Wednesday, September 21, 2011

வரலாற்று நாயகர்கள் பாகம் ஒன்று - உங்களுக்காக மின் புத்தக வடிவில்!

வணக்கம் நண்பர்களே, எனது வலைத்தளத்தில் (http://urssimbu.blogspot.com/) வரலாற்று நாயகர்கள் என்ற தலைப்பில் காலம் கடந்தும் வரலாறு நினைவுகூறும் மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்து வருகிறேன். இந்த பதிவு எழுத முக்கிய காரணம் எனது பள்ளிப்பருவ காலத்திலிருந்தே அறிவியலிலும் வரலாற்றிலும், வரலாற்றில் தடம்பதித்த மாமனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஈடுபாடும்தான், அதன் வெளிபாடுதான் இதுபோன்ற மாமனிதர்களின் வாழ்க்கை குறிப்பு தகவல்களை சேகரித்து பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் உதித்தது, 

வரலாற்று நாயகர்களின் தொகுப்பில் இதுவரை 35 வரலாற்று மாந்தர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை பதிவு செய்துள்ளேன். நண்பர்கள் மற்றும் ஆசிரியர் சிலரின் வேண்டுக்கோளுங்கினங்க வரலாற்று நாயகர்கள் தொகுப்பில் முதல் 25 மாமனிதர்களின் வாழ்க்கை குறிப்புகளை சேர்த்து முதல் பாகமாக PDF & FLASH ஃபைல் வகை ஃபார்மட்களில் தயார் செய்து மின் புத்தக வடிவில் உருவாக்கித் தரவிறக்கிக்கொள்ள இணைப்புக்கொடுத்துள்ளோம். எனது இந்த சிந்தனைகளுக்கு சிறப்பாக செயல்வடிவம் கொடுத்த அன்பின் நண்பர் எஸ்.கேவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்! (மின் புத்தக வடிவ உதவி நன்றி - நண்பர் எஸ்.கே அவர்கள்)

வரலாற்று நாயகர்கள் (பாகம் - 1) தரவிறக்க இங்கு செல்லவும்.

வரலாற்று நாயகர்களின் தொகுப்புகளில் என் இதய எண்ணங்களை எழுத்தாக்கி பதிவு செய்ய அனுமதி தந்து வாழ்த்துரை நல்கிய சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் படைப்பாளர் நண்பர் திரு.அழகிய பாண்டியன் அவர்களுக்கும், மற்றும் ஒலி 96.8 வானொலிக்கும், வழியெல்லாம் வழிகாட்டியாய் நின்று என்னை ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது இதயத்தின் அடித்தளத்தினின்று உதயமாகும் அன்பின் நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்.

ஆண்டுகள் பல கடந்தும் வரலாற்றில் நிலைத்து நிற்கும் அறிஞர்களின் வரலாறுகளை படித்து அவர்களைப் போல மாறவிட்டாலும் கூட அதிலிருந்து நல்ல விசயங்களை கற்றுக்கொள்ளவும், முக்கியமாக வாழ்வில் தன்னம்பிக்கை அளிக்கவும் இந்த வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைக் குறிப்புகளின் தொகுப்பு உங்களுக்கு உதவும் என நம்புகிறேன். வரலாற்றில் தடம் பதித்த மாமனிதர்களைப்போலவே உங்கள் வாழ்விலும் தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் தொடர்ந்து போராடுங்கள். நீங்கள் விரும்பும் இலக்கை அடைந்து, வசப்படுத்த விரும்பும் வானத்தில் மகிழ்ச்சியாக சிறகடித்துப் பறக்க வாழ்த்துக்கள்!
நட்புடன்...
- மாணவன்(சிலம்பு)

32 comments:

 1. மிக நல்ல முயற்சி! வாழ்த்துக்கள் பல!

  ReplyDelete
 2. மாப்ள சூப்பர்யா நன்றி உமக்கு!

  ReplyDelete
 3. சிலம்பு ரொம்ப அருமையான முயற்சி மற்றும் யோசனை. இதைப்போல செய்து வைத்தால் ஒரே இடத்தில் அனைவரும் எளிதாக படிக்க முடியும். இணைய வசதி இல்லாதவர்களும் இதை தரவிறக்கம் செய்து மாணவர்களுக்கு கொடுக்க முடியும்.

  இரண்டையுமே பார்த்தேன் pdf மற்றும் flash இரண்டுமே அசத்தலாக உள்ளது. நான் இந்த அளவிற்கு சிறப்பாக செய்து இருப்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. flash ல் பல வசதி உள்ளது தேவையான பகுதியை உடனே பார்க்க முடிகிறது. நிச்சயம் பயனுள்ளது தான் சந்தேகமே இல்லை. pdf போல flash ல் எழுத்துக்களை center பண்ண முடியவில்லையா? center செய்து இருந்தால் இன்னும் அழாகாக இருந்து இருக்கும்.

  அதே போல varalaru001 என்ற வார்த்தை index ல் வருவதால் படத்தை வைத்தே க்ளிக் செய்ய முடிகிறது இதற்க்கு பதிலாக அவர்களுடைய பெயர் தெரிந்தால் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.

  என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. தங்கள் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள். நண்பர்களுக்கும் இதை பரிந்துரை செய்கிறேன்.

  ReplyDelete
 5. சிந்தனையில் உதித்த ஒன்றை இன்று செயலாக்கி விட்டீர்கள்...பிறருக்கு பயன்படனும் என்ற உங்களின் ஆர்வத்தை மிக பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக புத்தக வடிவமைப்புக்கு உதவிய எஸ்.கேவிற்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

  வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையை படிபவர்களுக்கு இத்தகைய தொகுப்பு நீங்கள் சொல்வது போல் நிச்சயம் ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

  இளைஞர்களின் சிந்தனையும் செயலும் எத்தனை உயர்வாக இருக்கிறது என்று பெருமிதம் கொள்கிறேன்.


  மீண்டும் பாராட்டுகள் + நன்றிகள்

  ReplyDelete
 6. மிக்க நன்றி தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. எனக்கு தெரிந்தவர்களுக்கு இந்த மின் புத்தகம் பற்றி சொல்கிறேன். நன்றிகள்

  ReplyDelete
 8. மிக்க நன்றி தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. நல்ல விடயம் நண்பா... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. மிக்க நன்றி தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. :)

  ReplyDelete
 11. மிக்க நன்றி தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. :))

  ReplyDelete
 12. மிக அருமையான முயற்சி நண்பா...
  வாழ்த்துகள்..

  தமிழ்10 இணைத்துவிட்டேன்...

  ReplyDelete
 13. இப்போதான் டவுன்லோட் பண்ணி பாத்தேன். சூப்பரா இருக்கு. கலக்கல் சிம்பு & எஸ்.கே. வாழ்த்துகள்.. :)

  ReplyDelete
 14. நல்ல முயற்சி.
  பாராட்டுக்கள்.
  தேடுதலை சுருக்க உங்கள் முயற்சி நிச்சயம் உதவும்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 15. தெரிந்தவர்களிடம் கட்டாயம் இந்தத் தகவலை கொண்டு சேர்க்கிறேன்.

  ReplyDelete
 16. நல்லதொரு பணியை மிக சிறப்பாக செய்த உங்களுக்கு நன்றிகள் .. வாழ்த்துக்கள் அண்ணே ..

  ReplyDelete
 17. மிக்க நன்றி தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. :

  ReplyDelete
 18. அருமை அண்ணா. நன்றியும் கூட.

  ReplyDelete
 19. தங்களின் பங்களிப்பிற்கு நன்றிகளும்,பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.
  தொடருங்கள்.!

  ReplyDelete
 20. மிக்க நன்றி தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. மனம் நிறைந்த வாழ்த்துக்கள், மாணவருக்கு.

  ReplyDelete
 22. சிறுவயதிலிருந்தே இருந்த உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது.

  எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
  ஆன்ற பெருமை தரும்
  என்னைப்போன்றவர்கள் வைத்துப் படிக்க எளிதாக வழங்கியுள்ளீர்கள் நன்றி
  காலத்தில் முந்தியபோதும் ஞானத்தால் இன்றும் போற்றப்படும் ஆர்க்கிமிடிஸ் வரலாறு மிகவும் பிடித்தவொன்று

  ReplyDelete
 23. [ma]தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே.....[/ma],

  ReplyDelete
 24. [im] http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSWkah2NU7rDWA6OyzIyXxoFnhms3NtpXkQX9vnqrAPYTpps-m_ [/im]

  ReplyDelete
 25. Nanba..!antha file i open senja error kattuthu athanal PDF file mattum yaravathu ennuduiya email id ku (abu776@gmail.com) anuppa mudiya ?
  Nandri

  ReplyDelete
 26. ”யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையக்ம்” - என்னும் பொன்மொழிக்கேற்ப செயல்படும் உங்களின் சீரிய முயற்சியை பாராட்டி மகிழ்கிறேன்.

  வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 27. சிலம்பு ரொம்ப அருமையான முயற்சி Che Guevara வரலாற்று நாயகர் இந்த மின் புத்தகம் வேண்டும்

  ReplyDelete
 28. சூப்பர் சார் உங்க பதிவுகளால நிறைய வரலாறு தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி

  ReplyDelete
 29. உங்களுடைய வரலாற்று நாயகர்கள் புத்தகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதன் அடுத்த பாகத்தையும் நான் படிக்கணும் என்றதுக்காக இணையதளம் பார்க்கிற ஒவ்வொரு தடவையும் உங்களது இணைய பக்கத்தை பார்ப்பேன். ஆனால் இதுவரைக்கும் இரண்டாம் பாகம் இல்ல. சீக்கிரம்மாக இந்த இரண்டாம் பாகத்தை தர கேட்டுக்கொள்கிறேன். நன்றி, உங்களது முயற்சியை நினைத்து நான் ரொம்ப கெளரவப்படுகிறேன்.

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.