்கு தெரிவிக்கும்

  ReplyDelete
 25. மிக சிறப்பாக பதிவு செய்து இருக்கிறீர்கள்.. காமராஜருக்கு இணையான ஒரு தலைவரை இனி நாம் பார்க்கவே போவதில்லை..

  ReplyDelete
 26. //வைகை said...

  நல்ல தகவல்கள் மாணவன்!! வாழ்த்துக்கள்!! நன்றி!//
  வாங்க அண்ணே, கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 27. //வெறும்பய said...

  நல்ல பகிர்வு..//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

  தொடர்ந்து இணைந்திருங்கள்...

  ReplyDelete
 28. //r.v.saravanan said...

  நல்ல பதிவு மாணவன் . வாழ்த்துக்கள் தொடருங்கள் இது போல்//

  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 29. //அன்பரசன் said...

  அருமையான பகிர்வு.//

  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 30. //ஆர்.கே.சதீஷ்குமார் said...

  அருமையான தகவல்கள்....இது போன்ற தகவல்கள் வலைப்பதிவர்களின் மேன்மையை உலகிற்கு தெரிவிக்கும்//
  நிச்சயமாக நண்பரே,
  கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 31. //கே.ஆர்.பி.செந்தில் said...

  மிக சிறப்பாக பதிவு செய்து இருக்கிறீர்கள்.. காமராஜருக்கு இணையான ஒரு தலைவரை இனி நாம் பார்க்கவே போவதில்லை..//

  முற்றிலும் உண்மை அண்ணே ,இனி அவரை போன்று ஒருவரை நிச்சயமாக பார்க்க முடியாது

  கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அண்ணே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 32. ஜாதி வகுப்பு ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளி பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார் அவ்ர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழை போதன மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார் அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் அறிமுகம் ஆயின நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது


  ......மகத்தான சேவை - பலர், மறந்து விட்ட சேவை.
  அருமையான பதிவுங்க. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 33. //Chitra said...

  ......மகத்தான சேவை - பலர், மறந்து விட்ட சேவை.
  அருமையான பதிவுங்க. பாராட்டுக்கள்! //

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 34. நல்ல பதிவு நண்பா..இது போன்ற நல்ல பதிவுகளை தொடர்ந்து வழங்குங்கள்...

  ReplyDelete
 35. பயனுள்ள பதிவு

  இவர் பெயரை சொல்லி ஒட்டுவாங்குபவர்கள் இவர் என்ன செய்தார் என்று கூட தெரியாதவர்கள்

  ReplyDelete
 36. எனக்கு பிடித்த ஒரே தமிழக அரசியல் தலைவரைப் பற்றி எழுதியதற்கு நன்றிகள்.

  ReplyDelete
 37. நல்ல மனிதர்களின் அருமையா தகவல்கள் !

  ReplyDelete
 38. பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்//இந்த பாராவும் பிடிச்சிருக்கு//

  அதோடு நல்ல தகவல்களை அள்ளிதந்திருக்கிறீகள் வாழ்த்துக்கள் மாணவன்..

  ReplyDelete
 39. தாங்கள் எழுதிய பதிவுகளிலேயே என்னை மிகவும் கவர்ந்தது இந்த பதிவு. இதே போல மிகப்பெரிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் மிகவும் சந்தோஷம்.

  ReplyDelete
 40. பாரட்டுக்கள்!!

  கக்கன் மற்றும் அம்பேத்கார் அவர்களை பற்றியும் எழுதுங்கள் இன்றைய இளைய சமுதாயம் அவசியம் தெரிந்திருக்க வேண்டியவர்கள்

  ReplyDelete
 41. பெரியார் அவர்களை பற்றியும் எழுதுங்கள்

  ReplyDelete
 42. அண்ணே அடிச்சி தூள் கெளப்புங்க..
  அருமையான மிக தேவையான பதிவும் கூட...
  இப்போ இருக்கும் அரசியல் வியாதிகள் அனைவரையும் இவருடன் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது..
  இது போன்ற ஒரு தன்னலமில்லா தலைவரை இனி தமிழகம் எப்போ பெறப்போகிறதோ????

  தங்கள் மேலான பணி சிறக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா..

  ReplyDelete
 43. //ஹரிஸ் said...

  நல்ல பதிவு நண்பா..இது போன்ற நல்ல பதிவுகளை தொடர்ந்து வழங்குங்கள்...//

  நிச்சயமாக தொடர்ந்து சிறப்பான பதிவுகளையே எழுத முயற்சிக்கிறேன் நண்பா
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நண்பா
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 44. //THOPPITHOPPI said...

  பயனுள்ள பதிவு

  இவர் பெயரை சொல்லி ஒட்டுவாங்குபவர்கள் இவர் என்ன செய்தார் என்று கூட தெரியாதவர்கள்/

  தங்களது கருத்து முற்றிலும் உண்மை நண்பரே
  கர்மவீரர் காமராஜர் என்ற மாமனிதரின் பெயரை கண்டிப்பாக யாருக்கும் பயன்படுத்த அருகதை கிடையாது
  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 45. //எப்பூடி.. said...

  எனக்கு பிடித்த ஒரே தமிழக அரசியல் தலைவரைப் பற்றி எழுதியதற்கு நன்றிகள்.//

  நிச்சயமாக உங்களைப்போன்று அனைவருக்கும் பிடித்த மாமனிதர் அவர்
  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 46. //ஹேமா said...

  நல்ல மனிதர்களின் அருமையா தகவல்கள் !//
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 47. //கலாநேசன் said...

  நல்பதிவு...//

  வாங்க நண்பரே, தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 48. //அன்புடன் மலிக்கா said...
  அதோடு நல்ல தகவல்களை அள்ளிதந்திருக்கிறீகள் வாழ்த்துக்கள் மாணவன்.. //
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 49. //சசிகுமார் said...

  தாங்கள் எழுதிய பதிவுகளிலேயே என்னை மிகவும் கவர்ந்தது இந்த பதிவு. இதே போல மிகப்பெரிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் மிகவும் சந்தோஷம்.//

  நிச்சயமாக எழுதுகிறேன் நண்பரே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நண்பா...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 50. //ஜிஎஸ்ஆர் said...
  பாரட்டுக்கள்!!
  கக்கன் மற்றும் அம்பேத்கார் அவர்களை பற்றியும் எழுதுங்கள் இன்றைய இளைய சமுதாயம் அவசியம் தெரிந்திருக்க வேண்டியவர்கள்//

  நிச்சயமாக உங்களைப் போன்ற நண்பர்களின் துணையோடும் ஆதரவோடும் தொடர்ந்து எழுதுகிறேன் நண்பா,

  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நண்பா...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 51. //ஜிஎஸ்ஆர் said...

  பெரியார் அவர்களை பற்றியும் எழுதுங்கள்//

  கண்டிப்பாக ஒவ்வொரு மாமனிதரின் வரலாற்றையும் தொடர்ந்து எழுதுகிறேன் நண்பா...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 52. //அரசன் said...

  அண்ணே அடிச்சி தூள் கெளப்புங்க..
  அருமையான மிக தேவையான பதிவும் கூட...
  இப்போ இருக்கும் அரசியல் வியாதிகள் அனைவரையும் இவருடன் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது..
  இது போன்ற ஒரு தன்னலமில்லா தலைவரை இனி தமிழகம் எப்போ பெறப்போகிறதோ????

  தங்கள் மேலான பணி சிறக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.//

  இவரைப் போன்ற இன்னொரு மாமனிதரை தமிழகம் சந்திக்குமா என்பது சந்தேகம்தான் அண்ணே,
  இப்போது உள்ள அரசியல் வியாதிகள் கர்மவீரர் காமராஜர் என்ற மாமனிதரின் பெயரைகூட கண்டிப்பாக யாருக்கும் பயன்படுத்த அருகதை கிடையாது
  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 53. நல்ல பதிவு. வாழ்த்துக்கள் மாணவரே...

  காமராசர் ஆங்கிலமும், இந்தியும் பேசுவார்.
  படிக்காவிட்டாலும் பழக்கத்தின் மூலமாக கற்றுக்கொண்டார்.
  மற்ற தலைவர்களுடன் பேசுவதற்கு போதுமான அளவு ஆங்கிலம் அறிந்திருந்தார்.

  ReplyDelete
 54. மிக விரிவான சிறப்பான பதிவு மாணவன்..:))

  ReplyDelete
 55. //பாரத்... பாரதி... said...

  நல்ல பதிவு. வாழ்த்துக்கள் மாணவரே...

  காமராசர் ஆங்கிலமும், இந்தியும் பேசுவார்.
  படிக்காவிட்டாலும் பழக்கத்தின் மூலமாக கற்றுக்கொண்டார்.
  மற்ற தலைவர்களுடன் பேசுவதற்கு போதுமான அளவு ஆங்கிலம் அறிந்திருந்தார்.//

  தங்கள் தகவலுக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 56. //தேனம்மை லெக்ஷ்மணன் said...
  மிக விரிவான சிறப்பான பதிவு மாணவன்..:))//

  தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அம்மா,
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்கம்மா...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 57. மிகச் சிறப்பான பதிவு மாணவன்.

  பாராட்டுக்கள்!

  //காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கல் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் பரிந்துரை செய்தார் //

  இதையெல்லாம் இப்ப எந்த அரசியல் தலைவர்களாவது நினைக்கவாவது செய்வாங்களா???

  ReplyDelete
 58. This comment has been removed by the author.

  ReplyDelete
 59. இந்த நாயகரைப்[காமராஜர்]போல நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்காமல் இருப்பது ஆளப்படும் நம்முடைய குறை தானே.நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்து நாம் மட்டும் மிகுந்த முன்னேற்றம் அடைந்து விட்டால் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின் தங்கி இந்தியாவின் சமத்துவம் பாதிக்கப்படும் என்றுதான் நானெல்லாம் பணம் வாங்கிக் கொண்டு தன்னைத் தானே தலைவன் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு ஓட்டு போடுகிறேன்.நீங்கள்?

  ReplyDelete
 60. காமராஜரை பற்றிய அருமையான பதிவு......

  இவர் குடும்பம் இப்போது எங்கே?

  அதே நேரம் அரசியலில் இருந்த நம்ம கருணாநிதியின் குடும்பம் எங்கே?

  அண்ணாவின் குடும்பம் எங்கே?

  கக்கனின் குடும்பம் எங்கே?

  ச்சே......

  ReplyDelete
 61. //மிகச் சிறப்பான பதிவு மாணவன்.

  பாராட்டுக்கள்!

  //காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கல் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் பரிந்துரை செய்தார் //

  இதையெல்லாம் இப்ப எந்த அரசியல் தலைவர்களாவது நினைக்கவாவது செய்வாங்களா???//

  உண்மைதான் நண்பரே,இவரைப் போன்ற இன்னொரு மாமனிதரை தமிழகம் சந்திக்குமா என்பது சந்தேகம்தான் அண்ணே,
  இப்போது உள்ள அரசியல் வியாதிகள் கர்மவீரர் காமராஜர் என்ற மாமனிதரின் பெயரைகூட கண்டிப்பாக யாருக்கும் பயன்படுத்த அருகதை கிடையாது
  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 62. //Siva said...

  இந்த நாயகரைப்[காமராஜர்]போல நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்காமல் இருப்பது ஆளப்படும் நம்முடைய குறை தானே.நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்து நாம் மட்டும் மிகுந்த முன்னேற்றம் அடைந்து விட்டால் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின் தங்கி இந்தியாவின் சமத்துவம் பாதிக்கப்படும் என்றுதான் நானெல்லாம் பணம் வாங்கிக் கொண்டு தன்னைத் தானே தலைவன் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு ஓட்டு போடுகிறேன்.நீங்கள்?//

  உங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் நண்பரே நமது மீதும் குறைகள் உள்ளது மக்கள் அனைவரும் மாறினால்தான் ஒரு நல்ல மாற்றம் கொண்டு வரமுடியும்.

  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 63. //நாஞ்சில் மனோ said...

  காமராஜரை பற்றிய அருமையான பதிவு......

  இவர் குடும்பம் இப்போது எங்கே?

  அதே நேரம் அரசியலில் இருந்த நம்ம கருணாநிதியின் குடும்பம் எங்கே?

  அண்ணாவின் குடும்பம் எங்கே?

  கக்கனின் குடும்பம் எங்கே?

  ச்சே......//

  நேரம் கிடைக்கும்போது கக்கன், அண்ணா அவர்கள் பற்றியும் எழுதுகிறேன்,

  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 64. இந்த பாணியிலான அறிமுகம் எளிதாக படிக்க முடிகிறது..

  மேலும் பலரை பற்றி எழுதவும்...

  ReplyDelete
 65. //polurdhayanithi said...

  parattugal thodarga kalakkureenga//


  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 66. //பார்வையாளன் said...

  இந்த பாணியிலான அறிமுகம் எளிதாக படிக்க முடிகிறது..

  மேலும் பலரை பற்றி எழுதவும்...//

  கண்டிப்பாக ஒவ்வொரு மாமனிதரின் வரலாற்றையும் தொடர்ந்து எழுதுகிறேன் நண்பா...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 67. அருமையான கட்டுரை நண்பரே...

  //தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த ஒருவர் // இதுவொரு சர்ச்சைக்குறிய விஷயம் நண்பரே..இதை நாடார் சமுதாய மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை..முடிந்தால் இந்தவரியை நீக்குங்களேன்..

  நன்றி!

  ReplyDelete
 68. //செங்கோவி said...

  அருமையான கட்டுரை நண்பரே...

  //தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த ஒருவர் // இதுவொரு சர்ச்சைக்குறிய விஷயம் நண்பரே..இதை நாடார் சமுதாய மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை..முடிந்தால் இந்தவரியை நீக்குங்களேன்..

  நன்றி!//

  நீக்கிவிட்டேன் நண்பரே, நான் தெரிந்துகொண்ட தகவல்களை அப்படியே பகிர்ந்துகொண்டேன் நண்பரே மற்றபடி வேற எந்த நோக்கமும் இல்லை

  சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே
  தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 69. கறுப்பு காமராஜரும், ரேஜாவின் ராஜா நேருவும் ஆண்ட காலம் பொற்காலமல்லவா??

  ReplyDelete
 70. // இராஜராஜேஸ்வரி said...
  கறுப்பு காமராஜரும், ரேஜாவின் ராஜா நேருவும் ஆண்ட காலம் பொற்காலமல்லவா??//

  உண்மைதான் சகோ, அவர்களைப்போன்ற அரசியல் தலைவர்களை இனி நாம் பார்க்கபோவதில்லை....

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோ...

  ReplyDelete
 71. காமராஜர் ஒரு அரிய மனிதர். அவருடைய சாதனைகளில் தாங்கள் விட்டு விட்டது திருச்சியின் பெல் நிறுவனத்தையும் அவர்தான் தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்தார்.
  இன்றைய தலை முறை யாரை எல்லாம் கொண்டாடுகிறது தெரியுமா? வேண்டாம் வேதனை தான் பெருகும்.
  MGR இறந்தபோது இதயம் பேசுகிறது பத்திரிகையில் ஜெயகாந்தன் எழுதினது கிடைத்தால் படித்து பாருங்கள். அந்த தீர்கதரிசி சொன்னது எல்லாம் இன்று நிறை வேறிகிறது. மவுண்ட் ரோடையும் கடைகளையும் ரௌடிதனமாக களேபர படுத்திய ரசிகர் கூட்டத்தை ப்பற்றி சொன்னார். இதோடு இது நின்று விடப் போகிறது இல்லை. இந்த கலாச்சார சீரழிவு இன்னும் மோசமாக தான் ஆகும் என்று. அது தான் இன்றைய நிலைமை.
  ஆனால் நல்ல தலைவர்கள் வருவார்கள் என்று நம்புவோம். ஆண்டவர் அப்படியே செய்வார்.

  ReplyDelete
 72. இந்த மனிதருக்காக , அல்ல மாமனிதருக்காக எண்களின் ஓர் அர்ப்பணம் இந்த இணைய தளம்.

  http://www.perunthalaivar.org

  உங்கள் வாசகர்களுடன் பகிரிந்து கொள்ளவும்.

  ReplyDelete
 73. அருமையான தகவல்

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.