Friday, November 12, 2010

கணினி கலைச் சொற்கள்

நமது தளத்திற்கு புதிதாக ஹெட்டர் பேனர் டிசைன் கொடுத்த பாசமிகு அண்ணன் ப்ரியமுடன்...வசந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!!!

இன்றைய சிந்தனை: தவறு செய்வது மனிதனின் இயல்பு, அதை மன்னிப்பது கடவுளின் கருனை.


AI (Artificial Intelligence) : [செயற்கை நுண்ணறிவு] ஒரு கணினியும் ரோபோவும் எந்த அளவிற்கு தெரிந்துகொள்ளவும் முடிவெடுக்கவும் முடியும் என்பதை வைத்து இந்த AI கணக்கிடப்படுகிறது.


Band: கம்பியில்லாத் தொலைத்தொடர்பில், இந்த Band என்பது தொடர்ச்சியான ரேடியோ அலைவரிசையைக் குறிக்கும்.

Bit: கணினிக்கு வழங்கப்படும் தகவலின் அடிப்படை அலகு

Byte: 8 பிட் அளவுள்ள தகவல்

Blog: (Weblog) என்பதன் சுருக்கம். எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது கருத்துக்களையோ படைப்புகளையோ இணையத்தில் பதிவு செய்வதற்கான இடம் இதை யார் வேண்டுமானாலும் வாசிக்க முடியும்.

Book Mark: உங்களுக்குப் பிடித்த, நீங்கள் அடிக்கடி பார்க்க விரும்பும் இணையத்தளங்களை உங்கள் உலாவியில் (Browser) பதிவு செய்து வைத்துகொள்ள இந்த வசதியைப் பயன்படுத்தலாம் அடுத்த முறை குறிப்பிட்ட இணையதளத்தைப் பார்க்க விரும்பும்போது URLஐ டைப் செய்யாமல் புக்மார்க்கில் போய் க்ளிக் செய்தால் போதும்.

Browser: இணையத்தில் இருக்கும் தளங்களைப் பார்வையிட உதவும் மென்பொருள் இணைய உலவி என்று அழைக்கப்படுகிறது.

Boot: கணினியை துவங்கச் செய்வத்ற்கான கட்டளை கணினியைத் துவக்குதல்.

Bug or Glitch: ஒரு கணினியிலோ புரோகிராமிலோ உள்ள தவறுகள்.

Chip: சர்க்யூட்களை உள்ளடக்கிய சிலிக்கனால் ஆன சிறிய பொருள் கணினியில் சிப்புகள்தான் தகவல்களைச் சேமித்து வைக்க, பரிசீலிக்கப் பயன்படுத்தப் படுகின்றன. கணினியை உருவாக்குபவை இந்த சிப்புகளே.

Cookie: சில இணையத்தளங்கள் உங்களது கடவுச் சொல், விருப்பங்கள்,எந்த மாதிரி தளங்களை பார்வையிடுகிறீர்கள் போன்ற த்கவல்களை உங்களது கணினியின் ஹார்ட் டிரைவில் சேமித்து வைக்கின்றன். மறுபடியும் அந்த தளத்திற்கு செல்லும்போது உங்களது இணைய உலவி ஹார்ட் டிரைவிலிருந்து அந்தத் தகவலை(Cookie) எடுத்து அந்தத் தளத்திற்குத் தரும்.

Database: பெருமளவிலான தகவல்களை பல்வேறு விதங்களில் வகைப்படுத்தப்பட்டிருப்பதுதான் (டேட்டாபேஸ்) எனப்படுகிறது. இந்தத் தகவல் தொகுப்பைத் தேவைப்படும் நேரத்தில் பல்வேறு விதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Encryption: தகவல்களை குறியீடாக மாற்றும் செயல் பெரும்பாலும் கடவுச்சொல் பொருளாதாரம் சார்ந்த தகவல்கள், தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்படி மாற்றப்படுகின்றன.

Gig or Gigabyte: 1024 மெகா பைட் அளவுள்ள தகவல்

Hacker: கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அதன் பிற புரோகிராம்கள் எப்படி எழுதப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள விழையும் கணினி நிபுணர்கள் இப்படி அழைக்கப்படுகிறார்கள். கணினியைப் பயன்படுத்துவதில் மிகுந்த அனுபவம் உள்ள அதில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதில் ஆர்வம் உள்ள இவர்கள் தமிழில் குறும்பர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் சில ஹேக்கர்கள் பிறரது கணினியில் அவர்கள் அனுமதியின்றி நுழைந்து தகவ்ல்களை திருட இந்தத் திறமையைப் பயன்படுத்துவார்கள்.

HTML: Hypertext Markup என்பதன் சுருக்கம் வலைப் பக்கங்களாகப் பயன்படும் ஹைப்பர்டெக்ஸ்ட் மார்க் அப் மொழியின் கோப்புகள் இந்த நான்கெழுத்துடன் முடியும்.

HTTP: Hypertext Transfer Protocol என்பதன் சுருக்கம். இணையத்தில் கோப்புகளை பரிமாறிகொள்ளும் முறை இது.

ISP: Internet Service Provide மோடத்தையும் இணையத்தையும் இணைக்கும் ஒரு நிறுவனம், அதாவது வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் இணையத் தொடர்பு வழங்கும் ஒரு நிறுவனம்.

K: கிலோ அல்லது ஆயிரம் என்பதற்கான கிரேக்கக் குறியீடு. கணினியில் உள்ள தகவல்களின் அளவைக் குறிக்க இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக 1K என்பது 1,000 பைட் என்பதைக் குறிக்கும்.

Mainframe: மிகப் பெரிய வகை கணினிகள் இந்த கணினிகளை ஒரே சமயத்தில் பலர் பயன்படுத்த முடியும்

Mega Pixel: இந்த வார்த்தை டிஜிட்டல் கேமராவிலோ, மொபைல் போன் கேமராவிலோ எடுக்கப்படும் புகைப்படங்களின் அளவைக் குறிக்கிறது. ஒரு மெகா பிக்ஸல் என்பது 10 இலட்சம் பிக்ஸல்களைக் குறிக்கிறது. கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்களின் அடர்த்தி அவை எத்தனை மெகா பிக்ஸல் கொண்டவை என்பதை வைத்து அளவிடப்படுகிறது.

MPEG: (Motion Picture Experts Group) டிஜிட்டல் வீடியோவிற்கான அளவு,
Mpeg 2, Mpeg 4 ஆகியவை பொதுவாகக் காணப்படுகின்றன. 

PDA: Personal Digital Assistant முகவரிகள், தொலைபேசி எண்கள் போன்ற தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய ஒரு கையடக்க கருவி.

Pixel or Picture Element: கணினி திரையில் தெரியும் ஒரு படத்தின் மிகச் சிறிய அளவு. ஒரு படம் எவ்வளவு பெரியது என்பதை விளக்க இந்த அளவு பயன்படுத்தப்படுகிறது. உதா:500 pix

Portal: இன்டர்நெட்டிற்கு வாசலைப்போல உதவும் ஒரு வெப்சைட். இந்த வெப்சைட்டிற்குள்ளேயே சினிமா, மருத்துவம், சமையல், செய்திகள், எனப் பல்வேறு பிரிவுகள் இருக்கும். தவிர இந்த வெப்சைட்டிலிருந்து பல்வேறுவிதமான இணையதளங்களுக்குப் போகலாம். உதா: Google, Yahoo.

Ram or Random Access Memory: கணினியின் தற்காலிக நினைவகம். நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணியை கணினியின் வன்தட்டில் (Hard Drive)  சேமிக்கும் வரை அவை இந்த தற்காலிக நினைவகத்தில்தான் இருக்கும். புரோகிராம்களை நீங்கள் துவக்கும்போது அவை இந்த இடத்தில் இருந்துதான் இயங்குகின்றன. Ram இல் இருக்கும் தகவல்கள் கணினியை ஆஃப் செய்யும்போது அழிந்து விடும்.

Rom or Read Only Memory: கணினிக்குத் தேவைப்படும் நிலையான தகவல்களை வைத்திருக்கும் நினைவகம். இதை மாற்ற முடியாது கணினியை ஆஃப் செய்த பிறகும் அந்தத் தகவல்கள் கணினியிலேயே இருக்கும்.

Spam: குப்பை மின்னஞ்சல்.

Thread: ஒரு குறிப்பிட்ட பிரிவுகளைப் பற்றி அனுப்பப்படும் செய்திகள், அதற்கான பதில்கள் ஆகியவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

URL or Uniform Resource Locator: இணைய முகவரிகளுக்கான தொழில்நுட்பப் பெயராகும்.

Virus: (Vital Information Resources Under Siege) என்பதன் சுருக்கம். கணினியில் இருக்கும் தகவல்களையும், பிற புரோகிராம்களையும் சேதப்படுத்தக் கூடிய ஒரு அபாய  புரோகிராம்தான் இந்த வைரஸ். இவை தகவல்களை பரிமாறிக்கொள்ளும்போது கணினிக்குள் புகுகின்றன.

Virtual Reality: கண்ணாடி போன்ற சிறந்த உபகரணங்களை அணிந்துகொண்டு திரையில் பார்க்கக்கூடிய முப்பரிமான உருவங்கள்.அந்த உருவங்கள் திரையில் தெரிகிறதா அல்லது நம்முடன் இருக்கிறதா என்று நினைக்க வைக்கும் அளவுக்கு உண்மையைப்போல் காட்சியளிக்கும்.

WAP: கம்பியில்லா இணைய இணைப்பு, அல்லது மொபைல் இணையத் தொடர்பு. இந்த இணைப்பைப் பயன்படுத்தி மொபைல் போன்களில் இன்டர்நெட்டைப் பயன்ப்டுத்தலாம். இதற்கென தனியே பிரவுசர்கள் இருக்கின்றன.இந்த தொழில்நுட்பத்தில் பல்வேறு தர நிர்ணயங்கள் இருக்கின்றன.

Wi-Fi or Wireless Fidelity: கம்பிகளின்றி (Wire) பிற கணினிகளையும் இணையத்தையும் இணைக்கும் தொழில்நுட்பமாகும்.

இதைப் பற்றி மேலும் விரிவாக  கணினி கலைச் சொற்களை தெரிந்துகொள்ள எனது ஆசான் மற்றும் சிறந்த நண்பர் ஜிஎஸ்ஆர் இன் புரியாத கிறுக்கல்கள் தளத்திற்குச் செல்லவும்

நண்பர்களே, நாம் பேசும்போது பயன்படுத்துகின்ற கணினிச் சார்ந்த வார்த்தைகளை ஆங்கிலத்தில் எளிதாக சொல்லிவிடுவோம். தமிழில் விளக்குவதற்கு சற்று சிரமமாக இருக்கும் அதற்கான ஒரு சிறிய முயற்சிதான் இந்த பதிவு. கணினிச் சார்ந்த ஏராளமான கலைச் சொற்கள் இருக்கின்றன. இதில் நான் படித்த நண்பர்கள் பகிர்ந்துகொண்ட சிலவற்றை மட்டும் உங்களிடம் பகிர்ந்துள்ளேன். உங்களுக்குத் தெரிந்த கலைச் சொற்கள் இருந்தால் கருத்துரையில் பகிர்ந்துகொள்ளவும். இது என்னைப்போன்ற புதியவர்களுக்கு உதவியாய் இருக்கும்.

                                          கற்போம் கற்பிப்போம்

இந்த பதிவு எழுத காரணமாய் அமைந்த அனைத்து ஆக்கங்களுக்கும் , நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்!

சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். (நன்றி நண்பர் ஜி எஸ்ஆர் அவர்கள்)

21 comments:

  1. கணினி பற்றி அதிகம் அறியாத எனக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஆங்கிலத்தில் அறிந்த பல வார்த்தைகளுக்கு தமிழில் பொருள் தெரியாமல் இருந்தது இன்று நன்கு புரிந்தது நன்றிங்க...

    ReplyDelete
  2. [co="DodgerBlue"] அருமையாக தொகுத்திருக்கிறீர்கள் இன்னும் இதில் நேரடியான தமிழாக்கம் கொடுத்திருந்தால் இதை விட சிறப்பாய் இருந்திருக்கும் நானும் இதைப்பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன் [/co]

    நண்பா இன்று உங்கள் வலைத்தளத்தின் வாயிலாக கருத்துரை பெட்டியில் எழுத்துக்களின் அளவு, நிறம் , படம் இனைப்பதை தெரிந்துகொண்டேன்.

    நன்றி

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இண்ட்லி தளம் திறக்கவில்லையே என்னவென்று தெரியுமா நண்பரே?

    ReplyDelete
  5. தமிழரசி போலவே தான் நானும். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. நல்லதொரு தகவல் தொகுப்பு சகோதரா... இன்று தான் அறிந்திராத சில பெயர்களின் விரிவு அறிந்தேன்....

    ReplyDelete
  7. மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே! மிக்க நன்றி!

    ReplyDelete
  8. நல்லதொரு
    தகவல்
    நண்பா
    நாளும்
    கற்றுக்கொடு
    நானும் உன்
    மாணவன்...........

    ReplyDelete
  9. @தமிழரசி
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ,

    தொடர்ந்து இணைந்திருங்கள்...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  10. @ஜிஎஸ்ஆர்
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நண்பா,
    இனிவரும் பதிவுகளில் முடிந்தவரை தமிழில் எழுதுகிறேன்...

    ”நண்பா இன்று உங்கள் வலைத்தளத்தின் வாயிலாக கருத்துரை பெட்டியில் எழுத்துக்களின் அளவு, நிறம் , படம் இனைப்பதை தெரிந்துகொண்டேன்”

    என் பதிவின் மூலம் நீங்கள் தெரிந்துகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நன்றிகள் அனைத்தும் நண்பர் ப்ரியமுடன்... வசந்த் அவர்களுக்கும் அவர் தளத்தின் வாயிலாக அறிமுகமான இந்த முறையை உங்கள் பிளாக்கிலும் செயல்படுத்த ”நீச்சல்காரனின் இந்த பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா” லிங் சென்று பார்த்து கொள்ளுங்கள்
    நீச்சல்காரன்...நண்பருக்கும் இதயங்கனிந்த நன்றிகள் பல

    நானும் உங்களிடமிருந்தும் மற்ற நண்பர்களிடமிருந்தும் கணினி அறிவைக் கற்று வருகின்ற மாணவன்தான் நண்பா...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  11. @தமிழ் உதயம்
    எனது பதிவின் நீங்கள் தெரிந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சி நண்பரே,

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
    தொடர்ந்து இணைந்திருங்கள்...

    ReplyDelete
  12. @எஸ்.கே
    தங்களின் வருகைக்கும் கருத்துரை வழங்கி ஊக்கப்படுத்துவதற்கும் மிக்க நன்றி நண்பரே,

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  13. @dineshkumar
    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே,

    நானும் கணினி அறிவைக் கற்று வருகின்ற மாணவன்தான் நன்பரே,
    நான் தெரிந்துகொண்டதை கற்றுகொண்டதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது எனது ஆவலும் நோக்கமும்

    தொடர்ந்து இணைந்திருங்கள்...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  14. @ம.தி.சுதா
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா,

    எனது பதிவின் நீங்கள் தெரிந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சி நண்பா...

    நானும் கணினி அறிவைக் கற்று வருகின்ற மாணவன்தான் நன்பரே,
    நான் தெரிந்துகொண்டதை கற்றுகொண்டதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது எனது ஆவலும் நோக்கமும்

    தொடர்ந்து இணைந்திருங்கள்...

    ReplyDelete
  15. மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே

    ReplyDelete
  16. பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  17. @வெறும்பய
    தங்களின் வருகைக்கும் கருத்துரை வழங்கி ஊக்கப்படுத்துவதற்கும் மிக்க நன்றி நண்பரே,

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  18. @r.v.saravanan
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
    தொடர்ந்து இணைந்திருங்கள்...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  19. பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  20. @karthick
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா,
    தொடர்ந்து இணைந்திருங்கள்...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.