Friday, February 11, 2011

தாமஸ் ஆல்வா எடிசன் - வரலாற்று நாயகர்! (பிறந்த நாள் வாழ்த்து சமர்ப்பனம்)

வணக்கம் நண்பர்களே, இன்று அறிவியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஆம் தன் வாழ்நாள் முழுவதும் ஆராய்ட்சிக்காகவும் கண்டுபிடிப்புக்காகவும் அர்ப்பனித்து சுமார் 1300 கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய கண்டுபிடிப்புகளின் தந்தை என வரலாறு போற்றும் அறிவியல் உலகின் ஈடு இனையற்ற விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் பிறந்த நாள். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பதிவு ஒரு சமர்ப்பனம்.


Genius is
1% Inspiration and
 99% perspiration
அதாவது மதிநுட்பம் என்பது 1 விழுக்காடு ஊக்கம் 99 விழுக்காடு வியர்வை என்ற புகழ்பெற்ற பொன்மொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் தெரிந்துகொள்ள இருப்பவர் வேறு யாருமல்ல அந்த பொன்மொழியை கூறியவரும் வாழ்ந்துகாட்டியவருமான ஈடு இனையற்ற கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன்.


ஓர் ஏழை அமெரிக்க குடும்பத்தில் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ந்தேதி பிறந்தார் எடிசன். பள்ளியில் அவர் மந்தமாக இருந்த்தால் படிப்பு ஏறவில்லை ஆனால் இயற்கையிலேயே எதைப் பார்த்தாலும் ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்பதோடு ஆராய்ச்சி செய்து பார்க்கும் துறுதுறுப்பு அவரிடம் இருந்தது.
ஒருமுறை கோழி அடைகாத்து குஞ்சு பொறிப்பதை பார்த்து தானும் முட்டைகள் மேல் அமர்ந்து குஞ்சு பிறக்குமா? என்று முயன்று பார்த்திருக்கிறார் எடிசன். நமக்கு நகைப்பாக இருக்கலாம். ஆனால் பிஞ்சு வயதிலேயே கேள்வி கேட்கும் அவரின் செயல்பாடுகள்தான் பிற்காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்த அவருக்கு உதவியது.


ஆரம்பித்திலேயே எடிசன் பள்ளியைவிட்டு வெளியேறியதால் அவர் இரயில் வண்டியில் செய்த்தித்தாள் விற்கும் வேலை பார்க்கத்தொடங்கினார். அங்கும்கூட அவர் ஒரு ரயில்பெட்டியில் ஒரு சிறு அச்சு இயந்திரத்தை வைத்து தானே செய்தித்தாள்களை தயாரிக்கத் தொடங்கினார். மேலும் இரயில் வண்டியின் ஒரு சிறிய ஆராய்ட்சி கூடத்தை உருவாக்கி நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெவ்வேறு ஆராய்ட்சிகளை செய்துபார்ப்பார்.
ஒருமுறை இரயில் குலுங்கி நின்றபோது அவரது ஆய்வுகூட்த்தில் இருந்த பாஸ்பரஸ் கீழே கொட்டி இரயில்பெட்டி தீப்பிடித்துக்கொண்டது. ஆத்திரமடைந்த இரயில் அதிகாரி எடிசனின் அச்சு இயந்திரத்தையும், ஆய்வுகூடப் பொருட்களையும் வீசி எறிந்ததோடு, எடிசனின் கன்னத்தில் தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அறைந்தார். அந்த அடியின் தாக்கத்தால் எடிசனுக்கு வாழ்நாள் முழுவதும் ஒருபக்கம் காதுகேளாமல் போனது என்பது வரலாற்று உண்மை.


அந்த அதிகாரியால் எடிசனின் உடலில் மட்டும்தான் காயம் விளைவிக்க முடிந்ததே தவிர அவரின் உள்ளத்தையும் வைராக்கியத்தையும் துளிகூட அசைக்க முடியவில்லை. அந்த விபத்து நிகழ்ந்த அதே இரயில் நிலையத்தில் ஒரு சிறுவன் தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனை நோக்கி ஒரு ரயில்வண்டி விரைவதைக்கண்ட எடிசன் தான் கையிலிருந்த செய்தித்தாள்களை தூக்கி எறிந்துவிட்டு ஓடிப்போய் தகுந்த நேரத்தில் அந்த சிறுவனைக் காப்பாற்றினார்.


அந்த ரயில் நிலையத்தின் தலைமை அதிகாரியான அச்சிறுவனின் தந்தை மகிழ்ந்துபோய் எடிசனுக்கு நன்றி சொன்னதோடு அவருக்கு தந்தி அனுப்பும் முறையை கற்றுக்கொடுத்தார். அதனை விரைவாக கற்றுக்கொண்ட எடிசன் தந்தி அனுப்பும் வேலைக்கு மாறினார். அந்த வேலையில் சேர்ந்தபிறகுதான் அவர் ஒவ்வொரு கண்டுபிடிப்பாக நிகழ்த்த தொடங்கினார்.


உதாரணத்திற்கு இரவு நேரங்களில் இரயில் அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் சமிக்ஞை அனுப்ப வேண்டிய அவசியம் இருந்த்து. அதனை ஏன் தானியக்க மயமாக்ககூடாது என்று சிந்தித்த எடிசன் அந்த முறையை கண்டுபிடித்தார். பின்னர் ஒரு முறை ரயில் நிலையத்தில் இருந்தபோது அங்கு எலித்தொல்லை அதிகமாய் இருப்பதை பார்த்தார். உடனே எலிகளை செயலிழக்க செய்யும் கருவியை கண்டுபிடித்தார். இப்படி பார்வையில் பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் அவர் தீர்வு காணத்தொடங்கினார்.


1876 ல் அவர் மெட்னோ பார்க்கில் புகழ்பெற்ற தனது ஆராய்ட்சிகூடத்தை அமைத்தார். அந்த ஆராய்ட்சிகூடத்தில்தான் உலகம் போற்றும் பல கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தினார். அலெக்ஸாண்டர் கிரகம்பெல் உருவாக்கிய தொலைபேசியை காவர் டிரான்ஸ்மிட்டர் என்ற பாகத்தை கண்டுபிடித்தன் மூலம் எடிசன்தான் செம்மைப் படுத்தினார். அதன்பிறகு ஃபோனோகிராப் என்ற குரல் பதிவு கருவியை கண்டுபிடித்து அறிவியல் உலகையே வியப்பில் ஆழ்த்தினார் எடிசன்.
எடிசனின் கண்டுபிடிப்பிகளிலேயே ஃபோனோகிராப்தான் ஆக பிரசித்திப்பெற்றதாக கருதப்படுகிறது. ஒலிக்கான சாதனத்தை உருவாக்கியபிறகு அவரது கவணம் ஒளியின் பக்கம் திரும்பியது. மின்விளக்குகளைப்பற்றி ஆராயத் தொடங்கினார் ஒரே மின்னலையில் பல விளக்குகளை ஒளிரச் செய்ய முடியுமா? என எடிசன் சிந்தித்தார். நிச்சயம் முடியாது என்று அடித்துக்கூறினர் சமகால விஞ்ஞானிகள்.   


ஆனால் முடியாது என்ற சொல்லையே தனது அகராதியிலிருந்து அகற்றியிருந்த எடிசனுக்கு அது தீர்க்ககூடிய சவாலாகவேபட்டது. அவரும் அவரது 50 உதவியாளர்களும் பணியில் இறங்கினர். எடிசனுக்கு தேவைப்பட்டது மின்சக்தியின் தாக்கத்தை தாங்ககூடிய அதே நேரத்தில் சுற்றளவு குறைவாக உள்ள ஒளிரும் ஒரு பொருள் அதாவது விளக்குகளின் உட்பகுதியில் உள்ள ஃபிளமெண்ட். பல்வேறு கனிமங்களை கொண்டு கிட்டதட்ட 1500 சோதனைகளை செய்துபார்த்தார் எடிசன்.
அதன்மூலம் மின் விளக்குகளைப்பற்றி ஒன்றல்ல இரண்டல்ல சுமார் மூவாயிரம் கோட்பாடுகளை வகுத்தார். அவற்றுள் ஒரே ஒரு கோட்பாடுதான் அவர் தேடிய விடையைத் தரக்கூடியாதாக இருந்த்து. ஒரு நூலிழையில் கார்பன் சேர்த்து ஐந்து மணிநேரம் தீயில் சூடுகாட்டி பின்னர் குளிரவைத்தார். அந்த கார்பன் இழையை காற்று அடைப்பட்ட ஒரு கண்ணாடிக்குள் வைத்து அதனுள் மின்சாரம் பாய்ச்சிபார்ப்பதுதான் எடிசனின் நோக்கம்.


அந்த கார்பன் இழை மிகவும் மெல்லியதாக இருந்ததால் பலமுறை ஒடிந்துபோனது. ஆனால் ஒடியவில்லை எடிசனின் தன்னம்பிக்கை. பலமுறை முயன்று கடைசியாக அந்த கார்பன் இழையை ஒடியாமல் கண்ணாடிக்குள் வைத்து மின் விசையை அழுத்தினார். மின் விளக்கு எறிந்தது. சமகால விஞ்ஞானிகளின் கூற்று சரிந்தது. எடிசனின் அதீத திறமை உலகுக்கு புரிந்தது.
நமக்கு மின்ஒளி கிடைத்த அந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் 1879 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள். அதன்பிறகு டைனோமோ, பல்வேறு அளக்கும் கருவிகள், சினிமா கேமராவின் முன்னோடியான கெனோட்டோகிராப், எக்ஸ்ரே படங்களை பார்க்க உதவும் கருவிகள் என அவரது கண்டுபிடிப்புகள் தொய்வின்றி தொடர்ந்தன. 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ந்தேதி 86 ஆவது வயதில் அவரது உயிர் பிரிந்தது, அதுவரை ஆராய்ட்ச்சியும் கண்டுபிடிப்புமே அவரது உயிர் மூச்சாக இருந்தன.


தன் வாழ்நாளில் அவர் நிகழ்த்திய மொத்த கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?? 1300 சரித்திரத்தில் வேறு எந்த கண்டுபிடிப்பாளரும் கிட்டகூட நெருங்க முடியாத எண்ணிக்கை அது. அதனால்தான் அவரை கண்டுபிடிப்புகளின் தந்தை என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு.


எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகளை செய்த தாமஸ் ஆல்வா எடிசனின் தாரக மந்திரம் என்ன தெரியுமா? அதனை அவரே ஒரு முறை கூறினார் இவ்வாறு:


வாழ்க்கைய அழிக்ககூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன் ஏனெனில் மக்களை மகிழ்விக்க வேண்டுமென்பதே எனது நோக்கம்   
அந்த உயரிய நல்ல நோக்கத்தின் அளவிடமுடியாத பலன்களை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.அடுத்த முறை நீங்கள் மின்விளக்கு விசையை அழுத்தும்போது எடிசனுக்கு நன்றி சொல்லுங்கள்! ஏனெனில் நீங்கள் அந்த மின் விசையை அழுத்தும்போது உங்களை சுற்றியுள்ள இருளை போக்குவதும் ஒளியை தருவதும் அன்று எடிசன் சிந்திய வியர்வைதான்.
எடிசன் செய்து காட்டியதுபோல 1 விழுக்காடு ஊக்கத்தை முதலீடு செய்து 99 விழுக்காடு வியர்வையை சிந்த நீங்கள் தயாராக இருந்தால் உங்களுக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.


(தகவலில் உதவி - நன்றி திரு. அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

"பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே"

என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

62 comments:

  1. எடிசனின் வாழ்க்கை அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித இனத்திற்கே ஒரு பாடம்.. சாதிக்க விரும்பும் சாமானியனுக்கு தூண்டுகோல்..

    ReplyDelete
  2. எடிசனின் அறிவியல் கண்டிப்பிடிப்புகளை இந்த உலகம் என்று நினைவு கூறும்...

    நல்ல பதிவு.. நன்றி..

    ReplyDelete
  3. அவர் வாழ்க்கையில் நடந்த சின்ன சின்ன விஷயங்களை கூட தொகுத்து அவர் கடந்து வந்த பாதையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...
    சொதனையில் தான் மனிதன் மெருகேற்றப்படுகிறான்..

    ReplyDelete
  4. அருமையான தொகுப்பு மாணவரே..

    பகிர்வுக்கு மிக்க நன்றி.. .

    ReplyDelete
  5. நல்ல பதிவு அனைவரையும் சென்றடைய அனைத்திலும் ஓட்டு போட்டு விட்டேன்..

    ReplyDelete
  6. எடிசனின் வாழ்க்கை அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித இனத்திற்கே ஒரு பாடம்.. சாதிக்க விரும்பும் சாமானியனுக்கு தூண்டுகோல்..

    ReplyDelete
  7. எடிசனின் வாழ்க்கை அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித இனத்திற்கே ஒரு பாடம்.. சாதிக்க விரும்பும் சாமானியனுக்கு தூண்டுகோல்..

    ReplyDelete
  8. எடிசனின் அறிவியல் கண்டிப்பிடிப்புகளை இந்த உலகம் என்று நினைவு கூறும்...

    நல்ல பதிவு.. நன்றி..

    ReplyDelete
  9. நல்ல பதிவு அனைவரையும் சென்றடைய அனைத்திலும் ஓட்டு போட்டு விட்டேன்..

    ReplyDelete
  10. அருமையான பதிவு மக்கா வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  11. நல்ல பதிவு அனைவரையும் சென்றடைய அனைத்திலும் ஓட்டு போட்டு விட்டேன்..//

    அப்ப படிகல

    ReplyDelete
  12. அருமையான பதிவு மாணவன்
    அருமை

    ReplyDelete
  13. அருமையான தொகுப்பு மாணவரே..

    பகிர்வுக்கு மிக்க நன்றி.. .
    //



    நன்னி - கமென்ஸ் உதவி ”வெறும்பய”.. சிங்கை

    ReplyDelete
  14. தொகுத்த விதம் அருமை.. தொகுத்தமைக்கும், அளித்தமைக்கும் மிக்க நன்றி மாணவன் அவர்களே..!

    ReplyDelete
  15. எலேய்...........இது மீள் பதிவா?

    ReplyDelete
  16. எடிசனின் அறிவியல் கண்டிப்பிடிப்புகளை இந்த உலகம் என்று நினைவு கூறும்...

    நல்ல பதிவு.. நன்றி.

    ReplyDelete
  17. எடிசனின் வாழ்க்கை அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித இனத்திற்கே ஒரு பாடம்.. சாதிக்க விரும்பும் சாமானியனுக்கு தூண்டுகோல்.

    ReplyDelete
  18. அருமையான தொகுப்பு மாணவரே..

    பகிர்வுக்கு மிக்க நன்றி.. .

    நன்னி - கமென்ஸ் உதவி ”வெறும்பய”.. சிங்கை

    நன்றி - கமென்ட் உதவி பட்டாஜி - சிங்கை

    ReplyDelete
  19. WISH YOU HAPPY BIRTHDAY

    UNCLE

    THAMAS

    ReplyDelete
  20. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    தாத்தா தமாஸ்

    ReplyDelete
  21. அய்யா ஆற்காடு வீராசாமியின் இருட்டறை பாசறை சார்பில் தாமஸ் ஆழ்வார் எடிசனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்..

    ReplyDelete
  22. அற்புதமான பதிவு நண்பரே!

    ReplyDelete
  23. அடேங்கப்பா எம்பூட்டு நீளம்

    ReplyDelete
  24. அற்புதமான பதிவு. எடிசன் பற்றி தெரியாத சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி

    ReplyDelete
  25. மிக சிறந்த புத்தமைப்பாளர் எடிசன் .
    அவருக்கு ஹாப்பி பர்த்டே .........

    ReplyDelete
  26. எடிசனின் வாழ்க்கை அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித இனத்திற்கே ஒரு பாடம்.. சாதிக்க விரும்பும் சாமானியனுக்கு தூண்டுகோல்..

    ReplyDelete
  27. அருமையான தொகுப்பு....பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  28. பகிர்விற்கு பாராட்டுகள். நினைக்கப்படவேண்டிய ஒரு மனிதர்.

    ReplyDelete
  29. நீங்கள், உங்கள் ப்லாக் குக்கு "ஆசிரியன்" என்றே பெயர் வைத்து இருக்கலாம் .... அத்தனை விஷயங்கள், சொல்லி தரீங்க!

    ReplyDelete
  30. “வாழ்க்கைய அழிக்ககூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன் ஏனெனில் மக்களை மகிழ்விக்க வேண்டுமென்பதே எனது நோக்கம்” //
    மிக சிறந்த மனிதர்தான்.

    ReplyDelete
  31. அந்த மாமேதைக்கு என் வாழ்த்தும் மரியாதையும்.... அப்படிப்பட்ட மேதையின் பிறந்த தினம் தான் என் மணநாளும்... என்பது எனக்கு பெருமையே!

    ReplyDelete
  32. பல அரியத் தகவல்கள் அடங்கிய பகிர்வு நண்பா..!!! மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து இருக்கீங்க..!! தொடரட்டும் தங்கள் பொன்னான சேவை.

    ReplyDelete
  33. எடிசனின் அறிவியல் கண்டு பிடிப்புகள் அனைவருக்குமே பயன்படக்கூடியவை பயனடைந்துகொண்டும் இருக்கிரோம்.

    ReplyDelete
  34. அருமையான தொகுப்பு மாணவா..
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  35. அருமையான தொகுப்பு மாணவா..

    //“வாழ்க்கைய அழிக்ககூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன் ஏனெனில் மக்களை மகிழ்விக்க வேண்டுமென்பதே எனது நோக்கம்” //

    போற்றவும், பின்பற்றவும் வேண்டிய எண்ணங்கள்..

    மிக்க நன்றி மாணவரே.. இந்தப் பதிவிற்கு

    ReplyDelete
  36. எடிசன் வாழ்க்கையை திரும்ப பார்த்த உணர்வு. அருமை அண்ணா.!!!

    ReplyDelete
  37. .

    அருமையான தொகுப்பு மாணவரே..

    பகிர்வுக்கு மிக்க நன்றி.. .

    நன்னி - கமென்ஸ் உதவி ”வெறும்பய”.. சிங்கை

    நன்றி - கமென்ட் உதவி பட்டாஜி - சிங்கை

    நன்றி- கமெண்ட்ஸ் உதவி வைகை-சிங்கை

    ReplyDelete
  38. தொடரட்டும் உங்கள் பிரகாசமான பணி!

    ReplyDelete
  39. பகிர்விற்கு பாராட்டுகள்..
    நல்ல பதிவு.. நன்றி

    ReplyDelete
  40. ஐ..வாழைப்பழம் எனக்கு..நான் தானே கடைசி கமெண்டு

    ReplyDelete
  41. கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்

    ReplyDelete
  42. மாணவனே,

    இதன் ஒலியாக்கம் - ஒலி 96.8 வானொலி வழி, திரு.அழகியபாண்டியன் அவர்களின் குரலில் கேட்டிருக்கிறேன்.

    பதிவிட்டு பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  43. மிக நல்ல பகிர்வு மாணவன்.

    ReplyDelete
  44. நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  45. உலகம் உள்ளவரை மறக்கக் கூடாதவர்களில் மிக முக்கியமானவர்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

    ReplyDelete
  46. உங்களை தொடர்ந்து வலைச்சரம் ஆசிரியராக நான் பணிபுரிகிறேன். வந்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள் சிம்பு@மாணவன் இதையும் படிங்க சார் ஹையா....நானும் வலைச்சரத்தில் வந்துட்டேன்ல......

    ReplyDelete
  47. என்ன மாணவன் வாத்தியாரைப் பார்க்க வருவதில்லை...

    ReplyDelete
  48. // பாரத்... பாரதி... said...
    வந்தாச்சு...//

    வாங்க பாரதி... வணக்கம் :)

    ReplyDelete
  49. // பாரத்... பாரதி... said...
    எடிசனின் வாழ்க்கை அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித இனத்திற்கே ஒரு பாடம்.. சாதிக்க விரும்பும் சாமானியனுக்கு தூண்டுகோல்..//

    உண்மைதான் பாரதி கருத்துக்கு மிக்க நன்றிங்க பாரதி :)

    ReplyDelete
  50. //# கவிதை வீதி # சௌந்தர் said...
    எடிசனின் அறிவியல் கண்டிப்பிடிப்புகளை இந்த உலகம் என்று நினைவு கூறும்...

    நல்ல பதிவு.. நன்றி..//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  51. // # கவிதை வீதி # சௌந்தர் said...
    அவர் வாழ்க்கையில் நடந்த சின்ன சின்ன விஷயங்களை கூட தொகுத்து அவர் கடந்து வந்த பாதையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...
    சொதனையில் தான் மனிதன் மெருகேற்றப்படுகிறான்..//

    ஆமாம் நண்பரே எடிசன் சாதிப்பதற்கு காரணமாய் அமைந்ததுகூட அவர் வாழ்க்கையில் நடந்த சோதனைதான் ..

    நன்றி நண்பரே

    ReplyDelete
  52. // வெறும்பய said...
    அருமையான தொகுப்பு மாணவரே..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..//

    வாங்கண்ணே, நன்றி

    ReplyDelete
  53. // # கவிதை வீதி # சௌந்தர் said...
    நல்ல பதிவு அனைவரையும் சென்றடைய அனைத்திலும் ஓட்டு போட்டு விட்டேன்..//

    நன்றி :)

    ReplyDelete
  54. //
    sakthistudycentre-கருன் said...
    எடிசனின் வாழ்க்கை அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித இனத்திற்கே ஒரு பாடம்.. சாதிக்க விரும்பும் சாமானியனுக்கு தூண்டுகோல்..//

    நன்றிங்க ஆசிரியரே... :))

    ReplyDelete
  55. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    எடிசனின் வாழ்க்கை அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித இனத்திற்கே ஒரு பாடம்.. சாதிக்க விரும்பும் சாமானியனுக்கு தூண்டுகோல்..//

    :))

    ReplyDelete
  56. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    எடிசனின் அறிவியல் கண்டிப்பிடிப்புகளை இந்த உலகம் என்று நினைவு கூறும்...

    நல்ல பதிவு.. நன்றி..//

    தங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி :))

    ReplyDelete
  57. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    எடிசனின் அறிவியல் கண்டிப்பிடிப்புகளை இந்த உலகம் என்று நினைவு கூறும்...

    நல்ல பதிவு.. நன்றி..//

    தங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி :))

    ReplyDelete
  58. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    நல்ல பதிவு அனைவரையும் சென்றடைய அனைத்திலும் ஓட்டு போட்டு விட்டேன்..///

    அடப்பாவி....:))

    ReplyDelete
  59. Hi frnd...
    urs this post is really nice and useful.. i copied this in my blog with ur name and blog address...
    if u have any objection i ll remove...
    thank u..
    http://siddubookmarks.blogspot.com/

    ReplyDelete
  60. Your playful kids have toys everywhere! They don't want to study, just want to do what they like? the impossible game will be a solution for you, with entertaining but rewarding games for children. In addition, here you can also find hundreds of other interesting games that are just right for you!

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.