Wednesday, December 8, 2010

பாசமிகு அண்ணன் சிரிப்புபோலீஸ் ரமேசுக்கு - இந்தப் பாடல் அர்ப்பணிப்பு

வணக்கம் நண்பர்களே இந்த பாடல் நம்ம பாசமிகு அண்ணன் சிரிப்புபோலீஸ் ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன், இப்ப சமீபகாலத்துல சிரிப்புபோலீஸ் அண்ணன் டாக்டர். கேப்டன் ரசிகர்மன்றத் தலைவராக பொறுப்பெடுத்துக் கொண்டு கேப்டனின் புகழை பரப்பவதோடு மட்டுமல்லாமல் விருதகிரி படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாட வேண்டும் என்று தனது குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு, காசுகொடுத்து ஆட்கள் சேர்த்துகொண்டிருக்கிறார் விருதகிரி படம் பார்ப்பதற்கு.

அதுமட்டுமல்லாமல் படம் வெளிவரும்வரை படத்தைப் பற்றிய செய்திகளையும் விமர்சனங்களையும் தொடர் பதிவாக தொடர்ந்து எழுதுவேன் என்று லட்சியமாக எழுதிக் கொண்டிருக்கிறார் தொடரட்டும் அவரின் பொன்னான பணிகள்...நம்ம நல்லவர் அண்ணனுக்காக ஏதோ நம்மால முடிந்த ஒரு சின்ன அர்ப்பணிப்பு விருதகிரி படத்திலிருந்து ஒரு பாடல்....

(டாக்டர்.கேப்டனும், சிரிப்புபோலீஸும் என்றென்றும் கேப்டனின் பின்னால்...)
ஹலோ வணக்கம் ஒலி 96.8 FMங்களா... வணக்கம் நீங்க யாரு பேசறது... நான் மாணவன் பேசறங்க.. ம் சொல்லுங்க என்னப் பாடல் வேண்டும் யாருக்கெல்லாம் விரும்பி கேட்குறீங்க... எனக்கு விருதகிரி படத்திலிருந்து ஏழைகள் தோழா வா வா எஸ்பிபி சார் பாடுன பாட்டு வேணுங்க மேடம், இந்த பாட்டு வந்து முக்கியமா எங்க அண்ணன் சிரிப்புபோலீஸுக்காகவும்.... அதென்னங்க பேரு சிரிப்புபோலீஸ்... கேக்கறதுக்கே காமெடியா இருக்குங்க... நீங்க வேற அவர பார்க்கறதுக்கே செம்ம காமெடியா இருப்பாரு ஹிஹிஹி... அப்புறம் இந்த பாடல் கேப்டனின் தொண்டர்கள்,ரசிகர்களுக்காவும் மற்றும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்காகவும் விரும்பிக் கேட்குறேங்க... சரிங்க மாணவன் இதோ பாடல் வருது கேட்டு மகிழுங்கள், ரொம்ப நன்றிங்க மேடம்.

பாடலைக் கேட்க:பாடல் வரிகள்:
ஏழைகள் தோழா வா வா!
எங்களைக் காக்க வா வா!
வீறுகொண்டு வீறுகொண்டு 
வெற்றிக் காண வா வா!

புத்தன் காந்தி இயேசு எல்லாம்
இணைந்த இதயம் கொண்டவன்
அநீதி அழித்து நீதி காக்க 
புதிய உதயம் கண்டவன்
இல்லை என்ற சொல்லை 
இனி சொல்லத் தேவையில்லை
தமிழகத்து தாய்க்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை!

ஏழைகள் தோழா வா வா!
எங்களை காக்க வா வா!
வீறுகொண்டு வீறுகொண்டு 
வெற்றிக் காண வா வா!

தட்டிக்கேட்க ஆளில்லாமல் ஆட்டம் போட்ட கூட்டமே
தங்கத் தலைவன் வந்துவிட்டான் எடுங்கள் இனி ஓட்டமே
நித்தம் நித்தம் இரத்த வாடை சுமக்குது இந்த பூமியே
சுத்தம் செய்ய வந்துவிட்டான் மனிதகுல சாமியே
வானும் மண்ணும் நீரும் காற்றும் பொதுவில் உள்ள போதிலே
வாழ்க்கை மட்டும் எப்போ போச்சு வன்முறையாளர் கையிலே
எல்லாம் மாறும் தருணம் உன்னால்தானே வரனும்
வழியைக் காட்டு முன்னால் வருகிறோம் உங்கள் பின்னால்

ஏழைகள் தோழா வா வா!
எங்களை காக்க வா வா!
வீறுகொண்டு வீறுகொண்டு 
வெற்றிக் காண வா வா!

உணவும் கல்வியும் காற்றைப் போல எல்லோருக்கும் வேண்டுமே
என்ற கொள்கை உள்ள நீயே ஆட்சி ஆள வேண்டுமே
வேர்வை சிந்த உழைக்கும் மக்கள் விண்ணில் பறக்க வேண்டுமே
விடியலுக்கு ஏங்கி சாகும் விழிகள் திறக்க வேண்டுமே
வாழும்போதே வாழ வைக்க வந்த வள்ளல் நீங்களே
உங்களைத்தான் நம்பியிருக்கோம் இந்த ம்ண்ணில் நாங்களே
மக்கள் விரும்பும் தலைவா ஆட்சி மாற்றம் தர வா
புயலாய் நடப்பாய் முன்னால் புறப்பட்டு வருகிறோம் பின்னால்


எங்கள் கேப்டனே வா வா புரட்சிகலைஞரே வா வா!
ஏழையைக் காக்க எங்களைக் காக்க வெற்றிக்காண வா வா!


புத்தன் காந்தி இயேசு எல்லாம்
இணைந்த இதயம் கொண்டவன்
அநீதி அழித்து நீதி காக்க 
புதிய உதயம் கண்டவன்
இல்லை என்ற சொல்லை 
இனி சொல்லத் தேவையில்லை
தமிழகத்து தாய்க்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை!


எங்கள் கேப்டனே வா வா புரட்சிக்கலைஞரே வா வா!
ஏழையைக் காக்க எங்களைக் காக்க வெற்றிக்காண வா வா!

(விருதகிரி எல்லாப் பாடல்களையும் கேட்கவும் தறவிரக்கவும் இங்கு செல்லுங்கள்)

இப்படிக்கு
அகில இந்திய தேமுதிக (கிழக்கு ஒன்றியம்)
ரமேஷ் - ரொம்ப நல்லவன் சத்தியமா (ஒன்றியத் தலைவர்)

டிஸ்கி: துணைத் தலைவர் செயலாளர் பொருளாளர் பொறுப்புகளுக்கு தேர்வு நடந்துகொண்டிருக்கிறது முந்துபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்

விருதகிரி படத்தில் இந்த பாடலை சுந்தர்சி.பாபு இசையில நம்ம பாடும் நிலா எஸ்பிபி சார்  பாடியிருக்கார் பாடலைக் கேட்கும்போது நமக்கே ஒரு வீரம் வருவதைப் போன்ற ஒரு உணர்வு, அந்தளவுக்கு எஸ்பிபி சார் உயிரகொடுத்து உணர்வோடு பாடியிருக்காரு, தயவுசெய்து ஒருமுறையாவது பாடலை கேளுங்கள் அட கேப்டனுக்காக இல்லாட்டியும் எஸ்பிபி சாருக்காக கேளுங்கப்பா!

(டாக்டர்.கேப்டனும், சிரிப்புபோலீஸும் புகைப்பட உதவி நன்றி திரு எஸ்.கே அவர்கள்)

கடைசியா இந்த கொடுமைய பாருங்க என்ன கொடுமை சார் இது:
(தூரத்துல நின்னு பாத்தா தாண்ட நான் காமெடியா இருப்பேன் , கிட்டதுல வந்து பாத்தா டேர்ரரா இருப்பெண்டா டேர்ரரா .....).
மறக்காமல் உங்கள் வாக்குகளையும் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்