Wednesday, January 12, 2011

சுவாமி விவேகானந்தர் - (வரலாற்று நாயகர்)


1893 ஆம் ஆண்டு செப்டம்பர்  11-ஆம் தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர். 

இந்தியாவை பிரதிநிதித்து ஒருவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவதற்கு மேடை ஏறினார். தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லாமல் காவி உடையும் தலைப்பாகையும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசான சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர், வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட்டாவி விட்டனர். இன்னும் சிலர் அருகில் அமர்ந்திருந்தவரிடம் பேசத் தொடங்கினர்.


அந்த அலட்சியத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக சிறிது நேரம் அனைவரையும் பார்த்த பிறகு சகோதர சகோதரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கினார். அவர் கூட்டத்தினரை அவ்வாறு அழைத்த விதத்திலேயே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவனமும் அவர்மீது திரும்பியது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயர்ந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது.

இந்தியா, இந்துமதம் பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங்கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர். செல்வ செழிப்பில் பிறந்தும் துறவரம் பூண்டு நவீன இந்தியாவுக்கு நல்வழிகாட்டிய அந்த அரிய மாமனிதரின் கதையை தெரிந்துகொள்வோம்.

1863 ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கல்கத்தாவில் புகழ்பெற்ற Datta குடும்பத்தில் உதித்தார் நரேந்திர நாதர் அதுதான் விவேகானந்தரின் இயற்பெயர். தந்தை விஸ்வநாதர் தாயார் புவனேஸ்வரி தேவி, செல்வந்தர்களாகவும் அதே நேரத்தில் மக்களின் மரியாதை பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலம் மற்றும் பெர்ஸிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்த தந்தை  கல்காத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் அவர். தாய் புவனேஸ்வரி தேவி ராமாயணத்திலும் மகாபாரத்திலும் புலமைப் பெற்றிருந்தார்.

தினசரி நரேந்திர நாதருக்கு அவர் ராமாயண, மகாபாரத கதைகளை சொல்வார்.  ராமர் கதாபாத்திரின் மீது மரியாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார் நரேந்திர நாதர். சிறுவயதிலேயே தியானத்தில் மூழ்க தொடங்கினார். நரேந்திர நாதர் அவ்வாறு தியானத்தில் இருக்கும்போது சில நேரங்களில் உறவினர்கள் அவரது உடலை குலுக்கி அவரை சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியிருந்தது. சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. பின்னாளில் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார்.

மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு 'விவேகானந்தர்' என்ற பெயரை சூட்டினார்  ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களை கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். காசி, லக்னோ, ஆக்ரா. பிருந்தாவனம், ரிஷிகேஸ் என இந்தியாவின் எல்லா பகுதிக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது , எங்கு உறங்குவது என தெரியாமல்கூட கடுமையான துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.


அவர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது அந்தக்கால கட்டத்தில் இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான அவருக்கு சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது.  விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மைவிட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிக்காகோ சென்றபோதுதான் அந்த புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.

செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு பிறகு மேலும் மூன்று நாட்கள் அவரது சொற்பொழிவுகளில் மயங்கினர் மேற்கத்தியர்கள். அளவுக்கு மீறிய மதபற்று மூடத்தனமான பக்தி இவற்றிலிருந்து தோன்றிய மத வெறியால் உலகம் வன்முறையிலும் ரத்தக்களரியிலும் மிதக்கிறது. அதனால் நாகரிகம் அழிந்து எத்தனையோ சமுதாயங்கள் நம்பிக்கை இழந்துவிட்டன என்று முழங்கினார் விவேகானந்தர். அவரது பேச்சையும், சொற்பொழிவையும் கேட்டு அதிசயித்த ஒரு பெண் விவேகானந்தர் சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்தார். அவரை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றார்.

அயோவா, சென்லுயி, டெட்ராயிட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் நியூ யார்க் ஆகிய இடங்களில் விவேகானந்தருக்கு பேச அழைப்பு வந்தது. அவரும் சென்று பேசினார் அந்த இடங்களிளெல்லாம் அந்த பெண் பின்தொடர்ந்தார், கடைசியாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அமெரிக்க இளையர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னை சுற்றுகிறார்கள் ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே! நாம் திருமணம் செய்துகொண்டால் என் அழகோடும் உங்கள் அறிவோடும் சேர்ந்த குழந்தை பிறக்கும் என்று கூறினார் அந்த 20 வயது இளம்பெண். அப்போதுதான் 30 வயதைத் தொட்டிருந்த விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் தெரியுமா??

தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 வயது இருக்கும். நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார். சுவாமி விவேகானந்தரின் அந்த பதிலை கேட்டு ஸ்தம்பித்துபோனார் அந்தப் பெண். தன் கண் காண்கின்ற பெண்களையெல்லாம் தாயாக கருதியவர் சுவாமி விவேகானந்தர். சிக்காகோ சொற்பொழிவுகளை முடித்துகொண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விட்டு 1897 ஆம் ஆண்டு இராமேஸ்வரம் திரும்பினார் சுவாமி விவேகானந்தர்.

உலகம் முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்துமதத்தின் கூறுகளையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தமது 39 வயதில் இறைவனடி சேர்ந்தார். கண்ணியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம்  “விவேகானந்தர் பாறை” என்று அழைக்கப்படுகிறது. கிழக்கத்திய மேற்கத்திய கலாச்சாரங்கள் பற்றிய ஆழமான அறிவு, ஆன்மீக ஞானம், பேச்சாற்றல் இவைதான் விவேகானந்தரின் அடையாளங்கள். இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் நிலவிய வறுமையை கண்டு மனம் பதைத்தவர் சுவாமி விவேகானந்தர்.

இந்தியாவின் சிறப்பு, மூடத்தனத்தின் ஒழிப்பு, பகுத்தறிவின் முக்கியத்துவம் கல்வியின் அவசியம், ஏழ்மையின் கொடுமை என பல்வேறு பொருள் பற்றி எண்ணிலடங்கா சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். 1897 ஆம் ஆண்டில் "இராமகிருஷ்ண மிஷன்" என்ற அமைப்பையும் உருவாக்கினார்.

எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்கும் வலிமை உங்களுக்கு உண்டா ?உங்கள் அன்புக்குரியவர்கள் எதிர்த்தாலும் உங்கள் இலக்குகளை அடையும் விடாமுயற்சி உண்டா? தன்னம்பிக்கை இருந்தால்தான் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும். உடலை திடமாக வைத்திருக்க வேண்டும் அதோடு கற்பதன் மூலமும் தியானத்தின் மூலமும் நீங்க வெற்றியடையலாம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற பொன்மொழிகளில் சில:-
  • உன் லட்சியத்தை அடைய ஓராயிரம் முறை முயற்சி செய்!ஆயிரம் முறை தோல்வி வந்தாலும் ,மீண்டும் ஒரு முறைமுயற்சி செய்! 
  • பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. 
  • துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே சிறந்தது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு! 
  • கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது. 
  • எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை. 
  • எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று அஞ்சி கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
  • உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உனக்கு முன்னால் உள்ள எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அர்த்தம்.

    39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் விவேகானந்தர் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஓர் உதாரணமான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். சுவாமி கூறியதுபோல் உடல்வலிமை, மனவலிமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தொடர்கல்வி ஆகியவற்றில் சில பண்புகளை நாம் கடைபிடித்தால்கூட நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.

    (தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

    பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    உங்கள். மாணவன்

    115 comments:

    1. பல விசயங்களை அறிந்தம் சிலதை நினைவு படுத்தியும் கொண்டேன் நன்றி...

      ReplyDelete
    2. No 6,
      விவேகானந்தர் குறுக்கு தெரு,
      விவேகனதன்ர் இல்லம்
      துபாய் பஸ்டாண்டு
      துபாய்

      ReplyDelete
    3. நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்
      நட்புடன் ,
      கோவை சக்தி

      ReplyDelete
    4. சரியான நாளில் சரியான நபருக்கு சரியான கட்டுரை...என் ஆதர்ச ஹீரோ நரேந்திர தத்தா..என் பையன் பிறந்த போது நரேந்திரா னு பேரு வைக்க அவளவு ஆசை பட்டேன்..ஆனால் நியூமராலாஜி காரணம் காட்டி வீட்டில் வைக்க வேணாம் சொல்லிட்டாங்க...:(( அந்த அளவுக்கு அவரின் கருத்துகள்..அந்த தைரியம்...கூர்மையான கண்கள் எல்லாமே பிடிக்கும்...அதுவும் அவர் இளைனர்களுக்கு சொன்ன "arise awake and stop not till the goal not reached " எவ்வளவு அருமையான விஷயத்தை இந்த ஒரு வார்த்தையில் சொல்லிட்டு போய்ட்டார்..பயனுள்ள பதிவு மாணவன்..!!

      ReplyDelete
    5. arise,awake and stop not till the goal is reached..(தவறாய் டைப் பண்ணிட்டேன்..அதான் சரியாய் இந்த முறை:)) )

      ReplyDelete
    6. //வரலாற்று நாயகர்//

      இப்படியெல்லம் தலைப்பிட்டால் நாளைக்கு விவேகாநந்தரை நாயக்கர் சாதிக்கு சொந்தக்காரர் ஆக்கி சங்கத்துல படமாக மாட்டிவிடப் போகிறார்கள்

      :)

      ReplyDelete
    7. அருமை நண்பா தொடருங்கள் தங்களின் சேவையை உங்கள் புகழ் மென்மேலும் உயர என மனமார்ந்த வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    8. // ம.தி.சுதா said...
      எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

      அன்புச் சகோதரன்...
      மதி.சுதா.//

      வாங்க நண்பரே

      ReplyDelete
    9. // ம.தி.சுதா said...
      பல விசயங்களை அறிந்தம் சிலதை நினைவு படுத்தியும் கொண்டேன் நன்றி...//

      நன்றி நண்பரே

      ReplyDelete
    10. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
      No 6,
      விவேகானந்தர் குறுக்கு தெரு,
      விவேகனதன்ர் இல்லம்
      துபாய் பஸ்டாண்டு
      துபாய்//

      இது என்ன நம்ம டெரரும் பன்னிகுட்டி அண்ணனும் இருக்குற அட்ரஸா...

      ReplyDelete
    11. // sakthi said...
      நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்
      நட்புடன் ,
      கோவை சக்தி//

      நன்றி நண்பரே

      ReplyDelete
    12. சபாஷ் இன்று விவேகானந்தர் பிறந்த நாள்...இன்னும் எழுதி இருக்காலம் .நான் பதிவு போடா வேண்டும் என்று நினைத்தேன் ...நண்பர் நீங்கள் போட்டு விட்டீர்கள் .100 உறுதி மிக்க இளைங்கர்களை தா வலிமை மிக்க பாரதத்தை உருவாக்கி காட்டுகிறேன் இன்று கூறியவர் .

      ReplyDelete
    13. // ஆனந்தி.. said...
      சரியான நாளில் சரியான நபருக்கு சரியான கட்டுரை...என் ஆதர்ச ஹீரோ நரேந்திர தத்தா..என் பையன் பிறந்த போது நரேந்திரா னு பேரு வைக்க அவளவு ஆசை பட்டேன்..ஆனால் நியூமராலாஜி காரணம் காட்டி வீட்டில் வைக்க வேணாம் சொல்லிட்டாங்க...:(( அந்த அளவுக்கு அவரின் கருத்துகள்..அந்த தைரியம்...கூர்மையான கண்கள் எல்லாமே பிடிக்கும்...அதுவும் அவர் இளைனர்களுக்கு சொன்ன "arise awake and stop not till the goal not reached " எவ்வளவு அருமையான விஷயத்தை இந்த ஒரு வார்த்தையில் சொல்லிட்டு போய்ட்டார்..பயனுள்ள பதிவு மாணவன்..!///

      உண்மைதான் சகோ, அவரின் இந்த தெளிவான பார்வைதான் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்க காரணமாய் இருந்தது தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சகோ...

      ReplyDelete
    14. /// ஆனந்தி.. said...
      arise,awake and stop not till the goal is reached..(தவறாய் டைப் பண்ணிட்டேன்..அதான் சரியாய் இந்த முறை:)) )///

      பரவாயில்லை தவறு ஏற்படுவது இயல்புதானே.....

      ReplyDelete
    15. உங்களுடைய முந்தைய பதிவை படித்த போதே நினைத்தேன் உங்களுக்கு விவேகானந்தர், அல்லது ராமகிருஷ்ண பரமா இவர்களில் யாரேனும் ஒருவர் பிடிக்கும் என்று

      ReplyDelete
    16. // கோவி.கண்ணன் said...
      //வரலாற்று நாயகர்//

      இப்படியெல்லம் தலைப்பிட்டால் நாளைக்கு விவேகாநந்தரை நாயக்கர் சாதிக்கு சொந்தக்காரர் ஆக்கி சங்கத்துல படமாக மாட்டிவிடப் போகிறார்கள்

      :)//

      வாங்க சார் தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //விவேகாநந்தரை நாயக்கர் சாதிக்கு சொந்தக்காரர் ஆக்கி சங்கத்துல படமாக மாட்டிவிடப் போகிறார்கள்//

      ஓ இப்படி வேற உள்ளதா???
      இப்படி செய்ய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்...

      ReplyDelete
    17. /// சசிகுமார் said...
      அருமை நண்பா தொடருங்கள் தங்களின் சேவையை உங்கள் புகழ் மென்மேலும் உயர என மனமார்ந்த வாழ்த்துக்கள்//

      கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசி

      நிச்சயமாக உங்களைப்போன்ற நண்பர்களின் ஊக்கத்தோடு தொடருவேன்.....

      ReplyDelete
    18. // இம்சைஅரசன் பாபு.. said...
      சபாஷ் இன்று விவேகானந்தர் பிறந்த நாள்...இன்னும் எழுதி இருக்காலம் .நான் பதிவு போடா வேண்டும் என்று நினைத்தேன் ...நண்பர் நீங்கள் போட்டு விட்டீர்கள் .100 உறுதி மிக்க இளைங்கர்களை தா வலிமை மிக்க பாரதத்தை உருவாக்கி காட்டுகிறேன் இன்று கூறியவர் ///

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      ReplyDelete
    19. // THOPPITHOPPI said...
      உங்களுடைய முந்தைய பதிவை படித்த போதே நினைத்தேன் உங்களுக்கு விவேகானந்தர், அல்லது ராமகிருஷ்ண பரமா இவர்களில் யாரேனும் ஒருவர் பிடிக்கும் என்று//

      ஆமாம் நண்பரே எனக்கு மிகவும் பிடித்த மாமனிதர் சுவாமி விவேகானந்தர்

      தொடர்ந்து வருகைதந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி நண்பரே

      ReplyDelete
    20. பாரதிக்குப் பிறகு எனக்குப் பிடித்த முக்கியமான ஒருவர் என்றால் அது சுவாமி விவேகானந்தர் தான்.

      அவர் பிறந்த நாளை வணங்கி வரவேற்போம். பகிர்வுக்கு நன்றி!

      ReplyDelete
    21. எவன் ஒருவனும் உன்னை விரும்பிவிட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது-விவேகானந்தர்

      நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்
      நண்பரே!!!!!!!!!!!!!

      ReplyDelete
    22. நல்ல பகிர்வு நண்பரே
      உங்கள் பொன்னான பனி தொடரட்டும்

      ReplyDelete
    23. /// Sriakila said...
      பாரதிக்குப் பிறகு எனக்குப் பிடித்த முக்கியமான ஒருவர் என்றால் அது சுவாமி விவேகானந்தர் தான்.

      அவர் பிறந்த நாளை வணங்கி வரவேற்போம். பகிர்வுக்கு நன்றி!//

      நிச்சயமாக... நன்றி சகோ

      ReplyDelete
    24. // S Maharajan said...
      எவன் ஒருவனும் உன்னை விரும்பிவிட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது-விவேகானந்தர்

      நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்
      நண்பரே!!!!!!!!!!!!//

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

      ReplyDelete
    25. // தினேஷ்குமார் said...
      நல்ல பகிர்வு நண்பரே
      உங்கள் பொன்னான பனி தொடரட்டும//

      நன்றி நண்பரே

      ReplyDelete
    26. சில பல தெரியாத விஷயங்கள்...

      ReplyDelete
    27. நல்ல பல விஷயங்கள் அறிந்துக்கொள்ள முடிந்தது

      வாழ்த்துக்கள்

      ReplyDelete
    28. தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 இருக்கும் நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.....///////////

      அருமையான பதிவு.................
      (ஏனோ நித்தி ஞாபகம் வருகிறது ) அவரும் காவி தலிபாகை கட்டி இருப்பார் ....
      ஒரு வேளை ரஞ்சிதா இது போல் கேட்டிருக்கலாம் ........

      ReplyDelete
    29. துபாய்
      துபாய் பஸ்டாண்டு
      விவேகனதன்ர் இல்லம்
      விவேகானந்தர் குறுக்கு தெரு,
      No 9, திருப்பி சொல்லும்போது 6 ”9” ஆக

      ReplyDelete
    30. மனம் லேசாகி உறுதிப்படும் ஒரு நிலை அது. அந்த தீட்சண்யம் நிரம்பிய கண்கள், நம் மனதின் அடித்தளத்தில் அடித்து எழுப்பும் தன்னம்பிக்கையின் வேகம் எல்லாம் ஒரு அனுபவம். வலைபதிவில் இவரை நினைவு கூர்வது மிக்க அவசியம்.இவரின் படம் ஒன்று எப்போதும் எங்கள் வரவேற்பறையில் அமர்ந்திருக்கும்.

      // உனக்குத்தேவையான வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. //

      வேறு யார் சொன்னார்கள் இவ்வளவு எளிமையாக??

      நல்ல பகிர்வு.நன்றி.

      ReplyDelete
    31. 39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் அவர் ஓர் உதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் கூறியதுபோல் உடல் வலிமை, மன வலிமை, விடா முயற்சி, தன்னம்பிக்கை, தொடர்கல்வி ஆகியவற்றை நாம் கடைபிடித்தால் நமக்கு நிச்சயம் அந்த வானம் வசப்படும்.



      ......What an inspiration!!!

      ReplyDelete
    32. அருமையான பதிவு! நன்றி நண்பா!

      ReplyDelete
    33. ஒரு மாமனிதரின் வரலாற்றை அறிய தந்தமைக்கு நன்றிகள்

      ReplyDelete
    34. நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    35. அண்ணே செப்டம்பர் மாசம் பொறந்த பகத்சிங் உங்க கண்ணுக்கு தெரியமாட்டாரேண்ணே? அவர மட்டும் விட்டுட்டீங்களேண்ணே?

      ReplyDelete
    36. தங்களது கட்டுரையால் கூடுதல் விவரங்களை அறிந்தேன்..!
      மிகவும் தெளிவான மற்றும் விரிவான கட்டுரை பகிர்வு நண்பரே..!! காலத்தை வென்ற மாமேதையின் வரலாற்று சுவடுகளை அறிய தந்தமைக்கு நன்றி நண்பா..!

      ReplyDelete
    37. புதிய விஷயங்கள் நிறைந்த பதிவு, நன்றி மாணவரே...

      ReplyDelete
    38. தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
      - விவேகானந்தர்.
      விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..

      ReplyDelete
    39. எல்லா பற்றினையும் துறந்த விவேகானந்தர் நாட்டுப்பற்றை துறக்காதது நம் நல்லநேரம்..

      ReplyDelete
    40. உண்மையிலேயே விவேகானந்தர் ஒரு உதாரணபுருஷந்தான், பிறந்தநாள் வாழ்த்துக்களை எப்படி தெரிவிக்கமுடியும், ஆனாலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

      ReplyDelete
    41. எனக்கு விவேகானந்தரை ரொம்ப பிடிக்கும். அவரை பற்றிய நல்ல நிறைய தகவல்கள்! நன்றி நண்பரே!

      ReplyDelete
    42. வீரத்துறவி விவேகனந்தர் பற்றிய உங்களின் பதிவு பரட்டுகளுக்குரியான இந்த அமெரிக்க பேச்சின் மூலம்தான் உலக அரங்கில் நம் நாட்டின் புகழ் பரவியதாக சொல்லப்படுவதுண்டு . அவரின் எளிமையான அடையை கண்ட மேலைநாட்டவர் எல்லினகையடியதும் அதன் பின்னர் அவரின் பேச்சினை முழுமையாக கேட்டபிறகு மணம் மாறி அவரை எட்டுக்கொண்டது வரலாறு . பதிவுக்கு பாராட்டுகள் நன்றி .

      ReplyDelete
    43. எனக்கு மிகவும் பிடித்த தலைவர்களில்
      (மனிதர்) விவேகானந்திரருக்கு எப்பவுமே
      முதல் இடம்தான். அவரைப்பற்றிய ஒரு
      அருமையானபதிவு நல்லா இருக்கு.

      ReplyDelete
    44. // Arun Prasath said...
      சில பல தெரியாத விஷயங்கள்..

      நன்றி நண்பா...

      ReplyDelete
    45. /// ஆமினா said...
      நல்ல பல விஷயங்கள் அறிந்துக்கொள்ள முடிந்தது

      வாழ்த்துக்கள்//

      கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சகோ

      ReplyDelete
    46. // அஞ்சா சிங்கம் said...
      தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 இருக்கும் நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.....///////////

      அருமையான பதிவு.................
      (ஏனோ நித்தி ஞாபகம் வருகிறது ) அவரும் காவி தலிபாகை கட்டி இருப்பார் ....
      ஒரு வேளை ரஞ்சிதா இது போல் கேட்டிருக்கலாம் .......///

      நன்றி நண்பரே

      ReplyDelete
    47. // Speed Master said...
      துபாய்
      துபாய் பஸ்டாண்டு
      விவேகனதன்ர் இல்லம்
      விவேகானந்தர் குறுக்கு தெரு,
      No 9, திருப்பி சொல்லும்போது 6 ”9” ஆக//

      நீங்களுமா???????

      ReplyDelete
    48. /// கக்கு - மாணிக்கம் said...
      மனம் லேசாகி உறுதிப்படும் ஒரு நிலை அது. அந்த தீட்சண்யம் நிரம்பிய கண்கள், நம் மனதின் அடித்தளத்தில் அடித்து எழுப்பும் தன்னம்பிக்கையின் வேகம் எல்லாம் ஒரு அனுபவம். வலைபதிவில் இவரை நினைவு கூர்வது மிக்க அவசியம்.இவரின் படம் ஒன்று எப்போதும் எங்கள் வரவேற்பறையில் அமர்ந்திருக்கும்.

      // உனக்குத்தேவையான வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. //

      வேறு யார் சொன்னார்கள் இவ்வளவு எளிமையாக??

      நல்ல பகிர்வு.நன்றி.///

      உண்மைதான்...
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...

      ReplyDelete
    49. /// Chitra said...
      39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் அவர் ஓர் உதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் கூறியதுபோல் உடல் வலிமை, மன வலிமை, விடா முயற்சி, தன்னம்பிக்கை, தொடர்கல்வி ஆகியவற்றை நாம் கடைபிடித்தால் நமக்கு நிச்சயம் அந்த வானம் வசப்படும்.



      ......What an inspiration!!!///

      நன்றிங்க மேடம்........

      ReplyDelete
    50. // ஜீ... said...
      அருமையான பதிவு! நன்றி நண்பா!//

      நன்றி நண்பரே

      ReplyDelete
    51. /// FARHAN said...
      ஒரு மாமனிதரின் வரலாற்றை அறிய தந்தமைக்கு நன்றிகள்//

      முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.....

      ReplyDelete
    52. // சே.குமார் said...
      நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்.//

      வாழ்த்துக்கு நன்றி சார்...

      ReplyDelete
    53. நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்

      ReplyDelete
    54. நண்பரே, இக்காலத்திற்குத் தேவையான, அருமையான பதிவு. குறைகள் ஏத்மிருப்பின் கேட்டிருந்தீர்கள் - அவை எழுத்துப் பிழைகள் தாம். மற்றபடி சிறந்த பதிவு.

      நரேந்திரர் கடவுளைக் கண்டவரைத் தேடி அலைந்ததும், இராமகிருஷ்ண பரமஹம்சரைக் கண்டடைந்ததும்; உருவ வழிபாட்டை இழிவுபடுத்தியவருக்கு அறிவுறித்தியதும் - இவை போன்ற சம்பவங்களையும் பதியலாமே!

      ReplyDelete
    55. // Anonymous said...
      அண்ணே செப்டம்பர் மாசம் பொறந்த பகத்சிங் உங்க கண்ணுக்கு தெரியமாட்டாரேண்ணே? அவர மட்டும் விட்டுட்டீங்களேண்ணே?///

      பகத்சிங்பற்றிய வரலாற்றுத் தகவல்கள் என்னிடம் இல்லை நண்பரே...

      உங்களிடம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் கண்டிப்பாக பதிவிடுகிறேன்...
      simbuthirukkonam@gmail.com

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

      ReplyDelete
    56. நல்ல பகிர்வு...
      உங்கள் பொன்னான பனி தொடரட்டும்

      ReplyDelete
    57. /// பிரவின்குமார் said...
      தங்களது கட்டுரையால் கூடுதல் விவரங்களை அறிந்தேன்..!
      மிகவும் தெளிவான மற்றும் விரிவான கட்டுரை பகிர்வு நண்பரே..!! காலத்தை வென்ற மாமேதையின் வரலாற்று சுவடுகளை அறிய தந்தமைக்கு நன்றி நண்பா..!///

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே தொடர்ந்து இணைந்திருங்கள்........

      ReplyDelete
    58. // பாரத்... பாரதி... said...
      புதிய விஷயங்கள் நிறைந்த பதிவு, நன்றி மாணவரே...//

      நன்றிங்க பாரதி

      ReplyDelete
    59. /// பாரத்... பாரதி... said...
      தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
      - விவேகானந்தர்.
      விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..///

      தகவலுக்கும் நினைவு கூர்ந்தமைக்கும் மிக்க நன்றிங்க பாரதி...

      ReplyDelete
    60. // பாரத்... பாரதி... said...
      எல்லா பற்றினையும் துறந்த விவேகானந்தர் நாட்டுப்பற்றை துறக்காதது நம் நல்லநேரம்.//

      உண்மைதான் மிகச்சரியாக சொன்னீர்கள் அருமை நன்றி

      ReplyDelete
    61. // இரவு வானம் said...
      உண்மையிலேயே விவேகானந்தர் ஒரு உதாரணபுருஷந்தான், பிறந்தநாள் வாழ்த்துக்களை எப்படி தெரிவிக்கமுடியும், ஆனாலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

      வருகைக்கும் சுவாமிக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கும் நன்றி நண்பரே

      ReplyDelete
    62. // எஸ்.கே said...
      எனக்கு விவேகானந்தரை ரொம்ப பிடிக்கும். அவரை பற்றிய நல்ல நிறைய தகவல்கள்! நன்றி நண்பரே!///

      உங்களைப்போன்று பலருக்கும் விவேகானந்தரை பிடிக்கும் நண்பரே கருத்துக்கு நன்றி நண்பரே

      ReplyDelete
    63. // polurdhayanithi said...
      வீரத்துறவி விவேகனந்தர் பற்றிய உங்களின் பதிவு பரட்டுகளுக்குரியான இந்த அமெரிக்க பேச்சின் மூலம்தான் உலக அரங்கில் நம் நாட்டின் புகழ் பரவியதாக சொல்லப்படுவதுண்டு . அவரின் எளிமையான அடையை கண்ட மேலைநாட்டவர் எல்லினகையடியதும் அதன் பின்னர் அவரின் பேச்சினை முழுமையாக கேட்டபிறகு மணம் மாறி அவரை எட்டுக்கொண்டது வரலாறு . பதிவுக்கு பாராட்டுகள் நன்றி //

      உண்மைதான் நண்பரே அவரின் அந்த ஆன்மிக மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவுதான் உலகையே திரும்பிபார்க்க வைத்தது

      கருத்துக்கு நன்றி நண்பரே

      ReplyDelete
    64. /// Lakshmi said...
      எனக்கு மிகவும் பிடித்த தலைவர்களில்
      (மனிதர்) விவேகானந்திரருக்கு எப்பவுமே
      முதல் இடம்தான். அவரைப்பற்றிய ஒரு
      அருமையானபதிவு நல்லா இருக்கு///

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்கம்மா........

      ReplyDelete
    65. // ஆயிஷா said...
      நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்//

      வாழ்த்துக்கு நன்றிங்க சகோ...

      ReplyDelete
    66. // middleclassmadhavi said...
      நண்பரே, இக்காலத்திற்குத் தேவையான, அருமையான பதிவு. குறைகள் ஏத்மிருப்பின் கேட்டிருந்தீர்கள் - அவை எழுத்துப் பிழைகள் தாம். மற்றபடி சிறந்த பதிவு.

      நரேந்திரர் கடவுளைக் கண்டவரைத் தேடி அலைந்ததும், இராமகிருஷ்ண பரமஹம்சரைக் கண்டடைந்ததும்; உருவ வழிபாட்டை இழிவுபடுத்தியவருக்கு அறிவுறித்தியதும் - இவை போன்ற சம்பவங்களையும் பதியலாமே!
      //

      முடிந்தளவுக்கு எழுத்துப்பிழையை தவிர்க்க முயல்கிறேன் ஆயினும் சில பிழைகள் ஏற்பட்டுவிடுகிறது வரும்பதிவுகளில் முடிந்தளவு தவிர்த்துவிடுகிறேன் சகோ,

      பதிவின் நீளம் கருதி சில தகவல்களை குறைத்துக்கொண்டேன், தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோ...

      தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

      ReplyDelete
    67. //வெறும்பய said...
      நல்ல பகிர்வு...
      உங்கள் பொன்னான பனி தொடரட்டும்//

      வாங்கண்ணே, கண்டிப்பா உங்களின் ஆசியுடன் எனது பொன்னான பணியை தொடருவேன்.......

      ஹிஹி

      ReplyDelete
    68. அண்ணே தொடர்ந்து நல்ல நல்ல பதிவுகள் கொடுத்து திக்குமுக்காட வைத்து விடுகிறீர்கள்...
      உங்களின் ஆக்கப் பூர்வமான படைப்புகள் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்

      ReplyDelete
    69. உங்களின் மூலம் தான் நான் நிறைய தலைவர்களின் வரலாற்றை அறிந்து கொண்டேன்,...
      இன்னும் தெரிந்து கொள்ள போகிறேன்...
      தொடர்ந்து கலக்குங்க

      ReplyDelete
    70. ஒவ்வொரு படைப்பும் ஒருவித ஆச்சரியம் மிக்கதாய் உள்ளது அண்ணே...

      ReplyDelete
    71. நல்ல கட்டுரை மாணவரே. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி!

      ReplyDelete
    72. //39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் அவர் ஓர் உதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் கூறியதுபோல் உடல் வலிமை, மன வலிமை, விடா முயற்சி, தன்னம்பிக்கை, தொடர்கல்வி ஆகியவற்றை நாம் கடைபிடித்தால் நமக்கு நிச்சயம் அந்த வானம் வசப்படும்.//


      நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பா

      ReplyDelete
    73. விவேகானந்தரை பற்றி முன்னரே அறிந்திருந்தாலும் உங்கள் பதிவு எனக்கு பல விடயங்களை அசைபோட உதவியது, நன்றி நண்பரே.

      ReplyDelete
    74. எனக்கு இதை விட வேறு என்ன வேண்டும் நண்பரே.என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
      அவர் ஆத்திகவாதி மட்டும் அல்ல ஒரு தெளிவான நாத்திகவாதியும் கூட,
      {
      சோறு வேண்டும், சோறு வேண்டும், இங்கே ஒரு பிடி சோறு தரமாட்டாராம்....சொர்க்கத்தில் ஆனந்தத்தை தருவாராம் . இத்தகைய ஒரு கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை._விவேகானந்தர் }

      ஆனால் அன்று அவர் சொன்ன "நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்" என்ற வரிகள் தான் அவரை இளைஞர்களின் முகமாக காட்டியது.
      இன்று கோடி இளைஞர் இருந்த போதும் நம் எவரிடமும் அவரைப் போல தெளிவான பார்வை இல்லை.

      எனினும் நம்பிக்கை உள்ளது எதிர்காலம் நமக்கே.

      ReplyDelete
    75. உன் லட்சியத்தை அடைய ஓராயிரம் முறை முயற்சி செய்! ஆயிரம் முறை தோல்வி வந்தாலும், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்!
      _விவேகானந்தர்

      ReplyDelete
    76. கருத்து கூறும் நண்பர்களே இன்றைய போலிச்சாமியார்கள் பெயர்களை கூட இங்கு சொல்லாதீர்கள், காமத்தை வெல்ல விவேகானந்தர் ஒரு கொடூரமான முறையை பயன்படுத்தினார். இந்த நாய்கள் எல்லாம் கேவலமானவர்கள் , உடலை விற்கும் விபச்சாரிகள் கூட இந்த நாய்களை விட புனிதமானவர்கள் அவர்கள் எவர் பெயரையும் நான் கூற விரும்பவில்லை.

      ReplyDelete
    77. விவேகானந்தர் குறித்த விரிவான தொகுப்பிற்கு நன்றி..
      நம்ம கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கு...அவரிடம் இருந்து.. :-))

      ReplyDelete
    78. நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் மாணவன்..

      ReplyDelete
    79. சரியான நாளில் சரியான நபருக்கு சரியான கட்டுரை...

      ReplyDelete
    80. நமக்கெல்லாம் நல்ல முன்னுதாரணம் அவர்..இன்றுதான் படிக்க முடிந்தது.

      ReplyDelete
    81. அன்புக்குரிய திரு . மாணவன் அவர்களே,

      சுவாமி விவேகானந்தரைப் பற்றித் தொடர்ந்து பதிவுகள் இடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

      சுவாமி விவேகானந்தரிடம் நான் முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல விரும்புவது அவரது அன்பு. ஏழைகளுக்காகவும், கஷ்டப்பட்டவர்க்ளுக்காகவும், நசுக்கப் பட்டவர்களின் பேரிலும் அவர் காட்டிய அன்பு அது இதயத்தின் ஆழத்தில் இருந்து பொங்கி வந்தது. அவரது அறிவுத் திறமையை விட அதிகமானது அவரது அன்பு என்றே நான் கருதுகிறேன்.


      இங்கே சில நண்பர்கள் குறிப்பிட்டது போல சுவாமி விவேகானந்தர் முழுமையான பகுத்தறிவுவாதி தான்.

      ReplyDelete
    82. அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.////

      நல்ல பதிவு.............நான் இதுவரை இந்த செய்தியை படித்தது இல்லை நன்றி

      ReplyDelete
    83. கட்டுரை மிக தெளிவா இருந்தது....
      //மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு விவேகானந்தர் என்ற பெயரை சூட்டினார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களை கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். காசி லக்னோ ஆக்ரா பிருந்தாவனம் ரிஷிகேஸ் என இந்தியாவின் எல்லா பகுதிக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது எங்கு உறங்குவது என தெரியாமல் கடுமையான துறவு வாழ்க்கையை மேர்கொண்டார்.//

      இது எனக்கு புதிய செய்ய்தி.....

      இந்த கட்டுரை மூலம் நீங்க ஆசிரியராயிட்டிங்க....
      நன்றி.

      ReplyDelete
    84. உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    85. //மாணவன் said...
      // Speed Master said...
      துபாய்
      துபாய் பஸ்டாண்டு
      விவேகனதன்ர் இல்லம்
      விவேகானந்தர் குறுக்கு தெரு,
      No 9, திருப்பி சொல்லும்போது 6 ”9” ஆக//

      நீங்களுமா???????

      ஹி ஹி அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

      ReplyDelete
    86. அருமையான பதிவு.. மிக அருமையான விஷயங்களை தொகுத்தளித்திருக்கிறீர்கள்.. நன்றி.. தொடர்ந்து எழுதுங்கள்

      ReplyDelete
    87. /// அரசன் said...
      அண்ணே தொடர்ந்து நல்ல நல்ல பதிவுகள் கொடுத்து திக்குமுக்காட வைத்து விடுகிறீர்கள்...
      உங்களின் ஆக்கப் பூர்வமான படைப்புகள் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்//

      எல்லாம் உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவும் ஊக்கதமும்தான் அண்ணே

      ReplyDelete
    88. // அரசன் said...
      உங்களின் மூலம் தான் நான் நிறைய தலைவர்களின் வரலாற்றை அறிந்து கொண்டேன்,...
      இன்னும் தெரிந்து கொள்ள போகிறேன்...
      தொடர்ந்து கலக்குங்க//

      கண்டிப்பாக தொடர்கிறேன் பாராட்டு நன்றி அண்ணே

      ReplyDelete
    89. // அரசன் said...
      ஒவ்வொரு படைப்பும் ஒருவித ஆச்சரியம் மிக்கதாய் உள்ளது அண்ணே//

      நன்றி அண்ணே

      ReplyDelete
    90. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
      நல்ல கட்டுரை மாணவரே. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி!//

      எல்லாம் உங்கள் ஆசிதான்....

      ReplyDelete
    91. // ஆ.ஞானசேகரன் said...
      //39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் அவர் ஓர் உதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் கூறியதுபோல் உடல் வலிமை, மன வலிமை, விடா முயற்சி, தன்னம்பிக்கை, தொடர்கல்வி ஆகியவற்றை நாம் கடைபிடித்தால் நமக்கு நிச்சயம் அந்த வானம் வசப்படும்.//


      நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பா//

      நன்றி நண்பரே

      ReplyDelete
    92. // எப்பூடி.. said...
      விவேகானந்தரை பற்றி முன்னரே அறிந்திருந்தாலும் உங்கள் பதிவு எனக்கு பல விடயங்களை அசைபோட உதவியது, நன்றி நண்பரே.//

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      ReplyDelete
    93. // பலே பிரபு said...
      எனக்கு இதை விட வேறு என்ன வேண்டும் நண்பரே.என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
      அவர் ஆத்திகவாதி மட்டும் அல்ல ஒரு தெளிவான நாத்திகவாதியும் கூட,
      {
      சோறு வேண்டும், சோறு வேண்டும், இங்கே ஒரு பிடி சோறு தரமாட்டாராம்....சொர்க்கத்தில் ஆனந்தத்தை தருவாராம் . இத்தகைய ஒரு கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை._விவேகானந்தர் }

      ஆனால் அன்று அவர் சொன்ன "நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்" என்ற வரிகள் தான் அவரை இளைஞர்களின் முகமாக காட்டியது.
      இன்று கோடி இளைஞர் இருந்த போதும் நம் எவரிடமும் அவரைப் போல தெளிவான பார்வை இல்லை.

      எனினும் நம்பிக்கை உள்ளது எதிர்காலம் நமக்கே//

      தங்களின் விரிவான கருத்துரைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி நண்பரே

      //எனினும் நம்பிக்கை உள்ளது எதிர்காலம் நமக்கே//

      நிச்சயமாக நண்பா இதே நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் செயல்பட்டால் நமக்கும் அந்த வானம் வசப்படும் நன்றி

      ReplyDelete
    94. // பலே பிரபு said...
      உன் லட்சியத்தை அடைய ஓராயிரம் முறை முயற்சி செய்! ஆயிரம் முறை தோல்வி வந்தாலும், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்!
      _விவேகானந்த//

      நன்றி நண்பரே

      ReplyDelete
    95. // பலே பிரபு said...
      இளைஞர் தின வாழ்த்துக்கள் மாணவன்♥♥♥//

      உங்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பா

      ReplyDelete
    96. // Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
      விவேகானந்தர் குறித்த விரிவான தொகுப்பிற்கு நன்றி..
      நம்ம கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கு...அவரிடம் இருந்து.. :-))//

      மிகச்சரியாக சொன்னீர்கள் நன்றிங்க சகோ

      ReplyDelete
    97. // தோழி பிரஷா said...
      நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் மாணவன்.//

      வாழ்த்துக்கு நன்றிங்க தோழி

      ReplyDelete
    98. // சுசி said...
      அருமையான பகிர்வு//

      நன்றிங்க சகோ,

      இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

      ReplyDelete
    99. // sakthistudycentre.blogspot.com said...
      சரியான நாளில் சரியான நபருக்கு சரியான கட்டுரை...//

      தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே

      ReplyDelete
    100. // செங்கோவி said...
      நமக்கெல்லாம் நல்ல முன்னுதாரணம் அவர்..இன்றுதான் படிக்க முடிந்தது.//

      நிச்சயமாக இன்றைய இளைஞர்களுக்கு அவர் மிகச்சிறந்த முன்னுதாரணம்...

      நன்றி நண்பரே

      ReplyDelete
    101. // கோநா said...
      jai hindh manavan...//

      தங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பரே

      ReplyDelete
    102. // thiruchchikkaaran said...
      அன்புக்குரிய திரு . மாணவன் அவர்களே,

      சுவாமி விவேகானந்தரைப் பற்றித் தொடர்ந்து பதிவுகள் இடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

      சுவாமி விவேகானந்தரிடம் நான் முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல விரும்புவது அவரது அன்பு. ஏழைகளுக்காகவும், கஷ்டப்பட்டவர்க்ளுக்காகவும், நசுக்கப் பட்டவர்களின் பேரிலும் அவர் காட்டிய அன்பு அது இதயத்தின் ஆழத்தில் இருந்து பொங்கி வந்தது. அவரது அறிவுத் திறமையை விட அதிகமானது அவரது அன்பு என்றே நான் கருதுகிறேன்.


      இங்கே சில நண்பர்கள் குறிப்பிட்டது போல சுவாமி விவேகானந்தர் முழுமையான பகுத்தறிவுவாதி தான்//

      தாங்கள் முதன்முதலாக வருகைதந்து தெளிவான கருத்துரை வழங்கியதற்கு மிக்க நன்றி நண்பரே

      ReplyDelete
    103. // மங்குனி அமைச்சர் said...
      அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.////

      நல்ல பதிவு.............நான் இதுவரை இந்த செய்தியை படித்தது இல்லை நன்றி//

      வாங்க அமைச்சரே தங்களின் கருத்துக்கு நன்றி அமைச்சரே

      ReplyDelete
    104. // சி. கருணாகரசு said...
      கட்டுரை மிக தெளிவா இருந்தது....
      //மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு விவேகானந்தர் என்ற பெயரை சூட்டினார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களை கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். காசி லக்னோ ஆக்ரா பிருந்தாவனம் ரிஷிகேஸ் என இந்தியாவின் எல்லா பகுதிக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது எங்கு உறங்குவது என தெரியாமல் கடுமையான துறவு வாழ்க்கையை மேர்கொண்டார்.//

      இது எனக்கு புதிய செய்ய்தி.....

      இந்த கட்டுரை மூலம் நீங்க ஆசிரியராயிட்டிங்க....
      நன்றி.//

      வாங்கண்ணே எல்லாம் உங்களின் அறிவுரையும் வழிகாட்டுதல்தான் அண்ணே

      ReplyDelete
    105. // சி. கருணாகரசு said...
      உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.//

      நன்றி அண்ணே உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

      ReplyDelete
    106. // Speed Master said...
      //மாணவன் said...
      // Speed Master said...
      துபாய்
      துபாய் பஸ்டாண்டு
      விவேகனதன்ர் இல்லம்
      விவேகானந்தர் குறுக்கு தெரு,
      No 9, திருப்பி சொல்லும்போது 6 ”9” ஆக//

      நீங்களுமா???????

      ஹி ஹி அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா//

      ஓகே ரைட்டு நடத்துங்க....

      ReplyDelete
    107. // கவிதை காதலன் said...
      அருமையான பதிவு.. மிக அருமையான விஷயங்களை தொகுத்தளித்திருக்கிறீர்கள்.. நன்றி.. தொடர்ந்து எழுதுங்கள்//

      நன்றி நண்பரே

      ReplyDelete
    108. // Rathnavel said...
      Good Blog.
      Heartiest Pongal Greetings.//

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
      உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.............

      ReplyDelete
    109. sinnthika therunthavargalukku mattum........
      viveganandar......

      ReplyDelete
    110. sinthikka therinthavargaluku mattum.....vivekandar......

      ReplyDelete
    111. sinnthika therunthavargalukku mattum........
      viveganandar......

      ReplyDelete

    பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

    மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

    படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

    ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

    எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

    எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.