வணக்கம் நண்பர்களே, ஒரு புதிய முயற்சியாக நான் படித்து கற்றுக்கொண்ட, நண்பர்கள் பகிர்ந்துகொண்ட பொன்மொழிகள்,தத்துவங்கள் மற்றும் சிந்தனையைத் தூண்டுகின்ற சின்ன சின்ன தகவல்களை “மாணவன் ஸ்பெஷல்” என்ற தலைப்பில் உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்..இதோ எனது முதல் முயற்சியாக:
- தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.
- ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.
- பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்.
- வாழ்க்கையில் சம்பாதிக்கக்கூடிய மிகப் பெரிய விசயம் பொறுமை.
- எதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்துவிடாதே, உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது.
- நேரத்தை வீணாக தள்ளிப்போடாதே...தாமதங்கள் அபாயகரமான முடிவைக் கொண்டுள்ளன.
- அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.
- சோம்பலாய் இருப்பது, முட்டாள்கள் எடுத்துக்கொள்ளும் விடுமுறை.
- உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.
- நல்ல யோசனையை தோன்றும்போது உடனே செய்து விடுங்கள், ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது.
- மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது.
- அன்பு தன்னையே கொடுக்கிறது, வாங்கப்படுவதில்லை.
- கடுமையான வார்த்தைகளை கையாள்வது, எப்போதும் பலவீனத்தின் அடையாளம்.
- பலம் பொருந்திய உடலைவிட, சிந்திக்கக்கூடிய நல்ல மூளையே சிறந்தது.
- எல்லா கெட்ட நடிவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை.
- தோல்வி என்ற படி இருந்தால், அங்கே நிச்சயம் வெற்றி என்ற மாடி இருக்கும்.
- பிறருடைய முதுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்.
- சொற்கள் வெறும் நீர்க் குமிழிகள், ஆனால் செயல்கள்தான் தங்கத்துளிகள்.
- அந்தஸ்தின் அடையாளம் வெறும் அடையாளம் மட்டுமே, அதுவே அந்தஸ்து அல்ல.
- வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.
#######################################################
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்உங்கள் மாணவன்
சூப்பர் பொன்மொழிகள்!
ReplyDeleteநல்லாருக்கு
ReplyDeleteஅடுத்த மகுடம் பதிவா
ReplyDeleteதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.//
ReplyDeleteவெற்றின்னா பலான படத்துல நடிப்பாரே அவரா?
சிறப்பு.. மாணவன்.. ! தொடருங்கள்... ! அப்படியே நம்ம பக்கம் வந்துட்டுப் போகலாமே..! www.thangampalani.blogspot.com
ReplyDeleteஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.//
ReplyDeleteஅப்டின்னா ஸ்கூல், காலேஜ்லா வாத்தியார் எதுக்கு?
பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்.//
ReplyDeleteதுணியை துவைச்சு வைக்கணுமா/ துவைக்காமலா?
வாழ்க்கையில் சம்பாதிக்கக்கூடிய மிகப் பெரிய விசயம் பொறுமை.//
ReplyDeleteஅப்போ அலவன்ஸ், இன்சென்டிவ்
SUPER SAYINGS.........
ReplyDeleteRAMESH............ HI ........ HI......... MUDIYALA///.
எதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்துவிடாதே, உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது.//
ReplyDeleteஎதிர் ரோ இல்லியா?
நேரத்தை வீணாக தள்ளிப்போடாதே...தாமதங்கள் அபாயகரமான முடிவைக் கொண்டுள்ளன.//
ReplyDeleteதள்ளிபோடாமல் உடனே போட்டு தள்ளிடலாம்
அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.//
ReplyDeleteஎன்னை ரொம்ப புகழாதே
//பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்//
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த வரிகள்...
சோம்பலாய் இருப்பது, முட்டாள்கள் எடுத்துக்கொள்ளும் விடுமுறை.//
ReplyDeleteஅடிக்கடி விடுமுறை எடுக்குறேன்னு சொல்லு
உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.//
ReplyDeleteபொய்னா என்ன?
நல்ல யோசனையை தோன்றும்போது உடனே செய்து விடுங்கள், ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது.//
ReplyDeleteஏன் கிளம்பி போயிடுமா?
சூப்பர் பொன்மொழிகள்!
ReplyDeleteமனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது.//
ReplyDeleteம்ம் விளங்கிடுச்சு. ஹிஹி
அன்பு தன்னையே கொடுக்கிறது, வாங்கப்படுவதில்லை.//
ReplyDeleteஅன்பு யாரு? அபிநயா தங்கச்சியா?
கடுமையான வார்த்தைகளை கையாள்வது, எப்போதும் பலவீனத்தின் அடையாளம்.//
ReplyDeleteசரிடா பன்னாடை, பரதேசி...
பலம் பொருந்திய உடலைவிட, சிந்திக்கக்கூடிய நல்ல மூளையே சிறந்தது.//
ReplyDeleteஎன் மூளை மாதிரி..
எல்லா கெட்ட நடிவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை.///
ReplyDeleteஅப்படின்னா ஜன்னல் எது, கொல்லைபுறம் எது?
தோல்வி என்ற படி இருந்தால், அங்கே நிச்சயம் வெற்றி என்ற மாடி இருக்கும்.//
ReplyDeleteஎத்தனாவது மாடி?
பிறருடைய முதுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்.//
ReplyDeleteடாக்டர் விஜய் மாதிரி முதுகு தேய்க்கிற வேலை?
சொற்கள் வெறும் நீர்க் குமிழிகள், ஆனால் செயல்கள்தான் தங்கத்துளிகள்.//
ReplyDeleteஎத்தனை கிராம்? அடகு வைக்கலாமா? ஹிஹி
அந்தஸ்தின் அடையாளம் வெறும் அடையாளம் மட்டுமே, அதுவே அந்தஸ்து அல்ல.//
ReplyDeleteமறுபடியும் விளங்கிடுச்சு
வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.//
ReplyDeleteகாலிங் பெல் அடிக்காதா?
உண்மையிலே அருமையான வார்த்தைகள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
பயனுள்ள பழமொழிகள்...
ReplyDeleteஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.////
ReplyDeleteஇது ரொம்ப ரொம்ப உண்மை மச்சி
உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்./////
ReplyDeleteஆமா இனி நீ ரமேஷ் கூட சேராதே
வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.////
ReplyDeleteஹலோ டிங் டாங் பெல் அடிக்காதா
>>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.//
வெற்றின்னா பலான படத்துல நடிப்பாரே அவரா?
ரொம்ப நல்லவருக்கு இது மட்டும் சரியா தெரியுதே எப்படி?
அனைத்தும் உபயோகம் உள்ளவை .நன்றி மாணவன்
ReplyDeleteஅனைத்தும் நல்லாய் இருக்கு
ReplyDeleteஅருமையான பொன்மொழிகள்!
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.//
வெற்றின்னா பலான படத்துல நடிப்பாரே அவரா?
ரொம்ப நல்லவருக்கு இது மட்டும் சரியா தெரியுதே எப்படி?//
உங்க விமர்சனம் படிச்சுத்தான்...ஹிஹி
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஅனைத்தும் உபயோகம் உள்ளவை .நன்றி மாணவன்//
இதெல்லாம் எங்க உபயோகிச்சீங்க?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.//
வெற்றின்னா பலான படத்துல நடிப்பாரே அவரா?//
அப்ப..அதெல்லாம் பார்த்திரிக்கியா நீ?
ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.//
ReplyDeleteபோலிஸ் ப்ளாக்க படிச்சவுட்டு எனக்கும் தெரிஞ்சிருச்சு
பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்.//
ReplyDeleteஅப்ப..எத பேங்க்ல போடணும்?
வாழ்க்கையில் சம்பாதிக்கக்கூடிய மிகப் பெரிய விசயம் பொறுமை.//
ReplyDeleteமிகச்சிறிய விஷயம் என்ன?
எதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்துவிடாதே, உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது.//
ReplyDeleteஇந்த லிஸ்ட்ல அபிநயா வருமா?
அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.//
ReplyDeleteகூர்மை மழுங்கி போச்சுன்னா?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteசோம்பலாய் இருப்பது, முட்டாள்கள் எடுத்துக்கொள்ளும் விடுமுறை.//
அடிக்கடி விடுமுறை எடுக்குறேன்னு சொல்லு//
உண்மையை ஒப்புக்கொண்ட போலிஸ் வாழ்க!
உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.//
ReplyDeleteபின்னாடி சொல்லமாட்டானா?
மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது.//
ReplyDeleteஅப்ப எத்தன நாள் தங்கலாம்?
எல்லா கெட்ட நடிவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை.///
ReplyDeleteஅப்ப ரெண்டாவது வாசல் எது?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.//
காலிங் பெல் அடிக்காதா?//
அது எப்பிடி அடிக்கும்... நாமதான் அடிக்கணும்
50
ReplyDeleteஎல்லாப் பொன்மொழியும் நல்லா இருக்கு அண்ணா ..
ReplyDeleteஅண்ணே அனைத்தும் செம நச்
ReplyDeleteமாணவனின் சிறப்பு பதிவு இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஎப்படி இப்படீல்லாம் யோசிக்கிறிங்க ...
ReplyDeleteமொத்ததுல உங்ககிட்ட நல்ல விஷயங்கள் அதிகமா இருக்கு ....
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்களுக்கும் , அபிநயா அவர்களுக்கும்
எல்லா கெட்ட நடிவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை.///
ReplyDeleteஅப்ப ரெண்டாவது வாசல் எது?
//
சரியான கேள்வி
வைகை said...
ReplyDeleteஎதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்துவிடாதே, உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது.//
இந்த லிஸ்ட்ல அபிநயா வருமா?//
சத்தியமா வராது அண்ணே
சொற்கள் வெறும் நீர்க் குமிழிகள், ஆனால் செயல்கள்தான் தங்கத்துளிகள்.
ReplyDelete//
சரியான வரிகள் ...
எல்லாத்துக்கும் பொருந்தும் ...
அருமையான பொன் மொழிகள்..எழுதுங்கள் இன்னமும்
ReplyDeleteநன்றாக உள்ளது மாணவனின் சிந்தனைகள்.
ReplyDelete* அந்தஸ்தின் அடையாளம் வெறும் அடையாளம் மட்டுமே, அதுவே அந்தஸ்து அல்ல.
ReplyDelete* வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.
சூப்பர் சகோ.... அருமையான பொன் மொழிகள்
பூங்கொத்து!
ReplyDeleteஅழகான தொகுப்பு!
ReplyDeleteநன்றி!
அட அட அட ஸ்ஸ்ஸ் அப்பா ஓகே பா
ReplyDeleteஎளிமையா.... இருக்கு
ReplyDeleteஅத்தனையும் வலிமைகள்.
எல்லா பொன்மொழிகளுமே நல்லா இருக்கு.
ReplyDeleteதிடீர்ன்னு ஆசிரியர் அவதாரம் எடுத்திடீங்களே தம்பி!
ReplyDeleteபொன்மொழிகள் நல்லாத்தான் இருக்கு... ஆனா இது தொடரும்னு சொல்றதுதான் கொஞ்சம் கலக்கமா இருக்கு...!
ReplyDeleteஃஃஃஃஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்ஃஃஃஃ
ReplyDeleteஉண்மை தான் மாணவன்... இன்னிக்கே புக்மார்க் பண்ணிக்கிறேன்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.
வழக்கம்போலே தெளிவான பார்வையுடன் பதியப்பட்ட பதிவு சிம்பு..
ReplyDeleteஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.
ReplyDeleteஅன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.
அருமை.பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்.நன்றி நன்றி...................
பொன்மொழிகள் நல்லாருக்கு.
ReplyDelete75
ReplyDeletearumaiyana ponmozhikal
ReplyDeleteசிந்தயை கவரும் பொன்மொழிகள் நன்றி மாணவன்.....
ReplyDeleteஎல்லா பொன்மொழிகளும் அருமை.
ReplyDeleteமிக ரசிக்க, யோசிக்க வைத்தவைகள்...
//உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.//
//மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது.//
// எஸ்.கே said...
ReplyDeleteசூப்பர் பொன்மொழிகள்!//
நன்றி நண்பரே :)
// Speed Master said...
ReplyDeleteநல்லாருக்கு//
நன்றி சார் :)
// ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteஅடுத்த மகுடம் பதிவா//
என்ன நண்பரே அடுத்த தலைப்ப சொல்றீங்களா?? :)
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.//
வெற்றின்னா பலான படத்துல நடிப்பாரே அவரா?//
ஹிஹி...
// தங்கம்பழனி said...
ReplyDeleteசிறப்பு.. மாணவன்.. ! தொடருங்கள்... ! அப்படியே நம்ம பக்கம் வந்துட்டுப் போகலாமே..! www.thangampalani.blogspot.com///
நன்றி நண்பரே கண்டிப்பாக வருகிறேன்.... :)
// ஓட்ட வட நாராயணன் said...
ReplyDeleteSUPER SAYINGS.........//
நன்றி நண்பரே :)
//
ReplyDeleteராஜகோபால் said...
//பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்//
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
// S Maharajan said...
ReplyDeleteசூப்பர் பொன்மொழிகள்!//
நன்றி நண்பரே :)
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஅன்பு தன்னையே கொடுக்கிறது, வாங்கப்படுவதில்லை.//
அன்பு யாரு? அபிநயா தங்கச்சியா?///
கண்டு பிடிச்சுட்டாரே.... ஹிஹி
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteகடுமையான வார்த்தைகளை கையாள்வது, எப்போதும் பலவீனத்தின் அடையாளம்.//
சரிடா பன்னாடை, பரதேசி...//
யார நம்ம பாஸ் டெரர சொல்றீங்களா?? ஹிஹி
// # கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஉண்மையிலே அருமையான வார்த்தைகள்..
வாழ்த்துக்கள்..///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே :)
// வேடந்தாங்கல் - கருன் said...
ReplyDeleteபயனுள்ள பழமொழிகள்...//
நன்றிங்க ஆசிரியரே :)
/// சௌந்தர் said...
ReplyDeleteஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.////
இது ரொம்ப ரொம்ப உண்மை மச்சி//
நன்றி மச்சி :)
// சௌந்தர் said...
ReplyDeleteவாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.////
ஹலோ டிங் டாங் பெல் அடிக்காதா///
அடிக்கும் மச்சி அடிக்கும்.....ஹிஹி
/// சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஅனைத்தும் உபயோகம் உள்ளவை .நன்றி மாணவன்///
நன்றிங்க பாஸ்.. :)
/// கந்தசாமி. said...
ReplyDeleteஅனைத்தும் நல்லாய் இருக்கு///
நன்றி நண்பரே :)
// Sriakila said...
ReplyDeleteஅருமையான பொன்மொழிகள்!///
நன்றிங்க சகோ :)
// வைகை said...
ReplyDeleteஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.//
போலிஸ் ப்ளாக்க படிச்சவுட்டு எனக்கும் தெரிஞ்சிருச்சு///
உங்களுக்குதான் அங்கதான் அனுபவம் ஏற்பட்டுச்சா??? சேம் ப்ளட்..ஹிஹி
// கோமாளி செல்வா said...
ReplyDeleteஎல்லாப் பொன்மொழியும் நல்லா இருக்கு ///
நன்றி செல்வா :))
///
ReplyDeleteஅரசன் said...
மாணவனின் சிறப்பு பதிவு இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்///
வாழ்த்துக்கு நன்றி அண்ணே :)
// மைந்தன் சிவா said...
ReplyDeleteஅருமையான பொன் மொழிகள்..எழுதுங்கள் இன்னமும்//
கண்டிப்பாக எழுதுகிறேன் நண்பரே, உங்களின் ஊக்கத்திற்கு நன்றி :)
/// தமிழ் உதயம் said...
ReplyDeleteநன்றாக உள்ளது மாணவனின் சிந்தனைகள்.//
நன்றிங்க நண்பரே :)
//
ReplyDeleteரேவா said...
* அந்தஸ்தின் அடையாளம் வெறும் அடையாளம் மட்டுமே, அதுவே அந்தஸ்து அல்ல.
* வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.
சூப்பர் சகோ.... அருமையான பொன் மொழிகள்//
நன்றிங்க சகோ :)
// அன்புடன் அருணா said...
ReplyDeleteபூங்கொத்து!///
பூங்கொத்துக்கு நன்றிங்க மேடம் :)
// thendralsaravanan said...
ReplyDeleteஅழகான தொகுப்பு!
நன்றி!//
நன்றிங்க மேடம் :)
//
ReplyDeleteவிக்கி உலகம் said...
அட அட அட ஸ்ஸ்ஸ் அப்பா ஓகே பா////
என்னா பாஸ் என்ன ஆச்ச்சு??ஹிஹி
/// சி.கருணாகரசு said...
ReplyDeleteஎளிமையா.... இருக்கு
அத்தனையும் வலிமைகள்.///
நன்றிங்கண்ணே :)
/// Lakshmi said...
ReplyDeleteஎல்லா பொன்மொழிகளுமே நல்லா இருக்கு.////
மிக்க நன்றிங்கம்மா :)
// கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteதிடீர்ன்னு ஆசிரியர் அவதாரம் எடுத்திடீங்களே தம்பி///
அப்டிலாம் ஒன்னும் இல்லைண்ணே, நாம் எல்லோருமே இன்னும் கற்றுக்கொள்வதில் மாணவர்கள்தான்....
நன்றி அண்ணே உங்களின் பாராட்டுக்கு :)
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteபொன்மொழிகள் நல்லாத்தான் இருக்கு... ஆனா இது தொடரும்னு சொல்றதுதான் கொஞ்சம் கலக்கமா இருக்கு...!///
உங்களுக்காகவே தொடர்ந்து எழுதி உங்கள கொண்டு கொலையறுக்காம விடறதுல்ல...ஹிஹி
/// Rathnavel said...
ReplyDeleteநல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.///
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்கய்யா :)
/// FOOD said...
ReplyDeleteநல்ல நல்ல பகிர்வு///
நன்றி நண்பரே :)
/// ♔ம.தி.சுதா♔ said...
ReplyDeleteஃஃஃஃஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்ஃஃஃஃ
உண்மை தான் மாணவன்... இன்னிக்கே புக்மார்க் பண்ணிக்கிறேன்...///
நன்றி சகோதரா :)
///
ReplyDeleteஆனந்தி.. said...
வழக்கம்போலே தெளிவான பார்வையுடன் பதியப்பட்ட பதிவு சிம்பு/////
நன்றிங்க சகோ :)
/// சித்தாரா மகேஷ். said...
ReplyDeleteஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.
அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.
அருமை.பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்.நன்றி நன்றி........///
நன்றிங்க தோழி :)
// சே.குமார் said...
ReplyDeleteபொன்மொழிகள் நல்லாருக்கு.////
நன்றி நண்பரே :)
/// இரவு வானம் said...
ReplyDeletearumaiyana ponmozhikal///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
// சீமான்கனி said...
ReplyDeleteசிந்தயை கவரும் பொன்மொழிகள் நன்றி மாணவன்.....///
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
/// பாரத்... பாரதி... said...
ReplyDeleteஎல்லா பொன்மொழிகளும் அருமை.
மிக ரசிக்க, யோசிக்க வைத்தவைகள்...
//உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.//
//மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது.////
நன்றிங்க பாரதி :))