Monday, October 28, 2013

பிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்!

உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் 1901-ஆம் ஆண்டு அமைதிக்கான முதல் நோபல் பரிசை வென்ற பிரெஞ்சு நாட்டவரான பிரெட்ரிக் பாஸி (Frederic Passy). அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தைத் தோற்றுவித்ததற்காக அதே ஆண்டில் ஹென்றி டுனான்டிற்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருவருமே அமைதிக்காக அடித்தளமிட்டவர்கள் என்றாலும் அவர்களின் அணுகுமுறையில் வேறுபாடு இருந்தது. 

Thursday, October 17, 2013

HUNT FOR HINT 3 - The Game Starts Now...!

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த Hunt For Hint-3 எதிர்பாராத சிறிது கால தாமதத்திற்குப் பிறகு இன்று அக்டோபர் 17ம் தேதி வியாழக் கிழமை இந்திய நேரம் காலை 10 மணிக்கு தொடங்கும் என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்! கடந்த வருடங்களைபோல இந்த வருடமும் உங்கள் ஆதரவையும் அன்பையும் எதிர்பார்த்துக் களம் இறங்குகின்றோம்! நன்றி!

இந்த போட்டியை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். புகழ் பெற்ற ஆன்லைன் விளையாட்டான க்ளூலெஸ் விளையாட்டின் தாக்கத்தால் டெரர்கும்மி நண்பர்களால் உருவான விளையாட்டு "HUNT FOR HINT". இது பல லெவல்களை கொண்ட ஒரு ஆன்லைன் விளையாட்டு. போட்டியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள... டெரர்கும்மி.காம்

Wednesday, October 2, 2013

HUNT FOR HINT-3 புதிர்ப் போட்டி! மொத்தப்பரிசு 12,000 ரூபாய்!

இணைய நண்பர்களே,
கடந்த இரண்டு வருடங்களாக டெரர்கும்மி சார்பாக நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் மெகா புதிர் போட்டி உங்களின் ஆதரவால் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் அப்படியான ஒரு போட்டியை மேலும் சிறப்பாக நடத்த போவதாக முந்தய பதிவு மற்றும் கூகுள் ப்ளஸ்சில் அறிவிப்பு செய்திருந்தோம்!

Thursday, August 22, 2013

ஜீன் ஹென்றி டுனாண்ட் (Jean Henri Dunant) - வரலாற்று நாயகர்!

2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய குடியரசு தினத்தன்று குஜராத்தை தாக்கிய நிலநடுக்கத்தை நாம் மறந்திருக்க முடியாது. இயற்கையின் முப்பது வினாடி சீற்றத்தால் குஜராத் மாநிலம் துவண்டு போனபோது அங்கு துயர் துடைப்பிற்காக விரைந்து வந்த முதல் அமைப்பு அனைத்துலக செஞ்சிலுவை சங்கம். அந்த குஜராத் பூகம்பத்திற்கு மட்டுமல்ல உலகின் பெரும்பாலான பகுதிகளில் இயற்கையும், செயற்கையும் துயரங்களை விளைவிக்கும்போது விரைந்து சென்று உதவிக்கரம் நீட்டும் ஓர் உன்னத அமைப்புதான் செஞ்சிலுவை சங்கம். உலகில் மனிதநேயம் இன்னும் மாய்ந்து விடவில்லை என்பதை அன்றாடம் உணர்த்தும் ஓர் மனிதநேய அமைப்பு அது. அந்த அற்புத அமைப்பை உலகிற்கு தந்தவர் ஜீன் ஹென்றி டுனாண்ட் (Jean Henri Dunant) செல்வந்தராக பிறந்து செஞ்சிலுவை சங்கத்திற்காக சொத்தையெல்லாம் செலவழித்து இறுதியில் ஏழ்மையில் இறந்துபோன அந்த உன்னத மனிதரின் வரலாற்றை தெரிந்துகொள்வோம். 

Saturday, July 6, 2013

புளோரன்ஸ் நைட்டிங்கேல் ("The Lady with the Lamp") - வரலாற்று நாயகர்!

மரணம் எவருக்குமே மகிழ்ச்சியை கொண்டு வருவதில்லை. மரணத்தை தள்ளிப் போடவோ அல்லது தடுக்கவோ ஒரு துறையால் முடியுமென்றால் அது மருத்துவதுறைதான். அதனால்தான் மருத்துவர்களை சிலசமயம் கடவுளுக்கு நிகராக ஒப்பிட்டு பார்க்கின்றனர் மரணவாயில் வரை சென்று திரும்பியோரும் அவர்களது குடும்பத்தினரும். மருத்துவர்களுக்கு கிடைக்கும் அந்த கெளரவம் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்கும் தாதியர்களுக்கு கிடைக்கிறதா? என்பது கேள்விக்குரிய ஒன்றுதான். ஆனால் ஆயிரமாயிரம் தன்னலமற்ற தாதியர்களை இந்த உலகம் சந்தித்திருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அந்த தாதியர்களுக்கெல்லாம் முன்னொடியாக விளங்கிய ஒரு அதிசய நங்கையைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

Tuesday, June 4, 2013

ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் - வரலாற்று நாயகர்!

வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்போரும், வாழ்க்கையை வாழ்ந்து முடிப்போரும் மீண்டும் ஒரு பருவத்திற்காக ஏங்குவார்கள் என்றால் அது நிச்சயம் பிள்ளைப்பருவமாகத்தான் இருக்கும். மழலைப்பேச்சும், கள்ளகபடமற்ற சிரிப்பும் நிறைந்த அந்த பிள்ளைப்பருவத்தில் வேறு எந்த தொல்லைகளும் இருக்காது என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் அந்த பருவத்தில்தான் எந்த கட்டுப்பாடுமின்றி கற்பனைகளில் சஞ்சரிக்க முடியும். கனவுலகில் சிறகடிக்க முடியும் என்பது. உங்கள் பிள்ளைப்பருவத்தை சற்று பின்னோக்கிப் பாருங்கள் அந்தப் பருவத்தைப் பற்றி உங்களுக்கு எது ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ ஒன்று மட்டும் நிச்சயமாக நினைவுக்கு வரும். அதுதான் fairy tales எனப்படும் புனைக்கதைகள். பெரும்பாலும் விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டு சின்ன சின்ன நீதிகளையும், கருத்துகளையும் சொல்லும் ஓர் அற்புத புனைக்கதைத் தொகுப்புதான் fairy tales. இன்றும் உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களை கட்டிப்போட்டிருக்கும், சிறுவர்களை கவர்ந்திருக்கும் அந்த புகழ்பெற்ற புனைக்கதைகளை நமக்கு தந்தவரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். அவர்தான் டென்மார்க் தந்த புகழ்பெற்ற கதாசிரியர் Hans Christian Andersen. 

Thursday, April 18, 2013

வில்லியம் ஹார்வி - வரலாற்று நாயகர்!

"இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிர் இருக்கும்...
அன்பே என்னை நீ நீங்கினால் ஒருகணம் என்னுயிர் தாங்காது"....

இந்த பாடல் வரிகளில் விஞ்ஞானம் பேசியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இதயம் துடிக்கும் வரைதான் உயிர் இருக்கும் என்பதும், இதயம் ஓயும்போது இரத்த ஓட்டம் நின்று போவதால் உயிரும் நின்று போகிறது என்பதும் அறிவியல் நமக்கு சொல்லும் உண்மை. ஆனால் நானூறு ஆண்டுகளுக்கு முன்புவரை அந்த உண்மை அறியப்படாத ஓர் ஆச்சரியமாக இருந்தது. அந்தக்காலகட்டத்தில் உயிரியல் வல்லுனர்கள்கூட இரத்த ஓட்டம் பற்றியும், இதயத்தின் செயல்பாடுகள் பற்றியும் தவறான எண்ணங்களை கொண்டிருந்தனர். உதாரணத்திற்கு நாம் உண்ணும் உணவு இதயத்தில் இரத்தமாக மாற்றப்படுகிறது என்றும், இதயம் இரத்தத்தை சூடாக்குகிறது என்றும், இரத்தநாளங்களில் காற்று நிரம்பியிருக்கிறது என்றும், இரத்தம் சிலசமயங்களில் இதயத்தை நோக்கியும், சிலசமயங்களில் இதயத்திலிருந்து வெளியேயும் பாய்கிறது என்றும் உண்மைக்கு மாறான கருத்துகளை கொண்டிருந்தனர். இதயம்தான் இரத்தத்தை உடல்முழுக்க பாய்ச்சுகிறது. இரத்தம் உடலிலேயே திரும்ப திரும்ப பயணிக்கிறது என்று முதன்முதலில் கண்டு சொன்னதன் மூலம் மருத்துவத்துறையின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த ஓர் அற்புத மருத்துவரை பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.