Monday, October 24, 2011

பெலே (காற்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன்) - வரலாற்று நாயகர்!

இன்று நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகர் ஒருமுறை இவ்வாறு கூறினார். "பீத்தோவன்  எப்படி இசைக்காக பிறந்தாரோ அதேபோல் நான் காற்பந்தாட்டத்திற்காக பிறந்தேன்" இது ஆணவத்தால் சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல. இப்படி ஒரு ஒப்பீட்டை அவர் செய்திருக்காவிட்டாலும் பின்னாளில் உலகம் நிச்சயம் செய்திருக்கும். அவர்தான் காற்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக இன்றும் விளங்கும் ஈடு இணையற்ற தி கிரேட்டஸ்ட் காற்பந்தாட்ட வீரர் பெலே.

Monday, October 17, 2011

தந்தை பெரியார் (தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ்) - வரலாற்று நாயகர்!

இந்தியா இன்று பல துறைகளில் முன்னேறி வருகிறது. போதுமான மனித வளமும், அறிவு வளமும் அதற்கு நிறையவே இருக்கிறது. அந்த மனித வளத்தையெல்லாம் சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் பயன்படுத்தினால் நமது இந்தியா உலகுக்கே ஒரு முன்னுதாரண தேசமாக விளங்க முடியும். ஆனால் உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தேசங்களில் ஒன்றான நமது இந்தியாவில்தான் பல தேசங்களில் காண முடியாத ஓர் அநாகரிகமும் வேரூன்றி இருக்கிறது. அதுதான் தீண்டாமை, சாதிப்பிரிவினை என்ற அநாகரிகம் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்துகூட விடுதலை பெற்று விட்டது நமது தேசம். ஆனால் காலங்காலமாக தங்களை மேல்சாதி என்று கூறிக்கொள்பவர்களின் அடக்கு முறையிலிருந்தும், அநாகரிகத்திலிருந்தும் விடுதலை பெற முடியாமல் தவிக்கின்றனர் கீழ்சாதி என்று வகைப்படுத்தப்பட்டவர்கள்.

Monday, October 10, 2011

இசை உலகின் பிதாமகன் மாமேதை பீத்தோவன் - வரலாற்று நாயகர்!

வரலாற்று நாயகர்கள் (பாகம் - 1) மின்புத்தக வடிவில்! தரவிறக்க


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக வரலாற்றில் தனது பங்களிப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது ஆஸ்திரியா. தங்கள் தேசத்தை சேர்ந்த பலர் உலகப் புகழ் பெற்றிருக்கின்றனர் என்பதையும், அவர்களின் உடல்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் உணர்ந்த ஆஸ்திரியர்கள் அவர்கள் எல்லோரையும் வியன்னாவின் மையப்புற இடுகாட்டில் மறு அடக்கம் செய்ய விரும்பினர். 'grave of honor' என்ற ஒரு பகுதியை ஒதுக்கி வியன்னாவின் புகழை உலகெல்லாம் பரவச்செய்த வரலாற்று நாயகர்களின் மிச்சங்களை அங்கு மறு அடக்கம் செய்தனர். 

Tuesday, October 4, 2011

Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) - வரலாற்று நாயகர்!

அதிர்ஷ்டம் என்ற சொல்லை நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். அவன் அதிர்ஷ்டசாலி எனக்குதான் அதிர்ஷ்டம் இல்லை என்று எத்தனையோ பேர் புலம்ப கேள்விப்பட்டிருப்போம். நாம் சந்திக்கவிருக்கும் வரலாற்று நாயகர் அதிர்ஷ்டத்தை இவ்வாறு விளக்குகிறார். "Luck is a dividend of sweat. The more you sweat, the luckier you get" அதாவது அதிர்ஷ்டம் என்பது நீங்கள் சிந்தும் வியர்வைக்கு கிடைக்கும் வட்டி. எவ்வுளவுக்கு எவ்வுளவு வியர்வை சிந்துகிறீர்களோ அவ்வுளவுக்கு அவ்வுளவு அதிர்ஷ்டம் கூடும். உழைப்பும் அதற்காக சிந்தப்படும் வியர்வையும்தான் நம் உயர்வை நிர்ணயிக்கிறது என்ற உண்மையை அழகாகச் சொன்னதோடு அதனை வாழ்ந்தும் காட்டிய ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.