Thursday, February 17, 2011

ஆபிரகாம் லிங்கன் - வரலாற்று நாயகர்!

கடந்த இரு நூற்றாண்டுகளில் உலகிலேயே அதிகம் பலம் வாய்ந்த நபர் யாரென்று கேட்டால் பெரும்பாலோனோர் அந்தந்த காலகட்டத்தின் அமெரிக்க அதிபர்களை குறிப்பிடுவர். ராணுவ பலமும், பொருளியல் வளமும் அமெரிக்க அதிபர்களுக்கு அப்படி ஓர் தகுதியை பெற்றுத் தந்திருக்கின்றன. உலகம் இதுவரை கண்டிருக்கும் 43 அமெரிக்க அதிபர்களும் வெவ்வேறு விதங்களில் தங்கள் முத்திரையை பதித்திருந்தாலும் அவர்களுள் ஒரு சிலர்தான் உலகுக்கு தேவைப்பட்ட முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தனர். மனுகுலத்துக்கு மகிமையைத் தேடிதந்தனர் அவர்களுள் தலையாயவர் ஆபிரகாம் லிங்கன்.

1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் லிங்கன். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். தாயார் நேன்ஸி ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது காலமானார், குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. அவர் நீல் ஆல்ன்ஸில் வசித்தபோது அடிமைகள் என்ற பெயரில் கருப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும், இரும்புகம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாக கொடுமை படுத்தப்படுவதையும் கண்டார். அப்போது அவருக்கு வயது 15 தான். அந்தக்கனமே அடிமைத்தனத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். 

தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்து பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார், அடுத்து தபால்காரார் ஆனார் அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்கறிஞர் ஆனார். 1834 ஆம் ஆண்டு தமது 25-ஆவது வயதில் (Illinois) இலினோய் மாநில சட்டமன்ற பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். 1833 ல் ஆண்ட் ரூட்லெஸ் என்ற பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஆண்ட் நோய்வாய்பட்டு இறந்தார். 

7 ஆண்டுகள் கழித்து லிங்கன் மறுமணம் செய்துகொண்டார். 1834 ஆம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகள் இலினோய் சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார் லிங்கன். அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் அவர் தனியார் துறையில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1854-ஆம் ஆண்டு லிங்கனை அரசியல் மீண்டும் அழைத்தது. குடிப்பழக்கம் புகைப்பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 

1859 ஆம் ஆண்டு நீங்கள் ஏன் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடக்கூடாது? என நண்பர் ஒருவரு கேட்டபோது, அந்த தகுதி எனக்கு கிடையாது என்று பணிவாக பதில் கூறினாராம் லிங்கன். ஆனால் அப்படி கூறியவர் அதற்கு அடுத்த ஆண்டே அமெரிக்காவின் 16-ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 15 வயதில் தாம் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டதாக அப்போது அவர் எண்ணியிருக்ககூடும். ஏனெனில் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862-ஆம் ஆண்டு அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர் அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார்.

அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று அடம்பிடித்தன. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததனால் தங்களுக்கு அடிமைகள் தேவை இல்லை என்று கருதினர். இவை இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டு கலகமாக வெடித்தன. அடிமைத்தலையை அறுத்தெரியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார்.

நான்கு ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது. ஜனவரி 1865 ல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபதிராக தேர்வுபெற்றார் லிங்கன். இரண்டாவது முறையும் முழுமையாக லிங்கன் அதிபராக இருந்திருந்தால் அமெரிக்கா மேலும் அமைதிபெற்றிருக்கும் உலகம் மேலும் உய்வு கண்டிருக்கும்.

ஆனால் வரலாற்றின் நோக்கம் வேறாக இருந்தது. இரண்டாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதே ஆண்டு அதாவது 1865-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் நாள் பெரிய வெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் அவர் 'அமெரிக்கன் கஸன்' என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட்டான். மறுநாள் காலை லிங்கனின் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 56 தான். 

மனுகுல நாகரிகத்திற்கு முரன்பாடான அடிமைத்தலையை அகற்றுவதில் ஆபிரகாம் லிங்கன் என்ற தனி ஒரு மனிதனின் பங்கு அளவிட முடியாதது. எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்துவிட்டு போவோம் அல்லது கண்டுகொள்ளாமல் இருப்போம் என்று லிங்கன் நினைத்திருந்தால் அவர் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்க முடியாது. கருப்பினத்தவருக்கு சுதந்திரத்தையும் சுய மரியாதையும் பெற்று தந்திருக்க முடியாது. இன்று அமெரிக்கா ஒரு சுதந்திர தேசம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் ஆபிரகாம் லிங்கன்.

நாம் வாழும் உலகில் நம்மாளும் மாற்றங்களை கொண்டு வர முடியும் அதற்கு தேவைப்படுவதெல்லாம் சிந்தனையில் தெளிவும் செயலில் துணிவும்தான். இவை இரண்டும் இருந்தால் ஆபிரகாம் லிங்கனைப்போலவே நமக்கும் அந்த வானம் வசப்படும்.

"ஆபிரகாம் லிங்கனின்" ஒரு வாரம்

ஆபிரகாம் லிங்கன் பிறந்தது - ஞாயிறு

முதல் முறையாக அமெரிக்க ஜெனாதிபதி ஆனது - திங்கள்

இரண்டாவது முறையாக ஜெனாதிபதி ஆனது - செவ்வாய்

வழக்கறிஞராக தம்மை பதிவு செய்து கொண்டது - புதன்

பிரசித்தி பெற்ற கெட்டிஸ்பர்க்கில் உரையாற்றியது - வியாழன்

லிங்கன் சுடப்பட்டது - வெள்ளி 

லிங்கன் உயிர் நீத்தது - சனி

(தகவலில் உதவி - நன்றி திரு. அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள்.மாணவன்

98 comments:

  1. அடடா வடை போச்சே

    ReplyDelete
  2. தெரியாத விசெயம் நெறைய இருக்கு... நன்றி மாணவன்.. ஒரு வாரம் மேட்டர் சூப்பர்

    ReplyDelete
  3. போர்களை விரும்பும் அதிபர்களிடமிருந்து வித்தியசமாக பூக்களை விதைத்தவர்

    ReplyDelete
  4. //மனுகுல நாகரிகத்திற்கு முரன்பாடான அடிமைத்தலையை அகற்றுவதில் ஆபிரகாம் லிங்கன் என்ற தனி ஒரு மனிதனின் பங்கு அளவிட முடியாதது//

    நல்ல கட்டுரை...

    ReplyDelete
  5. லிங்கன் பத்தி சொல்லிட்டீங்க .. நானும் தெரிஞ்சிகிட்டேன் .. சரி நான் போய் சாப்பிட்டு வரேன் ..

    ReplyDelete
  6. நீங்க வரலாற்றில் பி ஹெச் டி பண்ணப்போறீங்கன்னு நினைக்கறேன்.. நல்லாருக்கு

    ReplyDelete
  7. நானே இவரைப்பற்றி உங்களிடம் பதிவு போட சொல்லலாம் என நினைத்தேன் சிம்பு நன்றி தெளிவான தகவல்கள்.

    ReplyDelete
  8. லிங்கனின் ஒரு வாரம் அறியப்படாத தகவல்.

    ReplyDelete
  9. சூப்பரா சொல்லி இருக்கீங்க ஆசிரியரே சாரிப்பா மாணவரே!

    ReplyDelete
  10. லிங்கனைப் பற்றி விரிவான தகவல் .. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. வரலாற்று நாயகன் வரிசையில் இவருக்கு என்றும் இடமுண்டு...

    ReplyDelete
  12. வரலாற்று நாயகன் வரிசையில் இவருக்கு என்றும் இடமுண்டு...

    ReplyDelete
  13. அாணவனுக்கு ஆசிரியரின் பாராட்டுகள்... வரலாறு பாடம் சூப்பர்..

    ReplyDelete
  14. அாணவனுக்கு --- மாணவனுக்கு -- ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சு...

    ReplyDelete
  15. மிக உயர்ந்த பதிவு உங்களுடையது. இது போன்ற பதிவுகள் இங்கு மிகவும் குறைவு.
    நீங்களாவது எழுதுவது ஒரு ஆறுதல்.
    வாழ்த்துக்கள். தொடரவும்.

    ReplyDelete
  16. எனக்கு மிகவும் பிடித்த சாதனையாளர்களில் லிங்கனும் ஒருவர்! அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே! நன்றி!

    ReplyDelete
  17. தடைகளைத் தாண்டி முன்னேறத்துடிப்பவர்களுக்கு அபிரகாம் லிங்கன் ஒரு மிக சரியான உதாரணம். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  18. அருமையான பதிவு பாஸ்..
    அடிமைகளை விடுவித்தார்....அங்க நின்றார் லிங்கன்!!

    ReplyDelete
  19. // கோமாளி செல்வா said...
    vadai!!//

    ஆமாம் உங்களுக்கேதான் வடை :)

    ReplyDelete
  20. // arun said...
    அடடா வடை போச்சே///

    பரவாயில்ல மச்சி அதான் 2 ஆவது வடை இருக்கே :)

    ReplyDelete
  21. // arun said...
    தெரியாத விசெயம் நெறைய இருக்கு... நன்றி மாணவன்.. ஒரு வாரம் மேட்டர் சூப்பர்//

    நன்றி மச்சி :)

    ReplyDelete
  22. //
    Robin said...
    Good Post!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  23. //
    Speed Master said...
    போர்களை விரும்பும் அதிபர்களிடமிருந்து வித்தியசமாக பூக்களை விதைத்தவர்//

    உண்மைதான் நண்பரே :)

    ReplyDelete
  24. // Speed Master said...
    3 ஓட்டூ

    ஜீட்டூ//

    நன்றி :)

    ReplyDelete
  25. // யோவ் said...
    //மனுகுல நாகரிகத்திற்கு முரன்பாடான அடிமைத்தலையை அகற்றுவதில் ஆபிரகாம் லிங்கன் என்ற தனி ஒரு மனிதனின் பங்கு அளவிட முடியாதது//

    நல்ல கட்டுரை...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  26. //
    கோமாளி செல்வா said...
    லிங்கன் பத்தி சொல்லிட்டீங்க .. நானும் தெரிஞ்சிகிட்டேன் .. சரி நான் போய் சாப்பிட்டு வரேன் ..///

    :)) நன்றி செல்வா

    ReplyDelete
  27. //
    சி.பி.செந்தில்குமார் said...
    நீங்க வரலாற்றில் பி ஹெச் டி பண்ணப்போறீங்கன்னு நினைக்கறேன்.. நல்லாருக்கு//

    வாங்கண்ணே, ரொம்ப நன்றி தங்களின் கருத்துக்கு :))

    ReplyDelete
  28. //
    சசிகுமார் said...
    நானே இவரைப்பற்றி உங்களிடம் பதிவு போட சொல்லலாம் என நினைத்தேன் சிம்பு நன்றி தெளிவான தகவல்கள்.//

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  29. //
    தமிழ் உதயம் said...
    லிங்கனின் ஒரு வாரம் அறியப்படாத தகவல்.///

    நன்றி நண்பரே

    ReplyDelete
  30. // விக்கி உலகம் said...
    சூப்பரா சொல்லி இருக்கீங்க ஆசிரியரே சாரிப்பா மாணவரே!//

    :)) நன்றி நண்பரே

    ReplyDelete
  31. // # கவிதை வீதி # சௌந்தர் said...
    லிங்கனைப் பற்றி விரிவான தகவல் .. வாழ்த்துக்கள்..//

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே :)

    ReplyDelete
  32. //
    MANO நாஞ்சில் மனோ said...
    வரலாற்று நாயகன் வரிசையில் இவருக்கு என்றும் இடமுண்டு...//

    கண்டிப்பாக வரலாறு எப்போதும் லிங்கனை நினைவில் வைத்து போற்றும்

    ReplyDelete
  33. //
    sakthistudycentre-கருன் said...
    அாணவனுக்கு ஆசிரியரின் பாராட்டுகள்... வரலாறு பாடம் சூப்பர்..///

    நன்றிங்க ஆசிரியரே :)

    ReplyDelete
  34. //
    கக்கு - மாணிக்கம் said...
    மிக உயர்ந்த பதிவு உங்களுடையது. இது போன்ற பதிவுகள் இங்கு மிகவும் குறைவு.
    நீங்களாவது எழுதுவது ஒரு ஆறுதல்.
    வாழ்த்துக்கள். தொடரவும்.//

    வாழ்த்துக்கு ரொம்ப நன்றி சார்,

    கண்டிப்பாக உங்களைப்போன்றவர்களின் ஆதரவோடு தொடர்ந்து எழுதுகிறேன்

    ReplyDelete
  35. //
    எஸ்.கே said...
    எனக்கு மிகவும் பிடித்த சாதனையாளர்களில் லிங்கனும் ஒருவர்! அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே! நன்றி!//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  36. //
    பாரத்... பாரதி... said...
    தடைகளைத் தாண்டி முன்னேறத்துடிப்பவர்களுக்கு அபிரகாம் லிங்கன் ஒரு மிக சரியான உதாரணம். பகிர்வுக்கு நன்றிகள்.//

    உண்மைதான் பாரதி தங்களின் தகவலுக்கும் மிக்க நன்றிங்க..

    ReplyDelete
  37. //
    போளூர் தயாநிதி said...
    நல்ல கட்டுரை...//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  38. // மைந்தன் சிவா said...
    அருமையான பதிவு பாஸ்..
    அடிமைகளை விடுவித்தார்....அங்க நின்றார் லிங்கன்!!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

    ReplyDelete
  39. அருமையான பகிர்வுங்க.

    ReplyDelete
  40. லிங்கன் சுடப்பட்டது - வெள்ளி //

    வெள்ளிகிழமை இறந்திருந்தா மூணு நாள் லீவ் கிடைச்சிருக்கும்.

    ReplyDelete
  41. நல்லா எழுதி இருக்கீங்க சிம்பு.

    ReplyDelete
  42. நல்ல பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
  43. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    லிங்கன் சுடப்பட்டது - வெள்ளி //

    வெள்ளிகிழமை இறந்திருந்தா மூணு நாள் லீவ் கிடைச்சிருக்கும்////


    திங்கட்கிழமை சுட்ருந்தாலும் கிடைச்சிருக்கும்!

    ReplyDelete
  44. அமெரிக்கவின் நல்ல ஜனாதிபதி
    ஆபிரகாம் லிங்கன் பற்றி ஓரளவு
    தெரிந்திருந்த எனக்கு, இப்பதிவு
    முழுமையாகத் தெரியவைத்தது.

    ReplyDelete
  45. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  46. He is one of the most respected Presidents in USA.

    ReplyDelete
  47. நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி மாணவன்.

    ReplyDelete
  48. நான் ரொம்ப லேட்டு நண்பா! ( அது சொல்லித்தான் தெரியணுமா? ) அப்புறம் லிங்கன் பத்தின தகவல்கள் அருமை! லிங்கனின் ஒருநாள் நல்லா இருக்கு! ஒரு வெறும்பய கிட்ட இவ்ளோ மேட்டரா? உங்களுக்கும் வாழ்த்துக்கள் மாணவா!

    ReplyDelete
  49. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  50. i would like to talk with you ., can you send your cell number to my email?

    ReplyDelete
  51. மிகவும் அருமையான தகவல் தொகுப்புகள் நண்பரே..!! வாரத்தின் ஏழு நாட்களையும் வரிசைப்படுத்தி அவரது நிகழ்வுகளை எடுத்து கூறியவிதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பாராட்டுகள் நண்பா..!!

    ReplyDelete
  52. //
    சுசி said...
    அருமையான பகிர்வுங்க.//

    நன்றிங்க சகோ :)

    ReplyDelete
  53. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    லிங்கன் சுடப்பட்டது - வெள்ளி //

    வெள்ளிகிழமை இறந்திருந்தா மூணு நாள் லீவ் கிடைச்சிருக்கும்.//

    என்னா ஒரு அறிவு ஹிஹி

    ReplyDelete
  54. //
    ஆயிஷா said...
    நல்லா எழுதி இருக்கீங்க சிம்பு//

    நன்றிங்க சகோ :)

    ReplyDelete
  55. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    குட் போஸ்ட் மாணவன்!//

    நன்றிங்க ராம் சார் :)

    ReplyDelete
  56. // வைகை said...
    நல்ல பதிவுக்கு நன்றி !//

    வாங்கண்ணே , நன்றி

    ReplyDelete
  57. //
    வைகை said...
    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    லிங்கன் சுடப்பட்டது - வெள்ளி //

    வெள்ளிகிழமை இறந்திருந்தா மூணு நாள் லீவ் கிடைச்சிருக்கும்////


    திங்கட்கிழமை சுட்ருந்தாலும் கிடைச்சிருக்கும்!//

    என்னா ஒரு வில்லத்தனம் :))

    ReplyDelete
  58. // கலையன்பன் said...
    அமெரிக்கவின் நல்ல ஜனாதிபதி
    ஆபிரகாம் லிங்கன் பற்றி ஓரளவு
    தெரிந்திருந்த எனக்கு, இப்பதிவு
    முழுமையாகத் தெரியவைத்தது///

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  59. // Rathnavel said...
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.///

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  60. // Chitra said...
    He is one of the most respected Presidents in USA.//

    உண்மைதான் மேடம், தகவலுக்கு நன்றிங்க மேடம் :)

    ReplyDelete
  61. // தோழி பிரஷா said...
    நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி மாணவன்.///

    நன்றிங்க சகோ :)

    ReplyDelete
  62. // மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...
    நான் ரொம்ப லேட்டு நண்பா! ( அது சொல்லித்தான் தெரியணுமா? ) அப்புறம் லிங்கன் பத்தின தகவல்கள் அருமை! லிங்கனின் ஒருநாள் நல்லா இருக்கு! ஒரு வெறும்பய கிட்ட இவ்ளோ மேட்டரா? உங்களுக்கும் வாழ்த்துக்கள் மாணவா!//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  63. //
    Philosophy Prabhakaran said...
    பகிர்வுக்கு நன்றி...//

    நன்றி நண்பா :)

    ReplyDelete
  64. // ஷர்புதீன் said...
    i would like to talk with you ., can you send your cell number to my email?//

    தொடர்புகொள்கிறேன் நண்பரே நன்றி :)

    ReplyDelete
  65. // பிரவின்குமார் said...
    மிகவும் அருமையான தகவல் தொகுப்புகள் நண்பரே..!! வாரத்தின் ஏழு நாட்களையும் வரிசைப்படுத்தி அவரது நிகழ்வுகளை எடுத்து கூறியவிதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பாராட்டுகள் நண்பா..!!//

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பா :)

    ReplyDelete
  66. This comment has been removed by the author.

    ReplyDelete
  67. அடிமைக்காக போராடிய அதிபர் அபிரகாம்....... அன்று

    அடிமைபடுத்தவே போறாடுகிற அதிபர் நாசபச்சே ...இன்று.

    ReplyDelete
  68. இப்படிதான் இருக்கணும் அதிபர்....

    உங்க பகிவு மிக தெளிவா இருக்குங்க மாணவன்.

    ReplyDelete
  69. வெறும்பய ஜெயந்துக்கும் நன்றியை இங்கேயே சொல்லிக்கிறேன்...

    ReplyDelete
  70. அண்ணே மிகவும் நல்ல பதிவு ...

    ReplyDelete
  71. தாமதத்திற்கு மன்னிக்கவும் ...அண்ணே

    ReplyDelete
  72. இந்த மாதிரி ஒரு தலைவர் கிடைக்க அந்த நாடு என்ன புண்ணியம் பண்ணுசோ..

    நம்ம நாடும் தான் இருக்கே ... கொள்ளை அடிக்கவே குறியா இருக்கு

    ReplyDelete
  73. அடிமைக்காக போராடிய அதிபர் அபிரகாம்....... அன்று

    அடிமைபடுத்தவே போறாடுகிற அதிபர் நாசபச்சே ...இன்று


    சரியாக சொன்னிர்கள் மாமா

    ReplyDelete
  74. நல்ல தெளிவா இருக்குங்க அண்ணே ...

    பிசிரில்லாமல் சுருக்கமாய் அழகா சொல்லிருக்கிங்க அண்ணே

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  75. ஒரு சாதாரண மனிதனாக இருந்தவர் ஒரு நாட்டின் அதிபர் ..

    இங்கு அப்படி இல்லை என்று நினைக்கும்போது

    வெட்கமா இருக்குங்க அண்ணே

    ReplyDelete
  76. வரலாற்றை வழங்கி அறிவை வளர்க்கும்

    மாணவரின் எண்ணங்கள் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  77. வெறும்பய அண்ணன் ஜெயந்த் அவர்களின் சிந்தனை சிறப்பு ...

    நச்சுனு இருக்கு ...

    வாழ்த்துக்களும் வணக்கங்களும்

    ReplyDelete
  78. லிங்கனின் ஆவி வெள்ளை மாளிகையில் உலவுவதாகக் கேள்வி!!

    ReplyDelete
  79. விரிவான விளக்கம்... நிறைய தெரிந்துக்கொண்டேன், நன்றி!

    ReplyDelete
  80. நல்ல பகிர்வு நண்பா

    ReplyDelete
  81. ஒரு வரலாறு நல்ல பல thagavalgal
    வாழ்த்துக்கள்
    அண்ணா

    ReplyDelete
  82. // சி.கருணாகரசு said...
    அடிமைக்காக போராடிய அதிபர் அபிரகாம்....... அன்று

    அடிமைபடுத்தவே போறாடுகிற அதிபர் நாசபச்சே ...இன்று.
    //

    மிகச்சரியாக சொன்னீங்க அண்ணே

    ReplyDelete
  83. // சி.கருணாகரசு said...
    இப்படிதான் இருக்கணும் அதிபர்....

    உங்க பகிவு மிக தெளிவா இருக்குங்க மாணவன்.//

    நன்றி அண்ணே :)

    ReplyDelete
  84. // சி.கருணாகரசு said...
    வெறும்பய ஜெயந்துக்கும் நன்றியை இங்கேயே சொல்லிக்கிறேன்...///

    ரொம்ப நன்றி அண்ணே :)

    ReplyDelete
  85. // அரசன் said...
    அண்ணே மிகவும் நல்ல பதிவு ...//

    வாங்க அண்ணே :)

    ReplyDelete
  86. // அரசன் said...
    வரலாற்றை வழங்கி அறிவை வளர்க்கும்

    மாணவரின் எண்ணங்கள் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் அன்புகலந்த கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்கண்ணே :)

    ReplyDelete
  87. //
    இராஜராஜேஸ்வரி said...
    லிங்கனின் ஆவி வெள்ளை மாளிகையில் உலவுவதாகக் கேள்வி!!//

    உண்மையாகவா சகோ? :)

    ReplyDelete
  88. // Priya said...
    விரிவான விளக்கம்... நிறைய தெரிந்துக்கொண்டேன், நன்றி!//

    நன்றிங்க சகோ :)

    ReplyDelete
  89. // ஆ.ஞானசேகரன் said...
    நல்ல பகிர்வு நண்பா//

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  90. // siva said...
    ஒரு வரலாறு நல்ல பல thagavalgal
    வாழ்த்துக்கள்
    அண்ணா//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிவா :)

    ReplyDelete
  91. //
    r.v.saravanan said...
    நல்ல பகிர்வு//

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  92. Serpu thiykum thoizhli aga irunthar avar appa but தச்சர். Yendru kurukirkal correct or wrong tell me

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.