Monday, February 21, 2011

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - வரலாற்று நாயகர் (வானம் வசப்படுமே)

வணக்கம் நண்பர்களே, இன்று நாம் தெரிந்து கொள்ளவிருக்கும் வரலாற்று நாயகர் 20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் உலகின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னாமானது ஹிரோஸிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியான அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்து சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது.
அறிவியல் கண்டுபிடிப்புகள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என நம்பிய அவர்தான் 20 ஆம் நூற்றாண்டின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ந்தேதி ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்ததில் பிறந்தார் ஐன்ஸ்டீன் அவர் பிறப்பிலேயே ஓர் மேதை இல்லை உண்மையில் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் அவருக்கு கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் சராசரி மாணவராகத்தான் இருந்தார். ஐன்ஸ்டீனுக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்தபோது வயது 4 ஒருமுறை அவருக்கு காம்பஸ் எனப்படும் திசைகாட்டி கருவியை பரிசாக தந்தார் அவரது தந்தை. அதனுள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகை நோக்கி ஈர்த்தது.

பள்ளியில் சொந்தமாகவே கால்க்ளஸ் என்ற கணித கூறை கற்றுகொண்டார் ஐன்ஸ்டீன். பின்னர் சந்தேகங்களை கேட்க தொடங்கினார். அவரது கேள்விகளுக்கு பதில் தர முடியாம ஆசிரியர் திகைத்ததாகவும் அடுத்து என்ன கேட்கப்போகிறார் என அஞ்சியதாகவும் ஒரு வரலாற்றுகுறிப்பு கூறுகிறது. சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப்பதைக்காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசைமேதை மோசார்ட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.

ஐன்ஸ்டீனுக்கு 15 வயதானபோது இத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துபோனதும் சுவிட்சர்லாந்துக்கு சென்றார் ஐன்ஸ்டீன். புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில் அவர் தோலிவி அடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஐன்ஸ்டீனை சேர்த்துகொண்டது அந்த பலதுறை தொழிற்கல்லூரி. அதிலிருந்து தேர்ச்சிபெற்றதும் சுவிஸ் குடியுரிமை பெற்றார் ஐன்ஸ்டீன். அவருக்கு கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பதிவு செய்து ஆராய்வது. அந்த வேலையில் அதிக ஓய்வு நேரம் இருந்ததால் அவர் சொந்தமாக பல ஆராய்ட்சிகளை செய்ய உதவியாக இருந்தது. ஆய்வுக்கட்டுரைகளையும் அவர் எழுத தொடங்கினார்.

1905 ஆம் ஆண்டு ஸூரிக் பல்கலைகழகத்தில் ஐன்ஸ்டீனுக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. கண்ணுக்கு புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப்பர்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு அந்த கோட்பாடு மூலம் அவர் உலகுக்கு தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான்:
விஞ்ஞான உலகத்திற்கே இந்த வாய்ப்பாடுதான் அடிப்படை மந்திரமாக கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பை செய்தபோது ஐன்ஸ்டீனுக்கு வயது 26 தான்.

1921 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் ஃபோட்டோ எலெக்டிரிக் எபெக்ட் என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கபட்டது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி கலந்துகொண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டீன். பின்னர் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் என்று உணர்ந்த அவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.

1939 ஆம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் சேர்ந்து அமெரிக்கா அதிபர் ரூஸ்வெல்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்ஸ்டீன். அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டை தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகு விரைவில் அணுகுண்டு தயாரிக்ககூடும் என்றும் கடிதத்தில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டீன். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டீன். ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டீனுக்கு தெரியாமலே சொந்தமாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.

அதன்விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உலக வரலாற்றை ஒருகனம் இருட்டடிப்பு செய்த நாகசாகி ஹிரோஸிமா சம்பவம். E=Mc2 என்ற மந்திரம்தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தது. அந்த தவிப்பு இறப்பு வரை ஐன்ஸ்டீனை உறுத்தியிருக்கும். ஆனால் அந்த ஒரு கருப்பு புள்ளியைத் தவிர்த்து ஐன்ஸ்டீனின் கோட்பாட்டால் பல நன்மைகளை பெற்றிருக்கிறது உலகம். உண்மையில் சர் ஐசக் நீயூட்டனின் கண்டுபிடிப்புகள் பைபிலில் பழை ஏற்பாடு என்றால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகள் பைபிலின் புதிய ஏற்பாடு என ஒரு ஒப்பீடு கூறுகிறது.

தங்கள் இனத்தவர் என்ற பெருமைப்பட்ட இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கே அதிபராகும்படி ஐன்ஸ்டீனுக்கு அழைப்பு விடுத்தது. நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி அந்த பதிவியை ஏற்க மறுத்துவிட்டார் ஐன்ஸ்டீன். சுவிட்சர்லாந்தில் படிக்கும்போது மிலவா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். இரு குழந்தைகளுக்கு தந்தையானார். பின்னர் மணமுறிவு ஏற்படவே எல்ஸா என்ற உறவு பெண்ணை மணந்து கொண்டார். எல்ஸா சிறிது காலத்திலேயே இறந்துவிட சுமார் 20 ஆண்டுகள் தனித்தே வாழ்ந்தார் ஐன்ஸ்டீன்.  

அணுகுண்டு தயாரிப்பதற்கு ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுதான் என்றாலும் யுத்தங்களை அறவே வெறுத்தவர் ஐன்ஸ்டீன். உலக அமைதிக்காக குரல் கொடுத்த அவர் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். நவீன அறிவியல் ஐன்ஸ்டீனுக்கு மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எதையுமே ஆழமாக சிந்திக்ககூடியவர் அவர். ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதை கண்டுபிடிப்பதில் ஆர்வம் என நண்பர் ஒருவர் கேட்க கடவுள் இந்த உலகை எப்படி படைத்தான் என்று ஒருநாள் நான் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று கூறினாராம் ஐன்ஸ்டீன்.  
ஐன்ஸ்டீனுக்கு வானம் வசப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று ஆழமான சிந்தனை, மற்றொன்று அறியப்படாதவற்றை பற்றிய அளவிட முடியாத தாகம்.  அந்த ஆழமான சிந்தனையும் இயற்கையைப் பற்றிய தாகமும் நமக்கு இருந்தால் நமக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.

(நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

68 comments:

  1. அறிவியல் பதிவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. மிக அதிகமான தகவல்கள் ஐன்ஸ்டீனை பற்றி! மிக அருமை!

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல் ..என்னுடைய மாணவர்களிடம் இதை படிக்க சொல்லியிருக்கிறேன்...

    நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாயிடுச்சே ஏன்?

    ReplyDelete
  4. நல்ல அருமையான பதிவு..
    அனைவரும் படித்து அறியகூடிய விஷயம்..
    மாணவன் ஆசிரியர் பணி செய்கிறார்..

    வாழ்த்து மற்றும் வாக்கு..

    ReplyDelete
  5. மிகவும் சுவாரசியமான பதிவு மாணவன்... நன்றிகள்.. இந்த E=mc2 வைத்தத் தானே எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறாங்கள்... சின்னச் சின்ன விசயத்திலெல்லாம் இது நுழைந்திருப்பது பெரும் அச்சர்யம்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு மாணவன் ,உண்மைலே பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete
  7. அற்புதமான மனிதரைப்பற்றின அருமையான பதிவு.. என்னுடைய சிறு வேண்டுகோள். அவரது பொன்மொழிகள் சிலவற்றை பதிவில் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..

    ReplyDelete
  8. .தகவல்கள் தொடர்ந்து படிக்கிறேன் .. தொடர்ந்து எழுதுங்கள் .

    தமிழால் வளர்ந்தேன் - உலக தாய்மொழி தினம்

    ReplyDelete
  9. சுவைபட விளக்கி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  10. வானொலி கேக்க எல்லாம் டைம் இருக்கா?

    ReplyDelete
  11. நல்ல தகவல்கள். ஐன்ஸ்டைனுடைய மூளை ஆராய்ச்சிக்காக இன்னும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மனிதகுலம் கண்ட மாபெரும் ஜீனியஸ்களில் இவரும் ஒருவர். மற்றொருவர் நியூட்டன்!

    ReplyDelete
  12. அதிகமான தகவல்கள்
    நல்ல பகிர்வு மாணவன்
    மிக அருமை!

    ReplyDelete
  13. அருமையான பதிவு மாணவன்! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. பகிர்வுக்கு நன்றிபா

    ReplyDelete
  15. என்னைப்போல ஒரு அறிவாளி இருந்தார் என்று தெரியும்போது பெருமையாக இருக்கிறது...
    -
    -
    -
    -
    என்று சொல்லத்தான் ஆசை..... ஆனால் என் அறிவ பத்திதான் எனக்கு தெரியுமே?

    ReplyDelete
  16. உலகைப் புரட்டிப் போட்ட ஞானி பற்றிய பதிவு அருமை.

    ReplyDelete
  17. தகவல்கள் தொடர்ந்து படிக்கிறேன் .. தொடர்ந்து எழுதுங்கள் .

    ReplyDelete
  18. தகவல்கள் தொடர்ந்து படிக்கிறேன் .. தொடர்ந்து எழுதுங்கள் .

    நானும் படிக்கிறேன்

    வானம் நமக்கு வசப்படட்டும்

    ReplyDelete
  19. //// அவரது கேள்விகளுக்கு பதில் தர முடியாம ஆசிரியர் திகைத்ததாகவும் அடுத்து என்ன கேட்கப்போகிறார் என அஞ்சியதாகவும் ஒரு வரலாற்றுகுறிப்பு கூறுகிறது///

    நானும் கேள்விப்பட்டிருக்கேன். இதற்காக அவரை வுகுப்பை விட்டு வெளியேறும்படி சொன்னதாகவும் செவி வழித்தகவல் ..

    ReplyDelete
  20. அண்ணா ரொம்ப அருமையான பதிவு அண்ணா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஐன்ஸ்டீன் பத்தி நானும் சில விசயங்கள் கேள்விப்பட்டிருக்கேன். நன்றி அண்ணா .

    ReplyDelete
  21. நல்ல அறிவியல் கருத்துகள் தம் இருந்தாலும் அறிவியலின் சிற்பிகளான நம் வானவில்,அறிவியல் ,கணிதம் ,இசை, போன்ற எல்லா வற்றையும் இந்த உலகினுக்கே கொடையாக வழங்கிய நம் முன்னோர்களையும் இந்த உலகிற்கு நம் அறிமுகம் செய்ய வேண்டி யுள்ளது நம் மொழியும் பண்பாடும், கலைகளும் உலகினுக்கே கொடையாக விளங்கியவை இதை இந்த உலகின் பார்வைக்கு சொன்னால் தானே நம் புழ் உலகெலாம் செல்லும் எல்லா கலைகளுக்கும் நாங்கள் முன்னோடிகள் என்ற உண்மையைத்தான் சொல்ல கூறுகிறேன்

    ReplyDelete
  22. அருமை! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. பயனுள்ள பதிவு.....

    ReplyDelete
  24. ஆழமான சிந்தனை, மற்றொன்று அறியப்படாதவற்றை பற்றிய அளவிட முடியாத தாகம். அந்த ஆழமான சிந்தனையும் இயற்கையைப் பற்றிய தாகமும் நமக்கு இருந்தால் நமக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.


    நிச்சயம்...ஐன்ஸ்டீன் பற்றிய பகிர்வுக்கு நன்றி சகோ... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. அருமையான பகிர்வுக்கு நன்றி மாணவன்!

    ReplyDelete
  26. மிக சிறந்த ஒரு பதிவினைதந்த உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  27. சிறந்த பதிவு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  28. வந்துட்டேன்

    ReplyDelete
  29. அறிவியல் மாமேதை பற்றி அற்புதமாய்
    செய்திகளை தொகுத்து வழங்கிய மாணவருக்கு
    நெஞ்சம் நிறைந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. நிச்சயமா அண்ணே இபோதுதான் சில விசயங்களை அறிந்துகொள்கிறேன் ...
    நன்றிங்க அண்ணே

    ReplyDelete
  31. மாணவன் பதிவு அருமையான பதிவு.

    ஐன்ஸ்டீன் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

    நன்றி மாணவன்.

    ReplyDelete
  32. // சங்கவி said...
    Very useful Article...//

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  33. // தமிழ் உதயம் said...
    அறிவியல் பதிவுக்கு மிக்க நன்றி.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  34. // எஸ்.கே said...
    மிக அதிகமான தகவல்கள் ஐன்ஸ்டீனை பற்றி! மிக அருமை!//

    நன்றி நண்பரே :))

    ReplyDelete
  35. //
    வேடந்தாங்கல் - கருன் said...
    பயனுள்ள தகவல் ..என்னுடைய மாணவர்களிடம் இதை படிக்க சொல்லியிருக்கிறேன்...

    நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாயிடுச்சே ஏன்?//

    ரொம்ப நன்றிங்க ஆசிரியரே... உங்கள் பக்கம் வருகிறேன் :)

    ReplyDelete
  36. // # கவிதை வீதி # சௌந்தர் said...
    நல்ல அருமையான பதிவு..
    அனைவரும் படித்து அறியகூடிய விஷயம்..
    மாணவன் ஆசிரியர் பணி செய்கிறார்..

    வாழ்த்து மற்றும் வாக்கு///

    வருகைதந்து வாக்களித்து வாய்த்தியமைக்கு நன்றி நண்பரே :)

    ReplyDelete
  37. // ம.தி.சுதா said...
    மிகவும் சுவாரசியமான பதிவு மாணவன்... நன்றிகள்.. இந்த E=mc2 வைத்தத் தானே எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறாங்கள்... சின்னச் சின்ன விசயத்திலெல்லாம் இது நுழைந்திருப்பது பெரும் அச்சர்யம்...//

    உண்மைதான் நண்பா

    ReplyDelete
  38. // நா.மணிவண்ணன் said...
    நல்ல பகிர்வு மாணவன் ,உண்மைலே பயனுள்ள தகவல்கள்///

    நன்றி நண்பரே

    ReplyDelete
  39. // கவிதை காதலன் said...
    அற்புதமான மனிதரைப்பற்றின அருமையான பதிவு.. என்னுடைய சிறு வேண்டுகோள். அவரது பொன்மொழிகள் சிலவற்றை பதிவில் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..//

    பதிவின் நீளம் கருதி குறைத்துகொண்டேன் நண்பரே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

    ReplyDelete
  40. // S.Sudharshan said...
    .தகவல்கள் தொடர்ந்து படிக்கிறேன் .. தொடர்ந்து எழுதுங்கள் .//

    நன்றி நண்பா கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன் :)

    ReplyDelete
  41. // சி.பி.செந்தில்குமார் said...
    வானொலி கேக்க எல்லாம் டைம் இருக்கா?//

    இது வானொலியில் இருந்து முன்னமே சேகரித்த தகவல்கள் பாஸ்.. :)

    ReplyDelete
  42. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    நல்ல தகவல்கள். ஐன்ஸ்டைனுடைய மூளை ஆராய்ச்சிக்காக இன்னும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மனிதகுலம் கண்ட மாபெரும் ஜீனியஸ்களில் இவரும் ஒருவர். மற்றொருவர் நியூட்டன்!///

    வருகைக்கும் தங்கள் தகவலுக்கும் மிக்க நன்றி ராம் சார் :)

    ReplyDelete
  43. // S Maharajan said...
    அதிகமான தகவல்கள்
    நல்ல பகிர்வு மாணவன்
    மிக அருமை!//


    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  44. //
    சே.குமார் said...
    பயனுள்ள தகவல்.///

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  45. // ஜீ... said...
    அருமையான பதிவு மாணவன்! வாழ்த்துக்கள்!!//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜீ

    ReplyDelete
  46. // ஆ.ஞானசேகரன் said...
    பகிர்வுக்கு நன்றிபா//

    வாங்க நண்பரே கருத்துக்கு நன்றி :)

    ReplyDelete
  47. மிகவும் சுவாரஸ்யமான தகவல் தொகுப்பு நண்பரே..!! தொடரட்டும் தங்கள் சேவை.

    ReplyDelete
  48. நண்பரே, தங்களது இடுக்கையில் ஒரு இயற்பியல் மனிதரைப் பற்றி எழுதியிருப்பது குறித்து மகிழ்ச்சி. இந்த பதிவை படித்த பின்னர் அதிலுள்ள சில தேவையான திருத்தங்களை சுட்டிக் காட்டுவது எனது கடமை என நினைக்கிறேன். முதலில் E=mc^2 என்ற சமன்பட்டினைப் பற்றி போலியான முக்கியத்துவம் எல்லோர் மனதிலும் எப்படியோ நுழைந்து விட்டது. இதில் வியப்பு என்னவென்றால் இயற்பியலை மெத்தப் படித்தவர்களும் அதே தவறைச் செய்கிறார்கள் என்பதுதான். அணுகுண்டு இந்த சமன்பாட்டின் அடிப்படையில் இயங்குவதாகவும், சூரியனில் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப் பட்டு ஆற்றல் வெளியாவதற்கும், மற்ற எல்லா நட்சத்திரங்களும் அங்ஙனமே ஆற்றலை வெளியிடுவதற்கும் இதே சமன் பாடுதான் அடிப்படை என்றும் இந்தச் சமன்பாடு இல்லையென்றால் உலகில் ஒன்றுமே இல்லைஎன்றும் ஆளாளுக்கு இஷ்டத்துக்கும் கதை கட்டி விட்டார்கள். இந்தப் புரளிக்கு ஆதாரம் என்ன எங்கே எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. நானும் இதை உண்மை என்று வெகு காலம் நம்பியிருந்தேன், ஒரு நாள் உண்மை தெரிய வந்தபோது எனக்கு அதிர்ச்சி, ஆச்சரியம், வியப்பு [அதே சமயம் இத்தனை நாள் கூமுட்டையாய் இருந்து விட்டோமே என்ற வெட்கம்] எல்லாம் ஒரு சேர வந்தது. இது குறித்து நீங்கள் அறிந்து கொள்ள கீழ்க் காணும் தளத்தைப் பார்க்கவும். இதை புரிந்து கொண்டு நீங்கள் ஒரு பதிவு போட்டால் நான் மிகவும் மகிழ்வேன்.

    ReplyDelete
  49. http://www.einstein-online.info/spotlights/atombombe

    ReplyDelete
  50. //ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டீன்.//ஐன்ஸ்டீன் ரூஸ்வெல்டுக்கு கடிதம் மூலம் சொன்னது, "ஐயா, ஜெர்மனிக்கு அணுகுண்டு தயாரிக்கும் வல்லமை இருக்கிறது, அதை அவங்க முதலில் தயாரித்துவிட்டால் அப்புறம் நாம் ஒண்ணுமே செய்ய முடியாது, எதாச்சும் பண்ணுங்க". இதன் அர்த்தம், அவங்களுக்கு முன்னாடி நாம் செய்து விடவேண்டும் என்பதே. ஏனெனில் தடுத்து நிறுத்துவது என்பது அப்போது நடக்காத கதை. இப்போது ஈராக்கில் நுழைந்த மாதிரி அதிரடியாகவோ, அல்லது பொருளாதாரத் தடை மூலமாகவோ ஜெர்மனியை அப்போது கட்டுப் படுத்த முடியாது. கட்டுப் படுத்த வேண்டுமென்றால் அவர்களை போரில் வென்றால் மட்டுமே சாத்தியம், அப்படி வென்றுவிட்டால் அந்த நாடே அமேரிக்கா வசம் வந்துவிடும், அதற்க்கப்புறம் அணுகுண்டு எப்படி செய்வார்கள்?

    ReplyDelete
  51. //விஞ்ஞான உலகத்திற்கே இந்த வாய்ப்பாடுதான் அடிப்படை மந்திரமாக கருதப்படுகிறது. //
    இது மிகைப் படுத்தப் பட்டது. உண்மையில்லை. முக்கிய சமன்பாடுகளில் இதுவும் ஒன்று அவ்வளவுதான்.

    //E=Mc2 என்ற மந்திரம்தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தது.// அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அணுகுண்டு செய்ய இந்த சமன்பாடு பக்க வாத்தியம் வாசித்திருக்கிறது, அவ்வளவுதான்.

    ReplyDelete
  52. //ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதை கண்டுபிடிப்பதில் ஆர்வம் என நண்பர் ஒருவர் கேட்க கடவுள் இந்த உலகை எப்படி படைத்தான் என்று ஒருநாள் நான் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று கூறினாராம் ஐன்ஸ்டீன். // இயற்கையின் நான்கு விசைகளையும் ஒரே விசையின் நான்கு வெவ்வேறு வெளிப்பாடாக அறியும் கோட்பாட்டை உருவாக்குவது தான் அவரின் இறுதி லட்சியம். இந்தப் படைப்பின் ரகசியத்தை அறிவியலால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது என்பதே அவரது இறுதித் தீர்ப்பு என்று கேள்விப் பட்டேன். [உறுதி செய்ய வலைத் தளங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்!]

    ReplyDelete
  53. வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

    http://blogintamil.blogspot.com/2011/02/50.html

    ReplyDelete
  54. //இசைமேதை மோசார்ட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.//

    இது எனக்கு புது தகவல் சிம்பு...

    ReplyDelete
  55. மிக அருமையான உபயோகமுள்ள பதிவு வாழ்த்துக்கள் மாணவன்.

    ReplyDelete
  56. தரமான தகவல்... நிறைய புதிய தகவல்களை தெரிய படுத்தியமைக்கு நன்றிங்க மாணவன்.

    ReplyDelete
  57. மாணவனின் தளத்தை இந்த ஆசிரியரால் இப்போது தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது .
    அழகான , அறிவார்ந்த பதிவு!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  58. மிகவும் பயனுள்ள பதிவு ஒன்று... நன்றிகள்..

    சித்தாரா
    முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்

    ReplyDelete
  59. boss super matter

    very gud

    http://karurkirukkan.blogspot.com/2011/02/blog-post_6961.html

    ReplyDelete
  60. Very nice article.. அவருடைய சார்பியல் கோட்பாடுகளையும், ஐன்ஸ்டீன் இறப்ப்புக்கு பின்னால் மூளையை வெட்டி திரவ நைட்ரஜனில் வைத்து ஆராய்வதையும், சொல்லியிருக்கலாம்..

    ஒரு மாணவன் ஆசிரியராகும் அதிசயம் காண்கிறேன்....

    ReplyDelete
  61. மிக அருமையான உபயோகமுள்ள பதிவு ... நன்றி !!!

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.