Monday, December 20, 2010

கணினியும் கணினி சார்ந்தவையும்-1

அன்பின் நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள், 
பதிவுலகம் சம்பந்தமான ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், சமீப காலமாக பதிவுகள் எழுதாமல் இருந்த மதிப்பிற்குரிய திரு.பிகேபி ஐயா அவர்கள் மீண்டும் பதிவு எழுத ஆரம்பித்திருக்கிறார் அவரின் வருகை மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.

 கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடந்த ஜூலை மாதம் பதிவு எழுதியதோடு சரி, இப்போது இந்த மாதம் டிசம்பர் 15 அன்று வந்தேன் வந்தேன்” என்ற தலைப்பில் இணைய சம்பந்தமான தகவல்கள் மற்றும் தொழில் நுட்ப தகவலோடு எழுத ஆரம்பித்திருக்கிறார். தொழில்நுட்ப தகவலை தொலைநோக்குப் பார்வையோடு தெளிவாகவும் சிறப்பாகவும்  எழுதுவதில் வல்லவர். அவரின் எழுத்துப் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.

“நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.”

இதுபோன்ற சிந்தனைத் தகவல்களையும் மற்றும் நாவல்கள், சிறுகதைகள், தொழில்நுட்பத்தகவல் மற்றும் பல அறிய தகவல்கள் அடங்கிய நூல்களை தமிழில் மென்புத்தமாக தறவிரக்குவதற்கு இணைப்பு கொடுத்து பதிவிடுவது அவருக்கே உரிய சிறப்பு.

திரு.பிகேபி ஐயா அவர்கள் பதிவுகள் எழுதாமல் இருந்தாலும் அவரின் தளம் மிகவும் பிரபலம்தான் எப்படி என்று கேட்கிறீர்களா, ஒருமுறை அவரின் வலைத்தளத்துக்கு சென்று பாருங்கள் உங்களுக்கே புரியும். நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும்

பிகேபி ஐயா அவர்களின் தளம் பற்றி நிறைய நண்பர்களுக்கு முன்னமே தெரிந்திருந்தாலும், தெரியாத நண்பர்கள் மற்றும் புதிய நண்பர்கள், வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காக பகிர்ந்து கொண்டேன்.

எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு தொழில்நுட்ப பதிவர் நண்பர் டிவிஎஸ்50 அவர்கள் இவரும் தொழில்நுட்ப பதிவுகள், பிளாக்கர் டிப்ஸ், பதிவர் சந்தேகங்கள் என எல்லாவற்றுக்கும் தன்னால் முடிந்தளவு தீர்வு கொடுப்பார். என்ன காரணத்திலோ இப்போது பதிவுகள் எதுவும் எழுதுவதில்லை. ஆனால் அவர் இதுவரை பதிவிட்ட தொழிநுட்ப பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை, ஒருமுறை சென்று பாருங்கள்: தமிழில் தொழில்நுட்பம்


நமது தளத்தில் புதிதாக பதிவுகளை எளிதாக தமிழில் தேட  தேடுபொறி (Search Box) கட்ஜெட் மற்றும் புதிதாக மேம்படுத்தப் பட்ட தமிழில் தேடல் (தமிழ் அகராதி)  கட்ஜெட் நிறுவுவதற்கு உதவியாய் இருந்த தொழில்நுட்ப பதிவர் நண்பர் நீச்சல்காரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி...!


இந்தத் தகவல்களுடன் நான் கற்றுத் தெரிந்துகொண்ட சில கணிணி சார்ந்த பொது அறிவுத் தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
 • இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் - வில்டன் ஸர்ஃப்  
  • (WWW) World Wide Web - எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ
  • World wide Web எனபதன் துவக்க கால பெயர் -  என்க்வயர்
  • கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் “புன்னகை தவழும் முகம்” எனபதைக் குறிக்க :-) எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன்முதலாக (1982)ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் இஃபால்மன் எனும் பேராசிரியர். 
  • கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்ர்ஜி ஃப்ரின்
  • உலகின் முதல் மடிக்கணினி - டைனாபுக் என்ற பெயரால் அழைக்கப்பட்டது
  • பிரபல விக்கிபீடியா வெப்சைட்டை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்
  • பிரபலமான பேஜ் மேக்கர் எனும் பப்ளிஷிங் சாஃப்ட்வேரை உருவாக்கியவர் - ஃபால் பிரெயினார்ட்
  • பெண்டியம் புராசஸர்களின் தந்தை எனப்படும் இந்திய விஞ்ஞானி - வினோத் தாம்
  • பால் பிரெயினார்ட் என்பவை இந்தியாவின் சூப்பர் கம்யூட்டர் என அழைக்கப்படுகின்றன
  • C++ எனும் கணினி மொழியை வடிவைமத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்
  • லோட்டஸ் 1-2-3 எனும் மொழியை கண்டுபிடித்தவர் - மிச் கபோர்
  • பிரபலமான (Dos) எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிம் பாட்டர்ஸன்
  • தனது 20 ஆம் வயதிலேயே லினக்ஸ் உருவாக்கிய விஞ்ஞானி - லினஸ் தோர்வாட்ஸ்
  • ஆப்பிள் கணினியைத் துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்
  • (CD) குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்
  • Power by Intellect Driven by Values - என்ற முத்திரை வாக்கியம் பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வாக்கியம்
  • ஹாட் மெயிலை உருவாக்கிய இந்திய ஐ.டி விஞ்ஞானி - ஸபீர் பாட்டியா
  • இந்தியாவில் ஐ.டி சட்டம் நிலுவையில் வந்த வருடம் - 2000 ஆம் ஆண்டு
  • இந்தியாவில் மிக அதிகம் மென்பொருள் ஏற்றுமதி  செய்யும் நிறுவனம் -  டி.சி.எஸ்
  • கணினி அறிவியலின் தந்தையார் - ஆலன் டூரிங்
   இந்த பதிவு எழுத காரணமாய் அமைந்த அனைத்து ஆக்கங்களுக்கும் படைப்பாளிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்!

  கற்போம் கற்பிப்போம்

  நண்பர்களே இந்த பதிவு பிடித்திருந்தால் தயவு செய்து மறக்காமலும் அலட்சியப்படுத்தாமலும் உங்கள் வாக்குகளை இண்ட்லியிலும் தமிழ்மணத்திலும் பதிந்து செல்லுங்கள் மேலும் பலரை சென்றடைய உதவியாய் இருக்கும் நன்றி..! உங்களது கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்

  பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

  வாழ்க வளமுடன்
  என்றும் நட்புடன்
  உங்கள் மாணவன்