Tuesday, February 8, 2011

தத்துவஞானி அரிஸ்டாடில் - (வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே!!

வணக்கம் நண்பர்களே பதிவுலகம் சார்ந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்வதோடு தொடர்ந்து உங்கள் ஆதரவும் ஊக்கமும் அளிக்க வேண்டுகிறேன். ஆம் வலைச்சரத்தில் மதிப்பிற்குறிய திரு. சீனா ஐயா அவர்கள் நேற்று முதல் (7-2-2011)ஒரு வார காலத்திற்கு என்னை ஆசிரியராக பொறுப்பேற்று பல புதிய பதிவர்களை அறிமுகபடுத்த வாய்ப்பு வழங்கியுள்ளார். சீனா ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு என்னால் முடிந்தளவுக்கு வலைச்சரத்தில் சிறப்பாகவே செயல்படுகிறேன்...இதுவரை எனக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கி என்னை உற்சாகபடுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு வலைச்சரத்துக்கும் வருகை தந்து உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி!! நன்றி!!



சரி நண்பர்களே, இன்றைய பதிவில் வரலாற்று நாயகர் தத்துவஞானி அரிஸ்டாடிலின் வாழ்க்கைகுறிப்புகளை தெரிந்துகொள்வோம்.

உலக தத்துவங்களுக்கெல்லாம் முன்னோடியானது கிரேக்க தத்துவம் அதனை முதலில் உலகுக்கு தந்தவர் சாக்ரடீஸ். அவரை தொடர்ந்து இருவர் தத்துவ உலகிற்கு மாபெரும் பங்களிப்பை செய்திருக்கின்றனர்.  ஒருவர் சாக்ரடீஸின் மாணவர் பிளேட்டோ, மற்றவர் பிளேட்டோவின் மாணவர் அரிஸ்டாடில். இந்த மூவரையும்தான் கிரேக்க தத்துவ உலகின் மும்மூர்த்திகள் என்று வருணிக்கிறது வரலாறு.

தத்துவ மேதை அரிஸ்டாடிலைப் பற்றி தெரிந்துகொள்வோம் கி.மு 384-ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஸ்டஹிரா என்ற நகரில் பிறந்தவர் அரிஸ்டாடில் அவரது தந்தையும் நன்கு தேர்ந்த மருத்துவருமான நிக்கோ மாக்கஸ் மாஸிடோனியாவின் மன்னன் பிலிப்ஸ்க்கு அரச மருத்துவராக செயல்பட்டவர். அந்த தொடர்பு அரிஸ்டாடிலின் வாழ்க்கையில் பெரும் பங்காற்றியது. தனது தந்தையிடமிருந்து உயிரியல் சம்பந்தபட்ட விசயங்களை கற்றுகொண்ட அரிஸ்டாடில் தனது 17-ஆவது வயதில் பிளேட்டோ அகாடமியில் சேர்ந்தார்.

சுமார் 20 ஆண்டுகள் பிளேட்டோவிடம் பாடம் கற்ற அரிஸ்டாடில் குருவை மிஞ்சும் மாணவனாக இருந்தார். அவரது அறிவுக்கூர்மையை பார்த்து வியந்த பிளேட்டோ அரிஸ்டாடிலை தனது பள்ளியின் அறிவுகளஞ்சியம் என்று போற்றி மகிழ்ந்தார். அரிஸ்டாடிலின் அறிவுத்திறனை அறிந்த மாஸ்டோனியா மன்னன் பிலிப்ஸ் தனது மகனுக்கு ஆசிரியராக வரும்படி அழைப்பு விடுத்தார். அந்த மகன் வேறு யாருமல்ல.. கைப்பற்றுவதற்கு இனி தேசங்களே இல்லையே என கலங்கினான் என வரலாறு வருணிக்கும் மாவீரன் அலெக்ஸாண்டர்தான்.

அலெக்ஸாண்டரும் வேறு சில முக்கிய பிரமுகர்களின் பிள்ளைகளும் அரிஸ்டாடிலிடம் வாழ்க்கைப்பாடங்களை கற்றுகொண்டனர். மாவீரன் அலெக்ஸாண்டர் ஒவ்வொரு தேசமாக கைப்பற்றியபோது அவற்றின் மன்னர்களையும் வீரர்களையும் நல்முறையில் நடத்தியதற்கு அரிஸ்டாடிலின் போதனைகள் முக்கிய காரணமாகும். 

மன்னன் பிலிப்ஸின் மறைவிற்கு பிறகு அலெக்ஸாண்டர் அரியனை ஏரியதும் ஏதென்ஸுக்கு திரும்பிய அரிஸ்டாடில் அங்கு தனது சொந்த பள்ளியை நிறுவினார். அப்போது அவருக்கு வயது 50. தத்துவங்களை போதித்த அந்த பள்ளி லைஸியம் அகாடமி என்று அழைக்கப்பட்டது. தன் வாழ்நாளில் கிட்டதட்ட 400 புத்தகங்கள் எழுதினார் என்று வரலாறு கூறுகிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலனவற்றை படித்து மகிழும் பாக்கியம் நமக்கு இல்லை. அரிஸ்டாடில் விட்டுவைக்காத துறையே இல்லை என்று சொல்லுமளவுக்கு விலங்கியல், தாவரவியல், பெளதீகம், அரசியல் , பொருளியல், கவிதை, தத்துவம் என பல்வேறு துறைகளில் சிந்தித்தார். அந்த துறைகள் அதுவரை கண்டிராத புதிய கருத்துக்களையும் சித்தாந்தங்களையும் அறிமுகபடுத்தினார்.

அரிஸ்டாடிலை சிந்தனையாளர், அறிவுஜீவி, விஞ்ஞானி என்றெல்லாம் உலகம் போற்றியது. 'மேற்கத்திய நாகரிகத்தின் தந்தை' என்று வருணிக்கிறது வரலாறு. மாவீரன் அலெக்ஸாண்டர் இறந்ததும் அரிஸ்டாடில் மீது சந்தேகம் கொள்ள தொடங்கினர் கிரேக்க மக்கள் சாக்ரடீஸ்க்கு நேர்ந்த கதியே தனக்கும் ஏற்படும் என்று அஞ்சிய அரிஸ்டாடில் ஏதென்ஸை விட்டு வெளியேறி ஜால்ஸிஸ் என்ற இடத்தில் தஞ்சம் புகுந்தார். சுமார் ஓராண்டு கழித்து அங்கேயே அவர் வயிற்றுக்கோளாறு காரணமாக கி.மு 322 ஆம் ஆண்டு தமது 62-ஆவது வயதில் காலமானார்.    

“தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கிறார்கள், நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி நடக்கிறார்கள்”

 “ஒருவனிடம் அச்சம்கொண்டால் அவனிடம் அன்புகொள்ள முடியாது” 

“கடவுளைப்போல பிறர் குற்றங்களை பலமுறை மன்னிக்க பழக வேண்டும்”

இவை அரிஸ்டாடில் என்ற தத்துவமேதையின் சில சிந்தனைகள், அரிஸ்டாடில் வாழ்ந்து 2000 ஆண்டுகளுக்குமேல் ஓடி மறைந்திருந்தாலும் அந்த தத்துவமேதையின் சிந்தனைகள் இன்றைய நவீன உலக்குக்கும் பொருந்துவனவாக உள்ளன. தன் வாழ்க்கை முழுவதையும் கற்பதிலும் கற்பிப்பதிலும் செலவிட்டார் அந்த தத்துவ மேதை.  

அரிஸ்டாடில் போன்றவர்கள் வரலாற்றில் அபூர்வமாகத்தான் உதிக்கின்றனர். அதனால் அவருக்கு அந்த தத்துவம் எனும் வானம் வசப்பட்டதில் ஆச்சரியமில்லைதான். ஆனால் அப்படிபட்ட மாமேதைகூட வாழ்நாள் முழுவதும் தான் கற்பதை கைவிடவில்லை.

அரிஸ்டாடிலைபோல நாமும் வாழ்நாள் கல்வியை நம் தாரக மந்திரமாக ஆக்கிகொண்டால் நமக்கும் அந்த வானம் வசப்பட்டுதான் ஆக வேண்டும்.

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள்.மாணவன்

86 comments:

  1. //அந்த மகன் வேறு யாருமல்ல.. கைப்பற்றுவதற்கு இனி தேசங்களே இல்லையே என கலங்கினான் என வரலாறு வருணிக்கும் மாவீரன் அலெக்ஸாண்டர்தான்.


    எழுத்து நடை பிரமாதம்

    ReplyDelete
  2. அலெக்சாண்டர் பெரிய மாவீரனாக சிறந்து விளங்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் அரிஸ்டாடில் என கேள்விப்பட்டுள்ளேன். சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் ஆகியோர் வரலாற்றின் முக்கிய தத்துவ ஞானிகள்!

    ReplyDelete
  3. நீர் ஆசிரியரே

    ReplyDelete
  4. உள்ளேன் அய்யா

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  6. நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி நடக்கிறார்கள்”/////////


    என்னைப்போலவே........அனைவருக்கும் சொன்னதுக்கு நன்றி!

    ReplyDelete
  7. நல்ல பதிவு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  9. அருமையா இருக்கு மக்கா.............

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி

    நல்ல பல தகவல்கள் நன்றி

    ReplyDelete
  11. அசத்துங்க அசத்துங்க மாணவன்....

    ReplyDelete
  12. அரிஸ்டாட்டில் பத்தி கேள்விப்பட்டிருக்கிறேன் அண்ணா ..
    ஆனா நீங்க அவரோட வரலாறு பற்றி சொன்னதுல நான் நிறைய தெரிந்துகொண்டேன்.. அதே மாதிரி அவரோட தத்துவத்துல

    // “ஒருவனிடம் அச்சம்கொண்டால் அவனிடம் அன்புகொள்ள முடியாது”//

    இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. உண்மையும் கூட ..

    ReplyDelete
  13. இரு போய் ஜோதி படிச்சிட்டு வரேன்

    ReplyDelete
  14. பகிர்வுக்கு நன்றி மாணவன்

    ReplyDelete
  15. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    இரு போய் ஜோதி படிச்சிட்டு வரேன்


    //

    திரும்பி வருவீங்களா...

    ReplyDelete
  16. வைகை said...

    நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி நடக்கிறார்கள்”/////////


    என்னைப்போலவே........

    //

    என்னையும் கூட சேத்துக்க மாமு...

    ReplyDelete
  17. தங்கள் பொன்னான பணி தொடரட்டும்...

    ReplyDelete
  18. சிறந்த தகவல்

    ReplyDelete
  19. கற்றது என்றுமே கைமண் அளவு தான்!

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  20. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி....!

    ReplyDelete
  21. //////வெறும்பய said...
    வைகை said...

    நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி நடக்கிறார்கள்”/////////


    என்னைப்போலவே........

    //

    என்னையும் கூட சேத்துக்க மாமு...////

    அவிங்க என்ன தண்ணியடிக்கவா போறாய்ங்க.. சேத்துக்க சொல்றே?

    ReplyDelete
  22. மதிப்பிற்குறிய திரு. சீனா ஐயா அவர்கள் நேற்று முதல் (7-2-2011)ஒரு வார காலத்திற்கு என்னை ஆசிரியராக பொறுப்பேற்று பல புதிய பதிவர்களை அறிமுகபடுத்த வாய்ப்பு வழங்கியுள்ளார்//
    kalakkungka

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் சகோ...
    அதோட பதிவும் சூப்பர்...

    மாமேதைகூட வாழ்நாள் முழுவதும் தான் கற்பதை கைவிடவில்லை...

    சகோ இன்னும் இது மாதிரி நிறையா பதிவு போடு... தெரியாத விஷயம் இதுல நெறைய இருக்கு சகோ..பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  24. ஆம் வலைச்சரத்தில் மதிப்பிற்குறிய திரு. சீனா ஐயா அவர்கள் நேற்று முதல் (7-2-2011)ஒரு வார காலத்திற்கு என்னை ஆசிரியராக பொறுப்பேற்று பல புதிய பதிவர்களை அறிமுகபடுத்த வாய்ப்பு வழங்கியுள்ளார்........./////////////////////////

    ரொம்ப பெருமையான விஷயம் வாழ்த்துக்கள் மென் மேலும் வளர ...........................

    ReplyDelete
  25. அண்ணே மிகவும் பயனுள்ள பதிவு ,,,

    ReplyDelete
  26. நிறைய விஷயங்களை அறிந்து கொண்டேன் அண்ணே ...
    தொடரட்டும் உங்களின் அறிவு பணி

    ReplyDelete
  27. நிறைய விடயங்களை உங்களின் பதிவில் தான் தெரிந்து கொண்டேன் ,..
    அதற்கு ஒரு பெரிய நன்றி அண்ணே

    ReplyDelete
  28. வைகை said...
    நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி நடக்கிறார்கள்”/////////


    என்னைப்போலவே........அனைவருக்கும் சொன்னதுக்கு நன்றி!
    //

    உண்மைய சொன்னதுக்கு நன்றி அண்ணே

    ReplyDelete
  29. அருமை! கலக்குங்க பாஸ்! :-)

    ReplyDelete
  30. உண்மையாங்க அரிஸ்டாட்டில் ஒரு தத்துவ ஞானி அப்படின்னு தெரியும் .. ஆனா அவர பத்தி அதிகமா இப்பதாங்க தெரிஞ்சுகிட்டேன் ...... இன்னமும் நிறைய எழுதுங்க ... எழுத்து பணி இனிதே தொடரட்டும் ..

    ReplyDelete
  31. நல்லா இருந்துச்சு நண்பா... நிறைய விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டேன்...

    ReplyDelete
  32. ரொம்ப நல்ல இருக்கு..
    இந்த வானம் வசப்படும் ப்ரோக்ராம் ஒரு வானொலி நிகழ்ச்சியாக சிங்கப்பூரில் ஒளிபரப்பப்பட்டது அதே வரிகளை எழுத்துக்கள் மூலமாக இன்னும் பல பேரை அறியவைதுள்ளிர்கள் அதற்காக உங்கள்ளுக்கு நன்றி..
    இன்னும் உங்களது சொந்த கருத்துக்களையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  33. இதன் மற்றும் இன்னும் பல முக்கிய வரலாற்று மா மனிதர்களின்(வானம் வசப்படும்)ஆடியோ வடிவம் என்னிடம் உள்ளது யாருக்கேனும் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும்..
    இந்த சேவை முற்றிலும் இலவசமானது(Conditions எதுவும் apply இல்லை)...

    ReplyDelete
  34. //Speed Master said...
    அருமை//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  35. // Speed Master said...
    //அந்த மகன் வேறு யாருமல்ல.. கைப்பற்றுவதற்கு இனி தேசங்களே இல்லையே என கலங்கினான் என வரலாறு வருணிக்கும் மாவீரன் அலெக்ஸாண்டர்தான்.


    எழுத்து நடை பிரமாதம்//

    உங்களின் கருத்துக்கு மீண்டும் நன்றிகள் பல...

    ReplyDelete
  36. // எஸ்.கே said...
    அலெக்சாண்டர் பெரிய மாவீரனாக சிறந்து விளங்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் அரிஸ்டாடில் என கேள்விப்பட்டுள்ளேன். சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் ஆகியோர் வரலாற்றின் முக்கிய தத்துவ ஞானிகள்!///

    உண்மைதான்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  37. //
    Speed Master said...
    நீர் ஆசிரியரே//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  38. // Arun Prasath said...
    உள்ளேன் அய்யா//

    வா மச்சி லேட்டா வந்ததுக்காக பெஞ்சுமேல ஏறி நின்னு... :))

    ReplyDelete
  39. //
    S Maharajan said...
    அருமை//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  40. // மாத்தி யோசி said...
    congrats..... maanavaa! keep it up.///

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  41. // தமிழ்த்தோட்டம் said...
    வாழ்த்துக்கள் நண்பரே//

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  42. // வைகை said...
    நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி நடக்கிறார்கள்”/////////


    என்னைப்போலவே........அனைவருக்கும் சொன்னதுக்கு நன்றி!//

    ஆமாம் அண்ணே உண்மைதான்... :))

    ReplyDelete
  43. எழுத்து நடை அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. வாழ்த்துக்கள் மாணவன்...வலைச்சரத்திலும் உங்கள் முத்திரையை பதியுங்கள்.

    ReplyDelete
  45. அரிஸ்டாட்டில் பற்றி அருமையான தொகுப்பு

    ReplyDelete
  46. வணக்கம் நண்பரே .
    பாராட்டுகள் உங்களின் இடுகைக்கு .
    தத்துவஞானி அரிஸ்டாடில் - (வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே!!

    என்ற உமது இடுகை வாசித்தேன் நீங்கள் உலக தத்துவங்களுக்கெல்லாம் முன்னோடியானது கிரேக்கமெய்மமே (தத்துவமே ) என்று குறிப்பிட்டு இருந்தீர் .
    இதில் பிழை உள்ளதாக கருதுகிறேன் ஏன் என்றால் உலக மொழிகளுக்கு எல்லாம் முதன்மையானது தமிழ் மொழி இந்த மொழியில்தான் முதலில் மெய்மங்களும் (தத்துவங்கள் ) தோன்றியது . இந்த தத்துவங்களை கற்பதற்காக உலகெங்கும் இருந்து மாணவர்கள் வந்து கற்றதாக நம் வரலாறு கூறுகிறது . நம்முடைய தத்துவங்கள் வெளிநாடுகளில் இறந்து வந்த பயணிகள் மாணவர்கள் போன்றவர்களினால் வெளிநாடுகளுக்கு பரவியது . உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா அறிவியலுக்கும் , மெய்மங்களுக்கும் தமிழர்கள்தான் காரணம் என்பது வரலாறு அனால் தமிழர்களுக்கு தான் அது தெரியவில்லை போலும்
    போளூர் தயாநிதி

    ReplyDelete
  47. வாழ்த்துக்கள் மாணவன் :-)

    ReplyDelete
  48. / # கவிதை வீதி # சௌந்தர் said...
    நல்ல பதிவு... வாழ்த்துக்கள்...//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  49. //
    @MANO நாஞ்சில் மனோ said...
    அருமையா இருக்கு மக்கா.............

    @ விக்கி உலகம் said...
    பகிர்வுக்கு நன்றி

    நல்ல பல தகவல்கள் நன்றி

    @ MANO நாஞ்சில் மனோ said...
    அசத்துங்க அசத்துங்க மாணவன்....////

    வருகைக்கும் கருத்துக்கும் பெரிய நன்றிகள் நண்பர்களே... :))

    ReplyDelete
  50. // கோமாளி செல்வா said...
    அரிஸ்டாட்டில் பத்தி கேள்விப்பட்டிருக்கிறேன் அண்ணா ..
    ஆனா நீங்க அவரோட வரலாறு பற்றி சொன்னதுல நான் நிறைய தெரிந்துகொண்டேன்.. அதே மாதிரி அவரோட தத்துவத்துல

    // “ஒருவனிடம் அச்சம்கொண்டால் அவனிடம் அன்புகொள்ள முடியாது”//

    இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. உண்மையும் கூட ..//

    ஆமாம் செல்வா இதான் உண்மை...

    :))

    ReplyDelete
  51. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    இரு போய் ஜோதி படிச்சிட்டு வரேன்//

    நீங்களே போறேன்றீங்க ம்ம் சரி நடக்கட்டும்... :))

    ReplyDelete
  52. //
    நா.மணிவண்ணன் said...
    பகிர்வுக்கு நன்றி மாணவன்//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  53. //@ வெறும்பய said...
    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    இரு போய் ஜோதி படிச்சிட்டு வரேன்


    //

    திரும்பி வருவீங்களா...

    சந்தேகம்தான்.. :))


    வெறும்பய said...
    வைகை said...

    நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி நடக்கிறார்கள்”/////////


    என்னைப்போலவே........

    //

    என்னையும் கூட சேத்துக்க மாமு...

    சேர்த்தாச்சு சேர்த்தாச்சு.. :))


    வெறும்பய said...
    அருமை..

    நன்றி நன்றி!!

    ReplyDelete
  54. // கந்தசாமி. said...
    சிறந்த தகவல


    @tamilan said...
    CLICK TO READ///

    வருகைக்கு நன்றி நண்பர்களே

    ReplyDelete
  55. // middleclassmadhavi said...
    கற்றது என்றுமே கைமண் அளவு தான்!

    பகிர்வுக்கு நன்றி///

    நன்றிங்க சகோ....

    ReplyDelete
  56. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி....!

    உங்களின் ஆசீயோடு தொடரும் :))


    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////வெறும்பய said...
    வைகை said...

    நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி நடக்கிறார்கள்”/////////


    என்னைப்போலவே........

    //

    என்னையும் கூட சேத்துக்க மாமு...////

    அவிங்க என்ன தண்ணியடிக்கவா போறாய்ங்க.. சேத்துக்க சொல்றே?///

    அதானே நல்லா கேளுங்க... :))

    ReplyDelete
  57. // ஆர்.கே.சதீஷ்குமார் said...
    மதிப்பிற்குறிய திரு. சீனா ஐயா அவர்கள் நேற்று முதல் (7-2-2011)ஒரு வார காலத்திற்கு என்னை ஆசிரியராக பொறுப்பேற்று பல புதிய பதிவர்களை அறிமுகபடுத்த வாய்ப்பு வழங்கியுள்ளார்//
    kalakkungka

    நன்றி நண்பரே

    ReplyDelete
  58. // தங்கம்பழனி said...
    thankyou//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  59. //
    ரேவா said...
    வாழ்த்துக்கள் சகோ...
    அதோட பதிவும் சூப்பர்...

    மாமேதைகூட வாழ்நாள் முழுவதும் தான் கற்பதை கைவிடவில்லை...

    சகோ இன்னும் இது மாதிரி நிறையா பதிவு போடு... தெரியாத விஷயம் இதுல நெறைய இருக்கு சகோ..பகிர்வுக்கு நன்றி//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோ...

    ReplyDelete
  60. // அஞ்சா சிங்கம் said...
    ஆம் வலைச்சரத்தில் மதிப்பிற்குறிய திரு. சீனா ஐயா அவர்கள் நேற்று முதல் (7-2-2011)ஒரு வார காலத்திற்கு என்னை ஆசிரியராக பொறுப்பேற்று பல புதிய பதிவர்களை அறிமுகபடுத்த வாய்ப்பு வழங்கியுள்ளார்........./////////////////////////

    ரொம்ப பெருமையான விஷயம் வாழ்த்துக்கள் மென் மேலும் வளர ...........................///

    வாழ்த்துக்கு நன்றி நண்பா :))

    ReplyDelete
  61. // அரசன் said...
    அண்ணே மிகவும் பயனுள்ள பதிவு ,,,///

    வாங்கண்ணே... நன்றி

    ReplyDelete
  62. //
    Chitra said...
    very nice post.

    Keep Rocking!//

    நன்றிங்க மேடம்...

    ReplyDelete
  63. // அரசன் said...
    நிறைய விஷயங்களை அறிந்து கொண்டேன் அண்ணே ...
    தொடரட்டும் உங்களின் அறிவு பணி

    அரசன் said...
    நிறைய விடயங்களை உங்களின் பதிவில் தான் தெரிந்து கொண்டேன் ,..
    அதற்கு ஒரு பெரிய நன்றி அண்ணே

    அரசன் said...
    வைகை said...
    நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி நடக்கிறார்கள்”/////////


    என்னைப்போலவே........அனைவருக்கும் சொன்னதுக்கு நன்றி!
    //

    உண்மைய சொன்னதுக்கு நன்றி அண்ணே

    உங்களின் அன்புகலந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி அண்ணே... :))

    ReplyDelete
  64. // ஜீ... said...
    அருமை! கலக்குங்க பாஸ்! :-)//

    நன்றி நண்பா

    ReplyDelete
  65. // ப்ரியா said...
    உண்மையாங்க அரிஸ்டாட்டில் ஒரு தத்துவ ஞானி அப்படின்னு தெரியும் .. ஆனா அவர பத்தி அதிகமா இப்பதாங்க தெரிஞ்சுகிட்டேன் ...... இன்னமும் நிறைய எழுதுங்க ... எழுத்து பணி இனிதே தொடரட்டும் ..//

    வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க சகோ... :))

    ReplyDelete
  66. //
    சி.பி.செந்தில்குமார் said...
    righttu//

    நன்றி பாஸ் :))

    ReplyDelete
  67. // Philosophy Prabhakaran said...
    நல்லா இருந்துச்சு நண்பா... நிறைய விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டேன்...//

    நன்றி நண்பா :)

    ReplyDelete
  68. // வாகை பிரபு said...
    ரொம்ப நல்ல இருக்கு..
    இந்த வானம் வசப்படும் ப்ரோக்ராம் ஒரு வானொலி நிகழ்ச்சியாக சிங்கப்பூரில் ஒளிபரப்பப்பட்டது அதே வரிகளை எழுத்துக்கள் மூலமாக இன்னும் பல பேரை அறியவைதுள்ளிர்கள் அதற்காக உங்கள்ளுக்கு நன்றி..
    இன்னும் உங்களது சொந்த கருத்துக்களையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து..
    வாழ்த்துக்கள்..//

    தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

    இதுவே ரொம்ப நீளமாக இருப்பதால் வேற எதுவும் சேர்ப்பதில்லை நண்பரே வேறொன்றுமில்லை படிப்பதற்கு சலிப்பாக இருக்க்குமல்லவா? அதனாலதான் தவிர்த்துவிடுகிறேன்...

    சரியான் புரிதலுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  69. // வாகை பிரபு said...
    இதன் மற்றும் இன்னும் பல முக்கிய வரலாற்று மா மனிதர்களின்(வானம் வசப்படும்)ஆடியோ வடிவம் என்னிடம் உள்ளது யாருக்கேனும் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும்..
    இந்த சேவை முற்றிலும் இலவசமானது(Conditions எதுவும் apply இல்லை)...///

    உங்களின் உதவிக்கு ரொம்ப நன்றி நண்பரே தேவைப்பட்டால் கண்டிப்பாக தொடர்புகொள்கிறோம்.. :))

    ReplyDelete
  70. // ஆயிஷா said...
    எழுத்து நடை அருமை.வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்கு நன்றிங்க சகோ...

    ReplyDelete
  71. // சசிகுமார் said...
    அருமை//

    நன்றி நண்பரே :))

    ReplyDelete
  72. // சாதாரணமானவள் said...
    very useful one. Continue your service! :-)//

    நன்றிங்க சகோ.. :)

    ReplyDelete
  73. If you are looking for a solution for your or your children's relaxing time, then Impossible Game will be an option that makes you happy. With hundreds of attractive, interesting, rewarding, and completely free games for you!

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.