இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.
அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.
சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.
1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.
பள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.
1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.
அந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது.
சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.
இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.
அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும்.
1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.
அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.
மொரிட்டாவுக்கு அடுத்து சோனி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் தெரியுமா? மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலமை நிறுவன பொருப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.
தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான்.
உலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன. அந்த தொழில் பிரம்மாவின் கதையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா? Made in japan என்ற அவரது சுயசரிதையை படித்துப்பாருங்கள்.
1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரிட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி. எதையுமே ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் தொலைநோக்குடனும் செய்ததால்தான் அக்யோ மொரிட்டாவுக்கு அந்த வானம் வசப்பட்டது.
மொரிட்டாவைப்போல நாமும் ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி தொலைநோக்கு ஆகியவற்றை காட்டினால் எந்த வானமும் நிச்சயம் நமக்கும் வசப்படும்.
(நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
என்றும் நட்புடன்
(நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
வாழ்க வளமுடன்
உங்கள் மாணவன்
வந்தாச்சு
ReplyDeleteபடிச்சுட்டு வர்ரேன்
தெரியாத தகவல்களைத் தெரிந்து கொள்ள வைத்தீர்கள் - நன்றி!
ReplyDelete//190 ஆயிரம் எண் // - இது 190 ஆயிரம் யென் தானே?
வந்தாச்சு
ReplyDeleteவந்தாச்சு
ReplyDeleteபடிச்சுட்டு வர்ரேன்
தெரியாத தகவல்களைத் தெரிந்து கொள்ள வைத்தீர்கள் - நன்றி!
ReplyDelete//190 ஆயிரம் எண் // - இது 190 ஆயிரம் யென் தானே?
ஒரு சந்தேகம்
ReplyDelete1 Japanese yen = 0.552670994 Indian rupees
1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees
நம் மதிப்பு அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின் தங்கியிள்ளேம் யாரேனும் விளக்கவும்
விக்கி உலகம்??
யாரவது ஜப்பான் தமிழன்???
இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான்./
ReplyDeleteஓ அப்படியா?
ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர்///
ReplyDeleteநல்ல அறுவடையா?
அறிய தகவலின் தொகுப்பு பாராட்டுக்கள்..
ReplyDeleteஇதே பாராட்டை கவிதை வீதிக்கும் சொலுங்க..
ஏன்ன..
சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
இரவில் யார் வீட்டு சுவரவாது ஏறி குதித்ததுண்டா..
ReplyDeleteவிவரம் அறிய கவிதை வீதி வாங்க..
தெரியாத தகவல்களைத் தெரிந்து கொள்ள வைத்தீர்கள் - நன்றி!
ReplyDeleteமாணவனுக்கு கவிதை வீதியின்
ReplyDeleteவாழ்த்துகளும் வாக்குகளும்..
வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.//
ReplyDeleteவல்லரசு விஜயகாந்த் தான?
// வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல//
ReplyDelete1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை///
ReplyDeleteஇளையர்களை அப்டின்னா என்ன?
நிறைய புதிய தகவல்களின் தொகுப்பு.. நன்றி மாணவரே...
ReplyDeleteதலைமை பொருப்பை ஏற்றவர் யார் தெரியுமா?//
ReplyDeleteபொறுப்பு சொல்லு பாப்போம்...
1976 ஆம் ஆண்டு இளையர்களை/// என்றால் இப்போது அவர்கள் சிரிப்பு போலிஸின் வயதை எட்டி இருப்பார்களே
ReplyDeleteநன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ...
ReplyDelete//இளையர்களை///
ReplyDeletemeans..
ரமேஷ் மற்றும் குழுவினர்..
(வாடிப்பட்டி கலைக்குழு)
நல்ல தகவல் மாணவன், சோனி பொருட்களை விரும்பி பயன்படுத்துகிறேன், ஆனால், இதுவரை மொரிட்டோவைப் பற்றித் தெரிந்து கொண்டதில்லை... வெல்டன்!
ReplyDelete///////Speed Master said...
ReplyDeleteஒரு சந்தேகம்
1 Japanese yen = 0.552670994 Indian rupees
1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees
நம் மதிப்பு அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின் தங்கியிள்ளேம் யாரேனும் விளக்கவும்
விக்கி உலகம்??
யாரவது ஜப்பான் தமிழன்???////////
ஜப்பான் யென், ஒரு யென் என்பது நம் ஒரு காசு போல, அதனால்தான் எக்ஸ்சேஞ்ச் ரேட்டில் 100 யென்களை குறீப்பிடுவார்கள். வியட்னாம் பத்தி, நண்பர் விக்கி உலகம் வெங்கட்தான் சொல்லனும்..........
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///////Speed Master said...
ஓ அப்போ 100 யென் என்பது தான் ஜப்பான்காரர்களுக்கு 1 ரூ வா?
//இரவில் யார் வீட்டு சுவரவாது ஏறி குதித்ததுண்டா..//
ReplyDeleteGood Marketing..
எவ்வளவு தகவல்கள்! நன்றி மாணவரே!
ReplyDeleteதகவல் களஞ்சியம்
ReplyDeleteநன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல்..
ReplyDeleteஅறிய பதிவு பாராட்டுக்கள்
ReplyDeleteஒரு சோனி மொபைல்
ReplyDeleteஒரு சோனி ஐ பாட்
ஒரு சோனி லாப் டாப்
எல்லாம் பார்சல் பண்ணு மச்சி
நல்ல பதிவு. நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete// Speed Master said...
ReplyDeleteவந்தாச்சு
படிச்சுட்டு வர்ரேன்//
வாங்க நண்பரே வணக்கம் :)
// middleclassmadhavi said...
ReplyDeleteதெரியாத தகவல்களைத் தெரிந்து கொள்ள வைத்தீர்கள் - நன்றி!
//190 ஆயிரம் எண் // - இது 190 ஆயிரம் யென் தானே?//
வாங்க சகோ, ஆமாம் “யென்தான்” சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றிங்க சகோ :)
//
ReplyDeleteபாரத்... பாரதி... said...
வந்தாச்சு//
வாங்க பாரதி வணக்கம் :)
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவந்தாச்சு
படிச்சுட்டு வர்ரேன்//
:))
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteதெரியாத தகவல்களைத் தெரிந்து கொள்ள வைத்தீர்கள் - நன்றி!
//190 ஆயிரம் எண் // - இது 190 ஆயிரம் யென் தானே?//
ஆமாம் சார் தவறுக்கு மன்னிக்கவும் :)
//
ReplyDeleteSpeed Master said...
ஒரு சந்தேகம்
1 Japanese yen = 0.552670994 Indian rupees
1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees
நம் மதிப்பு அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின் தங்கியிள்ளேம் யாரேனும் விளக்கவும்
விக்கி உலகம்??
யாரவது ஜப்பான் தமிழன்???//
நம்ம நண்பர் விக்கி உலகம் வெங்கட் வியட்நாமில் இருக்கிறார் அவரிடம் கேட்டுப்பார்ப்போம்
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஇரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான்./
ஓ அப்படியா?//
ஆமாம் அப்படித்தான் :))
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர்///
நல்ல அறுவடையா?//
நல்ல அறுவடை செய்த்தால்தான் இன்னைக்கு ஜப்பான் வல்லரசாக இருக்கு :))
ஆமா சிங்கப்பூர் வானொலிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?#சந்தேகம்
ReplyDelete// # கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஅறிய தகவலின் தொகுப்பு பாராட்டுக்கள்..
இதே பாராட்டை கவிதை வீதிக்கும் சொலுங்க..
ஏன்ன..
சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.//
பாராட்டுக்கு நன்றி நண்பரே உங்கள் பக்கம் வருகிறேன் :))
// # கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஇரவில் யார் வீட்டு சுவரவாது ஏறி குதித்ததுண்டா..
விவரம் அறிய கவிதை வீதி வாங்க..//
கண்டிப்பாக வருகிறேன் நண்பரே :)
// போளூர் தயாநிதி said...
ReplyDeleteதெரியாத தகவல்களைத் தெரிந்து கொள்ள வைத்தீர்கள் - நன்றி!//
நன்றி நண்பரே :)
// # கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteமாணவனுக்கு கவிதை வீதியின்
வாழ்த்துகளும் வாக்குகளும்..//
வாக்குகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே :)
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.//
வல்லரசு விஜயகாந்த் தான?//
ஆமாம் அது அவரு நடிச்ச படம் :)
//
ReplyDeleteபாரத்... பாரதி... said...
// வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல////
நன்றிங்க பாரதி :)
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை///
இளையர்களை அப்டின்னா என்ன?//
வெளங்கிரும்....ஹிஹி.. இளையர்கள் அப்டின்னா நீங்கதான் :)
// பாரத்... பாரதி... said...
ReplyDeleteநிறைய புதிய தகவல்களின் தொகுப்பு.. நன்றி மாணவரே...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க பாரதி :)
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteதலைமை பொருப்பை ஏற்றவர் யார் தெரியுமா?//
பொறுப்பு சொல்லு பாப்போம்..//
பொறுப்பு சொல்லியாச்சு போதுமா?? ஹிஹி சுட்டிகாட்டியமைக்கு நன்றி அண்ணே :)
// Speed Master said...
ReplyDelete1976 ஆம் ஆண்டு இளையர்களை/// என்றால் இப்போது அவர்கள் சிரிப்பு போலிஸின் வயதை எட்டி இருப்பார்கள///
ஆமாம்... :)
// வேடந்தாங்கல் - கருன் said...
ReplyDeleteநன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ...//
நன்றிங்க ஆசிரியரே :)
// பாரத்... பாரதி... said...
ReplyDelete//இளையர்களை///
means..
ரமேஷ் மற்றும் குழுவினர்..
(வாடிப்பட்டி கலைக்குழு)//
ஹிஹி... சரியா சொன்னீங்க பாரதி நன்றி :)
நிறைய தகவல்கள். ரெம்பவும் பிடித்துள்ளது.
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநல்ல தகவல் மாணவன், சோனி பொருட்களை விரும்பி பயன்படுத்துகிறேன், ஆனால், இதுவரை மொரிட்டோவைப் பற்றித் தெரிந்து கொண்டதில்லை... வெல்டன்!//
ரொம்ப நன்றி ராம் சார் :)
// எஸ்.கே said...
ReplyDeleteஎவ்வளவு தகவல்கள்! நன்றி மாணவரே!//
நன்றி நண்பரே :)
// சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteதகவல் களஞ்சியம்//
ரொம்ப நன்றி பாஸ் :)
// S Maharajan said...
ReplyDeleteநன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல்..//
நன்றி நண்பரே :)
//
ReplyDeleteRathnavel said...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே :)
// r.v.saravanan said...
ReplyDeleteஅறிய பதிவு பாராட்டுக்கள்//
பாராட்டுக்கு நன்றி நண்பரே :)
// சௌந்தர் said...
ReplyDeleteஒரு சோனி மொபைல்
ஒரு சோனி ஐ பாட்
ஒரு சோனி லாப் டாப்
எல்லாம் பார்சல் பண்ணு மச்சி//
கண்டிப்பா அனுப்பிடுவோம் மச்சி :)
// மைந்தன் சிவா said...
ReplyDeleteஆமா சிங்கப்பூர் வானொலிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?#சந்தேகம்//
:)) நான் இங்க சிங்கையிலதான் பணிபுரிகிறேன் நண்பரே, இந்த தகவல்கள் சிங்கை வானொலியிலிருந்து சேகரித்தது அதான்..
நன்றி நண்பரே
// தமிழ் உதயம் said...
ReplyDeleteநிறைய தகவல்கள். ரெம்பவும் பிடித்துள்ளது.//
நன்றி நண்பரே :)
நன்றி சகோதரா பலர் அறிய வேண்டிய மனிதர் நன்றிகள் நன்றிகள்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)
உண்மையிலேயே படிக்க ரொம்ப சுவாராசியமாக இருந்தது.. யாரோ ஒருவர் கூறியது நினைவிற்கு வருகிறது.. SONY என்ற பெயரிலேயே தரம் தெரிகிறது என்று.
ReplyDeleteஇன்றும் SONY என்றால் அதற்கு இருக்கும் மதிப்பே தனி தான். சமீபமாக இதற்குப்போட்டியாக Samsung வந்து கொண்டு இருக்கிறது ஒரு சில பொருட்களில்.
ஜப்பானுக்கு தனது SONY நிறுவனத்தின் மூலம் ஒரு மதிப்பை கொடுத்தார் என்றால் அது மிகையில்லை.
“சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.
ReplyDeleteஎப்போதும் போல பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி சகோ... உன்னால் தெரியாத விசயங்களை தெரிந்து கொள்கிறோம்.. அதற்க்கு நன்றி நன்றி நன்றி
மேட் இன் ஜப்பான் என்றால் தரம் என்று உலகிற்கு உணர்த்தியவர் ..............
ReplyDeleteநல்ல பதிவு .................
நான் சிறுவனாய் இருந்த பொது வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருவர் அந்தநாளைய புதுமையாக ட்ரான்ஸ் சிஸ்டர் ரேடியோவை கையில் கொண்டுவந்தார். மாலைவேளை. ரேடியோ சிலோனில் பாடல்கள். அந்த ரேடியோவின் பெயர் சோனி. விநோதமாக பார்த்தோம்.அதற்க்கு பிறகு சோனி என்ற பெயர் வாழ்வில் ஒரு அங்கமானது. எனக்கும் சோனியின் தாரிப்புகளே விருப்பம்,
ReplyDeleteநல்ல பகிர்வு. இதுவரையில் அறியப்படாத செய்திகள். Keep going.
can i talk with you? pls send your cell number to my mail id
ReplyDeleteஅறிய அறியா தகவல்கள் அறிந்துகொண்டோம் நன்று....
ReplyDeleteபயனுள்ள கட்டுரை, புதிய தகவல்கள்.. பகிர்ந்தமைக்கு நன்றி, // Never-mind School Records... வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல// அட, நம்மள போல இருக்கு(??)
ReplyDeleteபுதியத் தகவல் எனக்கு ..இவரை பற்றி பெரிதாக் வாசித்ததில்லை ..நன்றி :)
ReplyDeleteநடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்
இவரை பற்றி அதிகம் எனக்குத் தெரியாது. வாசிக்க சுவாரசியமாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதங்கள் மேலாதிக்க சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள்..... நன்றி!
ReplyDeleteஅருமையான பதிவு மாணவா! ஆமா என்னோட கடைப்பக்கம் ஆளையே காணோம்! நேத்திக்கு உங்க படத்த ஓட்டிக்கிட்டு இருந்தேன்! பன்னிக்குட்டி சொல்லலியா? அவருகிட்ட தகவல் சொல்லி அனுப்பினேனே!
ReplyDeleteபுதிய தகவல்கள் ...சோனி பற்றி பரவலாய் இவளவு விவரம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை மாணவன்...நன்றி பகிர்விற்கு...
ReplyDeleteதெரியாத தகவல்களைத் தெரிந்து கொள்ள வைத்தீர்கள் - நன்றி!
ReplyDeleteபுது கடைக்கு வரவேற்கிறேன்
http://gladiatorveeran.blogspot.com/
நல்ல தகவல்கள்
ReplyDelete// ♔ம.தி.சுதா♔ said...
ReplyDeleteநன்றி சகோதரா பலர் அறிய வேண்டிய மனிதர் நன்றிகள் நன்றிகள்...//
நன்றி நண்பரே :)
// கிரி said...
ReplyDeleteஉண்மையிலேயே படிக்க ரொம்ப சுவாராசியமாக இருந்தது.. யாரோ ஒருவர் கூறியது நினைவிற்கு வருகிறது.. SONY என்ற பெயரிலேயே தரம் தெரிகிறது என்று.
இன்றும் SONY என்றால் அதற்கு இருக்கும் மதிப்பே தனி தான். சமீபமாக இதற்குப்போட்டியாக Samsung வந்து கொண்டு இருக்கிறது ஒரு சில பொருட்களில்.
ஜப்பானுக்கு தனது SONY நிறுவனத்தின் மூலம் ஒரு மதிப்பை கொடுத்தார் என்றால் அது மிகையில்லை.///
வாங்கண்ணே, உங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
உங்களது கருத்து முற்றிலும் உண்மைதான் அண்ணே sony என்றால் தரம் என்று பொருள்தான்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்கண்ணே :)
// ரேவா said...
ReplyDelete“சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.
எப்போதும் போல பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி சகோ... உன்னால் தெரியாத விசயங்களை தெரிந்து கொள்கிறோம்.. அதற்க்கு நன்றி நன்றி நன்றி//
நன்றிங்க சகோ :)
// அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteமேட் இன் ஜப்பான் என்றால் தரம் என்று உலகிற்கு உணர்த்தியவர் ..............
நல்ல பதிவு .................//
நன்றி நண்பா :)
// கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteநான் சிறுவனாய் இருந்த பொது வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருவர் அந்தநாளைய புதுமையாக ட்ரான்ஸ் சிஸ்டர் ரேடியோவை கையில் கொண்டுவந்தார். மாலைவேளை. ரேடியோ சிலோனில் பாடல்கள். அந்த ரேடியோவின் பெயர் சோனி. விநோதமாக பார்த்தோம்.அதற்க்கு பிறகு சோனி என்ற பெயர் வாழ்வில் ஒரு அங்கமானது. எனக்கும் சோனியின் தாரிப்புகளே விருப்பம்,
நல்ல பகிர்வு. இதுவரையில் அறியப்படாத செய்திகள். Keep going//
உண்மைதான் சார் நம்மில் பலருக்கும் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கும் அது என்னவோ தெரியவில்லை சோனி பற்றிய தகவலகளை தெரிந்துகொள்ளும் முன்னரே அந்த சோனி என்ற பெயரின் மீதே ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது
மிக அருமை இவ்வளவு தகவலை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு நன்றி நண்பா தொடருங்கள் உங்கள் சேவையை இதே போல் புரட்சியாளன் சேகுவாரா பற்றி தாங்கள் ஏதும் பதிவு எழுதி இருந்தால் அந்த லிங்க் கொடுக்கவும். இதுவரை எழுதவில்லை என்றால் தகவல்கள் திரட்டி எழுதவும்.
ReplyDelete// ஷர்புதீன் said...
ReplyDeletecan i talk with you? pls send your cell number to my mail id//
உங்கள் தளத்தில் எனது அலைபேசி எண் கொடுத்துள்ளேன் நேரம் கிடைக்கும்போது தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி நண்பரே :)
// தினேஷ்குமார் said...
ReplyDeleteஅறிய அறியா தகவல்கள் அறிந்துகொண்டோம் நன்று....//
நன்றி நண்பரே :)
// வசந்தா நடேசன் said...
ReplyDeleteபயனுள்ள கட்டுரை, புதிய தகவல்கள்.. பகிர்ந்தமைக்கு நன்றி, // Never-mind School Records... வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல// அட, நம்மள போல //
வணக்கம் நண்பரே தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
// S.Sudharshan said...
ReplyDeleteபுதியத் தகவல் எனக்கு ..இவரை பற்றி பெரிதாக் வாசித்ததில்லை ..நன்றி :)//
நன்றி நண்பா :)
// Chitra said...
ReplyDeleteஇவரை பற்றி அதிகம் எனக்குத் தெரியாது. வாசிக்க சுவாரசியமாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.///
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க மேடம் :)
// வைகை said...
ReplyDeleteதங்கள் மேலாதிக்க சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள்..... நன்றி!///
கண்டிப்பாக உங்களின் ஆசியோடு இனிதே தொடர்கிறேன் :)
//
ReplyDeleteஓட்ட வட நாராயணன் said...
அருமையான பதிவு மாணவா! ஆமா என்னோட கடைப்பக்கம் ஆளையே காணோம்! நேத்திக்கு உங்க படத்த ஓட்டிக்கிட்டு இருந்தேன்! பன்னிக்குட்டி சொல்லலியா? அவருகிட்ட தகவல் சொல்லி அனுப்பினேனே!//
வாங்க நண்பரே வணக்கம், உங்கள் பக்கம் வந்தேன் தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் தங்களின் அன்பு கலந்த கருத்துக்கு நன்றி நண்பா :)
// ஆனந்தி.. said...
ReplyDeleteபுதிய தகவல்கள் ...சோனி பற்றி பரவலாய் இவளவு விவரம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை மாணவன்...நன்றி பகிர்விற்கு...//
நன்றிங்க சகோ :)
// அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! said...
ReplyDeleteதெரியாத தகவல்களைத் தெரிந்து கொள்ள வைத்தீர்கள் - நன்றி!
புது கடைக்கு வரவேற்கிறேன் //
தங்கள் முதல் வருகைக்கு நன்றி நண்பரே உங்கள் பக்கம் வருகிறேன் :)
//
ReplyDeleteVELU.G said...
நல்ல தகவல்கள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
// சசிகுமார் said...
ReplyDeleteமிக அருமை இவ்வளவு தகவலை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு நன்றி நண்பா தொடருங்கள் உங்கள் சேவையை இதே போல் புரட்சியாளன் சேகுவாரா பற்றி தாங்கள் ஏதும் பதிவு எழுதி இருந்தால் அந்த லிங்க் கொடுக்கவும். இதுவரை எழுதவில்லை என்றால் தகவல்கள் திரட்டி எழுதவும்.//
நன்றி நண்பரே, சேகுவாரா பற்றி இன்னும் எழுதவில்லை விரைவில் தகவல்கள் சேகரித்து எழுதுகிறேன்...
அண்ணே மன்னிக்கவும்
ReplyDeleteஇது போன்ற ஒரு தன்னம்பிக்கை
ReplyDeleteதொடரை படிக்கும்போது மனதுக்குள்
ஒரு வெறி பிறக்கிறது ,...
நல்ல மனிதரின் வாழ்க்கை வரலாறு
ReplyDeleteமிக சிறப்பா இருந்தது ...
நிறுவனத்தின் பெயரே அதன் தரத்தை காட்டுகிறது ,.,,
ReplyDeleteமுயற்சி, கடின உழைப்புக்கு இவர்தான் எடுத்துக்காட்டு
இவரைப்பற்றி இப்போதுதான் அறிகிறேன் ...
ReplyDeleteதகவலுக்கு நன்றி
100 பதிவு எழுத கிடைத்த வாய்ப்புக்கு நன்றி அண்ணே
ReplyDeleteவிரிவான மற்றும் புதுமையான தகவல்கள். கட்டுரையைத் தொகுத்து கூறிய விம் மிக அருமை தல. கலக்குங்க...
ReplyDeleteதெரியாத தகவல்கள், தெரிந்து கொள்ள
ReplyDeleteமுடிந்தது. நன்றி.
very informative post!
ReplyDeleteஅந்த வாக்மேன் எவ்வளவு? சூப்பரா இருக்கு.. வாங்கணும்னு நெனைக்கிறேன்.
சூப்பர் நண்பா.. நன்றிகள்...
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பனி காரணமாக அடிக்கடி வர முடியவில்லை... பொறுத்தருளவும்...
ReplyDeleteஅருமையான கட்டுரை..
ReplyDeleteசிறப்பானதொரு பதிவு மாணவன் அவர்களே,
ReplyDeleteஅருமையான தொடர்
ReplyDeleteஎன்ன இவ்வளவு கமெண்ட்!!! அதிசயமா இருக்கு.. :)
ReplyDelete@ரமேஷ்
க்க்க்ர்ர் தூ