Sunday, November 28, 2010

தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்.....

இசையின் கடவுள் ராகதேவனின் பொற்பாதங்கள் தொட்டு வணங்கி இந்த பாடல் [பதிவை] எழுதுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்....


படத்தைப்பற்றி நிறைய நண்பர்கள் விமர்சனம் எழுதி விட்டார்கள், ஆயினும் என்னுள் இன்னும் உணர்வுகளாக ஒலித்துக்கொண்டிருக்கும் ராசைய்யாவின் தாலாட்டைப் பற்றி ஒரு சிறு முயற்சி இந்த பதிவு, ஏதேனும் குறைகள் எழுத்துப் பிழைகள் இருப்பினும் இந்த மாணவனை மன்னித்தருள்க!

இதோ ராசைய்யாவின் இசைத்தாலாட்டு:

(தாலட்டைக் கேட்க கேஸட்டை PLAY பன்னுங்க)


தாலாட்டின் வரிகள்:

தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.........
தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!

என்னை ஒரு பாரமென்றா சுமந்து நீ காத்திருந்த...
உனக்கு நான் பாரமென்று  எதுக்கு நீ தள்ளிவச்ச 
சங்கிலியால் என்ன கட்டி வச்ச காலம் உண்டு
சங்கிலியால் நீயே கட்டிக்கொண்ட நியாயம்தா...
உன்மேலே என்ன காயம் 
என் நெஞ்சில் வலி கூடும்!
அன்பே ஒரு துன்பமா!

தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.......

தொட்டிலிலே தூளி வக்க உன்வயசு தோது இல்ல
உன்ன விட்டு ஒதுங்கவும் எம்மனசு கேட்கவில்ல
பிள்ளப் பெத்த நோவ எந்த பிள்ளத் தீர்த்ததண்டு
அம்மா என்னும் பூவ பொத்திக் காக்க நானும் உண்டு
அம்மா உந்தன் அம்மா வந்தால் இங்கே அம்மா
பிள்ளை எந்தன் அன்பிலே!

தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.......

தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!

இந்தப் பாடலைக் கேட்கும்போது நம்மையறியாமல் கண்கள் குளமாவதைத் தடுக்க முடியாது, அந்தளவுக்கு நெகிழ்ச்சியும் உணர்வுகளும் கலந்து நம்மை உருக்கமாய் உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார் ராகதேவன் பாடல்களுக்கு இடையே வரும்( interlude) இசை கூட நம்மை ஏதோ செய்கிறது, மற்றொன்று ராகதேவனின் குரல்,இந்தப் பாடலை ராஜாவைத்தவிர வேறு பாடகர்கள் பாடினால் இந்தளவுக்கு நம்மை உருக்கமாய் நெகிழவைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான், அந்தளவுக்கு ராஜாவின் குரலும் ஜீவனும்  நம்மை கட்டிப்போடுகிறது. அதுவும் தாயைப் பற்றிய பாடல் என்றால் கேட்கவே வேண்டாம் ராஜா ராஜாதான் அன்றும் இன்றும் என்றும்....
சமீப காலமாக ராகதேவனின் இசை அவ்வளவாக பேசப்படவில்லை என்று சிலர் குறைகூறிக் கொண்டு இருந்தார்கள், இது ராகதேவனின் ரசிகர்களாகிய எங்களுக்கும் ஒரு குறையாகவும் சற்று வருத்தமாகவும் இருந்தது, இதற்கெல்லாம் தனது இசையால் பதிலடி கொடுத்து  தன்னை யாரென்று மீண்டும் நிருபித்துவிட்டார் இசைஞானி....சிறந்த படைப்பும் கதைக்களமும் அமைந்தால் இசையில் என்றுமே தன்னை யாரும் அசைக்க முடியாது என்பது இசைஞானியின் பலம்...

அடுத்த வருடம் தேசிய விருது நிச்சயம் ராஜாவுக்கு உண்டு
இசைஞானியை குறை சொல்பவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்றுதான் சொல்லிக்கொள்கிறோம்:  
“நத்திங் பட் இளையராஜா”
     NOTHING BUT ILAYARAJA
தமிழிசையின் கடைசி சத்தம் கேட்கும் வரை ராஜா வாழ்ந்துகொண்டிருப்பார் தனது இசையால்!  “இசைஞானி=இசை”  He Is Music.

இசைஞானியின் ஒரு சிறிய வரலாற்றுக் கானொளி:


1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தனது இசைப் பயணத்தைத் தொடங்கி இன்று வரை இசையோடு இசையாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜீவணை பாராட்டவும் வாழ்த்தவும் வயதில்லை வணங்குகிறேன் இசையின் கடவுளை...!

பாரட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள் சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

38 comments:

  1. எத்தனை பாடகர்கள் இருப்பினும்..இதயத்தை ஏதோ செய்யும் பாடகர்களில் யேசுதாஸ் மற்றும் இளையராஜாவை மிஞ்ச எவருமில்லை! மிக்க நன்றி!

    ReplyDelete
  2. படத்தை பார்க்கவில்லை.. உம்.. இந்த வாரம் பார்க்க, ட்ரை பண்ணனும்...

    ReplyDelete
  3. ராஜாவின் திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை!! செவிடர்களுக்கு வேணா தெரியாமல் இருக்கலாம்!!!!

    ReplyDelete
  4. நல்ல பதிவு நண்பரே…அருமையான பதிவு..பாடல் எழுதியதும் இளையராஜாவா?

    ----- செங்கோவி

    ReplyDelete
  5. நல்ல பாடல்...

    கேட்கும் போது இனம்புரியாத உணர்வு மனதில் பிறக்கிறது

    அருமையான பதிவு

    ReplyDelete
  6. தனிமையில் இந்த பாட்டை கேட்டு என்னையறியாமால் அழுதிருக்கிறேன் இப்போது மீண்டும் என்னையறியாமல் கண் கலங்கினேன்

    ஞாபகபடுத்துதலுக்கு நன்றி

    எப்பவும் மனதை பிசையும் இசையை தருவதில் ராஜா ராஜாதான் ஆனால் அவருக்கு தான் இந்த உலகம் சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை அவருடைய சமீபத்திய சிம்பொனி இசையை கேட்டு வெளிநாட்டுகாரர்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள்

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இசை பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது.
    ஆனால் இளையராஜா குரலில் எப்பொழுதும் மெய் மறந்து போவேன்.

    ReplyDelete
  10. காலம் தாழ்த்தி நான்(இந்த பதிவுக்கு)
    இங்கே வந்ததற்கு மன்னிக்க
    மனதை பிசையும் இசையை வேறு யாரால் தர இயலும் என் இசைஞானியை தவிர

    ReplyDelete
  11. உங்கள் தளம் திற்க்கும் போது கூடவே ஒரு பாப் அப் திறக்கிறதே அது எனக்கு மட்டும் தான் திறக்கிறதா அல்லது நீங்களும் இந்த பிரச்சினையை சந்தித்திருக்கிறீர்களா?

    ReplyDelete
  12. சமீபத்தில் நண்பர்கள் அனைவரும் நந்தலாலா படம் பார்த்து அந்த நெகிழ்வின் பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரமுடியவில்லை,
    //

    என்னா பாஸ்.. எல்லொரும் உருகி உருகி எழுதியிருக்காங்க.. இன்னும் படம் பார்க்கலே...உம்.. பார்ப்போம்

    ReplyDelete
  13. ராஜா ....எப்போதும் ்ராஜா தான்....

    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. இளையராஜாவின் இசை தெய்வீக இசை

    ReplyDelete
  15. @சிவகுமார்
    //எத்தனை பாடகர்கள் இருப்பினும்..இதயத்தை ஏதோ செய்யும் பாடகர்களில் யேசுதாஸ் மற்றும் இளையராஜாவை மிஞ்ச எவருமில்லை! மிக்க நன்றி! //

    உண்மைதான் நண்பா இவர்களின் குரலில் ஒரு ஜீவன் இருக்கும் அது நம்மையறிமாலும் மனதை கரைத்து விடும்,

    தங்களின் வருகைக்கு கருத்துக்கும் மிகவும் நன்றி நண்பா

    ReplyDelete
  16. @பட்டாபட்டி..

    வாங்க சார், சீக்கிரம் படத்தைப் பாருங்கள் முடிந்தால் உங்கள் விமர்சனத்தையும் எழுதுங்கள்,

    நன்றி

    ReplyDelete
  17. @வைகை

    //ராஜாவின் திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை!! செவிடர்களுக்கு வேணா தெரியாமல் இருக்கலாம்!!!! //

    ஆயினும் சிலர் குறைக்கூறிகொண்டுதான் இருக்கிறார்கள் என்ன செய்வது அவர்களின் ரசனை அப்படி,
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணே.

    ReplyDelete
  18. @செங்கோவி
    //நல்ல பதிவு நண்பரே…அருமையான பதிவு..பாடல் எழுதியதும் இளையராஜாவா?//

    ஆம் நண்பரே, இசைஞானிதான்...
    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா,

    தொடர்ந்து இணைந்திருங்கள்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  19. @ஆமினா
    //நல்ல பாடல்...
    கேட்கும் போது இனம்புரியாத உணர்வு மனதில் பிறக்கிறது
    அருமையான பதிவு //

    நிச்சயமாக அதுவும் ராகதேவனின் குரலில் நம் கண்களில் கண்ணீர் வருவதை தடுக்க முடியாது இந்த பாடலின் ஜீவன் அப்படி,

    தங்களின் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க,

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  20. @ஜிஎஸ்ஆர்

    உண்மைதான் நண்பா இந்தப் பாடலைக் கேட்கும்போது நம்மையறியாமல் கண்கள் குளமாவதைத் தடுக்க முடியாது, அந்தளவுக்கு நெகிழ்ச்சியும் உணர்வுகளும் கலந்து நம்மை
    உருக்கமாய் உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார் ராகதேவன் பாடல்களுக்கு இடையே வரும்( interlude) இசை கூட நம்மை ஏதோ செய்கிறது,

    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    நன்றி

    ReplyDelete
  21. @Cable Sankar

    தங்களின் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சார்,

    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    நன்றி

    ReplyDelete
  22. @KANA VARO

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே,

    தொடர்ந்து இணைந்திருங்கள்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  23. @சசிகுமார் தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே,

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  24. @guru

    //இசை பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது.
    ஆனால் இளையராஜா குரலில் எப்பொழுதும் மெய் மறந்து போவேன்.//

    எனக்கும் இசையைப்பற்றி அதிகம் தெரியாது நண்பரே ஓரளவுக்கு இசையை ரசிக்கத்தெரியும், பாமரனும் தன்னை மெய் மறந்து ரசிக்க வைப்பதுதான் இசைஞானி
    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ,

    தொடர்ந்து இணைந்திருங்கள்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  25. @S Maharajan
    //காலம் தாழ்த்தி நான்(இந்த பதிவுக்கு)
    இங்கே வந்ததற்கு மன்னிக்க
    மனதை பிசையும் இசையை வேறு யாரால் தர இயலும் என் இசைஞானியை தவிர.//

    பரவாயில்லை நண்பரே,நிச்சயமாக ராகதேவைனைத் தவிர யாரால் தர இயலும் பாமரனுக்கும் தனது இசையை புரிந்து ரசிக்க வைப்பதுதான் இசைஞானி...

    ReplyDelete
  26. @ஜிஎஸ்ஆர்
    //உங்கள் தளம் திற்க்கும் போது கூடவே ஒரு பாப் அப் திறக்கிறதே அது எனக்கு மட்டும் தான் திறக்கிறதா அல்லது நீங்களும் இந்த பிரச்சினையை சந்தித்திருக்கிறீர்களா? //

    எனது கணினியில் இந்த பிரச்சினை இல்லை நண்பா நீங்கள் கூறிய பிறகு Firefox, internet explorer இரண்டிலும் சோத்தித்துப் பார்த்துவிட்டேன் நண்பா பாப்-அப் எதுவும் திறக்கவில்லையே நண்பா,

    முடிந்தால் என்ன காரணமாக இருக்குமென்று சோத்தித்துப் பார்த்து சொல்லுங்கள் நண்பா...
    இந்த பிரச்சினைப்பற்றி எனக்கு தெரியவில்லை

    உங்களது தகவலுக்கு மிக்க நன்றி நண்பா...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  27. @பட்டாபட்டி....
    இன்னும் பார்க்கலையா சார் நீங்க,இந்த வாரம் எப்படியும் பார்த்துட்டு கண்டிப்பாக உங்கள் விமர்சனத்தை எழுதுறீங்க எதிர்பார்ப்புடன்.........

    ReplyDelete
  28. @வேலன்.
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்,

    நிச்சயமாக ராஜா ராஜாதான் அன்றும் இன்றும் என்றும்....

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  29. @ஜீ...
    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே,

    தொடர்ந்து இணைந்திருங்கள்....

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  30. @ஆர்.கே.சதீஷ்குமார்
    //இளையராஜாவின் இசை தெய்வீக இசை//

    உண்மைதான் நண்பரே தெய்வீக இசை மட்டுமல்லாமல் மனதை பிசையும் இசையை வேறு யாரால் தர இயலும் என் இசைஞானியை தவிர...

    தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி நண்பரே,

    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    நன்றி

    ReplyDelete
  31. .அவர், தான், எப்போதும், இளைய-ராஜா என்பதை, நிருபித்து விட்டார் !


    .பகின்றமைக்கு, நன்றி, தோழரே !

    ReplyDelete
  32. @சிகப்பு மனிதன்
    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே,

    தொடர்ந்து இணைந்திருங்கள்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  33. .[co="blue"]நிச்சயமாக [/co]

    ReplyDelete
  34. @சிகப்பு மனிதன்
    தங்களின் தொடர் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பா,

    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

    நன்றி

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.