Thursday, December 2, 2010

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்........

பெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்கும் தெரியும் !
அது பொம்பளைக்கும் தெரியும்!
அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும் !
அது யாருக்குத்தான் தெரியும்....!



சமீபத்தில் நண்பர்கள் தளங்களுக்கு எங்கு சென்றாலும் ”பெண்மனசு” பெண்மை பெண் பாடகர்களின் பாடல்கள், இப்படி எல்லாம் ஒரே பெண்களின் புகழாகவும் தாய்க்குலங்களின் அன்பாகவும், சகோதரிகளின் பாசமாகவும், தொடர் பதிவாக  பெண்களுக்கு சிறப்பு சேர்த்துகொண்டிருக்கிறார்கள், நல்ல விசயம் இதில் நாமும் பங்கெடுத்துகொள்ளலாம் என்று ஒரு சிறு முயற்சி இந்த பதிவு, 

இந்த பாடல் ஒரு ஏழைக்குடும்பத்தின் நிலையையும் அவர்களின் வாழ்க்கை கஷ்டங்களையும், பள்ளிக்கூட விடுதியில் தங்கி படிக்கும் ஒரு ஏழை மகள் தன் அம்மாவுக்கு கடிதம் எழுதி தன் கஷ்டங்களை உணர்வுகள் மூலம் பதிவு செய்கின்ற பாடல், இந்த பாடல் நாட்டுப்புறப் பாடலைச் சேர்ந்தது, உணர்வுகளுடன் பாடியவர் நாட்டுப்புறப் பாடகி  மதுரை சின்னப்பொன்னு குமார் இவர்தான் பின்னாளில் திரையுலக்கு வந்து நாக்கமுக்க என்ற பக்திப் பாடலைப் பாடி இந்த ஒரே பாடலின் மூலம் உலகப் புகழ்பெற்றவர். திரையுலக்கு இவரின் அறிமுகம் சந்திரமுகியில் வரும் வாழ்த்துறேன் வாழ்த்துறேன் என்ற பாடல்தான் முதல் பாடல்.

ஏழை மகளின் கண்ணீர் கடித வடிவில் பாடலாக:
  ANBULLAM - OK!!s by rrsimbu
(இந்த பாடலை ஒருமுறையாவது கேளுங்கள் ஒரு ஏழைப் பெண்ணின் உணர்வுகள் வலிகளுடன் வேதனையும் சேர்ந்து நம் மனதை கரைய வைத்துவிடும்)

பாடலை தறவிரக்கம் செய்ய
இங்கு செல்லவும்

கடிதம் வடிவில் பாடல் வரிகள் :

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன்  உருப்படியா படிக்கிறேன்
யாருமில்ல நமக்கு நீ எப்படி இருப்பன்னு நினைக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்!

பள்ளிக்கூடம் சேர்க்கனுன்னு பாத்திரத்த வித்தீங்களே!
எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
அம்மா எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
புஸ்தகநோட்டு வாங்க பணம் அனுப்புறேன்னு சொன்னீங்களே!
பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா....
அம்மா பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா...

புஸ்தகநோட்டு வாங்கலைன்னு வாத்தியார் தினமும் அடிக்கிறார்!
வாங்கிக் கொடுத்த பேனாவும் உடைஞ்சு இரவல் வாங்கி எழுதுறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......
கிழிஞ்ச சட்டைக்காரியின்னு கிண்டலாத்தான் பேசுறாங்க
ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்
அம்மா ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்

தோட்டக்காரய்யா வீட்டுல பழைய சட்டை தருவதா சொன்னீங்களே!
வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
நீங்க வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
விடுதி சோறு புழுவுன்னு வீதியில கொட்டுறாங்க
நான் மட்டும் தம்பிக்கு ஊட்டுற நெனைப்பில் அழுதுகிட்டே தின்னுக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......

கீழாண்ட செவத்தோரம் மறந்தும் போகாதம்மா
கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
அம்மா கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
மேலாண்ட கூரைமேல சாக்கு கிழிச்சுப் போடுங்கம்மா
மேற்கத்தி மழை அடிச்சுதுன்னா இருக்கும் இடம் நனைஞ்சுடும்

பாத்திரம் தேய்ச்ச கையெல்லாம் காயமுன்னு சொன்னாங்க!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்துவும் போட்டுக்கம்மா!
இப்படிக்கு
உங்கள் அன்பு மகள்
கோடீஸ்வரி

(எழுத்துப் பிழைகள் இருந்தால் மாணவனை மன்னித்து உரிமையோடு சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்)

டிஸ்கி: இதை யார் வேண்டுமென்றாலும் தொடர் பதிவா எழுதலாம், காசா பணமா நீங்க பாட்டுக்கு எழுதுங்க நாங்க வந்து படிக்கிறோம்!

உங்கள் பொன்னான முத்தான மனியான வாக்குகளை இண்ட்லியிலும் தமிழ்மணத்திலும் பதிந்து செல்லுங்கள் பலரை சென்றடைய உதவியாய் இருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்,தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள் சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்!

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன் 
உங்கள் மாணவன்

51 comments:

  1. நல்ல கவி வரிகள்! :-)

    ReplyDelete
  2. சின்ன வயசுல கேட்டது. சின்ன பொண்ணு தான் பாடுனாங்கன்னு இப்ப தான் தெரியும்.

    நல்ல பாடல். கேக்கும் போதெல்லாம் ஏதோ கன்ணுல கண்ணீர் வரும்...
    ஒரு ஏழை பெண் நிலமையை கண்ணு முன்னாடி காட்டும் :(

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மிகவும் பிடித்த கிராமத்து பாடல் வரிகள் i like chinna ponnu...சூப்பர் மாணவா பிழை ஏதும் இல்லை

      Delete
    2. இந்த பாடல் கேக்கும்போது என் அம்மா நேபகம் வரும் நான் மிகவும் கஷ்டப்படுவேன். முக்கியமா என் நிலைமை நினைத்து பார்ப்பேன் யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாதுன்னு கடவுளிடம் பிரேயர் pannuven

      Delete
  3. அழுத்தமான வரிகளுடன் நன்றாக வரைந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. பாட்டு கேட்டேன் நண்பா கண்கலங்க வைத்தது.

    ReplyDelete
  5. @ஜீ...
    பாடலை கண்டிப்பாக கேளுங்கள் நண்பரே,
    தங்களின் வருகைக்கு கருத்துக்கும் மிகவும் நன்றி நண்பா
    தொடர்ந்து இணைந்திருங்கள்.....

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. @ஆமினா
    //சின்ன வயசுல கேட்டது. சின்ன பொண்ணு தான் பாடுனாங்கன்னு இப்ப தான் தெரியும்.

    நல்ல பாடல். கேக்கும் போதெல்லாம் ஏதோ கன்ணுல கண்ணீர் வரும்...
    ஒரு ஏழை பெண் நிலமையை கண்ணு முன்னாடி காட்டும் :( //

    நான் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அழுதுவிடுவேன் அப்படி ஒரு வலிகளையும் உணர்வுகளையும் சொல்கின்ற பாடல் வரிகள்...

    தங்களின் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோ,

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. @ம.தி.சுதா
    பாடலை கண்டிப்பாக கேளுங்கள் நண்பரே,
    தங்களின் வருகைக்கு கருத்துக்கும் மிகவும் நன்றி நண்பா
    தொடர்ந்து இணைந்திருங்கள்.....

    ReplyDelete
  8. @சசிகுமார்
    கண்டிப்பாக இந்த பாடலை கேட்கும்போது நம்மையறியாமலே கண்கள் கலங்கி விடும் நண்பா,

    ஒரு ஏழை மகளின் வலிகளையும் உணர்வுகளையும் சொல்கின்ற பாடல் வரிகள்...

    தங்களின் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பா,

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  9. டிஸ்கி: இதை யார் வேண்டுமென்றாலும் தொடர் பதிவா எழுதலாம்,

    //

    எழுதிக்கொடுங்க பாஸ்.. நாங்களும் பதிவா போட்டுட்டு படிக்கிறோம்..ஹி..ஹி


    பாட்டு நல்லாயிருக்கு....

    ReplyDelete
  10. அலுவலக பெட்டியில் பதிவிறக்க முடியல, படிக்க நல்லாயிருக்கு, வீட்ல பொய் கேட்டுட்டு சொல்றேன்!!!

    ReplyDelete
  11. பாட்டு அருமை..பதிவும் அருமை..

    ReplyDelete
  12. பலஇடங்களில் பட்டி மன்றங்களிலும், ஆர்க்கெஸ்ட்ராக்களிலும் இந்த பாடலை கேட்டிருக்கிறேன். நெகிழவைக்கும் பாடல்..பகிர்வுக்கு நன்றிங்க மாணவரே..

    ReplyDelete
  13. @பட்டாபட்டி....
    //எழுதிக்கொடுங்க பாஸ்.. நாங்களும் பதிவா போட்டுட்டு படிக்கிறோம்..ஹி..ஹி//

    கண்டிப்பாக எழுதிக்கொடுத்துடுவோம் சார், உங்களுக்கு இல்லாத பதிவுகளா!
    அப்புறம் நாம எப்ப சார் நேர்ல சந்திக்கலாம், இங்க சிங்கையில ஏதாவது பதிவர் சந்திப்பெல்லாம் உண்டா? இருந்தா சொல்லுங்க சார் கலந்துக்குக்குவோம் சிறப்பு விருந்தினரா நம்ம சிரிப்புப் போலீஸ வரச் சொல்லிடுவோம்...

    ReplyDelete
  14. @வைகை
    //அலுவலக பெட்டியில் பதிவிறக்க முடியல, படிக்க நல்லாயிருக்கு, வீட்ல பொய் கேட்டுட்டு சொல்றேன்!!! //

    கண்டிப்பாக வீட்டிற்கு சென்று கேட்டுவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள், பாடலை கேட்கும்போது உங்களையறிமால் கண் கலங்குவது நிச்சயம்!

    ReplyDelete
  15. @அமுதா கிருஷ்ணா
    தங்களின் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க,
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  16. @க.பாலாசி
    //பலஇடங்களில் பட்டி மன்றங்களிலும், ஆர்க்கெஸ்ட்ராக்களிலும் இந்த பாடலை கேட்டிருக்கிறேன். நெகிழவைக்கும் பாடல்..பகிர்வுக்கு நன்றிங்க மாணவரே.. //

    நானும் இதைப்போன்று ஒரு விழாவில் இந்த பாடலைக் கேட்டுவிட்டு மனம் நெகிழ்ந்து உடனே நாட்டுப்புறப் பாடல் அடங்கிய குறுந்தகடைத் தேடிப்பிடித்து வாங்கினேன், இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அழுதுவிடுவேன் அப்படி ஒரு வலிகளையும் உணர்வுகளையும் சொல்கின்ற பாடல் வரிகள்...

    தங்களின் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே,
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  17. உணர்வுப்பூர்வமான பதிவு..! பாடல் வரிகளே மனதை கசக்கிப் பிழிகிறது...! இசைவடிவம் கேட்கவும் வேண்டுமா?

    வாழ்த்துக்கள்..! மேலும் வளருங்கள்..!

    ReplyDelete
  18. அழுத்தமான வரிகள்.. நல்ல பதிவு நண்பரே..

    ReplyDelete
  19. மிக அருமையான பாடல்!

    ReplyDelete
  20. //புஸ்தகநோட்டு வாங்கலைன்னு வாத்தியார் தினமும் அடிக்கிறார்!
    வாங்கிக் கொடுத்த பேனாவும் உடைஞ்சு இரவல் வாங்கி எழுதுறேன்
    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......
    கிழிஞ்ச சட்டைக்காரியின்னு கிண்டலாத்தான் பேசுறாங்க//

    வலி ஏற்ப்படுத்தும் வரிகள்..

    ReplyDelete
  21. //இதை யார் வேண்டுமென்றாலும் தொடர் பதிவா எழுதலாம், காசா பணமா நீங்க பாட்டுக்கு எழுதுங்க நாங்க வந்து படிக்கிறோம்!
    //
    எல்லா விஷயத்தையும் நீங்களே சொல்லியாச்சு. பிறகு நாங்க என்னத்த சொல்லறது..
    உங்களுக்கு நல் வாழ்த்துக்கள் மட்டுமே, எங்கள் பங்கு... (பயப்படாதீங்க, இது பாராட்டுத்தான் )

    ReplyDelete
  22. @தங்கம்பழனி
    //உணர்வுப்பூர்வமான பதிவு..! பாடல் வரிகளே மனதை கசக்கிப் பிழிகிறது...! இசைவடிவம் கேட்கவும் வேண்டுமா?

    வாழ்த்துக்கள்..! மேலும் வளருங்கள்..! //

    நிச்சயமாக பாடல் கேட்கும் அனைவர் மனதும் கரைந்து கண் கலங்கிவிடும் நண்பரே,

    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி நண்பரே

    தொடர்ந்து இணைந்திருங்கள்.....

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  23. @வெறும்பய
    தங்களின் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே,
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  24. @எஸ்.கே
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே,
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  25. @பாரத்... பாரதி...
    ஒரு ஏழைப் பெண்ணின் உணர்வுகள் வலிகளுடன் வேதனையும் சேர்ந்து நம் மனதை கரைய வைத்துவிடும்...

    ReplyDelete
  26. @பாரத்... பாரதி...
    //எல்லா விஷயத்தையும் நீங்களே சொல்லியாச்சு. பிறகு நாங்க என்னத்த சொல்லறது..
    உங்களுக்கு நல் வாழ்த்துக்கள் மட்டுமே, எங்கள் பங்கு... (பயப்படாதீங்க, இது பாராட்டுத்தான் )//
    உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி தோழி,
    உங்களைப்போன்ற நண்பர்களின் ஊக்கத்தோடு தொடர்ந்து செல்வோம்
    தொடர்ந்து இணைந்திருங்கள்.....

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  27. சிறப்பான பாடல் தெரிவு
    இன்னவரி சிறப்பென்று சொல்லவியலாது அத்தனை வரிகளிலும் ஏழைச்சிறுமியின் உணர்வு கண்கலங்க வைக்கிறது...!

    ReplyDelete
  28. @ப்ரியமுடன் வசந்த்
    //சிறப்பான பாடல் தெரிவு
    இன்னவரி சிறப்பென்று சொல்லவியலாது அத்தனை வரிகளிலும் ஏழைச்சிறுமியின் உணர்வு கண்கலங்க வைக்கிறது...! //

    நிச்சயமாக பாடல் கேட்கும் அனைவர் மனதும் கரைந்து கண் கலங்கிவிடும் அண்ணே,

    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அண்ணே,

    தொடர்ந்து இணைந்திருங்கள்.....

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  29. கனவுகள் ...
    இல்லாத மனிதமே இல்லை .

    உன்னில் நான்
    கண்டதெல்லாம் வெறும்
    தொல்லை .
    என்பதே போல
    அற்புதமாக பதிவு செய்துள்ளீர் .
    பாராட்டுகள் .

    ReplyDelete
  30. @polurdhayanithi
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே,
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  31. amanga kan kalangavaikum padal palamurai kettu irukiren,,,

    ReplyDelete
  32. @தமிழரசி
    //amanga kan kalangavaikum padal palamurai kettu irukiren,,, //

    நிச்சயமாக பாடல் கேட்கும் அனைவரின் மனதும் கரைந்து கண் கலங்கிவிடும் சகோ,

    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சகோ,

    தொடர்ந்து இணைந்திருங்கள்.....

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  33. அன்புள்ளம் கொண்ட மாணவனுக்கு வணக்கம்.
    இந்தப்பாடல் நெஞ்சை உலுக்கும் உண்மையின் சுருதி.வார்த்தைகள் ராகமாகிற பெரும் விந்தை.

    சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக கேட்கிற இந்தப்பாடலை தமிழ்நாடு அறிவொளி இயக்கம் தான் போகும் இடங்களில் எல்லாம் நாடோ டிப்பாடலாக விதைத்து வைத்திருக்கிறது.இதே போல ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா என்கிற பாடலும் கவிஞர் பரிணாமன் எழுதி இசை அமைத்துப்பாடி கலை இலக்கிஅய இரவுகள் மூலம் பட்டி தொட்டிகளில் படிக்கவைத்தது.

    இன்றைக்கு வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் இயக்குநர்களின் பின்னாடி கலை இலக்கிய இரவின் தாக்கம் இருக்கிறது. அது பொதுவுடமை பேசுவதால் அதை யாரும் துணிந்து குறிப்பிடுவதில்லை. சகோதரர் லியோனி உட்பட.

    நமக்கு எல்லாமே சினிமா தான் அளவுகோள்.
    அது கொடுமை.

    இதைப்பற்றி உணர்வு பூர்வமாக பதிவு எழுதியது பூரிப்பாக இருக்குய்யா.....

    நல்லாஇருக்கணும் .

    ReplyDelete
  34. //காமராஜ் said...
    அன்புள்ளம் கொண்ட மாணவனுக்கு வணக்கம்.
    இந்தப்பாடல் நெஞ்சை உலுக்கும் உண்மையின் சுருதி.வார்த்தைகள் ராகமாகிற பெரும் விந்தை.//

    வாருங்கள் சார்,
    உங்களைப் போன்ற ஆசான்களின் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

    //இன்றைக்கு வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் இயக்குநர்களின் பின்னாடி கலை இலக்கிய இரவின் தாக்கம் இருக்கிறது. அது பொதுவுடமை பேசுவதால் அதை யாரும் துணிந்து குறிப்பிடுவதில்லை. சகோதரர் லியோனி உட்பட.

    நமக்கு எல்லாமே சினிமா தான் அளவுகோள்.
    அது கொடுமை.//

    உங்களது கருத்து முற்றிலும் உண்மை சார் இப்போது யாருமே நாட்டுப்புற பாடல்களிலும் கிராமிய பாடல்களிலும் கவணம் செலுத்தவில்லை என்பது வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது

    நாட்டுப்புறப் பாடகர்கள் கூட சினிமா மோகத்தின் மீது திரையுலக்கு வந்துவிடுகின்றனர்

    தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சார்
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  35. அருமையான பாடல் நண்பா! ஒரு கூடுதல் தகவல் இந்த கவிதையை எழுதியது கவிஞர்.கதிரை நீலமேகம், கருக்கா எனும் கவிதை தொகுப்பில்.

    தொடர்பு முகவரி,
    கதிராமங்கலம்,
    கீழத்தெரு,
    ஆத்துக்குடி (அஞ்சல்),
    வைத்தீசுவரன்கோயில்-609117

    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  36. //யோவ் said...
    அருமையான பாடல் நண்பா! ஒரு கூடுதல் தகவல் இந்த கவிதையை எழுதியது கவிஞர்.கதிரை நீலமேகம், கருக்கா எனும் கவிதை தொகுப்பில்.

    தொடர்பு முகவரி,
    கதிராமங்கலம்,
    கீழத்தெரு,
    ஆத்துக்குடி (அஞ்சல்),
    வைத்தீசுவரன்கோயில்-609117

    பகிர்விற்கு நன்றி//

    தங்களின் வருகைக்கும் பாடலின் தகவலுக்கும் முகவரிக்கும் மிக்க நன்றி நண்பரே,
    யோவ் said...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  37. பாடலும் பதிவும் அருமை

    ReplyDelete
  38. //Jaleela Kamal said...

    பாடலும் பதிவும் அருமை//


    தாங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சார்
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  39. இந்தப் பாடல் முதலே கேட்டிருக்கிறேன். மனத்தை தொட்டுநிற்கும் பாடல்.

    ReplyDelete
  40. //மாதேவி said...
    இந்தப் பாடல் முதலே கேட்டிருக்கிறேன். மனத்தை தொட்டுநிற்கும் பாடல்.//

    தாங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றிங்க சகோ,
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. arumaiyana padal varigal oru thaayai patti ethanai padal vanthalum rasikkalam intha paaddu ippa than kedden amma magal paasam miga arumaiyaga soolappaddirukku
    aalayangal thevaiyillai enra paadal varigal thara mudiyuma plz

    ReplyDelete
  43. கதிரை நீலமேகம் அவர்களின் தொடர்பு எண் கிடைக்குமா தோழர்களே?

    ReplyDelete
  44. Ganesh

    En Sumaigalai Thirumbi Parpathupol Erukku

    ReplyDelete
  45. Bharathi shanmugamMay 16, 2013 at 2:28 PM

    தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நடந்த தமுஎகசவின் இசைமுகாமில்தான் இந்தப் பாடல் உருவானது. இதை எழுதியவர் பெயர் கதிரை நீலமேகம். இதற்கு இசையமைத்தவர் சீர்காழி ரமேஷ். அவர்தான் இந்தப் பாடலை மேடைதோறும் பாடி பிரபலப்படுத்தியவர். ஓசூரில் நடந்த தமுஎகசவின் இசை இரவில் சீர்காழி ரமேஷ் பாடியபோது, கங்கை அமரன் ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டார். வெகுநேரம் பாராட்டினார்.அதன்பின் இந்தப் பாடலை எல்லோருமே பாட ஆரம்பித்தார்கள். சின்னப்பொண்ணு இந்தப் பாடலை தனது ஒலிப்பேழையில் பாடியபின் இன்னும் பிரபலமானது. ஆனால், பாடலுக்கு மூலமான கதிரை நீலமேகம் என்கிற அந்த எளிய கவிஞரும், உருக்கமான மெட்டமைத்து பாடிய சீர்காழி ரமேஷும் யாராலும் நினைவுகூரப்படவில்லை, அந்தப் பாடலைப் பாடும் கலைஞர்கள் உட்பட என்பது வருத்தமான விஷயம்.

    ReplyDelete
  46. அருமை நண்பரே!செம்மையான வரிகள்.கண்ணுல நீர் ததும்புது

    ReplyDelete
  47. நல்ல பாடல். கேக்கும் போதெல்லாம் ஏதோ கன்ணுல கண்ணீர் வரும்...
    ஒரு ஏழை பெண் நிலமையை கண்ணு முன்னாடி காட்டும்

    ReplyDelete
  48. நல்ல அருமையான பாடல் எழுதியவர் கதிரை நீலமேகம்
    இதனை முதலில் பாடியவர் மதுரை சந்திரன்
    மதுரை ராம்ஜி நிறுவனம் வெளியிட்டது
    பிறகு சிம்போனி இசையில்
    தஞ்சை ரட்டிப்பாளையத்தை சேர்ந்த சின்னப்பொண்ணு குமார் பாடினார்

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.