Wednesday, November 24, 2010

பில் கேட்ஸ் - வரலாற்று நாயகர்!

இந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தரப்போகிறது ஒரு தேவதை என்று வைத்துக் கொள்வோம். ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அந்த தேவதை உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தருகிறது அதுவும் ஒரு நாளுக்கு அல்ல ஒரு ஆண்டுக்கு அல்ல 21 ஆண்டுகளுக்கு அப்போது உங்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும்?

கொடுக்கும் தேவதைக்கே தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நிமிடத்திற்கு 2600 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் 21 ஆண்டுகள் எவ்வளவு நிதி சேருமோ அவ்வுளவு நிதிக்கும் இப்போதே சொந்தக்காரராக இருக்கும் ஒருவரை அறிமுகம் செய்து வைக்கத்தான்... ஆம் உலகின் ஆகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து 11 ஆண்டுகளாக பெற்று வந்த அவர்தான் 'கணினி உலகம்' என்ற வானத்தை வசப்படுத்திய ஃபில்கேட்ஸ்...

1955ஆம் ஆண்டு  அக்டோபர் 28-ஆம் நாள் அமெரிக்காவில் சியாட்டோ நகரில் பிறந்தார் வில்லியம் ஹென்றி கேட்ஸ் அவருக்கு 2 சகோதரிகள், தந்தை வழக்கறிஞர் தாயார் பள்ளி ஆசிரியை. ஆரம்பித்தில் மிகவும் கூச்ச சுபாவம் உடைய பில்கேட்ஸ் தனிமையை அதிகம் விரும்புவார் எப்போதுமே ஏதாவது ஒரு சிந்தனையில் ஈடுபட்டிருப்பார் சக வயது மாணவர்கள் விரைவுக் கார்களையும் திரைப்படங்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருக்க பில்கேட்ஸ் மட்டும் எண்களைப் பற்றியும் அவற்றின் மந்திரம் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பார் வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சிறு வயதிலேயே துளிர்விடத் துவங்கியது.

இரவு உணவுக்குப் பின் குடும்பமாக சேர்ந்து ஃபிரிட்ஜ் என்ற விளையாட்டை ஆடுவார்கள் எனவே ஒவ்வொரு இரவும் வெற்றிப் பெருவதைப் பற்றிய நினைப்பார் பில்கேட்ஸ் அவருக்கு 13 வயதானபோது அவரது நண்பரான ஃபால் எலனுடன் சேர்ந்து கணினிக்கான மென்பொருள் எழுதக் கற்றுக் கொண்டார் ரிஸ்க் என்ற கணினி விளையாட்டையும் உருவாக்கினார், தன் நண்பருடன் சேர்ந்து கணினியில் பல மணிநேரம்  செலவிட்டு மென்பொருளில் உள்ள குறைகளைக் கண்டறிவார் ஃபில்கேட்ஸ்.

1973ல் ஹாபர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார் அங்கு இருந்த காலத்தில்தான் கணினிகளுக்கு மென்பொருள் எழுதப் பயன்படும் Basic என்ற மொழியை உருவாக்கினார் 2 ஆண்டுகள் கழித்து 1975ல் தன் நண்பன் ஃபால் எலனுடன் இணைந்து 'ஃமைக்ரோசாப்ட்' என்ற நிறுவனத்தை தொடங்கினார்.


1977-ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடிக்காமலேயே ஹாபர்டை விட்டு வெளியேறி நிறவனத்தில் முழுக் கவணம் செலுத்தத் தொடங்கினார், இல்லக் கணினிகளுக்குத் தேவையான மென்பொருளை உருவாக்குவதில் இருவரும் கவணம் செலுத்தினர், 1981-ஆம் ஆண்டில் IBM கணினிகளுக்கான MS-DOS என்ற  Operating System அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தார்,அதன் சிறப்பை எடுத்துக்கூறி மற்ற கணினி தயாரிப்பாளர்களையும் MS-DOS இயங்குதளத்தைப் பயன்படுத்துமாறு ஊக்கமூட்டினார் ஃபில்கேட்ஸ்...அது ஏற்றுக்கொள்ளப்பட்டு 80களில் கணினிகள் பெருமளவில் விற்பனையாகத் தொடங்கின விற்பனையாகும் ஒவ்வோரு கணினிக்கும் அதன் இயங்குதளத்திற்கான லைசென்ஸ் கட்டணம் கிடைப்பதால் ஃமைக்ரோசாப்ட்டின் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.

'மாறிவரும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் ஒன்று மட்டுமே' என்ற சொற்றொடர் கணினி உலகத்திற்குதான் மிகவும் பொருந்தும். அதை உணர்ந்துதான் போட்டியை எதிர்பார்த்துதான்  ஃமைக்ரோசாப்ட் நிறுவனமும் புதிய புதிய மென்பொருள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. IBM கணினிகளுக்கு போட்டியாக மவுஸ் கொண்டு இயக்கும் ஆப்பிள் கணினிகள் அறிமுகமானபோது அது மிகவும் பிரபலமடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்,உலகின் மொத்த கவணமும் ஆப்பிள் பக்கம் திரும்பியபோதும் அசரவில்லை பில்கேட்ஸ். அசுர வேகத்தில் ஃமைக்ரோசாப்ட் விண்டோஸ் என்ற இயங்குதளத்தை அறிமுகம் செய்தார் அது இமாலய வெற்றிப் பெற்றது .

அது மட்டுமல்லாமல் 90களின் தொடக்கத்தில் பிரபலமாகத் தொடங்கியிருந்தது இணையம். இணையத்தில்  உலா வர உதவும் (உலவி) 'நெட்கேப்ஸ்' (net cafe) என்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்தார் மாக் ஆண்டர்சன் என்பவர். இணையத்தின் எதிர்காலத்தை நன்கு புரிந்து கொண்ட பில்கேட்ஸ் அந்த மென்பொருளை விலைக்கு வாங்க விரும்பினார், ஆனால் அதை விற்கவோ ஃமைக்ரோசாப்ட்டுடன் இணையவோ மாக் ஆண்டர்சன் மறுக்கவே  மீண்டும் தன் மந்திரத்தை நிகழ்த்திக் காட்டினார் ஃபில்கேட்ஸ்,

நெட்கேப்ஸ்க்கு இணையான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற இணையச் செயலியை உருவாக்கி அதனை புதியக் கணினிகளுடன் இலவசமாக விநியோகம் செய்தார் அதனால் விலைக்கு விற்கபட்டு வந்த நெட்கேப்ஸின் இணைய ஆதிக்கம் மங்கத் தொடங்கியது அதுமாதிரியான விற்பனை தந்திரம் முறையற்றது என்று  ஃமைக்ரோசாப்ட்டின் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் ஃபில்கேட்ஸை அசைக்க முடியவில்லை. என்ன வந்தாலும் பில்கேட்ஸுக்கே வெற்றி கிடைக்கும் ஏனென்றால் பில்கேட்ஸின் போட்டியாளர்கள் குறி வைப்பது பெரிய பெரிய நிறுவனங்களை ஆனால் பில்கேட்ஸ் குறி வைப்பதோ சாமானியர்களை.

1999-ஆம் ஆண்டு 'Business at the speed of thought' என்ற நூலை எழுதினார்  ஃபில்கேட்ஸ் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 60 நாடுகளில் விற்பனையாகிறது அந்த நூல், அதற்குமுன் அவர் எழுதிய The road a head என்ற நூலும்  அதிகமாக விற்பனையாகிறது 2 நூல்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் முழு தொகையையும் அற நிதிக்கு வழங்கியிருக்கிறார் பில்கேட்ஸ், மெலிண்டா ஃபிரெஞ்சு கேட்ஸ் என்பவரை 1994 ஆம் ஆண்டு மணந்து கொண்டார் பில்கேட்ஸ், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பில்கேட்ஸும் மனைவியும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி இதுவரை சுமார் 27 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிக்காக வழங்கியிருக்கின்றனர்.

குறிப்பாக உலக சுகாதாரம், கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு அந்த நன்கொடைப் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சுமார் பத்து ஆண்டுகள் ஃமைக்ரோசாப்ட்டின் தலைமை பொறுப்பில் இருந்துவிட்டு அதன்பிறகு தனது 95 சதவிகித சொத்தை அறப்பணிகளுக்கு கொடுக்கப்போவதாக  கூறியிருக்கிறார் உலகின் ஆகப் பெரிய பணக்காரரான ஃபில்கேட்ஸ்...

நாமும் வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்!

ஃமைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்பட்டு சரியாக இந்த வருடத்தோடு 35 வருடம் முடிவடைகிறது.  விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகள்  கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.  இப்பொழுது விண்டோஸ் 7 இயங்குதளம் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கிறது. அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம்.இ(ME) மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது.

விண்டோஸ் முதல் பதிப்பின் படம் கீழே...


“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”

பாரட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள் சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

48 comments:

 1. என்ன வந்தாலும் பில்கேட்ஸுக்கே வெற்றி கிடைக்கும் ஏனென்றால் பில்கேட்ஸின் போட்டியாளர்கள் குறி வைப்பது பெரிய பெரிய நிறுவனங்களை ஆனால் பில்கேட்ஸ் குறி வைப்பதோ சாமானியர்களை என்று கூறுகிறது ஒரு குறிப்பு.

  //


  உண்மைதான்

  ReplyDelete
 2. நல்ல பதிவு நண்பா..தொடர்ந்து எழுதுங்கள்..

  ReplyDelete
 3. நல்ல பதிவு..தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 4. நன்றி மாணவன்! சிங்கையில் இருந்தாலும் இதுவரை ஒலியை கேட்டதில்லை, ஆனால் இதன் புத்தக வடிவை கேள்விபட்டிருக்கிறேன், படித்ததில்லை, உங்கள் மூலம் நிரைவேற்றிக்கொள்கிறேன், நன்றி!!!

  ReplyDelete
 5. நண்பர்களொடு இனைந்து தொடங்கிய காலக்கட்டத்தில் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்க அவருடைய நண்பர்கள் பில்கேட்ஸ் அவர்களை பிரிந்து செல்ல கட்டாயப்படுத்தினார்கள் அவரும் அந்த நிறுவணத்தை விட்டு வெளியேறினார் அப்பொழுது அவர் சொன்ன வார்த்தை நான் இப்போது போகிறேன் மீண்டும் திரும்பி வருவேன் கணினி சாம்ராஜ்யத்தின் ராஜாவாக ஒரு விஷயம் கவணித்திருக்கிறீர்களா இதுவரை மைக்ரோசாப்டின் இயங்குதள நிரல் ஒரு சிறு பகுதியாவது இனையத்தில் கிடைத்திருக்கிறதா? அவர் நிர்வாகத்திலும் திறமையானவராய் இருக்கிறார்.அதுமட்டுமல்ல அவர்கள் வியாபார ரீதியாக மட்டுமல்லாமல் சாதரண கணினி பாவனையாளர்களையும் அவர்கள் கட்டுக்குள் இருப்பதேயே விரும்புகிறார்கள் அவர்கள் தெரிந்தே தான் அவர்கள் விண்டோசை கிராக் செய்ய வழி கொடுக்கிறார்கள் விண்டோசை கிராக் செய்ய அனுமதிக்கும் வரை யாரும் அதைவிட்டு மாறபோவதுமில்லை

  ReplyDelete
 6. @பட்டாபட்டி..
  தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சார்,
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 7. @ஹரிஸ்
  தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி நண்பா,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 8. @வெறும்பய
  கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன் நண்பா,
  தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி நண்பா,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 9. @VAIGAI
  தங்களின் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரெ,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 10. @ஜிஎஸ்ஆர்
  தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது நண்பா,

  தங்களின் தகவலும் கருத்தும் முற்றிலும் உண்மை நண்பா...

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி
  உங்கள்.மாணவன்

  ReplyDelete
 11. @சசிகுமார்
  தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி நண்பா,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 12. @r.v.saravanan
  தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 13. சூப்பர் பதிவு... தொடருங்கள்

  ReplyDelete
 14. அருமையும் ஊக்குவிப்பும் தொடர்ந்து அர்ப்பணியுங்கள்

  ReplyDelete
 15. @Riyas
  தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி நண்பா,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 16. @mathan
  தங்களின் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரெ,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 17. @ibza
  தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி நண்பா,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 18. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 19. பில்கேட்சின் வெற்றி எல்லோருக்கும் முன்மாதிரி.. நான் அதிகம் நேசிக்கும் ஆட்களில் இவரும் ஒருவர்...

  ReplyDelete
 20. இவரை பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும். பதிவு முழுமையும் படித்தேன்...... உங்களின் தொகுப்பிற்காக............

  ReplyDelete
 21. Good post Student

  keep it up

  You are welcome to http://freecomputertipsnet.blogspot.com/

  ReplyDelete
 22. @பாரத்... பாரதி...
  தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றிங்க,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 23. @கே.ஆர்.பி.செந்தில்
  தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது அண்ணே,

  நிச்சயமாக நாம் எல்லோருக்கும் பில்கேட்ஸ் ஒரு முன்மாதிரிதான்...


  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  ReplyDelete
 24. @வழிப்போக்கன் - யோகேஷ்
  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரெ,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 25. @Free computer tips
  தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி நண்பா,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 26. பில் கேட்சிற்கு பின்னால இவ்வளவு விசயமிருக்கா அறியத் தந்தமைக்க நன்றி சகோதரம்...

  அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா
  http://mathisutha.blogspot.com/

  ReplyDelete
 27. நல்ல தகவல் விண்டோஸ் 3.0 நான் உபயோகப் படுத்திருக்கேன்.(யாருப்பா அது வயசானவன்னு சொல்றது)

  ReplyDelete
 28. உங்களின் இந்தப பதிவு அருமையாக இருக்கிறது.
  ஒரு சுய முன்னேற்றக் கட்டுரை வாசித்து போல் உள்ளது. நன்றி.

  குறிப்பு : அங்கங்கே சிறு சிறு எழுத்துப் பிழைகள் மட்டுமே உள்ளது.

  ReplyDelete
 29. Very very super. every one must read this.

  ReplyDelete
 30. super,post.

  if i c it earlier i would use it in nandhalaalaa critics

  ReplyDelete
 31. இளையராஜாவைப் பற்றி படிக்க வந்து, இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது. இங்கு நான் சுட்டிக்காட்டுவது factual errors மட்டுமே. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

  பில் கேட்ஸுக்கு நல்முகம் மற்றும் கெட்ட முகமும் உண்டு. முதலில், அவர் பேஸிக் கணினி மொழியை கண்டுபிடிக்கவில்ல (http://en.wikipedia.org/wiki/BASIC). ஆல்டைர் என்ற கணினி கிட்டிற்கு முதலில் ஒரு பேஸிக் கம்பைலர் எழுதினார். அத்துடன் அவரது சீரியஸான கணினி மென்பொருள் பங்கு முடிந்தது. வேறு எதையும் அவர் தனிப்பட்ட முறையில் உருவாக்க வில்லை. விண்டோஸின் முதல் பதிப்பு 286 என்று நினைக்கிறேன். அத்துடன் போராடும் துரதிஷ்டம் பெற்றவன் என்பதை பணிவோடு இங்கே பதிவு செய்ய விருப்பம். விண்டோஸ் 3 என்ற பதிப்பு 4 வருடங்கள் கழித்தே வந்தது. மேலும் மைக்ரோசாஃப்ட் தொடங்கி 35 வருடங்கள் ஆகின்றன. 25 அல்ல.

  பில் மிகவும் டெக்னிக்லானவர். அதை விட, மிகவும் அதிகமாக வியாபார உத்திகள் தெரிந்தவர். விமர்சகர்கள் இவரது வியாபார முறையை கடுமையாய் சாடி வந்துள்ளனர். போட்டி நிறுவனங்களை தன் பணபலம் மற்றும் வியாபார பலம் கொண்டு நசுக்குவதில் இவருக்கு நிகர் யாரும் கிடையாது.

  இவரது போக்கில் வெறுப்புற்றவர்களே இன்று அருமையான போட்டி, ஆனால் இலவச இயங்குதளங்களை உருவாக்கி உள்ளார்கள். லினிக்ஸ் உலகமே இவரது வியாபார முறைகளை கண்டிக்க வந்ததுதான்.

  அத்துடன் விண்டோஸ்/7 ஒன்றும் பெரிய வெற்றியல்ல. இன்று கூகிளிடம் மைரோஸாஃப்ட் கையை பிசைந்து நிற்பது உண்மை. கூகிளின் அண்ட்ராய்டுக்கு வயது 1.5. மைக்ரோஸாஃப்ட்டின் விண்டோஸுக்கோ ரொம்ப வயசாகிவிட்டது - 24!

  1990 ல் மைக்ரோஸாஃப்டின் நிலையில் இன்று கூகிள். வரலாறு பழைய கதையை ஞாபகப் படுத்துகிறது! 1990 ல், ஐ.பி.எம். ஒரு விறைப்பான நிறுவனமாக காட்சியளித்தது. இன்று அதே இடத்தில் மைக்ரோஸாஃப்ட்!

  நன்றி

  ரவி நடராஜன்
  http://geniusraja.blogspot.com

  ReplyDelete
 32. நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 33. @ம.தி.சுதா
  தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி நண்பா,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 34. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
  வாங்க அண்ணே,
  உங்களதான் எதிர்பார்த்தேன்...
  //நல்ல தகவல் விண்டோஸ் 3.0 நான் உபயோகப் படுத்திருக்கேன்.(யாருப்பா அது வயசானவன்னு சொல்றது)//

  அதானே யாருப்பா எங்க தாத்தாவ வயசானவன்னு சொல்றது அவர் என்றும் பதினாறு...

  he... he he he

  ReplyDelete
 35. @kavi
  தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றிங்க சகோ,
  //குறிப்பு : அங்கங்கே சிறு சிறு எழுத்துப் பிழைகள் மட்டுமே உள்ளது.//

  முடிந்தவரையில் எழுத்துபிழைகளை தவிர்க்க முயல்கிறேன் அப்படியும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்....

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

  நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 36. @எஸ்.கே
  தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சார்,
  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 37. @பாரத்... பாரதி...
  வேளைப்பளுவின் காரணமாக பதிவுகள் தொடர்ந்து எழுத முடியவில்லை முயற்சி செய்கிறேன்
  தொடர்ந்து இணைந்திருங்கள்...

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 38. @Balepandiya
  தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி நண்பரே,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 39. @சி.பி.செந்தில்குமார்
  தங்களின் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரெ,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 40. @ravinat
  உங்களைப் போன்ற ஆசான்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது சார்,

  தங்களின் தகவலுக்கு மிகவும் நன்றி சார் தவறைத் திருத்திக்கொண்டேன்,

  //பில் கேட்ஸுக்கு நல்முகம் மற்றும் கெட்ட முகமும் உண்டு. முதலில், அவர் பேஸிக் கணினி மொழியை கண்டுபிடிக்கவில்ல (http://en.wikipedia.org/wiki/BASIC). ஆல்டைர் என்ற கணினி கிட்டிற்கு முதலில் ஒரு பேஸிக் கம்பைலர் எழுதினார். அத்துடன் அவரது சீரியஸான கணினி மென்பொருள் பங்கு முடிந்தது. வேறு எதையும் அவர் தனிப்பட்ட முறையில் உருவாக்க வில்லை. விண்டோஸின் முதல் பதிப்பு 286 என்று நினைக்கிறேன்//

  குறைகள் இல்லாத மனிதன் யாரும் கிடையாது ஒவ்வொரு மனிதனும் அவன் குணங்களில் குறைகளுடையுவனே,

  நீங்கள் சொல்வது போன்று பில்கேட்ஸின் ஒரு சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் சில நன்மைகள் தெரியும் ஒரு பாமரனும் இன்று கணினியை சுலமாக உபயோகிக்க முடிகிறதென்றால் அதற்கு ஃமைக்ரோசாட் விண்டோஸின் பங்கு முக்கியமானது, இன்று எத்தனையோ இயங்குதளங்கள் இருப்பினும் கணினி உபயோகிப்பாளர்கள் அதிகம் பயன்படுத்துவது ஃமைக்ரோசாட் விண்டோஸ்தான் நானும் இந்த வன்பொருள் துறையில் இருப்பதால் எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன்
  மற்றபடி நீங்கள் எதுவும் தவறாக நினைக்க வேண்டாம்,

  நம்ம தளத்தோடு தொடர்ந்து இணைந்திருந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் குரைகளை சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்வதற்கு உதவியாய் இருக்கும் சார்,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 41. @பிரஷா
  தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றிங்க,

  தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 42. இதுபோன்ற வெற்றியாளர்களை பின்பற்றினால் நிச்சயமாக "வாழ்க்கை வசப்படும்". தேவைப்படும் நேரத்தில் தேவையானதை உங்கள் எழுத்து தந்துகொண்டு இருக்கிறது. உங்கள் இப்பணி சிறக்க மேலும் தொடர என்வாழ்த்துக்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 43. //aranthairaja said...
  இதுபோன்ற வெற்றியாளர்களை பின்பற்றினால் நிச்சயமாக "வாழ்க்கை வசப்படும்". தேவைப்படும் நேரத்தில் தேவையானதை உங்கள் எழுத்து தந்துகொண்டு இருக்கிறது. உங்கள் இப்பணி சிறக்க மேலும் தொடர என்வாழ்த்துக்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.