Tuesday, January 18, 2011

பற்றற்ற பற்று கொண்டிருத்தல்...

பற்றற்ற பற்று

சிந்தனைக்கு: வாழ்க்கையின் துன்பங்களுக்கு புகழ் ஓர் எளிமையான பிரதிபலன்


மயானத்தில் முனிவர் ஒருவர் தவம் புரிந்தார். அவருடன் சீடன் ஒருவனும் தவத்தில் ஈடுபட்டான். ஒரு நாள் நள்ளிரவில் சீடனைத் தனியாகத் தவத்தில் இருக்கச் செய்து, முனிவர் தனது குடிலுக்குள் ஓய்வு எடுத்தார். சிறது நேரத்தில் சீடன் முனிவர் முன் வந்து நின்றான். “ஏன் இவ்வளவு விரைவில் திரும்பிவிட்டாய்?” என்ற முனிவரிடம், “மயானத்தில் தனியே இருக்க பயமாக இருக்கிறது” என்று தயங்கியபடி சொன்னான் சீடன்.

வேதம் படித்த நீ பயப்படலாமா? என் சரீரத்தில் நீ வைத்திருக்கும் பற்றுதான் உன்னுள் பயத்தை வரவழைத்தது. அழியக்கூடிய நிலையற்ற பொருட்களின் மீது பற்று வைத்தவன், அழியாத சத்தியத்தை அடைய முடியாது என்று கடோபநிஷதம் கூறுவதை அறியவில்லையா நீ” என்றார் முனிவர். சரீர சுகத்தில் நாம் வைக்கும் எல்லையற்ற பற்றுதான் எல்லாவித துன்பங்களுக்கும் மூலக்காரணம்!

இளமை கழிந்து வயோதிகம் வளர்ந்ததும் காம விகாரம் மனதில் இருந்து கழன்று விடுகிறது. நீர் முழுவதும் வற்றிய ஏரியில் எந்த பிம்பமும் தெரியாமல் போகிறது. செல்வம் அனைத்தையும் இழந்தவனது வீட்டை சுற்றம், முற்றும் மறந்து விடுகிறது. பற்றற்ற வாழ்மை மேற்கொள்ளும்போதுதான் துயரங்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது’ என்ற ஆதிசங்கரரின் ஞானமும், கீதையின் சாரமும் ஒரே மையப் புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.

விரும்பாதது வந்தாலும் துன்பம்; விரும்பியது விலகினாலும் துன்பம்; விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம். ஒவ்வொன்றாக மறைந்து போகும் உலக வாழ்வில்… ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம் எனும் அறிவு கண் விழிக்கும் வரை மனிதனுக்குப் பற்றிலிருந்து விடுதலை கிடையாது.

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

78 comments:

 1. திருக்குறளில் அழகாக திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு

  ReplyDelete
 2. திருக்குறளில் அழகாக திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு

  ReplyDelete
 3. ஆசையே துன்பத்திற்குக் காரணம்!
  -புத்தர்

  ReplyDelete
 4. மனிதன் ஆசையே படக்கூடாது என்று
  புத்தர் ஆசைப்பட்டார் (எங்கோ படித்தது). நல்ல பதிவு மாணவரே

  வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

  ReplyDelete
 5. எப்படியோ ஜனங்க திருந்தினா சரி!!!!

  ReplyDelete
 6. உண்மைதான் நண்பரே நிலையில்லா உடல் சுமக்கும் ஆசைகளே அழிவின் காரணமும்

  ReplyDelete
 7. நல்ல பதிவு சகோ..

  ReplyDelete
 8. // கோவி.கண்ணன் said...
  திருக்குறளில் அழகாக திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு//

  உண்மைதான் சார் எவ்வளவு பெரிய விஷயத்தை இரண்டு வரிகளில் சொல்லியிருக்கிறார்...

  வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 9. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  திருக்குறளில் அழகாக திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு//

  நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 10. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  By Copy & Paste சங்கம்//

  இப்ப இது வேறயா????

  நடத்துங்க நடத்துங்க....

  ReplyDelete
 11. //சரீரத்தில் நீ வைத்திருக்கும் பற்றுதான் உன்னுள் பயத்தை வரவழைத்தது.//
  //நீர் முழுவதும் வற்றிய ஏரியில் எந்த பிம்பமும் தெரியாமல் போகிறது. //

  தத்துவார்த்தமான வரிகள்.
  உடம்பின் மீதான பற்றுதல் தான் மிக அதிகமான துன்பங்களுக்கு காரணமாக இருக்கிறது. இளமை நில்லாது, யாக்கை நிலையாதது என்பது புரிந்தபின் துன்பங்களிலிருந்து விடுதலைதான்..

  ReplyDelete
 12. //ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம்//

  உண்மையான வரிகள் சிம்பு வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 13. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆசையே துன்பத்திற்குக் காரணம்!
  -புத்தர்///

  ஆமாம் அண்ணே, தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 14. // கவிதை காதலன் said...
  மனிதன் ஆசையே படக்கூடாது என்று
  புத்தர் ஆசைப்பட்டார் (எங்கோ படித்தது). நல்ல பதிவு மாணவரே//

  வருகைக்கும் தகவலுக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 15. // sakthistudycentre-கருன் said...
  எப்படியோ ஜனங்க திருந்தினா சரி!!!!//

  நன்றி நண்பரே

  ReplyDelete
 16. // தினேஷ்குமார் said...
  உண்மைதான் நண்பரே நிலையில்லா உடல் சுமக்கும் ஆசைகளே அழிவின் காரணமும்//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 17. // ஜெ.ஜெ said...
  நல்ல பதிவு சகோ..//

  நன்றிங்க சகோ...

  ReplyDelete
 18. நல்ல கருத்துக்களை எளிமையாகவும் புரியும்படியும் சொல்லிருக்கிறீர்கள்! அருமை நண்பரே!

  ReplyDelete
 19. // பாரத்... பாரதி... said...
  //சரீரத்தில் நீ வைத்திருக்கும் பற்றுதான் உன்னுள் பயத்தை வரவழைத்தது.//
  //நீர் முழுவதும் வற்றிய ஏரியில் எந்த பிம்பமும் தெரியாமல் போகிறது. //

  தத்துவார்த்தமான வரிகள்.
  உடம்பின் மீதான பற்றுதல் தான் மிக அதிகமான துன்பங்களுக்கு காரணமாக இருக்கிறது. இளமை நில்லாது, யாக்கை நிலையாதது என்பது புரிந்தபின் துன்பங்களிலிருந்து விடுதலைதான்..///

  வருகைக்கும் தங்களின் தகவலுக்கும் மிக்க நன்றிங்க பாரதி...

  ReplyDelete
 20. // சசிகுமார் said...
  //ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம்//

  உண்மையான வரிகள் சிம்பு வாழ்த்துக்கள் நண்பா///

  நன்றி நண்பரே

  ReplyDelete
 21. // எஸ்.கே said...
  நல்ல கருத்துக்களை எளிமையாகவும் புரியும்படியும் சொல்லிருக்கிறீர்கள்! அருமை நண்பரே!//

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 22. //விரும்பாதது வந்தாலும் துன்பம்; விரும்பியது விலகினாலும் துன்பம்;//

  உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா///

  ReplyDelete
 23. உண்மை தான். பற்றற்று இருத்தலே துன்பத்தை துரத்தியடிக்க ஒரே வழி! எளிமையாக இருந்தது பதிவு..! வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..! மேலும் சிறப்பான பதிவுகளை எதிர்நோக்குகிறோம் தங்களிடமிருந்து..!

  ReplyDelete
 24. பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
  பூ பறிக்க கோடரி எதற்கு
  பொன்னோ பொருளோ பொற்காலம் எதற்கு
  ஆசை துறந்தால் அகிலமும் உனக்கு

  ReplyDelete
 25. நல்லதொரு கருத்தினை அழகாக பதிவிட்டு உள்ளீர்கள் நன்றி

  ReplyDelete
 26. // S Maharajan said...
  //விரும்பாதது வந்தாலும் துன்பம்; விரும்பியது விலகினாலும் துன்பம்;//

  உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா///

  தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 27. // தங்கம்பழனி said...
  உண்மை தான். பற்றற்று இருத்தலே துன்பத்தை துரத்தியடிக்க ஒரே வழி! எளிமையாக இருந்தது பதிவு..! வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..! மேலும் சிறப்பான பதிவுகளை எதிர்நோக்குகிறோம் தங்களிடமிருந்து..!///

  வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே கண்டிப்பாக தொடர்ந்து நல்ல தகவல்களையே பகிர்ந்துகொள்கிறேன்

  ஊக்கத்திற்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 28. // FARHAN said...
  பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
  பூ பறிக்க கோடரி எதற்கு
  பொன்னோ பொருளோ பொற்காலம் எதற்கு
  ஆசை துறந்தால் அகிலமும் உனக்கு//

  உண்மைதான் நண்பா சரியான நேரத்தில் ஞாபகபடுத்தியதற்கு நன்றி நண்பா

  ReplyDelete
 29. // சி.பி.செந்தில்குமார் said...
  as usual usefull post//

  நன்றி அண்ணே

  ReplyDelete
 30. // இரவு வானம் said...
  நல்லதொரு கருத்தினை அழகாக பதிவிட்டு உள்ளீர்கள் நன்றி//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 31. நேர்மையான, நியாயமான தேவைகளுக்கே ஆசை படவேண்டும். அதுவே நிமதியான ,அமைதியான வாழ்வை தரும் அருமையான வழியாகும். நல்ல இடுகை. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 32. // கக்கு - மாணிக்கம் said...
  நேர்மையான, நியாயமான தேவைகளுக்கே ஆசை படவேண்டும். அதுவே நிமதியான ,அமைதியான வாழ்வை தரும் அருமையான வழியாகும். நல்ல இடுகை. பகிர்வுக்கு நன்றி///

  மிக சரியாக சொன்னீர்கள் நியாயமான ஆசைகளோடு இருந்தால் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் என்றும் நிலைத்திருக்கும்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

  ReplyDelete
 33. மிக நல்ல சிந்தனைத்தான்....
  ஆனால் பற்ற்ற்ற நிலையில் இருப்பது எனக்கு கடினமாகவே படுகிறது... ஆனால் கொட்டவை மீது பற்றற்று இருக்க முயலலாம்.....

  சிந்தனை பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 34. ஆசையே துன்பத்திற்கெல்லாம் மூல காரணம்....

  ReplyDelete
 35. புதிதாக கிடைத்த சட்டைக்காக சந்தோச படாமல் அதில் இருக்கும் சிறு கரைக்காக வருத்த படுவது தான் மனித மனதின் பண்பு .........

  ReplyDelete
 36. ஆன்மிகத்தில் கொஞ்சம் ஆர்வம் உண்டு.
  இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள் பலருக்கு பயன்படும்

  ReplyDelete
 37. அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி சகோ..

  ReplyDelete
 38. விரும்பாதது வந்தாலும் துன்பம்; விரும்பியது விலகினாலும் துன்பம்; விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம். ஒவ்வொன்றாக மறைந்து போகும் உலக வாழ்வில்… ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம் எனும் அறிவு கண் விழிக்கும் வரை மனிதனுக்குப் பற்றிலிருந்து விடுதலை கிடையாது.


  ...... Good advice.
  well-written.

  ReplyDelete
 39. திருக்குறளுக்கான பதிவு. அருமை

  ReplyDelete
 40. அருமையான பதிவு!

  ReplyDelete
 41. அழகான கருத்தை முன்வைத்து எழுதப்பட்ட அழகான பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  ReplyDelete
 42. //ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம்//

  மிகத் தெளிவான வரிகள்!!!

  ReplyDelete
 43. தத்துவ வரிகள்...

  ReplyDelete
 44. // MANO நாஞ்சில் மனோ said...
  சூப்பர்....மக்கா...//

  நன்றி சார்...

  ReplyDelete
 45. // சி. கருணாகரசு said...
  மிக நல்ல சிந்தனைத்தான்....
  ஆனால் பற்ற்ற்ற நிலையில் இருப்பது எனக்கு கடினமாகவே படுகிறது... ஆனால் கொட்டவை மீது பற்றற்று இருக்க முயலலாம்.....

  சிந்தனை பகிர்வுக்கு நன்றி.//

  கொஞ்சம் கடினமான விசயந்தான் அண்ணே ஆனால் நீங்கள் சொலவதுபோல் கெட்டவைகள் மீதும் தேவையில்லாத ஆடம்பரத்தின் மீது பற்றற்று இருக்கலாம்...

  கருத்துக்கு நன்றி அண்ணே

  ReplyDelete
 46. // middleclassmadhavi said...
  ஆசையே துன்பத்திற்கெல்லாம் மூல காரணம்....///

  உண்மைதான் சகோ, அளவான நியாயமான ஆசைகள் நல்லது வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ...

  ReplyDelete
 47. // அஞ்சா சிங்கம் said...
  புதிதாக கிடைத்த சட்டைக்காக சந்தோச படாமல் அதில் இருக்கும் சிறு கரைக்காக வருத்த படுவது தான் மனித மனதின் பண்பு .........///

  சரியாக சொன்னீங்க நண்பா ஆனால் இந்த பண்பில் மாற்றம் வந்தால் நன்றாக இருக்கும்

  கருத்துக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 48. // THOPPITHOPPI said...
  ஆன்மிகத்தில் கொஞ்சம் ஆர்வம் உண்டு.
  இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள் பலருக்கு பயன்படும்//

  நன்றி நண்பரே நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக எழுதுகிறேன்...

  ReplyDelete
 49. // ஆயிஷா said...
  அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி சகோ..///

  நன்றிங்க சகோ...

  ReplyDelete
 50. // Chitra said...
  விரும்பாதது வந்தாலும் துன்பம்; விரும்பியது விலகினாலும் துன்பம்; விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம். ஒவ்வொன்றாக மறைந்து போகும் உலக வாழ்வில்… ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம் எனும் அறிவு கண் விழிக்கும் வரை மனிதனுக்குப் பற்றிலிருந்து விடுதலை கிடையாது.


  ...... Good advice.
  well-written.//

  நன்றிங்க மேடம்...

  ReplyDelete
 51. //
  சிவகுமாரன் said...
  திருக்குறளுக்கான பதிவு. அருமை///

  நன்றி நண்பரே

  ReplyDelete
 52. //ஜீ... said...
  அருமையான பதிவு!//


  நன்றி நண்பரே

  ReplyDelete
 53. /// ஆமினா said...
  அழகான கருத்தை முன்வைத்து எழுதப்பட்ட அழகான பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்///

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க சகோ...

  ReplyDelete
 54. /// பலே பிரபு said...
  //ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம்//

  மிகத் தெளிவான வரிகள்!!!//

  நன்றி பிரபு

  ReplyDelete
 55. // கே.ஆர்.பி.செந்தில் said...
  ரைட்டு ...//

  வருகைக்கு நன்றி அண்ணே

  ReplyDelete
 56. // Philosophy Prabhakaran said...
  தத்துவ வரிகள்...//

  நன்றி பிரபா...

  ReplyDelete
 57. நல்லா இருந்ததுங்க இந்த பதிவு...இந்த மாதிரி பதிவுக்கு சப்போர்ட் கிடைக்கிறது ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கு....

  ReplyDelete
 58. //விரும்பாதது வந்தாலும் துன்பம்; விரும்பியது விலகினாலும் துன்பம்; விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம். ஒவ்வொன்றாக மறைந்து போகும் உலக வாழ்வில்… ///

  ....எவ்ளோ அழகா சொல்லிட்டீங்க..

  //ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம் எனும் அறிவு கண் விழிக்கும் வரை மனிதனுக்குப் பற்றிலிருந்து விடுதலை கிடையாது.//

  ...முற்றிலும் உண்மை.. :)
  நல்ல பகிர்வு.. நன்றிங்க.

  ReplyDelete
 59. " சின்ன சின்ன அங்கீகாரம் "-மாணவன்
  ----------------------------------
  சிலிர்க்க வெக்குது உங்க எழுத்தும் நடையும்..!! கமெண்ட் போஸ்ட் பண்ணவே கொஞ்சம் பயம்தான். படிச்சுட்டு ஒண்ணுமே சொல்லாம போகவும் மனமில்ல.
  சின்ன சின்ன அங்கீகாரத்துக்கு ஏங்கற சராசரி மனுசத்தன்மையை அழகாய் வர்ணித்தமைக்கு பெருமை கலந்த நன்றி...!!

  ReplyDelete
 60. "பற்றற்ற பற்று" மிகச்சிறிய சொற்றொடர். ஆனால், மிகப்பெரிய அர்த்தம் கொண்டிருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. :-)

  ReplyDelete
 61. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு


  மிகப் பெரிய அர்த்தத்தை சொல்லியது உங்கள் 'பற்றற்ற பற்று'.

  ReplyDelete
 62. // ஆனந்தி.. said...
  நல்லா இருந்ததுங்க இந்த பதிவு...இந்த மாதிரி பதிவுக்கு சப்போர்ட் கிடைக்கிறது ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கு....//

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ...

  ReplyDelete
 63. // Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
  //விரும்பாதது வந்தாலும் துன்பம்; விரும்பியது விலகினாலும் துன்பம்; விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம். ஒவ்வொன்றாக மறைந்து போகும் உலக வாழ்வில்… ///

  ....எவ்ளோ அழகா சொல்லிட்டீங்க..

  //ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம் எனும் அறிவு கண் விழிக்கும் வரை மனிதனுக்குப் பற்றிலிருந்து விடுதலை கிடையாது.//

  ...முற்றிலும் உண்மை.. :)
  நல்ல பகிர்வு.. நன்றிங்க.//

  நன்றிங்க சகோ...

  ReplyDelete
 64. // Srini said...
  " சின்ன சின்ன அங்கீகாரம் "-மாணவன்
  ----------------------------------
  சிலிர்க்க வெக்குது உங்க எழுத்தும் நடையும்..!! கமெண்ட் போஸ்ட் பண்ணவே கொஞ்சம் பயம்தான். படிச்சுட்டு ஒண்ணுமே சொல்லாம போகவும் மனமில்ல.
  சின்ன சின்ன அங்கீகாரத்துக்கு ஏங்கற சராசரி மனுசத்தன்மையை அழகாய் வர்ணித்தமைக்கு பெருமை கலந்த நன்றி...!!///

  தங்களின் முதல் வருகைக்கும் அன்புகலந்த கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

  //கமெண்ட் போஸ்ட் பண்ணவே கொஞ்சம் பயம்தான்//

  அப்படியெல்லாம் நினைக்கவேண்டாம் நண்பரே படித்துவிட்டு உங்கள் கருத்துகளை உரிமையோடு சொல்லலாம்...

  நன்றி நண்பரே முடிந்தால் தொடர்ந்து இணைந்திருங்கள்

  ReplyDelete
 65. // சாதாரணமானவள் said...
  "பற்றற்ற பற்று" மிகச்சிறிய சொற்றொடர். ஆனால், மிகப்பெரிய அர்த்தம் கொண்டிருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. :-)///

  கண்டிப்பாக உங்களின் ஆசியோடு தொடரும் என் பணி :-) நன்றிங்க சகோ

  ReplyDelete
 66. // சே.குமார் said...
  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு


  மிகப் பெரிய அர்த்தத்தை சொல்லியது உங்கள் 'பற்றற்ற பற்று'.//

  நன்றி நண்பரே

  ReplyDelete
 67. உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா
  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு
  நன்றி நண்பரே

  ReplyDelete
 68. // polurdhayanithi said...
  உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா
  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு
  நன்றி நண்பரே///

  வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 69. நல்ல கருத்துக்களை எளிமையாகவும்,
  புரியும்படியும் விளக்கமாகச்சொன்னதற்கு நன்றி.

  ReplyDelete
 70. //Lakshmi said...
  நல்ல கருத்துக்களை எளிமையாகவும்,
  புரியும்படியும் விளக்கமாகச்சொன்னதற்கு நன்றி.//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்கம்மா...

  ReplyDelete
 71. நல்ல பதிவு மாணவரே.. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

  ReplyDelete
 72. //Blogger வெறும்பய said...

  நல்ல பதிவு மாணவரே.. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...//

  எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் அண்ணே...

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.