Friday, December 10, 2010

கணினிக் காதலன்-கணினிக் கவிதை


கணினிக் கவிதை
கண்ணாடி குடுவைக்குள்
அடைப்பட்ட ஆக்சிஜனாய்-இவ்வுலகை
கையலக கணினியின்
கட்டுக்குள் அடக்கிய
மாபெரும் மகானுக்கு
என் முதல் நன்றி!

முற்காலத்தில் ரேகைக்கு மட்டுமே
பயன்பட்ட விரல்கள்-இன்று
திரை திறந்து வினாடிக்கு வினாடி
விஞ்ஞான யுக்திகளை
மெய்யான கணினியில்
கணக்கீடு செய்கிறது!

பின்பொரு காலத்தில் சிறுபிள்ளை தனத்தின்
நடைவண்டி பயணமாய் எழுதுகோல்
பிடித்த விரல்கள்-இன்று
முடிவு தெரியாத பிரபஞ்ச வெளியாய்
ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளினூடே
சுட்டியில்(மவுசில்) மண்டியிடுகிறது
விசைப்பலகையில்(கீபோர்டு) சடுகுடு ஆடுகிறது!

பனி உறங்கும் புல்லாக மென்மையான உணர்வுகளை
அழகாக சுமந்து சென்று பிரசவிக்கும் தாயாய் 
பிரதிபலித்த கடிதங்கள்-இன்று
வின்ணை கிழித்த மின்னலென கொட்டிக்கவிழ்த்த
வைரமென இணையத்தில் மின்னஞ்சல் செய்கிறது!

கட்டண பேசியில் ஆரம்பித்து கைப்பேசியில் கரம்கோர்த்து
பொலிவிழந்த பொழுதுகளை பூரணமாக்கி
மனமகிழ்ந்த வேலைகளில் முகம் பார்த்து
இதயத்தின் கனத்தினை இமை வழியே இறக்க 
குறைவான கட்டனத்தில் நிறைவாக பேச
வீடியோச்சாட்டிங் விடியலைப் படைக்கிறது..!

சுவாசக்காற்றாக உதிரத்துளியாக
உயிர்த்துடுப்பாக கிளை நரம்பாக
நம்முள் பின்னிப் பிணைந்த 
இன்னொரு ஜீவன் கணினி...!

வணக்கம் நண்பர்களே,
இந்த கவிதை ஒரு மீள்பதிவு, ஆம் இதுதான் எனது முதல் பதிவு முதல் கவிதையும் கூட வலைப்பூ எழுதத் தொடங்கும்போது  இந்த கவிதையின் அறிமுகத்தோடுதான் எழுத ஆரம்பித்தேன், இது எனது முதல் பதிவாக இருந்ததால் நண்பர்கள் பலரின் பார்வையில் படாமலே போய்விட்டது அதனால் மீண்டும் உங்களின் பார்வைக்கு, கவிதையை படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்,தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள் சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்!

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

73 comments:

 1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  சீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்

  ReplyDelete
 2. //சுவாசக்காற்றாக உதிரத்துளியாக
  உயிர்த்துடுப்பாக கிளை நரம்பாக
  நம்முள் பின்னிப் பிணைந்த
  இன்னொரு ஜீவன் கணினி...!//
  nice! :-)

  ReplyDelete
 3. ஃஃஃஃஃபனி உறங்கும் புல்லாக மென்மையான உணர்வுகளை
  அழகாக சுமந்து சென்று பிரசவிக்கும் தாயாய்
  பிரதிபலித்த கடிதங்கள்ஃஃஃஃ

  அருமையாக உள்ளது சகோதரம் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. சரி தான் நண்பா... இன்னைக்கு அது இல்லனா கண்டிப்பா எந்த வேலையும் ஓடாது

  ReplyDelete
 5. //கண்ணாடி குடுவைக்குள்
  அடைப்பட்ட ஆக்சிஜனாய்-இவ்வுலகை
  கையலக கணினியின்
  கட்டுக்குள் அடக்கிய
  மாபெரும் மகானுக்கு
  என் முதல் நன்றி!//


  ஆரம்பமே அமர்க்களம் மாணவன்

  ReplyDelete
 6. //
  பின்பொரு காலத்தில் சிறுபிள்ளை தனத்தின்
  நடைவண்டி பயணமாய் எழுதுகோல்
  பிடித்த விரல்கள்-இன்று
  முடிவு தெரியாத பிரபஞ்ச வெளியாய்
  ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளினூடே
  சுட்டியில்(மவுசில்) மண்டியிடுகிறது//

  அருமையான வரிகள்!!
  கணினி ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நீக்க முடியாத இடத்தில் அமைந்துவிட்டதை உங்கள் கவிதை சொல்கிறது!!

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. மாடர்ன் கவிதை , மயக்குது மனதை

  ReplyDelete
 8. //இதுதான் எனது முதல் பதிவு முதல் கவிதையும் கூட//
  எல்லோரும் முதல் கவிதையாக காதல் கவிதை தான், எழுதுவார்கள்.அறிவியல் பற்றிய கவிதையை முதலாவதாக எழுதியதற்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. கணினி தெரியா மனிதன் அரை மனிதன் இந்த காலத்தில்

  ReplyDelete
 10. நல்லாயிருக்கு மாணவன்! புள்ள என்னமா யோசிக்கிது!!

  ReplyDelete
 11. முதல் கவிதையிலேயே அசத்தி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. கட்டண பேசியில் ஆரம்பித்து கைப்பேசியில் கரம்கோர்த்து
  பொலிவிழந்த பொழுதுகளை பூரணமாக்கி
  மனமகிழ்ந்த வேலைகளில் முகம் பார்த்து
  இதயத்தின் கனத்தினை இமை வழியே இறக்க
  குறைவான கட்டனத்தில் நிறைவாக பேச
  வீடியோச்சாட்டிங் விடியலைப் படைக்கிறது..!
  //

  அருமையான வரிகள் நண்பரே...
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 13. முதல் பதிவே கலக்கலாக இருந்திருக்குங்க..

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 14. அண்ணே இதுதான் முதல் பதிவா????

  ரொம்ப அருமையா இருக்கு..

  என்ன ஒரு யதார்த்த வரிகள்.. தூள்....

  ReplyDelete
 15. முற்காலத்தில் ரேகைக்கு மட்டுமே


  பயன்பட்ட விரல்கள்-இன்று
  திரை திறந்து வினாடிக்கு வினாடி
  விஞ்ஞான யுக்திகளை
  மெய்யான கணினியில்
  கணக்கீடு செய்கிறது

  //எங்கேயோ போயிட்டிங்க...
  உண்மையிலே நல்லா இருக்குங்க அண்ணே..
  தொடரட்டும் உங்கள் இந்தகவிப்பயணம்...//

  ReplyDelete
 16. //சுவாசக்காற்றாக உதிரத்துளியாக
  உயிர்த்துடுப்பாக கிளை நரம்பாக
  நம்முள் பின்னிப் பிணைந்த
  இன்னொரு ஜீவன் கணினி...//


  உண்மைதான் அண்ணே...

  ReplyDelete
 17. கணினிக்கு ஒரு கன்னிக்கவிதை மிகவும் அழகு மாணவன்...

  ReplyDelete
 18. அருமையான கவிதை! மிக அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. //மாபெரும் மகானுக்கு
  என் முதல் நன்றி!//

  ரெண்டாவது நன்றி யாருக்கு?

  ReplyDelete
 20. விருத்தகிரி பாத்துட்டாம் போல

  ReplyDelete
 21. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //மாபெரும் மகானுக்கு
  என் முதல் நன்றி!//

  ரெண்டாவது நன்றி யாருக்கு?//


  ரெண்டாவது நன்றி உங்களுக்குதாண்ணே...

  ReplyDelete
 22. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  விருத்தகிரி பாத்துட்டாம் போல//

  எங்க விமர்சனம் இன்னும் எழுதலயா....

  ReplyDelete
 23. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  25//

  ஆளு இல்லாத நேரத்துல நம்பர் போட்டு விளையாடுறீங்க.....

  ஹிஹிஹி........

  ReplyDelete
 24. நண்பரே உங்களின் பதிவான குடும்பத்தோடு கொள்ளையடிக்கலாம் வாங்க” A new Movie from Sun Pictures புலவன் புலிகேசி வலைப்பதிவில், பார்க்கவும்.
  http://pulavanpulikesi.blogspot.com/2010/12/blog-post_11.html

  ReplyDelete
 25. அந்த பதிவரின் தவறல்ல அது. மின்னஞ்சலில் வந்ததை பகிர்ந்துள்ளார். தவறை சுட்டிக்காட்டியிருக்கிறேன்

  ReplyDelete
 26. கவிதை அருமை. சூப்பர்.

  ReplyDelete
 27. பின்பொரு காலத்தில் சிறுபிள்ளை தனத்தின்
  நடைவண்டி பயணமாய் எழுதுகோல்
  பிடித்த விரல்கள்-இன்று
  முடிவு தெரியாத பிரபஞ்ச வெளியாய்
  ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளினூடே
  சுட்டியில்(மவுசில்) மண்டியிடுகிறது
  விசைப்பலகையில்(கீபோர்டு) சடுகுடு ஆடுகிறது!
  >>> அற்புதமான வரிகள்...முதல் பதிவா...முத்தான பதிவு >>>

  ReplyDelete
 28. வித்தியாசமான சிந்தனையில் கணணிக் கவிதை.கணணியும் அதை இயக்கும் மின்சாரமும் இல்லையென்றால் உலகமே ஓடாமல் நிற்பதாய் ஒரு உணர்வு இப்போதேல்லாம் !

  ReplyDelete
 29. கலக்கல் முதல் (?) கவிதை........

  ReplyDelete
 30. சிறப்பாக எழுதியுள்ளீர்கள், நிறைய கவிதைகள் எழுதுங்கள்.

  ReplyDelete
 31. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
  http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_12.html

  நன்றி!

  ReplyDelete
 32. நல்ல கவிதை..காமராஜர் பற்றிய பதிவை இன்றுதான் படித்தேன்..மிகவும் அருமை..அங்கே ஒரு வேண்டுகோளை பின்னூட்டத்தில் போட்டிருக்கிறேன்..கொஞ்சம் பாருங்கள்..நன்றி!

  ReplyDelete
 33. நல்லா இருக்குங்க.

  ReplyDelete
 34. //வித்தியாசமான சிந்தனையில் கணணிக் கவிதை.கணணியும் அதை இயக்கும் மின்சாரமும் இல்லையென்றால் உலகமே ஓடாமல் நிற்பதாய் ஒரு உணர்வு இப்போதேல்லாம் !//

  ReplyDelete
 35. //ம.தி.சுதா said...

  எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.//

  நல்ல திருப்தியா சாப்பிட்டு பசியாருங்க...

  முதல் நபராக வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

  தொடர்ந்து இணைந்திருங்கள்...

  ReplyDelete
 36. //ஜீ... said...

  //சுவாசக்காற்றாக உதிரத்துளியாக
  உயிர்த்துடுப்பாக கிளை நரம்பாக
  நம்முள் பின்னிப் பிணைந்த
  இன்னொரு ஜீவன் கணினி...!//
  nice! :-)//

  வாங்க நண்பரே தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 37. //ம.தி.சுதா said...

  ஃஃஃஃஃபனி உறங்கும் புல்லாக மென்மையான உணர்வுகளை
  அழகாக சுமந்து சென்று பிரசவிக்கும் தாயாய்
  பிரதிபலித்த கடிதங்கள்ஃஃஃஃ

  அருமையாக உள்ளது சகோதரம் வாழ்த்துக்கள்..//

  வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 38. //Arun Prasath said...

  சரி தான் நண்பா... இன்னைக்கு அது இல்லனா கண்டிப்பா எந்த வேலையும் ஓடாது//

  நிச்சயமாக இன்று கணினி இல்லாத ஒரு உலகை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது அந்தளவுக்கு அதன் தேவையும் பயனும் முக்கியமானது

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 39. //மகாதேவன்-V.K said...

  //கண்ணாடி குடுவைக்குள்
  அடைப்பட்ட ஆக்சிஜனாய்-இவ்வுலகை
  கையலக கணினியின்
  கட்டுக்குள் அடக்கிய
  மாபெரும் மகானுக்கு
  என் முதல் நன்றி!//


  ஆரம்பமே அமர்க்களம் மாணவன்//

  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 40. //ஆமினா said...

  //
  பின்பொரு காலத்தில் சிறுபிள்ளை தனத்தின்
  நடைவண்டி பயணமாய் எழுதுகோல்
  பிடித்த விரல்கள்-இன்று
  முடிவு தெரியாத பிரபஞ்ச வெளியாய்
  ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளினூடே
  சுட்டியில்(மவுசில்) மண்டியிடுகிறது//

  அருமையான வரிகள்!!
  கணினி ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நீக்க முடியாத இடத்தில் அமைந்துவிட்டதை உங்கள் கவிதை சொல்கிறது!!

  வாழ்த்துக்கள்//

  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 41. //பார்வையாளன் said...

  மாடர்ன் கவிதை , மயக்குது மனதை//

  தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிங்க நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 42. //பாரத்... பாரதி... said...

  //இதுதான் எனது முதல் பதிவு முதல் கவிதையும் கூட//
  எல்லோரும் முதல் கவிதையாக காதல் கவிதை தான், எழுதுவார்கள்.அறிவியல் பற்றிய கவிதையை முதலாவதாக எழுதியதற்கு வாழ்த்துக்கள்..//

  எனக்கும் காதல் இருந்தது எனது படிப்பின் மீதும் கணினியின் மீதும் அதன் வெளிப்பாடுதான் இந்த கவிதை...

  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க பாரதி
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 43. //அருண் பிரசாத் said...

  கணினி தெரியா மனிதன் அரை மனிதன் இந்த காலத்தில்//

  உண்மைதான் நண்பரே இந்த காலத்தில் கணினி அறிவு இல்லையென்றால் நீங்கள் சொல்வதுபோல் அரைமனிதன்தான்

  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 44. //வெறும்பய said...

  nalaayirukku nanpare..//

  வாங்க அண்ணே, கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 45. //வைகை said...

  நல்லாயிருக்கு மாணவன்! புள்ள என்னமா யோசிக்கிது!//

  வாங்கண்ணே எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்...

  வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 46. //Chitra said...

  முதல் கவிதையிலேயே அசத்தி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!//

  வாங்க சித்ரா அக்கா
  ங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 47. //வேலன். said...

  கட்டண பேசியில் ஆரம்பித்து கைப்பேசியில் கரம்கோர்த்து
  பொலிவிழந்த பொழுதுகளை பூரணமாக்கி
  மனமகிழ்ந்த வேலைகளில் முகம் பார்த்து
  இதயத்தின் கனத்தினை இமை வழியே இறக்க
  குறைவான கட்டனத்தில் நிறைவாக பேச
  வீடியோச்சாட்டிங் விடியலைப் படைக்கிறது..!
  //

  அருமையான வரிகள் நண்பரே...
  வாழ்க வளமுடன்.
  வேலன்.//

  வாங்க வேலன் சார், உங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 48. //பதிவுலகில் பாபு said...

  முதல் பதிவே கலக்கலாக இருந்திருக்குங்க..

  வாழ்த்துக்கள்..//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நண்பா
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 49. //அரசன் said...

  அண்ணே இதுதான் முதல் பதிவா????

  ரொம்ப அருமையா இருக்கு..

  என்ன ஒரு யதார்த்த வரிகள்.. தூள்....//

  வாங்க ராஜா அண்ணே,
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அண்ணே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 50. //அரசன் said...

  முற்காலத்தில் ரேகைக்கு மட்டுமே


  பயன்பட்ட விரல்கள்-இன்று
  திரை திறந்து வினாடிக்கு வினாடி
  விஞ்ஞான யுக்திகளை
  மெய்யான கணினியில்
  கணக்கீடு செய்கிறது

  //எங்கேயோ போயிட்டிங்க...
  உண்மையிலே நல்லா இருக்குங்க அண்ணே..
  தொடரட்டும் உங்கள் இந்தகவிப்பயணம்...//

  வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அண்ணே...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 51. //அரசன் said...

  //சுவாசக்காற்றாக உதிரத்துளியாக
  உயிர்த்துடுப்பாக கிளை நரம்பாக
  நம்முள் பின்னிப் பிணைந்த
  இன்னொரு ஜீவன் கணினி...//


  உண்மைதான் அண்ணே...//

  நிச்சயமாக இன்று கணினி இல்லாத ஒரு உலகை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது அந்தளவுக்கு அதன் தேவையும் பயனும் முக்கியமானது அதன் வெளிப்பாடுதான் இந்த வரிகள்...

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 52. //தமிழரசி said...

  கணினிக்கு ஒரு கன்னிக்கவிதை மிகவும் அழகு மாணவன்...//

  வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 53. //எஸ்.கே said...

  அருமையான கவிதை! மிக அருமை! வாழ்த்துக்கள்!//

  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 54. //ரஹீம் கஸாலி said...

  நண்பரே உங்களின் பதிவான குடும்பத்தோடு கொள்ளையடிக்கலாம் வாங்க” A new Movie from Sun Pictures புலவன் புலிகேசி வலைப்பதிவில், பார்க்கவும்.
  http://pulavanpulikesi.blogspot.com/2010/12/blog-post_11.html//

  பரவாயில்லை நண்பரே பயன்படுத்திக்கொள்ளட்டும் நானும் சென்று பார்த்தேன் நீங்கள் சுட்டிக்காட்டியதன் மூலம் எனக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்

  உங்களுக்கு மிகவும் நன்றி நண்பரே தகவலை சுட்டிக்காட்டியமைக்கு

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 55. //vanathy said...

  கவிதை அருமை. சூப்பர்.//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 56. //சிவகுமார் said...

  பின்பொரு காலத்தில் சிறுபிள்ளை தனத்தின்
  நடைவண்டி பயணமாய் எழுதுகோல்
  பிடித்த விரல்கள்-இன்று
  முடிவு தெரியாத பிரபஞ்ச வெளியாய்
  ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளினூடே
  சுட்டியில்(மவுசில்) மண்டியிடுகிறது
  விசைப்பலகையில்(கீபோர்டு) சடுகுடு ஆடுகிறது!
  >>> அற்புதமான வரிகள்...முதல் பதிவா...முத்தான பதிவு >>>//

  ஆம நண்பரே இந்த கவிதையின் மூலம்தான் பதிவு எழுத ஆரம்பித்தேன் இதுதான் முதல் பதிவு

  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 57. //ஹேமா said...

  வித்தியாசமான சிந்தனையில் கணணிக் கவிதை.கணணியும் அதை இயக்கும் மின்சாரமும் இல்லையென்றால் உலகமே ஓடாமல் நிற்பதாய் ஒரு உணர்வு இப்போதேல்லாம் !//

  உங்களது கருத்து முற்றிலும் உண்மை...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 58. //வழிப்போக்கன் - யோகேஷ் said...

  கலக்கல் முதல் (?) கவிதை........//

  கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 59. //எப்பூடி.. said...

  சிறப்பாக எழுதியுள்ளீர்கள், நிறைய கவிதைகள் எழுதுங்கள்.//

  நிச்சயமாக நண்பரே எழுதுகிறேன்...

  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 60. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
  http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_12.html

  நன்றி!//

  எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது சார் வலைச்சரத்தில்அறிமுகப்படுத்தியதற்குமிக்க நன்றி சார்...

  நேரம் கிடைக்கும்போது நம்ம தளத்துக்கும் வந்து உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் சார்

  நன்றி

  ReplyDelete
 61. //செங்கோவி said...

  நல்ல கவிதை..காமராஜர் பற்றிய பதிவை இன்றுதான் படித்தேன்..மிகவும் அருமை..அங்கே ஒரு வேண்டுகோளை பின்னூட்டத்தில் போட்டிருக்கிறேன்..கொஞ்சம் பாருங்கள்..நன்றி!//

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி

  ReplyDelete
 62. //பாரத்... பாரதி... said...

  //வித்தியாசமான சிந்தனையில் கணணிக் கவிதை.கணணியும் அதை இயக்கும் மின்சாரமும் இல்லையென்றால் உலகமே ஓடாமல் நிற்பதாய் ஒரு உணர்வு இப்போதேல்லாம் !//

  வாங்க பாரதி தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க...
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 63. //Thanglish Payan said...

  Superb...//

  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 64. //சி.பி.செந்தில்குமார் said...

  கவிதை அருமை//

  வாங்க சி.பி அண்ணே கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 65. //சசிகுமார் said...

  அருமை நண்பா//

  கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
  நன்றி
  வாழ்க வளமுடன்

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.