Wednesday, March 9, 2011

ஆர்க்கிமிடிஸ் - வரலாற்று நாயகர் (வானம் வசப்படுமே)

நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்றால் உலகம் இதுவரை கண்டிராத புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டறியும்போது அவர்களிம் மனநிலை எந்தளவுக்கு மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கும் நாம் அவர்களது மனநிலையில் இருந்தாலொழிய. அந்த உணர்வுகளை வார்த்தைகளில் வருணிப்பது சிரமம்.  

ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் அந்த விஞ்ஞானி. சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமா?தாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில் யுரேக்கா யுரேக்கா என்று மகிழ்ச்சி கூச்சலிட்டு ஓடினார். யுரேக்கா என்றால் கிரேக்க மொழியில் கண்டுபிடித்துவிட்டேன் என்று பொருள்.

ஞானம் மானத்தைவிட பெரியது என்று நம்பி அவ்வாறு பிறந்த மேனியாக ஓடிய அவர்தான் பொருள்களின் டென்ஸிட்டி அதாவது அடர்த்திபற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 ஆம் ஆண்டு பிறந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரது தந்தை ஒர் ஆராய்ட்சியாளர் குடும்பம் செல்வ செழிப்பில் இருந்தது. தன் மகன் நன்கு கல்விகற்று தன்னைப்போலவே ஆராய்ட்சியாளனாக வேண்டும் என விரும்பிய தந்தை ஆர்க்கிமிடிஸை கல்வி பயில எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.

ஆர்க்கிமிடிஸும் நன்கு கல்வி பயின்று தான் பிறந்த சிரகூஸ் நகருக்கு திரும்பினார். இரண்டாம் ஹெயிரோ என்ற மன்னம் அப்போது சிரகூஸை ஆண்டு வந்தான். தனக்கு ஒரு தங்க கிரீடம் செய்து கொள்ள விரும்பிய அந்த மன்னன் நிறைய தங்கத்தை அளித்து நல்ல கீரீடம் செய்து தருமாறு தன் பொற்கொல்லரை பணித்தார். கிரீடம் வந்ததும் தான் கொடுத்த தங்கத்துக்கு நிகராக அது இருந்ததை கண்டு மகிழ்ந்தார் மன்னர். இருப்பினும் கிரீடத்தில் கலப்படம் ஏதேனும் செய்யபட்டிருக்குமா? என சந்தேகம் மன்னருக்கு எழுந்தது. இந்த பிரச்சினையை ஆர்க்கிமிடிஸிடம் சொன்னார் இதைப்பற்றி ஆர்க்கிமிடிஸ் பல நாள் சிந்தித்து கொண்டிருந்த போதுதான் அந்த குளியலறை சம்பவம் நிகழ்ந்தது.

தண்ணீர்த்தொட்டியில் குளிப்பதற்காக அவர் இறங்கியபோது தொட்டி நிறைய இருந்த தண்ணீரில் ஒரு பகுதி வெளியில் வழிந்தது. அது எப்போதுமே நிகழும் ஒன்றுதான் என்றாலும் மன்னரின் கலப்பட பிரச்சினைக்கான தீர்வை அந்த நொடியில் கண்டார் ஆர்க்கிமிடிஸ். அதனால்தான் ஆர்க்கிமிடிஸ் ஆடையின்றி யுரேக்கா என்று கத்திகொண்டு ஓடினார். உற்சாகம் தனிந்ததும் மன்னரிடம் இருந்து கிரீடத்தை வரவழைத்து அதன் எடையை அளந்து பார்த்தார். பின்னர் அதே எடை அளவுக்கு சுத்தமான தங்கத்தையும் வெள்ளியையும் வரவழைத்தார். சுத்தமான தங்கம் எவ்வளவு தண்ணீர் வெளியேற்றுகிறது என்பதை அறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்கத்தை போட்டு வெளியேறும் நீரின் அளவை கணக்கெடுத்து கொண்டார்.

அதேபோல சுத்தமான வெள்ளி வெளியேற்றும் அளவையும் கணக்கெடுத்துக்கொண்டார். கடைசியாக கிரீடத்தை தண்ணீரில் போட்டு எவ்வளவு தண்ணீர் வெளியாகிறது என்று பார்த்தார் அது சுத்த தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் சுத்த தங்கம் வெளியேற்றிய அதே அளவு நீரைத்தான் கிரீடமும் வெளியேற்றிருக்க வேண்டும். ஆனால் அது சுத்த தங்கமும் சுத்த வெள்ளியும் வெளியேற்றிய நீரின் அளவுகளுக்கு இடைபட்ட அளவு தண்ணீரை வெளியேற்றியது. அதன் மூலம் கிரீடத்தில் பொற்கொல்லர் கலப்படம் செய்திருக்கிறார் என்பதை மன்னருக்கு நிரூபித்தார் ஆர்க்கிமிடிஸ். அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட On Blotting Bodies என்ற புத்தகம் இன்றைய நவீன இயற்பியலுக்கு அடிப்படையாக விளங்குகிறது.

ஆர்க்கிமிடிஸ் கணிதத்தில் மிகச்சிறந்து விளங்கியதோடு வான சாஸ்திரத்திலும் இயந்திர நுட்பங்களிலும் பொறியியலிலும் தன்னிகரற்று விளங்கினார். அவரது மதிநுட்பத்தை கண்டு ரோமானிய சாம்ராஜ்யமே மலைத்த ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை ரோமானிய கடற்படை சிரகூஸ் நகரை முற்றுகையிட்டது. சிரகூஸ் நகரை நோக்கி நெருங்கியபோது சுமார் 500 அடி உயர குன்றின் மீதிருந்து கண்களை கூச வைக்கும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. ரோமானிய கடற்படை வீரர்களுகு என்னவென்று புரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஒளியின் தக தகப்பு அதிகரித்தது. அப்போதுதான் கிரேக்கர்களுக்கு பலமாக ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை இருப்பது ரோமானிய கடற்படைத் தளபதி மார்க்ஸ் கிளேடியஸ் மாஸில்லஸ்க்கு நினைவுக்கு வந்தது.

ஏதோ நிகழப்போகிறது என்று சுதாரிப்பதற்குள் பாய்மரக் கப்பல்களின் படுதாக்கள் தீப்பற்றி எறிந்தன. சில நிமிடங்களுக்குள் பெரும்பாலாம கப்பல்கள் தீக்கரையாகி நாசமாயின. அப்போதுதான் ரோமானியர்களுக்கு புரிந்தது ஆர்க்கிமிடிஸ் பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகளை குன்றின் மீது நிறுவி அதில் சூரிய ஒளியினை குவித்து அதனை போர்க்கப்பல்கள் மீது பாய்ச்சி சாகசம் புரிந்திருக்கிறார் என்பது. இப்படி பல போர்க்காப்பு சாதனங்களையும் உத்திகளையும் உருவாக்கி புகழ் பெற்றார் ஆர்க்கிமிடிஸ். அவர்மீது பெரும் மரியாதை வைத்திருந்த ரோமானியத் தளபதி மாஸில்லஸ் எந்த சூழ்நிலையிலும் படையெடுப்பு வெற்றி அளித்தாலும் சிரகூஸில் எவரைக் கொன்றாலும் ஆர்க்கிமிடிஸிக்கு மட்டும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கட்டளையிட்டுயிருந்தார்.

ஆர்க்கிமிடிஸ் கடல் தாக்குதலிருந்து சிரகூஸை காப்பாற்றிய மூன்று ஆண்டுகளில் ரோமானியர்கள் மீண்டும் படையெடுத்தனர். அப்போது தனது 75 ஆவது வயதில் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து வட்டங்களையும் கோனங்களையும் வரைந்து ஆராய்ட்சி செய்து கொண்டிருந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரை யாரென்று அறியாத, அவரின் பெருமை தெரியாத ஒரு ரோமானிய வீரன் ஆர்க்கிமிடிஸின் நெஞ்சில் வாளை பாய்ச்சினான். அந்த கிரேக்க சகாப்தம் சரிந்தது.

கேட்டர்பில்ட் எனப்படும் கவன்கல் எறிந்து விரோதி படைகளை தாக்குவது போன்ற பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கியவர் ஆர்க்கிமிடிஸ். அவர் உருவாக்கிய பல சாதனங்கள் நவீன உத்திகளோடும் வடிவமைப்புகளோடும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லிவர் எனப்படும் நெம்புகோல் மூலம் எப்படிப்பட்ட பளுவையும் தூக்க முடியும் என்று அவர் செய்து காட்டினார். லிவர், புலி என்ற அமைப்புகளை உருவாக்கி ஒரு கப்பலில் ஏராளமான பொருட்களை ஏற்றி வேறு எவரது துணையும் மற்றும் இயந்திரத்தின் துணையும் இன்றி தான் ஒருவராகவே அந்த கப்பலையே நகரச் செய்து காட்டினார்.    

ஒருமுறை சிரகூஸின் மன்னர் ஆர்க்கிமிடிஸிடம் உங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லையா என்று கேட்க அதற்கு அவர்:

நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்...


என்று பதில் சொன்னாராம். எவ்வளவு தைரியம், எவ்வளவு தன்னம்பிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான். அதனால்தான் மலையை கூட அசைக்க முடியும் என்று அவர் நம்பினார்.

நம்மாலும் முடியும். மலையை அசைக்க முடியாவிட்டாலும் தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும் போராடினால் நாம் விரும்பும் வாழ்க்கையையும் ,வானத்தையும் வசப்படுத்த முடியும்.     

(தகவலில் உதவி - நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்) 


கழுகின் இன்றைய பார்வை:
சுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....!ஒரு வழிகாட்டும் தொடர்..III

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்          

67 comments:

  1. பயனுள்ள பதிவு...
    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. //நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்...//
    //ஞானம் மானத்தைவிட பெரியது//

    ஆர்க்கிமிடிஸ் சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, சிறந்த மெய்ஞானியும் கூட..

    ReplyDelete
  3. [ma]பகிர்வுக்கு மிக்க நன்றி மாணவரே....[/ma]

    ReplyDelete
  4. சிறப்பான பதிவு

    படித்து முடுத்தவுடன் ஒரு தெம்பு வந்ததுபோல உணர்வு

    நன்றி நண்பா தொடர்ந்து இதுபோல பதிவிடுங்கள்

    வாக்கியங்களும் அருமை

    ReplyDelete
  5. மாணவன் ..,ஒரு சிறிய கேள்வி ..,

    ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பாத்திரத்தில் முழுவதுவமாக தண்ணிரை நிரப்பி ஒரு ஐஸ் கட்டியை போட்டு விட்டால் ..,அது கரைந்த பிறகு ..,தண்ணீரின் கொள்ளளவு அதிகம் ஆகும்மா ? குறையுமா ?

    ReplyDelete
  6. //எவ்வளவு தைரியம், எவ்வளவு தன்னம்பிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான். அதனால்தான் மலையை கூட அசைக்க முடியும் என்று அவர் நம்பினார்.//

    உலகின் ஆச்சர்ய குறியீடு அவர்...

    ReplyDelete
  7. ஆர்க்கி மிட்டிஸைபற்றி படித்ததுமே நம்க்குள்ளும் தன்னம்பிக்கை உண்டாகும். அவ்வளவு அழக்காக தொகுத்து எழுதி இருக்கீங்க. நல்ல பதிவு.

    ReplyDelete
  8. பகிர்விற்கு நன்றி.. நல்ல தகவல்..
    (90 சதவிகிதம் எனக்கு தெரிந்த தகவல்.. ) நன்றி

    ReplyDelete
  9. ஆர்க்கிமிடீசின் கண்டுபிடிப்பு, யுரேகா, குளியலறையிலிருந்து அப்படியே ஓடி வருவது எல்லாம் பள்ளியில் படித்துள்ளேன். ஆனால் அந்த சிரகூஸ் மன்னர் பற்றிய தகவல்கள் புதிது! நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ஆர்க்கிமிடிஸ் பற்றி யுரேகா மாத்திரம்தான் தெரியும். இவ்வளவு விசயம் இருக்கா?

    ReplyDelete
  11. இப்படித்தான் எங்க ஊருல ஒரு இளைஞர் பாதி குளிக்கிறப்ப அப்படியே (அரை குறை ஆடையுடன்) ரோட்டுல ' யுரேகா யுரேகா ' கத்திக்கிட்டு போனாரு..
    அடாடா இவரு அடுத்த ஆர்க்கிமிடிஸ் போலன்னு நெனைச்சே என்னா விஷயம்னு பக்கத்து வீட்டுக்காரரக் கேட்டா அவர் சொன்னாரு..
    'அந்தாளும் ரேகானு ஒரு பொண்ணும் லவ் பண்ணாங்களாம்.. இப்ப ரேகா வீட்டுல சொன்ன வேறொரு ஆள திருமணம் செஞ்சிகிட்டதால இவர் மன நலம் குன்றி.. "யூ ரேகா, யூ ரேகா''(You, Reka) அப்படீன்னு பொலம்பிட்டுத் திரியறாரு.... '

    ReplyDelete
  12. அருமையான தகவலை தந்துள்ளீர்கள்

    ReplyDelete
  13. பயனுள்ள தகவல்களை அதிகம் தரும் தளமாக உங்கள் தளம் இருக்கிறது நண்பரே... அந்த வகையில் உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். தொடருங்கள்...

    ReplyDelete
  14. வரலாற்று நாயகர்கள் பதிவு படிக்க வேண்டிய பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பரே....

    இன்றைய என் பதிவை நீங்க படிச்சுட்டீங்களா?...............
    கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்

    ReplyDelete
  15. பயனுள்ள பதிவு...
    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  16. பனங்காட்டு நரி said...

    மாணவன் ..,ஒரு சிறிய கேள்வி ..,

    ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பாத்திரத்தில் முழுவதுவமாக தண்ணிரை நிரப்பி ஒரு ஐஸ் கட்டியை போட்டு விட்டால் ..,அது கரைந்த பிறகு ..,தண்ணீரின் கொள்ளளவு அதிகம் ஆகும்மா ? குறையுமா ?///

    எண்டா வாங்கி வச்ச சரக்கு குறையுதா?

    ReplyDelete
  17. நல்ல தகவல்கள், சுவராசியமான தொகுப்பு!

    ReplyDelete
  18. பயனுள்ள தகவல் .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  19. பயனுள்ள பதிவு...
    நன்றி...

    ReplyDelete
  20. ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான், உண்மை தான் சகோ வழக்கம் போல மாணவனில் ஒரு ஆசிரியர் இன்றும்... பயனுள்ள தகவல் .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  21. // பாரத்... பாரதி... said...
    யு...ரேகா...//

    வணக்கம் வாங்க பாரதி :)

    ReplyDelete
  22. //
    வேடந்தாங்கல் - கருன் said...
    பயனுள்ள பதிவு...
    பகிர்வுக்கு நன்றி...//

    நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  23. // Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
    Very Nice One!//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  24. // பாரத்... பாரதி... said...
    //நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்...//
    //ஞானம் மானத்தைவிட பெரியது//

    ஆர்க்கிமிடிஸ் சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, சிறந்த மெய்ஞானியும் கூட..//

    உண்மைதான் பாரதி... தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  25. //
    Speed Master said...
    சிறப்பான பதிவு

    படித்து முடுத்தவுடன் ஒரு தெம்பு வந்ததுபோல உணர்வு

    நன்றி நண்பா தொடர்ந்து இதுபோல பதிவிடுங்கள்

    வாக்கியங்களும் அருமை//

    கண்டிப்பாக உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவோடு தொடர்கிறேன் :)

    ReplyDelete
  26. ஆர்க்கிமிடிஸ் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    ReplyDelete
  27. பயனுள்ள பதிவு...
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  28. பனங்காட்டு நரி said...

    மாணவன் ..,ஒரு சிறிய கேள்வி ..,

    ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பாத்திரத்தில் முழுவதுவமாக தண்ணிரை நிரப்பி ஒரு ஐஸ் கட்டியை போட்டு விட்டால் ..,அது கரைந்த பிறகு ..,தண்ணீரின் கொள்ளளவு அதிகம் ஆகும்மா ? குறையுமா ?///

    எண்டா வாங்கி வச்ச சரக்கு குறையுதா?

    ReplyDelete
  29. நல்ல தகவல்கள், சுவராசியமான தொகுப்பு!

    ReplyDelete
  30. //தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும் போராடினால் நாம் விரும்பும் வாழ்க்கையையும் வானத்தையும் வசப்படுத்த முடியும்.//


    அழகாக எழுதி இருக்கீங்க. நல்ல பதிவு.

    ReplyDelete
  31. // பனங்காட்டு நரி said...
    மாணவன் ..,ஒரு சிறிய கேள்வி ..,

    ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பாத்திரத்தில் முழுவதுவமாக தண்ணிரை நிரப்பி ஒரு ஐஸ் கட்டியை போட்டு விட்டால் ..,அது கரைந்த பிறகு ..,தண்ணீரின் கொள்ளளவு அதிகம் ஆகும்மா ? குறையுமா ?//

    வாங்க மாமு வணக்கம்,

    வரும்போதே கேள்வியோட வந்துருக்கியா?? வெளங்கிடும்.... :))

    என்னை ஏதாவது வில்லங்கத்துல மாட்டி விடுறதுலயே இருயா நீ....

    நீ சயின்ஸ் படிச்சதுக்காக இப்படியா கேள்வி கேட்ப?

    இருங்க மாமு வேற யாராவது சொல்றாங்களான்னு பார்க்கலாம்...

    நண்பர்களே உங்களுக்கு யாருக்கேனும் விடை தெரிந்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள் நன்றி :)

    ReplyDelete
  32. // ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    COLLECTIVE INFORMATIONS......WELL WRITTEN.AS USUAL SUPERB///

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  33. //
    MANO நாஞ்சில் மனோ said...
    //எவ்வளவு தைரியம், எவ்வளவு தன்னம்பிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான். அதனால்தான் மலையை கூட அசைக்க முடியும் என்று அவர் நம்பினார்.//

    உலகின் ஆச்சர்ய குறியீடு அவர்...//

    உண்மைதான் நண்பரே

    ReplyDelete
  34. // Lakshmi said...
    ஆர்க்கி மிட்டிஸைபற்றி படித்ததுமே நம்க்குள்ளும் தன்னம்பிக்கை உண்டாகும். அவ்வளவு அழக்காக தொகுத்து எழுதி இருக்கீங்க. நல்ல பதிவு.//

    மிக்க நன்றிங்கம்மா :)

    ReplyDelete
  35. // Madhavan Srinivasagopalan said...
    பகிர்விற்கு நன்றி.. நல்ல தகவல்..
    (90 சதவிகிதம் எனக்கு தெரிந்த தகவல்.. ) நன்றி//

    நன்றிங்க சார்

    ReplyDelete
  36. // எஸ்.கே said...
    ஆர்க்கிமிடீசின் கண்டுபிடிப்பு, யுரேகா, குளியலறையிலிருந்து அப்படியே ஓடி வருவது எல்லாம் பள்ளியில் படித்துள்ளேன். ஆனால் அந்த சிரகூஸ் மன்னர் பற்றிய தகவல்கள் புதிது! நன்றி நண்பரே!//

    உண்மைதான் நண்பரே இவரைப்பற்றி முன்னமே பள்ளியில் படித்திருந்தாலும் சில தகவல்கள் புதுசாக தெரிந்துகொள்ளும்படி உள்ளது

    ReplyDelete
  37. // Mohamed Faaique said...
    ஆர்க்கிமிடிஸ் பற்றி யுரேகா மாத்திரம்தான் தெரியும். இவ்வளவு விசயம் இருக்கா?//

    ஆமாம் நண்பரே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  38. //
    கந்தசாமி. said...
    அருமையான தகவலை தந்துள்ளீர்கள்//

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  39. // சே.குமார் said...
    பயனுள்ள தகவல்களை அதிகம் தரும் தளமாக உங்கள் தளம் இருக்கிறது நண்பரே... அந்த வகையில் உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். தொடருங்கள்...//


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே :)

    ReplyDelete
  40. // ரஹீம் கஸாலி said...
    வரலாற்று நாயகர்கள் பதிவு படிக்க வேண்டிய பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பரே....//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  41. நன்றி சகொதரம் அத்தனை பெயர்களையும் நினைவுட்டினிர்கள்.. நன்றி நன்றி..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

    ReplyDelete
  42. மானவனுக்கும், ரேகாவுக்கும் என்ன கனெக்‌ஷன்? # பாரத் பாரதி பின்னூடம் ஹி ஹி

    ReplyDelete
  43. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. படிக்க ரொம்ப சுவராசியமாக இருந்தது. ஒரு சில தகவல்கள் புதிது.

    ReplyDelete
  45. அண்ணே வணக்கம்

    ReplyDelete
  46. முதன் முதலாக இந்த மாபெரும் மேதையை
    படிக்கிறேன் ...
    நல்ல விடயங்களை அறிந்து கொண்டேன்

    ReplyDelete
  47. நல்ல தகவல்களை நாள்தோறும் வழங்கி வரும் உங்களுக்கு
    என் நெஞ்சார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  48. எங்களுக்குத் தெரியாத எவ்வளவு விஷயங்களை சொல்லியிருக்கீங்க... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    ReplyDelete
  49. //கடைசியாக கிரீடத்தை தண்ணீரில் போட்டு எவ்வளவு தண்ணீர் வெளியாகிறது என்று பார்த்தார் அது சுத்த தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் சுத்த தங்கம் வெளியேற்றிய அதே அளவு நீரைத்தான் கிரீடமும் வெளியேற்றிருக்க வேண்டும்.//

    அண்னே ஒரு சந்தேகம்... பேசாம கீரிடத்த எடை போட்டு அந்த எடைய தங்கம் + வெள்ளி எடைகூட ஒப்பிட்டு பார்த்தா பத்தாதா? அதுக்கு ஏன் துணி இல்லாம ரோட்ல ஓடனும்????

    ReplyDelete
  50. நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்...


    ....அவர் செய்தாலும் செய்து இருப்பார். அவரை குறித்த சுவாரசியமான தகவல்கள் தொகுத்து தந்துள்ளதற்கு நன்றிங்க.

    ReplyDelete
  51. அரிய தகவல்களை அள்ளித்தந்தமைக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..! தொடருங்கள் மாணவன் அவர்களே.!

    ReplyDelete
  52. பயனுள்ள பதிவு...நன்றி.

    ReplyDelete
  53. மிக அருமை தெளிவான விளக்கங்கள்.

    ReplyDelete
  54. இந்தக் கட்டுரைகளை சிங்கப்பூர் வானொலியில் அழகிய பாண்டியன் சில வருடங்களுக்கு முன்னால் எழுதியவை என்று என் நண்பர் சொல்கிறார். அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் நல்ல படைப்பு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  55. ஆஹா ரொம்ப நீட்டான தொகுப்பு

    ReplyDelete
  56. மிகவும் பயனுள்ள பதிவு மாணவன்.. நன்றிங்க..

    ReplyDelete
  57. //ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பாத்திரத்தில் முழுவதுவமாக தண்ணிரை நிரப்பி ஒரு ஐஸ் கட்டியை போட்டு விட்டால் ..,அது கரைந்த பிறகு ..,தண்ணீரின் கொள்ளளவு அதிகம் ஆகும்மா ? குறையுமா ?//


    மாற்றம் இருக்காது.

    முழுவதும் நிரம்பிய பாத்திரத்தில் ஐஸ்கட்டியை போடும் போது, அதன் எடைக்கு சமமான அளவு நீர் உடனடியாக வெளியேறிவிடும்.

    ஐஸ் கரையும் போது நீர் அதே அளவில் தான் இருக்கும்.

    ReplyDelete
  58. ஆர்க்மிடிஸ் பற்றி இவ்வளவு விரிவாக இங்குதான் தெரிந்துகொண்டேன். நன்றி.

    என் தளத்திற்கும் மாணவன் வரலாம் தடையேதுமில்லை.
    http://tmaideen.blogspot.com/2011/03/c.html

    ReplyDelete
  59. [ma]நல்ல தகவல் அண்ணா [/ma]

    ReplyDelete
  60. நிறைய தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு
    நன்றி மாணவன்

    இருந்தும் ஒரு கேள்வி , தங்கள் பெயர் என்ன? தெரிந்து கொள்ளலாமா? யுரேகா என்று சொல்ல வைத்து விடாதீர்கள் :-)


    ஜேகே

    ReplyDelete
  61. கிரீடத்தில் கலப்பு இருந்தது உண்மை, ஏனென்றால் தூய தங்கத்தில் அணிகலன்கள் செய்யவே முடியாது, ஆகையால் போர்க் கொள்ளார் மேல் தரேதும் இல்லை என்று மன்னித்து விடச் சொல்லி, அதை மன்னரும் ஏற்றுக் கொண்டதாக சிலர் சொல்கிறார்கள்.

    On Blotting Bodies-இந்த தலைப்பு ஒரு வேளை On Floating Bodies ஆக இருக்கக் கூடும். சரியாகத் தெரியவில்லை.

    \\லிவர், புலி என்ற அமைப்புகளை உருவாக்கி\\ இதில் புலி என்பது ஆங்கிலத்தில் Pulley ஆகும், இதை அடைப்புக் குறிக்குள் போட்டால் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

    \\நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்...\\ நிற்ப்பதற்கு இடமும் [இடம் மட்டுமல்ல], ஒரு பெரிய நெம்புகோலையும் கொடுங்கள் இந்த புவியை அசைத்துக் காட்டுகிறேன் என்று சொன்னார், இது நெம்புகோல் தத்துவம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை காட்டுவதற்காகச் சொன்னார்.

    ReplyDelete
  62. கிரீடத்தில் கலப்பு இருந்தது உண்மை, ஏனென்றால் தூய தங்கத்தில் அணிகலன்கள் செய்யவே முடியாது, ஆகையால் பொற்கொல்லர் மேல் தவறேதும் இல்லை என்று மன்னித்து விடச் சொல்லி, அதை மன்னரும் ஏற்றுக் கொண்டதாக சிலர் சொல்கிறார்கள்.

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.