வணக்கம் நண்பர்களே, நாளை (8/3/2011) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் அட்வான்ஸாக இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு மகளிர் தின சிறப்புக்காக இந்த பதிவை சமர்பிக்கின்றேன்.
2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி கொலம்பியா வான்கலம் விண்ணில் சிதைந்தது. இந்திய சமூகமும் ஒட்டுமொத்த விண்வெளி சமூகமும் சோகத்தில் மூழ்கியது. 41 வயதில் வானத்தில் ஒரு நட்சத்திரமாகிப்போன இந்தியாவின் முதல் வீராங்கனை கல்பனா சாவ்லாவைப் பற்றிதான் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.
1961 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. தந்தை ஓர் வர்த்தகர், தாய் இல்லத்தரசி. மற்ற பெண் குழந்தைகளைப்போல் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு பதில் கல்பனா விமானங்களை வரைந்தும் ஓவியம் தீட்டிக்கொண்டும் இருப்பார். சிறு வயதிலேயிருந்தே விண்வெளி பொறியாளராக வரவேண்டும் என்பதுதான் கல்பனாவின் விருப்பமாக இருந்தது.
கல்பனா தன் கிராமத்து தெருக்களில் நின்றுகொண்டு ஆகாயத்தை பார்த்து வியப்பார். ஆகாயத்தில் அமைதியை கிழித்துக்கொண்டு போகும் விமானங்களின் பாதையை இமைகொட்டாமல் பார்த்துகொண்டு இருப்பார். தன் சகோதரனின் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் போதெல்லாம் அவரது பார்வை ஆகாயத்தை நோக்கிதான் உயரும். கர்னாவில் உள்ள தாஹூர் பள்ளியில் ஆரம்ப கல்வியை முடித்த கல்பனா சண்டிகாரில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான பொறியியல் பயில விரும்பினார். அந்த துறையில் பயின்ற மற்ற அனைவரும் ஆண்களாக இருந்ததால் முதலில் பெற்றோர்கள் மறுத்தனர்.
ஆனால் கல்பனாவின் எண்ணத்தை அவர்களால் மாற்ற முடியவில்லை. அந்த கல்லூரியில் 1982 ல் இளங்கலை பட்டம் பெற்றார். ஆகாயத்தைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருந்த அவரை அமெரிக்கா வரவேற்றது. 1984 ஆம் ஆண்டு டெக்ஸஸ் பல்கலைகழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். நான்கு ஆண்டுகள் கழித்து கொலோராடோ பல்கலை கழகத்தில் அதே பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டம் பெற்ற உடனேயே நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையத்தில் சேர்ந்தார். எளிய மொழியில் விளக்குவதற்கு சிரமமான சில ஆராய்ட்சிகளில் ஈடுபட்டார்.
1993 ல் கல்பனா ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாக சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டே கல்பனாவின் விண்வெளி கனவு நனவாக தொடங்கியது. விண்வெளி வீரர், வீராங்கனை பயிற்சி பெற விண்ணப்பத்திருந்த சுமார் மூவாயிரம் நபர்களிலிருந்து ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் கல்பனா. ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்கானல்கள் ஆகியவற்றை கடந்து வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கல்பனா.
1995 ல் பயிற்சி முடிந்து வின்வெளி வீராங்கனையாக தகுதி பெற்றார். அவரது முதல் வின்வெளி பயணம் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 19 ந்தேதி தொடங்கியது. ஆறு வீரர்களுடன் ப்ளோரிடாவில் கேப் கெனவரல் முனையிலிருந்து விண்ணுக்கு செலுத்தபட்டது கொலம்பியா வான்கலம். அந்த வான்கலத்தின் இயந்திர கரங்களை இயக்கும் முக்கிய பொறுப்பு கல்பனாவுக்கு தரப்பட்டது. 16 நாட்கள் விண்வெளியில் வானத்தையும் நட்சத்திரங்களையும் நலம் விசாரித்த கல்பனா 252 தடவை பூமியை சுற்றியதோடு சுமார் ஆறரை மில்லியன் மைல் தொலைவு பயணம் செய்தார். டிசம்பர் ஐந்தாம் நாள் ஆறு விண்வெளி வீரர்களும் வெற்றியோடு பூமிக்கு திரும்பினர். அன்றைய தினம் விண்வெளிக்கு சென்று வந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார் கல்பனா.
முதல் வின்வெளி பயணத்தை முடித்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் விண்ணுக்கு செல்ல கல்பனாவுக்கு அழைப்பு வந்தது. முதல் பயணத்தில் அவர்களை பத்திரமாக தரையிறக்கிய அதே கொலம்பியா வான்கலத்தில் 2003 ஆம் ஆண்டு சனவரி 16 ந்தேதி கல்பனா உட்பட ஏழு வீரர்கள் விண்ணுக்கு பாய்ச்சப்பட்டனர். பிப்ரவரி முதல் தேதிவரை அந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. சுமார் 80 அறிவியல் ஆராய்ட்சிகளை அவர்கள் நடத்தினர். அந்த பதினாறு நாள் பயணத்தை முடித்துகொண்டு வெற்றிக்கரமாக தரையிறங்க பதினாறு நிமிடங்கள் இருந்தபோது கொலம்பியா வான்கலம் விண்ணில் வெடித்து சிதறியது. கல்பனா என்ற நம்பிக்கை பூ 41 வயதில் உதிர்ந்தது.
கொலம்பியா விண்வெளி பயணம் மேற்கொள்ளும் முன் அவரிடம் நடத்தப்பட்ட பேட்டியில் உங்களுக்கு ஊக்கமூட்டியவர்கள் அல்லது ஊக்கமூட்டிகொண்டிருப்பவர்கள் யார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு கல்பனா இவ்வாறு கூறினார்:
முழுமனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடும் எவரை பார்த்தாலும் எனக்கு ஊக்கம் ஏற்படும். உதாரணத்திற்கு எனது உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பணியை அவர்கள் முழுமனதோடு செய்த விதம் கற்பிப்பதில் எங்களோடு அதிக நேரத்தை செலவிட்ட விதம், அவர்களின் பொறுமையைப் பற்றி இப்போது நினைத்து பார்த்தாலும் வியப்பாக உள்ளது. இதைத்தவிர மேலும் கண்டுபிடிப்பாளர்களின் கதைகளும் எனக்கு ஊக்கம் தரும்.
கல்பனாவின் விண்வெளி வெற்றியால் இன்று பலர் விண்வெளி கனவுகளை சுமந்துகொண்டு இருக்கின்றனர் இதுதான் கல்பனா இந்த உலகத்திற்கு விட்டு சென்ற சொத்து. அடக்கம் செய்யக்கூட அவரது உடல் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் அவரது ஆத்மா அவருக்கு விருப்பமான அந்த விண்வெளியில்தான் உலா வந்து கொண்டிருக்க வேண்டும். ஒரு சாதாரன பள்ளியில் படித்தும் பலர் வியக்கும்படி தன் கனவுகளை வாழ்ந்து காட்டினார் கல்பனா. இன்றைய மாணவர்களும் சிறந்த கல்வியோடு தன் கனவுகளை நோக்கி பயணித்தால் கல்பனாவைப் போன்று சாதிக்க முடியாதா?
வானத்தை கனவு கண்ட கல்பனா சாவ்லா அந்த வானத்தையே வசமாக்கிக்கொண்டதில் ஆச்சரியமில்லை. நாம் எல்லோரையும் விட வானத்திற்கு அருகில் சென்றுவிட்டு வந்தவர் கல்பனா. கனவோடு கலந்த உழைப்பும் முழுமனதோடு காரியத்தில் ஈடுபடும் பண்பும்தான் கல்பனாவை விண்ணுக்கு கொண்டு சென்றது. அவர் பிறந்த நமது இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்தது. கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கனவுகளை கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு தேவையான உழைப்பை விடா முயற்சியோடும் முழுமனதோடும் கொண்டு செயல்படும் எவருக்கும் அந்த வானம் வசப்பட்டே ஆக வேண்டும்.
(தகவலில் உதவி - நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
அண்ணன் சி.கருணாகரசுவின் மகளிர் தின சிறப்பு பதிவு:
பெண்பாக்கள், மகளிர் தினம்
(தகவலில் உதவி - நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
அண்ணன் சி.கருணாகரசுவின் மகளிர் தின சிறப்பு பதிவு:
பெண்பாக்கள், மகளிர் தினம்
******************************************************
கழுகின் இன்றைய பார்வை:
ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......II
**************************************************************
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்
உங்கள் மாணவன்
vadai!
ReplyDeleteநல்ல பகிர்வு
ReplyDeleteகல்பனா சாவ்லா பத்தி தெரியாத செய்திகளைத் தெரிஞ்சிக்கிட்டேன் அண்ணா .. நன்றி ..
ReplyDeleteஎனக்கு பிடித்த வீராங்கனைகளில் ஒருவர்! நிறைய செய்திகள்! மிக்க நன்றி!
ReplyDeleteவடை முக்கியமில்லீங்க.. ! நமக்கு சேதி தான் முக்கியமுங்க.. ! தகவலுக்கு- தொகுப்புக்கு நன்றி.!
ReplyDeleteகல்பனா சாவ்லா பத்தி தெரியாத செய்திகளைத் தெரிஞ்சிக்கிட்டேன் .. நன்றி ..
ReplyDeleteஎனக்கு பிடித்த வீராங்கனைகளில் ஒருவர்! நிறைய செய்திகள்! மிக்க நன்றி!
ReplyDeleteவடை முக்கியமில்லீங்க.. ! நமக்கு சேதி தான் முக்கியமுங்க.. ! தகவலுக்கு- தொகுப்புக்கு நன்றி.!
ReplyDeleteகல்பனா சாவ்லா போல் பல பெண்கள் சாதிக்க வேண்டும் .....கல்பனாவை பற்றி தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன்..
ReplyDeleteகல்பனா சாவ்லா பத்தி தெரியாத செய்திகளைத் தெரிஞ்சிக்கிட்டேன் அண்ணா .. நன்றி ..
ReplyDeleteஎனக்கு பிடித்த வீராங்கனைகளில் ஒருவர்! நிறைய செய்திகள்! மிக்க நன்றி!
ReplyDeleteகல்பனா சாவ்லா போல் பல பெண்கள் சாதிக்க வேண்டும் .....கல்பனாவை பற்றி தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன்..
ReplyDeleteஅப்ப நாளைக்கு வெறும்பய பிசியா?
ReplyDeleteஅபினயாவுக்கு என்ன கிப்ட் வாங்குன?
ReplyDeleteநல்லாருக்கு பதிவு
ReplyDeleteபதிவு நல்லாருக்குன்னு போட்டா அது டெம்ப்ளேட் கமெண்ட் ஆகிடும் அதான் ரிவர்ஸ்ல போட்டேன்.. ஹி ஹி
ReplyDeleteபதிவு நல்லாருக்குன்னு போட்டா அது டெம்ப்ளேட் கமெண்ட் ஆகிடும் அதான் ரிவர்ஸ்ல போட்டேன்.. ஹி ஹி
ReplyDeleteகல்பனா சாவ்லா பத்தி தெரியாத செய்திகளைத் தெரிஞ்சிக்கிட்டேன்..
ReplyDeleteமிக சிறந்த பொறுத்தமான படைப்பு.... பாராட்டுக்கள்.
ReplyDeleteமாணவருக்கு நம் வணக்கங்கள்..
ReplyDeleteகல்பனா சாவ்லா அவர்களின் நினைவுபதிவினை வெளியிட்டு மகளிர் தினத்தை சிறப்பாக்கியமைக்கு நன்றியும், பாராட்டும்...
//தகவலில் உதவி - நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்//
ReplyDeleteஇந்த சிங்கப்பூர் வானொலி பற்றியும் ஒரு பதிவில் விளக்குங்கள்..
நல்ல செய்திகள் அடங்கிய பதிவு. உங்கள் தளம் இந்த விஷயத்தில் உண்மையிலேயே தனித்து நிற்பது சிறப்பு.
ReplyDeleteவாழ்த்துக்கள்
நண்பரே!
ReplyDeleteகல்பனா சாவ்லா என்பவர் எந்த விதத்தில் வீராங்கனை ஆனார் என்று விளக்குவீர்களா?
இந்த தரித்திர நாடு வேண்டாம் என்று அமெரிக்கா சென்ற லட்சக்கணக்கான இந்தியர்களில் ஒருவர்.
வறுமையில் வாழ்ந்தாலும் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் செருப்பாய் உழைத்துக் குடும்பத்தைத் தலை நிமிர வைத்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்திய சகோதரிகளில் ஒருவரல்ல.
அரசியல் செல்வாக்கால்- 'புகழ்'கொடுக்கப்பட்டு பாரத ரத்னா பரிசும் கொடுக்கப்பட்டவர்.
இவர் மாதிரிகளை எழுதி உண்மையான வீரப்பெண்களை தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள்!
மிக மிக சிறந்த பதிவு.
ReplyDeleteஊக்கமூட்டிசென்ற பதிவு சகோ:)
ReplyDeleteஅனைத்து பெண்களுக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்
good post
ReplyDeleteமகளிர் தின சிறப்புப் பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteகல்பனா பெயர் இருந்தாலே சாதிப்பாங்க இது உனக்கு தெரியாதா மாணவன்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பா நெறய விஷயங்களை எடுத்துரைத்ததட்க்கும் நன்றி
ReplyDelete//கல்பனா said...
ReplyDeleteகல்பனா பெயர் இருந்தாலே சாதிப்பாங்க//
ha...ha...ha...
கனவோடு கலந்த உழைப்பும் முழுமனதோடு காரியத்தில் ஈடுபடும் பண்பும்தான் கல்பனாவை விண்ணுக்கு கொண்டு சென்றது உண்மைதான்.... இன்றும் வழக்கம் போல் அசத்தலான பதிவு சகோ... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteகல்பனா சாவ்லா"வுக்கு எனது ராயல் சல்யூட்...
ReplyDeleteGood message.. Thanks Student
ReplyDelete// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கல்பனா சாவ்லா பத்தி தெரியாத செய்திகளைத் தெரிஞ்சிக்கிட்டேன் .. நன்றி .. //
சொல்லிடாரு உலக மகா அறிவாளி..
அருமையான பகிர்வு... வாழ்த்துகள்
ReplyDeleteReally Super அருமையான பதிவு தெரியாத பல விடயங்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்
ReplyDeleteகல்பனாவின் விண்வெளி வெற்றியால் இன்று பலர் விண்வெளி கனவுகளை சுமந்துகொண்டு இருக்கின்றனர் இதுதான் கல்பனா இந்த உலகத்திற்கு விட்டு சென்ற சொத்து.
ReplyDelete...True... I salute her!
அருமையான பகிர்வு.
ReplyDeleteபணத்திற்கும், அமெரிக்க வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு இந்திய நாட்டிற்காக எதையுமே செய்யாமல்,அமெரிக்க பிரஜையாக வேண்டுமென்பதற்காக Jean-Pierre ஹாரிசன் என்ற அமெரிக்கரை திருமணம் செய்து, அமெரிக்க பிரஜையாகி அமெரிக்காவிற்காக நாசாவில் வேலைசெய்து, வேலையின்போது விண்கல விபத்தில் மரணமடைந்த ஒரு பெண்ணை, கண்மூடித்தனமாக போற்றிட ஒரு கூட்டம் உண்டென்றால், அது நம் தமிழ் கூட்டமாகத்தானிருக்கும். (இந்திராகாந்தி மரணமடைந்த பொது தற்கொலைசெய்து உயிர்விட்ட 15 க்கும் மேற்பட்ட அனைவரும் தமிழர்கள் என்னும்போது, இங்கே கருத்துக்கூறியவர்களை எண்ணி நான் ஆச்சர்யம் கொள்ளவில்லை.)
ReplyDeleteபொருத்தமான நினைவூட்டல்! நன்றி நண்பா!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteபெண்மையை போற்றுவோம்...
கல்பனா சாவ்லாவைப் பற்றி நாம் பெருமை கொள்ள ஒன்றுமே இல்லை..
ReplyDeleteஅவருடைய மரணம் வேண்டுமானால் அனுதாபத்திற்குரியதாக இருக்கலாம்
மற்றபடி அவர் தன்னை படிக்கவைத்த இந்த நிலைக்கு ஆளாக்கிய தாய் நாட்டை துச்சமென மதித்து, அமெரிக்காவின் அதிகப்படி சம்பளத்திற்காக அந்த நாட்டு குடியுரிமை பெற்று அங்கேயே தன வாழ்வை முடித்தவர்..
ஏன் இன்னும் முட்டாள் தனமாக அவரை இந்தியர் இந்தியர் என்று பீற்றிகொள்கிறீரோ தெரியவில்லை..
சரியான நேரத்தில் சரியான பதிவு.
ReplyDeleteஎல்லா பெண்களுக்கும், அவர்கள் குடும்பத்தினர்க்கும் மங்கையர் தின வாழ்த்துக்கள்.
//முழுமனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடும் எவரை பார்த்தாலும் எனக்கு ஊக்கம் ஏற்படும். உதாரணத்திற்கு எனது உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பணியை அவர்கள் முழுமனதோடு செய்த விதம் கற்பிப்பதில் எங்களோடு அதிக நேரத்தை செலவிட்ட விதம், அவர்களின் பொறுமையைப் பற்றி இப்போது நினைத்து பார்த்தாலும் வியப்பாக உள்ளது. இதைத்தவிர மேலும் கண்டுபிடிப்பாளர்களின் கதைகளும் எனக்கு ஊக்கம் தரும்.//
ReplyDeleteமகளிர் தினத்தில் கல்பனா சாவ்லாவைப் பற்றி தெரிந்து கொண்டோம்.
அவர்கள் வார்த்தை அற்புதம். முழு மனதோடு எந்த வேலையாக இருந்தாலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தால் வெற்றி நிச்சியம் என்பதை என்ன அழகாய் சொல்லிவிட்டார்கள்.
அவர் புகழ் என்றும் அழியாது.
நல்ல பதிவு மாணவன்.
மகளிர் தின வாழ்த்துக்கள். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
ungal indha kalpana savla patriya pathivu arumai .
ReplyDeleteirandu naatkaluku munnal neengal velita singapore kanavan yendra pathivu , idhai originalaga ezuthiyathu dubai yil velai seiyum yennudaiya nanbar , appadiye eduthu dubai yenbatharku pathil angellam singapore yendru pottu copy adithullargal , idhai saripaarka www.itzyasa.blogspot.com sendru paarkavum ,,,, ippadiku jothibasu , bahrainilirundhu
கல்பனாவை ஒரு பெணாக பாராட்டுங்கள், இந்தியராக வேண்டாம். இராமசாமி சேகர் கருத்துக்கு முற்றிலும் உடன்படிகிறேன்.
ReplyDeleteஅண்ணே வணக்கம்
ReplyDeleteநல்ல பதிவு ,... அண்ணே ...
ReplyDeleteஊக்கம் அளிக்கும் பதிவு அண்ணே ...
முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை என்பதை நிருபிக்கும்
ஒரு வீராங்கனையின் வரலாறு ....
கனவுகள் மெய்பட
ReplyDeleteகடின உழைப்பும் அதற்க்கு சரியான
அங்கீகாரம் கிடைத்தால்
அனைவரும் சாதனையாளர்களே ...
இந்த வீராங்கனை
சாவ்லா போல் ...
தரமான செய்திகளை நிறைய அறிந்து கொண்டேன் .,..
ReplyDeleteஉங்களின் முயற்சி சிறப்பு ... வாழ்த்துக்கள் அண்ணே
நல்ல பதிவு... உங்களின் முயற்சி சிறப்பு.
ReplyDeleteநன்றி- தமிழ்த்தென்றல்
ReplyDeleteதேவையா மகளிர் தினம்?
ஆண் மகன் நான்
ஆணவத்துடன் கேட்கிறேன் ....
தேவையா இத்போன்று
மகளிருக்கென தனியே ஒருநாள்..!!
தடம் பதிக்கிறேன் குழந்தையாய்
தாங்கிப் பிடிக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் தாயின் வடிவில்
வளர்ந்து வருகிறேன் பாலகனாய்
கூடி விளையாட காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் அக்காவின் உருவில்
படித்து வருகிறேன் மாணவனாய்
வழிகாட்டி உயர்த்தக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் ஆசிரியரின் வடிவில்
வலம் வருகிறேன் சுமைதாங்கியாய்
ஊன்றுகோலாய்த் தாங்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மனைவியின் உருவில்
உறைந்துபோய் இருக்கிறேன் பாறையாய்
உருக்கி மனிதனாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மகளின் வடிவில்
ஓய்ந்துபோய் இருக்கிறேன் முதியவனாய்
மீண்டும் குழந்தையாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் பேத்தியின் உருவில்
எங்கும் அவள் ..
எதிலும் அவள் ....
எல்லாமே அவள் .....
எல்லா நாளுமே அவள்.....
பிறகு ஏன் இந்தநாள்?
அவளுக்கென
தனியே ஒரு நாள்!
--
என்றும் அன்புடன் -- துரை --
இவரைப்பற்றியெல்லாம் எழுத மாட்டீர்களா?
ReplyDeleteஎப்போதுதான் ஆசிரியராகப்போகிறீர்கள்?
-
இவர், இப்படி...
பதிவு செய்த நாள் : மார்ச் 07,2011,23:32 IST
கருத்தை பதிவு செய்ய
அருமை
பிடிச்சுருக்கு
பரவாயில்லையே
குழந்தைகள், பெண்களை வாழ வைத்த சோபனா : அகிம்சை மற்றும் சத்தியத்திற்கு முதன்மை இடம் கொடுப்பவர் "சோபனா ரானடே'. காந்திய வழியில், ஆச்சார்யா வினோபாவே சீடராக தன்னை மாற்றிக் கொண்டவர்.
இவ்வாண்டின், பத்மபூஷண் விருது பெற்ற சோபனாவுக்கு வயது 86. தன் வாழ்நாள் முழுவதிலும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்காக பணியாற்றி வரும் சோபனா, தன்னிறைவு பெற்ற, சமூக பொறுப்புள்ள ஒரு இளைய சமுதாயம் உருவாகிட முழுமுதற்காரணமானவர். நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு இவரது வாழ்க்கை சாலச் சிறந்த எடுத்துக்காட்டு.மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் பிறந்த சோபனா, வீர் சவர்க்கார், மகாத்மா காந்தி மற்றும் அருணா அசப் அலி ஆகியோரின் பேச்சைக் கேட்டு வளர்ந்தார். இதுவே, பின்னாட்களில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட அவரைத் தூண்டியது. 16ம் வயதில் அவருக்கு திருமணமானது. சோபனாவின் கணவர் ஒரு சிவில் என்ஜினியர்.
திருமணம் ஆனபோதிலும், கல்விக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்த இவர், கணவன் வீட்டாரின் முழு ஆதரவோடு, மான்டிடசோரி பல்கலையில், மேடம் மாண்டிசோரி வழிகாட்டுதலில், 1847ம் ஆண்டு பி.ஏ., பட்டம் பெற்றார். சோபானாவின் ஆளுமை மற்றும் வாழ்வு முறையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தியதில், மேடம் மாண்டிசோரிக்கு முக்கிய பங்கு உண்டு. தற்போதைய நிலையை எட்ட இவரை ஊக்குவித்ததும் அவர் தான்.1955ம் ஆண்டில் அசாம் மாநிலம், திக்பாய் நகருக்கு குடிபெயர்ந்த சோபனா, "சிசு நிகேதன்' எனும் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை ஏற்படுத்தினார். மகாராஷ்டிர பெண்களின் வாழ்வை மேம்படுத்த, கஸ்தூரிபாய் காந்தி நேஷனல் மெமோரியல் டிரஸ்ட்டினை முக்கிய கருவியாக பயன்படுத்திக் கொண்டார்.
தன் சொந்த வாழ்க்கை அனுபவம் மற்றும் சுய கருத்துக்களின் முன்மாதிரியில், பாடத் திட்டங்களை வடிவமைத்து, வீட்டு வேலை செய்யும் பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆதிவாசிப் பெண்களுக்கு பயிற்சி வழங்கினார். இந்தச் செயல் திட்டங்களைப் பின்பற்றியே, "மகிளா காதி வித்யாலயா' உருவாக்கப்பட்டது.காந்திய சிந்தனைகள் மற்றும் கிராமப்புற சமூகப் பணிகளை ஒருங்கிணைத்த இவரது செயல் திட்டங்களுக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், தனியார் துறைகளும் அங்கீகாரம் அளித்துள்ளன.
அரியத் தகவல்களின் தொகுப்பு. கூடுதல் விவரங்களுடன் அதிகமாக படங்களையும் இணைத்து கூறியிருப்பது.. தெளிவாக விளங்க வைக்கிறது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் மாணவரே..!!!
ReplyDeleteகல்பனா சாவ்லா பற்றி அரியத் தகவல்கள் நன்றி
ReplyDeleteஅனைவருக்கும் மகளிர்தின நல்வாழ்த்துக்கள்..
பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteகொலம்பியா விண்கலம் பற்றிய அதீத தகவல்களுக்கு மீண்டும் நன்றி