Monday, January 10, 2011

ஆசையாய் ஆசையாய்... ஆசையில் ஓர் முடிவு

சிந்தனைக்கு: தெளிவான ஒரு குறிக்கோளை நோக்கி முயற்சி செய்
ஆசை
ஆசையே அலைபோல நாமெல்லாம் அதன்மேலே என்பது தான் ஆசையின் உச்சக்கட்டம். அப்படிப்பட்ட ஆசையை பற்றி நம் முன்னோர்கள் கூறுவது.

நெருப்பை புகை மறைப்பது போல், கண்ணாடியைத் தூசி மறைப்பது போல், வயிற்றில் வளரும் குழந்தையைக் கருப்பை மறைப்பது போல் ஆசை அறிவை மறைக்கும் என்று அழகான உவமைகளுடன் விளக்குகிறது பகவத்கீதை.

அனுபவித்து ஆசையைத் தீர்ப்பது என்பது நெய்யூற்றி நெருப்பை அணைக்கும் செயல். நெய்யூற்ற ஊற்ற நெருப்பு வளரும். அனுபவிக்க அனுபவிக்க ஆசை தொடரும். மண், பொன், பெண் எதுவானாலும் ஒரே கதைதான் என்கிறது மகாபாரதம்.

துன்பத்திற்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடியோடு ஒழிப்பதுதான்.

நாம் அனைவரும் ஆமைகள் என்கிறார் அப்பர். ஆமை நீண்ட நாட்களாக குளிர்ந்த நீரில் வாசம் செய்வதால் அதன் உடல் விரைத்துக் கிடக்கிறது. வழிப்பபோக்கன் ஒருவன் நீரில் இருந்த ஆமையைக் கண்டான். ஆமைக் கறியின் சுவை அவன் நாவில் நீரை வரவழைத்தது. அதை உண்டு பசியாற வேண்டுமென்று அவனுள் ஆசை எழுந்தது.

ஆமையைப் பிடித்தான். கல்லை அடுக்கி, கையில் கொண்டுவந்த கலனில் நீர் நிரப்பி, அதனடியில் நெருப்பு வளர்த்து, ஆமையைக் கொதிகலனில் போட்டான். நீர் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறியது. விரைத்துக் கிடந்த ஆமைக்கு நீரின் வெது வெதுப்பு சுகத்தைக் கொடுத்தது. ‘என்ன சுகம், என்ன சுகம்’ என்று அங்குமிங்கும் நீரில் திளைத்து ஆடியது. கொதிகலனில் நீரின் வெப்பம் உயர உயர, ஆமையின் உடல் கொதித்து, உயிர் துடித்து ஆவி அடங்கியது. முதலில் இன்பம்; முடிவில் துன்பம். இதுவே என்றும் மாறாத வாழ்க்கை நியதி.

உலையில் ஏற்றித் தழலெரி மடுத்த நீரில்

திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல்

தெளிவிலாதேன…

‘எல்லை மீறினால் எதுவும் துன்பமே’ என்ற தெளிவு ஆமைக்கு மட்டுமா, இல்லை… நமக்கும்தானே?


ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்று புத்தரும் ஆசைதான் பட்டார். எனவே ஆசைகள் இல்லாத மனிதன் இல்லை, அந்த ஆசை பேராசையாக மாறும் போதுதான் பிரச்சினைகளும், துன்பங்களும் ஏற்படுகிறது. எனவே அளவோடு ஆசைபடுவோம் அன்போடு மகிழ்ச்சியாக நலமுடன் வாழ்வோம்.


டிஸ்கி 1: முந்தைய பதிவான சிரிப்பு போலிசுக்கு எதிர் பதிவு சத்தியமா (இல்ல) என்ற தலைப்பில் அழகான ஓவிய படங்களை பதிவிட்டு அதற்கான கமெண்டும், யாரு வரைந்தது என்று கண்டுபிடிக்க சொல்லியிருந்தோம். நண்பர்கள் கமென்ட் மட்டும்  வழங்கி வரைந்தது யார்?? என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லியிருந்தார்கள். படத்திற்கான கருத்துரை வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி

டிஸ்கி 2 : அந்த அழகிய ஓவிய படங்களை வரைந்தவர் சிங்கையின் சிங்கம் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. வைகை அவர்கள். அந்த படங்கள் அனைத்தும் கணினியில் பெயிண்ட் அப்ளிகேஷனில் மவுசின் துணைகொண்டு வரைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நண்பர்கள் யாரும் கண்டுபிடிக்காத காரணத்தினால் அந்த இலவச சுற்றுலாவுக்கென வைத்திருந்த பணங்களில் அண்ணன் வைகை அவர்களை குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறோம். பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் கொண்டாட சிங்கை குரூப்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்.  

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

107 comments:

  1. அந்த அழகிய ஓவிய படங்களை வரைந்தவர் சிங்கையின் சிங்கம் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் ////


    இந்த விளம்பரம் தேவையா?

    ReplyDelete
  2. அருமையான பதிவு மாணவன்...

    ReplyDelete
  3. பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் கொண்டாட சிங்கை குரூப்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்.////

    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  4. @ வைகை:

    உண்மையிலேயே படம் ரொம்ப நல்லா இருந்துது..

    ReplyDelete
  5. அனுபவித்து ஆசையைத் தீர்ப்பது என்பது நெய்யூற்றி நெருப்பை அணைக்கும் செயல். நெய்யூற்ற ஊற்ற நெருப்பு வளரும். அனுபவிக்க அனுபவிக்க ஆசை தொடரும். மண், பொன், பெண் எதுவானாலும் ஒரே கதைதான் என்கிறது மகாபாரதம்./////

    இதை நான் அனுபவித்து தெரிந்துகொள்ள ஆசை!

    ReplyDelete
  6. ஜெ.ஜெ said...
    @ வைகை:

    உண்மையிலேயே படம் ரொம்ப நல்லா இருந்துது..////


    நன்றி!

    ReplyDelete
  7. துன்பத்திற்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடியோடு ஒழிப்பதுதான்./////


    அபிநயா இந்த லிஸ்ட்ல வருமா?

    ReplyDelete
  8. நாம் அனைவரும் ஆமைகள் என்கிறார் அப்பர்./////


    யாரு அப்பர்?! கலைஞருக்கு சொந்தமா?

    ReplyDelete
  9. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    vadai//

    எடுத்துங்குங்க....

    ReplyDelete
  10. எனவே அளவோடு ஆசைபடுவோம் அன்போடு மகிழ்ச்சியாக நலமுடன் வாழ்வோம்////////

    நல்லாயிருப்போம்.....நல்லாயிருப்போம் எல்லோரும் நல்லாயிருப்போம்!

    ReplyDelete
  11. /// வைகை said...
    அந்த அழகிய ஓவிய படங்களை வரைந்தவர் சிங்கையின் சிங்கம் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் ////


    இந்த விளம்பரம் தேவையா?///

    ஹிஹிஹி

    ReplyDelete
  12. /// ஜெ.ஜெ said...
    அருமையான பதிவு மாணவன்..//

    நன்றிங்க...

    ReplyDelete
  13. /// வைகை said...
    பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் கொண்டாட சிங்கை குரூப்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்.////

    வாழ்த்துக்களுக்கு நன்றி!//

    மீண்டும் வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  14. /// ஜெ.ஜெ said...
    @ வைகை:

    உண்மையிலேயே படம் ரொம்ப நல்லா இருந்துது..//

    அதான் நல்லா சொல்லுங்க நம்ப மாட்டேங்குறாரு....

    ஹிஹிஹி

    ReplyDelete
  15. /// ஜெ.ஜெ said...
    @ வைகை:

    உண்மையிலேயே படம் ரொம்ப நல்லா இருந்துது..//

    அதான் நல்லா சொல்லுங்க நம்ப மாட்டேங்குறாரு....

    ஹிஹிஹி

    ReplyDelete
  16. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. /// வைகை said...
    அனுபவித்து ஆசையைத் தீர்ப்பது என்பது நெய்யூற்றி நெருப்பை அணைக்கும் செயல். நெய்யூற்ற ஊற்ற நெருப்பு வளரும். அனுபவிக்க அனுபவிக்க ஆசை தொடரும். மண், பொன், பெண் எதுவானாலும் ஒரே கதைதான் என்கிறது மகாபாரதம்./////

    இதை நான் அனுபவித்து தெரிந்துகொள்ள ஆசை!///

    உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. தலைப்பை பார்த்து எது மேலேயாவது ஆசைப்பட்டு முடிவு வந்துருச்சோன்னு நினைச்சிட்டேன்!:-))

    ReplyDelete
  19. //துன்பத்திற்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடியோடு ஒழிப்பதுதான்//.

    இதைத்தான் நவீன யுக சாமியார்கள், புரிந்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  20. /// வைகை said...
    துன்பத்திற்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடியோடு ஒழிப்பதுதான்./////


    அபிநயா இந்த லிஸ்ட்ல வருமா?//

    இது நியாயமான ஆசையாக இருப்பதால் இந்த லிஸ்ட்ல வரமாட்டாங்க...

    ReplyDelete
  21. //பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.//

    சூப்பர்! பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  22. //விரைத்துக் கிடந்த ஆமைக்கு நீரின் வெது வெதுப்பு சுகத்தைக் கொடுத்தது. ‘என்ன சுகம், என்ன சுகம்’ என்று அங்குமிங்கும் நீரில் திளைத்து ஆடியது. கொதிகலனில் நீரின் வெப்பம் உயர உயர, ஆமையின் உடல் கொதித்து, உயிர் துடித்து ஆவி அடங்கியது. முதலில் இன்பம்; முடிவில் துன்பம். இதுவே என்றும் மாறாத வாழ்க்கை நியதி.///

    ஆடி அடங்கியது வாழ்க்கை,
    சூப்பர் மக்கா....

    ReplyDelete
  23. ஆமைக் கதை சூப்பர்!

    ReplyDelete
  24. நல்ல பகிர்வு நண்பரே

    பங்கு ஓவியரோ நீர் தங்கள் கைவண்ணம் அருமை பங்கு

    ReplyDelete
  25. இதற்கு முந்தைய பதிவில் நீங்கள் பகிர்ந்த
    செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே பாடலின் படம், நான் வளர்த்த பூவே.. தவறான தகவல் தந்ததற்கு 13வது வட்டத்தின் சார்பில் உங்களை கண்டிக்கிறோம்...

    ReplyDelete
  26. ஒரு ஆண்மிகவாதியோட பேச்ச கேட்ட மாதிரி இருந்தது.

    ReplyDelete
  27. நல்ல கருத்துக்கள்..

    ReplyDelete
  28. துன்பத்திற்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடியோடு ஒழிப்பதுதான்.//

    அருமையான வரிகள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்

    ReplyDelete
  29. ஆமை போலத்தான் , ஆப்பசைத்த குரங்கு போலத்தான் நாமும். வாழ்க்கையில் கிடந்து உழல்கிறோம்..

    ReplyDelete
  30. அந்த அழகிய ஓவிய படங்களை வரைந்தவர் சிங்கையின் சிங்கம் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. வைகை அவர்கள்.///

    அண்ணன் இல்லை அங்கிள் அதான் வயசு தெரிஞ்சிடுச்சில்ல

    ReplyDelete
  31. நண்பர்கள் யாரும் கண்டுபிடிக்காத காரணத்தினால் அந்த இலவச சுற்றுலாவுக்கென வைத்திருந்த பணங்களில் அண்ணன் வைகை அவர்களை குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறோம். //

    அவரது பொன்னான பணி இந்தியாவுக்கு தேவை இல்லை. அவரை அங்கேயே வைத்து கொல்லவும்..

    ReplyDelete
  32. மாணவன் said... Reply to comment

    இருங்க பதிவுபத்தி கமெண்டு போடல...
    போட்டுட்டு வரேன்....

    ReplyDelete
  33. நல்ல பதிவு நண்பா

    ReplyDelete
  34. //அளவோடு ஆசைபடுவோம் அன்போடு மகிழ்ச்சியாக நலமுடன் வாழ்வோம்//

    சரியா சொன்னிங்க.

    ReplyDelete
  35. //அளவோடு ஆசைபடுவோம் அன்போடு மகிழ்ச்சியாக நலமுடன் வாழ்வோம்.//

    உண்மைதான் நண்பா

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள் மாணவா அருமை

    ReplyDelete
  37. ஆமை கறி நல்லா இருக்குமா .............

    கெடச்சா நமக்கு ஒன்னு பார்சல் அனுப்புங்க ...............

    ReplyDelete
  38. //Blogger வைகை said...

    நாம் அனைவரும் ஆமைகள் என்கிறார் அப்பர்./////


    யாரு அப்பர்?! கலைஞருக்கு சொந்தமா//

    தமிழுக்கு சொந்தகாரர்...

    ReplyDelete
  39. /// Speed Master said...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்//

    உங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  40. //Blogger எஸ்.கே said...

    தலைப்பை பார்த்து எது மேலேயாவது ஆசைப்பட்டு முடிவு வந்துருச்சோன்னு நினைச்சிட்டேன்!:-))//

    ஆமாம் இப்படி ஒரு பதிவு எழுதனும்னு ஆசபட்டேன் :-)

    ReplyDelete
  41. ///Blogger பாரத்... பாரதி... said...

    //துன்பத்திற்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடியோடு ஒழிப்பதுதான்//.

    இதைத்தான் நவீன யுக சாமியார்கள், புரிந்துக்கொள்ள வேண்டும்.///

    புரிந்துகொள்வார்களா????

    ReplyDelete
  42. //Blogger எஸ்.கே said.சூப்பர்! பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்!//

    மிகவும் சந்தோஷமாக உள்ளது நண்பரே பாராட்டுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  43. ///Blogger MANO நாஞ்சில் மனோ said...

    //விரைத்துக் கிடந்த ஆமைக்கு நீரின் வெது வெதுப்பு சுகத்தைக் கொடுத்தது. ‘என்ன சுகம், என்ன சுகம்’ என்று அங்குமிங்கும் நீரில் திளைத்து ஆடியது. கொதிகலனில் நீரின் வெப்பம் உயர உயர, ஆமையின் உடல் கொதித்து, உயிர் துடித்து ஆவி அடங்கியது. முதலில் இன்பம்; முடிவில் துன்பம். இதுவே என்றும் மாறாத வாழ்க்கை நியதி.///

    ஆடி அடங்கியது வாழ்க்கை,
    சூப்பர் மக்கா....//

    இதுதான் உண்மை நண்பரே நன்றி

    ReplyDelete
  44. ///Blogger எஸ்.கே said...

    ஆமைக் கதை சூப்பர்!///

    நன்றி

    ReplyDelete
  45. ///Blogger தினேஷ்குமார் said...

    நல்ல பகிர்வு நண்பரே

    பங்கு ஓவியரோ நீர் தங்கள் கைவண்ணம் அருமை பங்கு///

    நன்றி நண்பரே

    ReplyDelete
  46. //Blogger பாரத்... பாரதி... said...

    இதற்கு முந்தைய பதிவில் நீங்கள் பகிர்ந்த
    செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே பாடலின் படம், நான் வளர்த்த பூவே.. தவறான தகவல் தந்ததற்கு 13வது வட்டத்தின் சார்பில் உங்களை கண்டிக்கிறோம்...//

    எனக்கு கிடைத்த தகவலின்படி எழுதுனேன் தப்பா இருந்தால் இந்த மாணவனை மன்னிக்க வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....

    பாடலின் தகவலுக்கு நன்றிங்க பாரதி

    அது என்ன 13 ஆவது வட்டம்???

    ReplyDelete
  47. ///Blogger THOPPITHOPPI said...

    ஒரு ஆண்மிகவாதியோட பேச்ச கேட்ட மாதிரி இருந்தது.///

    நன்றி நண்பரே

    ReplyDelete
  48. ///Blogger Madhavan Srinivasagopalan said...

    நல்ல கருத்துக்கள்..///

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  49. ///Blogger வேலன். said...

    துன்பத்திற்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடியோடு ஒழிப்பதுதான்.//

    அருமையான வரிகள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வேலன் சார்

    ReplyDelete
  50. //Blogger பாரத்... பாரதி... said...

    ஆமை போலத்தான் , ஆப்பசைத்த குரங்கு போலத்தான் நாமும். வாழ்க்கையில் கிடந்து உழல்கிறோம்..//

    சரியா சொன்னீங்க....

    ReplyDelete
  51. //Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    அந்த அழகிய ஓவிய படங்களை வரைந்தவர் சிங்கையின் சிங்கம் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. வைகை அவர்கள்.///

    அண்ணன் இல்லை அங்கிள் அதான் வயசு தெரிஞ்சிடுச்சில்ல//

    அப்ப நீங்க....ஹிஹிஹி

    ReplyDelete
  52. ///Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    நண்பர்கள் யாரும் கண்டுபிடிக்காத காரணத்தினால் அந்த இலவச சுற்றுலாவுக்கென வைத்திருந்த பணங்களில் அண்ணன் வைகை அவர்களை குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறோம். //

    அவரது பொன்னான பணி இந்தியாவுக்கு தேவை இல்லை. அவரை அங்கேயே வைத்து கொல்லவும்..///

    ஏன் இப்படி ஒரு கொலவெறி....

    ReplyDelete
  53. ///Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    மாணவன் said... Reply to comment

    இருங்க பதிவுபத்தி கமெண்டு போடல...
    போட்டுட்டு வரேன்....///

    பார்ரா...எனக்கேவா ஹிஹி

    ReplyDelete
  54. ///Blogger இரவு வானம் said...

    நல்ல பதிவு நண்பா///

    நன்றி நண்பரே

    ReplyDelete
  55. //Blogger சுசி said...

    //அளவோடு ஆசைபடுவோம் அன்போடு மகிழ்ச்சியாக நலமுடன் வாழ்வோம்//

    சரியா சொன்னிங்க.//

    நன்றிங்க சகோ...

    ReplyDelete
  56. ///Blogger ஆ.ஞானசேகரன் said...

    //அளவோடு ஆசைபடுவோம் அன்போடு மகிழ்ச்சியாக நலமுடன் வாழ்வோம்.//

    உண்மைதான் நண்பா///

    நன்றி நண்பரே

    ReplyDelete
  57. thanks,thankyou for good sharing..

    ReplyDelete
  58. ////Blogger சசிகுமார் said...

    வாழ்த்துக்கள் மாணவா அருமை///

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசி

    ReplyDelete
  59. ///Blogger அஞ்சா சிங்கம் said...

    ஆமை கறி நல்லா இருக்குமா .............

    கெடச்சா நமக்கு ஒன்னு பார்சல் அனுப்புங்க ...............///

    கண்டிப்பா அனுப்பிடுவோம்...செலவுதான் கொஞ்சம் அதிகமா ஆகும்

    ReplyDelete
  60. //Blogger வெறும்பய said...

    நல்ல பகிர்வு//

    நன்றி அண்ணே

    ReplyDelete
  61. //தங்கம்பழனி said...

    thanks,thankyou for good sharing..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  62. பிரசன்ட் போட்டுக்கிறேன்

    ReplyDelete
  63. ///ரஹீம் கஸாலி said...

    பிரசன்ட் போட்டுக்கிறேன்//

    ஓகே ரைட்டு நன்றி

    ReplyDelete
  64. அட அப்டியா மாணவன்...வைகை யின் கை வண்ணமா..சூப்பர்..:))

    ReplyDelete
  65. //Blogger சி.பி.செந்தில்குமார் said...

    ada .. vaikai.. paya pulla en kittae sollavae illa..//

    ஹிஹி எல்லாம் ஒரு தன்னடக்கம்தான்...

    ReplyDelete
  66. //ந்த ஆசை பேராசையாக மாறும் போதுதான் பிரச்சினைகளும், துன்பங்களும் ஏற்படுகிறது. //

    அடுத்தவர் நன்றாக இருக்கவேண்டும் , நாடும் சுற்றமும் நன்றாக இருக்க வேண்டும் என்கின்ற பேராசை தப்பில்லையே !!!!!

    ReplyDelete
  67. ///Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    உண்மையாவா.............?//

    எங்க அண்ணன் சிரிப்புபோலீஸ் மேல சத்தியமா உண்மை உண்மை.... வைகைதான் வரைஞ்சாரு நெசமாத்தான் சொல்றேன்.....

    ReplyDelete
  68. ///Blogger ஆனந்தி.. said...

    அட அப்டியா மாணவன்...வைகை யின் கை வண்ணமா..சூப்பர்..:))//

    நன்றிங்க சகோ...

    ReplyDelete
  69. //Blogger எப்பூடி.. said...

    //ந்த ஆசை பேராசையாக மாறும் போதுதான் பிரச்சினைகளும், துன்பங்களும் ஏற்படுகிறது. //

    அடுத்தவர் நன்றாக இருக்கவேண்டும் , நாடும் சுற்றமும் நன்றாக இருக்க வேண்டும் என்கின்ற பேராசை தப்பில்லையே !!!!!//

    இதுபோன்ற ஆசைகளில் தவறில்லை நண்பரே, இதை ஆசை எனபதை விட நமது அனைவரின் எண்ணமும் நோக்கமும் இதுதான் நண்பரே அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதே...

    ReplyDelete
  70. அந்த அழகிய ஓவிய படங்களை வரைந்தவர் சிங்கையின் சிங்கம் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. வைகை அவர்கள்//
    வைகை கைவசம் நல்ல தொழில் இருக்கும் போல

    ReplyDelete
  71. லேட்டா வந்துட்டேன் போல

    ReplyDelete
  72. மாணவன் பதிவுக்கு கமேண்ட் போட வரவர இடமே கிடைக்காது போல

    ReplyDelete
  73. ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்று புத்தரும் ஆசைதான் பட்டார். எனவே ஆசைகள் இல்லாத மனிதன் இல்லை, அந்த ஆசை பேராசையாக மாறும் போதுதான் பிரச்சினைகளும், துன்பங்களும் ஏற்படுகிறது. எனவே அளவோடு ஆசைபடுவோம் அன்போடு மகிழ்ச்சியாக நலமுடன் வாழ்வோம்.

    ... Good message. HAPPY PONGAL!

    ReplyDelete
  74. அர்த்தமுள்ள பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  75. சாரிண்ணே.. ஹி..ஹி கோத்துவிட்டிருக்கேன்.. பார்த்து
    தப்பிச்சுக்குங்க...

    http://pattapatti.blogspot.com/2011/01/blog-post_11.html

    ReplyDelete
  76. //
    ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்று புத்தரும் ஆசைதான் பட்டார். எனவே ஆசைகள் இல்லாத மனிதன் இல்லை, அந்த ஆசை பேராசையாக மாறும் போதுதான் பிரச்சினைகளும், துன்பங்களும் ஏற்படுகிறது.///

    நல்ல கருத்து...

    ReplyDelete
  77. நல்ல பகிர்வு நண்பரே

    ReplyDelete
  78. //அனுபவித்து ஆசையைத் தீர்ப்பது என்பது நெய்யூற்றி நெருப்பை அணைக்கும் செயல். நெய்யூற்ற ஊற்ற நெருப்பு வளரும். அனுபவிக்க அனுபவிக்க ஆசை தொடரும்//
    என்ன பாலகுமாரன் மாதிரி?...
    அருமை!

    ReplyDelete
  79. இந்தமாதிரி வரையறது எல்லாம் அப்படியே வளரும்போதே வர்றது போல.....

    வைகை அவர்களே..நல்லா வரஞ்சிருந்தீங்கோ

    எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

    நன்றி

    ReplyDelete
  80. அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  81. அருமையான பகிர்வு நண்பரே..

    உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  82. கடைசியா வந்தமைக்கு மன்னித்து கொள்ளுங்கள் ...

    என்ன ஒரு அற்புதமான பதிவு அண்ணே .....

    மிக தேவையான பதிவும் கூட ...

    உங்களின் இந்த சிறந்த பணி தொடரட்டும் .....

    ReplyDelete
  83. உலையில் ஏற்றித் தழலெரி மடுத்த நீரில்

    திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல்

    தெளிவிலாதேன…

    ‘எல்லை மீறினால் எதுவும் துன்பமே’ என்ற தெளிவு ஆமைக்கு மட்டுமா, இல்லை… நமக்கும்தானே?//


    அசத்தல் வார்த்தைகள் .... அண்ணே ...

    உண்மையும் அதான் ....

    ReplyDelete
  84. வாழ்த்துக்கள் மாணவா அருமை

    ReplyDelete
  85. //Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

    அந்த அழகிய ஓவிய படங்களை வரைந்தவர் சிங்கையின் சிங்கம் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. வைகை அவர்கள்//
    வைகை கைவசம் நல்ல தொழில் இருக்கும் போல//

    உண்மைதான் அண்ணே

    ReplyDelete
  86. //Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

    லேட்டா வந்துட்டேன் போல//

    பரவாயில்லை அண்ணே நீங்க எப்ப வந்தாலும் ஓகேதான்.....

    ReplyDelete
  87. ///Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

    மாணவன் பதிவுக்கு கமேண்ட் போட வரவர இடமே கிடைக்காது போல///

    ஹிஹிஹி நன்றி அண்ணே

    ReplyDelete
  88. /// மாணவன் பதிவுக்கு கமேண்ட் போட வரவர இடமே கிடைக்காது போல

    January 10, 2011 10:37 PM
    Delete
    Blogger Chitra said...

    ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்று புத்தரும் ஆசைதான் பட்டார். எனவே ஆசைகள் இல்லாத மனிதன் இல்லை, அந்த ஆசை பேராசையாக மாறும் போதுதான் பிரச்சினைகளும், துன்பங்களும் ஏற்படுகிறது. எனவே அளவோடு ஆசைபடுவோம் அன்போடு மகிழ்ச்சியாக நலமுடன் வாழ்வோம்.

    ... Good message. HAPPY PONGAL!///

    நன்றிங்க மேடம் உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  89. ///Blogger abul bazar/அபுல் பசர் said...

    அர்த்தமுள்ள பதிவு
    வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

    ReplyDelete
  90. ///Blogger செங்கோவி said...

    ஆசை-ஆமை அருமை.///

    நன்றி நண்பரே

    ReplyDelete
  91. ///Blogger பட்டாபட்டி.... said...

    சாரிண்ணே.. ஹி..ஹி கோத்துவிட்டிருக்கேன்.. பார்த்து
    தப்பிச்சுக்குங்க...

    http://pattapatti.blogspot.com/2011/01/blog-post_11.html///

    ம்ம் நடத்துங்க நடத்துங்க.. தலைவரு சொன்னா கேட்டுத்தானே ஆகணும்....ஹிஹி

    ReplyDelete
  92. ///Blogger ஆமினா said...

    //
    ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்று புத்தரும் ஆசைதான் பட்டார். எனவே ஆசைகள் இல்லாத மனிதன் இல்லை, அந்த ஆசை பேராசையாக மாறும் போதுதான் பிரச்சினைகளும், துன்பங்களும் ஏற்படுகிறது.///

    நல்ல கருத்து...////

    நன்றிங்க சகோ

    ReplyDelete
  93. ///Blogger S Maharajan said...

    நல்ல பகிர்வு நண்பரே///

    வாங்க நண்பரே கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  94. ///Blogger ஜீ... said...

    //அனுபவித்து ஆசையைத் தீர்ப்பது என்பது நெய்யூற்றி நெருப்பை அணைக்கும் செயல். நெய்யூற்ற ஊற்ற நெருப்பு வளரும். அனுபவிக்க அனுபவிக்க ஆசை தொடரும்//
    என்ன பாலகுமாரன் மாதிரி?...
    அருமை!///

    அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நண்பரே படித்து தெரிந்துகொண்டதை பகிர்ந்துகொள்கிறேன் அவ்வளவுதான்...

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  95. ////Blogger விக்கி உலகம் said...

    இந்தமாதிரி வரையறது எல்லாம் அப்படியே வளரும்போதே வர்றது போல.....

    வைகை அவர்களே..நல்லா வரஞ்சிருந்தீங்கோ

    எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

    நன்றி///

    உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே நன்றி

    ReplyDelete
  96. ///Blogger ஆயிஷா said...

    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.///

    நன்றிங்க சகோ

    ReplyDelete
  97. ///Blogger பதிவுலகில் பாபு said...

    அருமையான பகிர்வு நண்பரே..

    உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..///

    நன்றி நண்பரே உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  98. ///அரசன் said...

    கடைசியா வந்தமைக்கு மன்னித்து கொள்ளுங்கள் ...

    என்ன ஒரு அற்புதமான பதிவு அண்ணே .....

    மிக தேவையான பதிவும் கூட ...

    உங்களின் இந்த சிறந்த பணி தொடரட்டும் .....////

    வாங்க அண்ணே நீங்க எப்ப வேணாலும் வரலாம்... நன்றி அண்ணே

    ReplyDelete
  99. ///Blogger அரசன் said...

    உலையில் ஏற்றித் தழலெரி மடுத்த நீரில்

    திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல்

    தெளிவிலாதேன…

    ‘எல்லை மீறினால் எதுவும் துன்பமே’ என்ற தெளிவு ஆமைக்கு மட்டுமா, இல்லை… நமக்கும்தானே?//


    அசத்தல் வார்த்தைகள் .... அண்ணே ...

    உண்மையும் அதான் ....//

    ஆமாம் அண்ணே அதுதான் உண்மையும்கூட....
    கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அண்ணே

    ReplyDelete
  100. //Blogger polurdhayanithi said...

    வாழ்த்துக்கள் மாணவா அருமை//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  101. மீண்டும் வாசிக்க ஆசையை தூண்டுகிறது பதிவு . நேர்த்தியான எழுத்து நடை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  102. /// !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
    மீண்டும் வாசிக்க ஆசையை தூண்டுகிறது பதிவு . நேர்த்தியான எழுத்து நடை . பகிர்வுக்கு நன்றி//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.