Tuesday, August 30, 2011

தொலைக்காட்சி உருவான கதை - John Logie Baird (வரலாற்று நாயகர்)

உலகில் எந்த மூலையிலும் ஒரு சம்பவம் நிகழும்போது அதனை அப்படியே நேரடியாக உடனடியாக நம் கண்களுக்கு கொண்டு வரும் சாதனம் தொலைக்காட்சி. தத்ரூபமாகவும் மிகைப்படுத்தாமலும் காட்டக்கூடிய மகிமையும் சிறப்பும் தொலைக்காட்சிக்கு உண்டு. 1922 ஆம் ஆண்டில் வானொலி உலகுக்கு கிடைத்தபோது ஒரு பெட்டியில் குரலைக் கேட்க முடியுமா?! என்று அதிசயித்த உலகம் அடுத்த நான்கே ஆண்டுகளில் ஒரு பெட்டியில் குரலைக் கேட்பதோடு உருவங்களையும் பார்க்க முடியும் என்பதை கற்பனை செய்துகூட பார்த்திருக்காது. ஆனால் கற்பனை செய்பவர்கள்தானே கண்டுபிடிப்புகளையும் செய்கிறார்கள். ஒரு பெட்டிக்குள் ஒலியையும், ஒளியையும் காட்ட வேண்டும் என்று கற்பனை செய்து கனவு கண்டு தொலைக்காட்சி என்ற உன்னத சாதனத்தை உலகுக்குத் தந்த ஒருவரைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர் பெயர் John Logie Baird. வானொலியின் தந்தை Marconi என்றால் தொலைக்காட்சியின் தந்தை Baird. 


1888 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 13ந்தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு அருகில் ஹெலன்ஸ்பர்க் என்ற இடத்தில் பிறந்தார் ஜான் லோகி பேர்ட். நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. அவரது தந்தை ஒரு பாதிரியார் குறைந்த வருமானத்தில் பெரிய குடும்பத்தை நிர்வகித்து வந்தார். பேர்ட் சிறுவயது முதலே ஆரோக்கியம் குன்றியிருந்தார். அதனாலோ என்னவோ அவருக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றில் அதிக நாட்டம் இல்லை. வீட்டுக்கு அருகில் இருந்த தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார் பேர்ட். பேர்ட்க்கு சிறுவயதிலிருந்தே புகைப்படங்களின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அந்தக்காலக் கட்டத்தில் இங்கிலாந்து பள்ளிகளில் பல இணைப்பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று புகைப்படக்கலை பேர்ட் அதில் அதிக ஆர்வம் காட்டி புகைப்படக்கலை சங்கத்தின் மாணவர் தலைவராகவும் செயல்பட்டார். அறிவுக்கூர்மையும் கைகொடுக்க பேர்ட் தனது பணிரெண்டாவது வயதிலேயே சில நண்பர்களுடன் சேர்ந்து படங்கள் காட்சிகள் பற்றியும், நகரும் காட்சிகள் பற்றியும் சோதனைகளை செய்தார்.

17 ஆம் வயதில் லண்டன் ராயல் தொழில்நுட்பக் கழகத்தில் மின்பொருளியல் துறையில் சேர்ந்து முதல் நிலையில் தேறினார். பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே செலினியம் செல்களைக் கொண்டு ஒளியை மின் சமிக்ஞைகளாக மாற்ற முடியும் என்று நம்பிய பேர்ட் பல்கலைக் கழகத்தில் அதற்கான ஆய்வுகள் செய்ய முடியாததால் வீட்டிலேயே ஆய்வுகளை மேற்கொண்டார். மின்சாரம் மூலம் ஒளியையும் பேசும் படத்தையும்கூட அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் எப்போதுமே இருந்தது. பட்டம் பெற்ற பிறகு ஒரு நிறுவனத்தில் உதவிப் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். 26 ஆவது வயதில் மின்னணுத்தொழிற்சாலை ஒன்றில் பணி கிடைத்தது. அவற்றிலெல்லாம் மன நிறைவடையாத பேர்ட் முற்றிலும் மாறாக காலுறை உற்பத்தி செய்யும் சொந்தத் தொழில் ஒன்றை தொடங்கினார். ஆனால் அதில் அவ்வளவு இலாபம் கிட்டவில்லை பின்னர் ரொட்டியில் தடவும் ஜாம் மற்றும் ச்சாஸ் தயாரிப்பில் இறங்கினார். உடல் ஆரோக்கியம் குன்றியதால் அந்தத் தொழிலையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அந்தச் சமயத்தில் ட்ரினிடேடில் இருக்கும் தன் நண்பரை பார்க்க கப்பல் பயணம் மேற்கொண்டார் பேர்ட். அப்போது கப்பலில் வானொலி இயக்கும் ஊழியரிடம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. வானொலி ஒலியை ஒலிபரப்புவதுபோல் படங்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வாறு ஒலிபரப்பலாம் என்பதுபற்றி இருவரும் நிறைய விவாதித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். 1922 ஆம் ஆண்டில் தனது 34 ஆவது வயதில் லண்டன் திரும்பினார் பேர்ட். வேலையில்லாத காரணத்தால் அவர் வறுமையில் வாடினாலும் தொலைக்காட்சிப் பற்றிய கனவு மட்டும் அவரைவிட்டு நீங்கவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் செயல் முறைக்கான வரைப் படத்தை உருவாக்கி அட்டைப்பெட்டி, மின்மோட்டார், புரொஜ்க்ஸன் விளக்கு, மின் கலங்கள், நியான் விளக்கு, வானொலி வால்வுகள் போன்றவற்றை வைத்து பல வகையான ஆராய்ட்சிகளை செய்து பார்த்தார். 

இரண்டு ஆண்டுகள் அவர் உழைத்த உழைப்புக்கு 1924 ஆண்டு பலன் கிட்டுவதுபோல் தெரிந்தது. ஒரு சிலுவையின் நிழலை பத்து மீட்டர் தூரத்திற்கு அவரால் ஒலிபரப்ப முடிந்தது. மேற்கொண்டு ஆய்வைத் தொடர அவருக்கு பொருளாதார வசதி இல்லை உண்மையில் தனது ஆய்வுக்கருவிகளின் பாகங்களை விற்று சாப்பிடும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டார் அப்படியிருந்தும் மனம் தளரவில்லை பேர்ட். எப்படியாவது மனித முகத்தையும், நகரும் காட்சியையும் ஒரு பெட்டிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயன்றுகொண்டே இருந்தார். ஆராய்ட்சிக்கு பணமில்லாததால் உதவிகேட்டு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார். அதில் கிடைத்த உதவியைக் கொண்டு அடுத்த ஆண்டே தொலைக்காட்சியின் ஆரம்ப மாதிரியை இயக்கிப் பார்த்தார். எந்தக் குறையுமின்றி முழுப்படமும் திரையில் துல்லியமாகத் தெரிந்தது பேர்ட் மலைத்துப்போனார். 

அந்த நாள்தான் அதாவது 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதிதான் உலகுக்கு தொலைக்காட்சி கிடைத்த நாள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் வண்ணத் தொலைக்காட்சிப் பற்றியும் ஆய்வு செய்து அதனையும் வெற்றிகரமாக உருவாக்கினார். 1929ல் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்திற்காக கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி சேவையைத் தொடங்கினார். இன்று தொலைக்காட்சி இல்லாத ஒரு உலகை நினைத்துப் பார்ப்பது சற்று சிரமம்தான். ஆனால் 85 ஆண்டுகளுக்கு முன்புவரை அது ஒரு கற்பனையாகவே இருந்தது. ஜான் லோகி பேர்ட் முயன்றதால் அந்தக் கற்பனை நிஜமானது. நமது வரவேற்பறைக்குள் உலகத்தைக் கொண்டு வர உதவிய அந்த முன்னோடி 1946 ஆம் ஆண்டு ஜூன் 14ந்தேதி தமது 58 ஆவது வயதில் காலமானார். ஜான் லோகி பேர்ட் 12 ஆவது வயதிலேயே தொலைக்காட்சிப் பற்றிய பல்வேறு சோதனைகளை செய்து பார்த்தார் என்று கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம். 

இதே வயதில் உங்கள் பிள்ளைகளும் சிறுவயதிலேயே எதாவது சோதனைகளை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்களா!! அவர்களைத் தட்டிகொடுத்து ஊக்கப்படுத்துங்கள். அவர்களைப் போன்றொர்களுக்குதான் வரலாறும் இடம்தர காத்திருக்கிறது. உடல் நலமின்மையும் வறுமையும்கூட ஜான் லோகி பேர்டின் கனவையும், தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் குலைத்து விடவில்லை. இதேபோல் நாமும் நமது வாழ்வில் கனவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியோடு முன்னேறினால் இவற்றுக்கு முன் எந்தத் தடையும் உடையும். எந்த வானமும் வசப்படும். 

(தகவல் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

33 comments:

 1. காலத்தால் அழியாத கண்டிபிடிப்பு தொலைக்காடசி...

  இன்று உலக மக்கலால் அதிக அளவில் பொழுதுபோக்கு சாதனமாக இருப்பது இதுவே...


  வரலாற்று பதிவுகளை அளித்தற்க்கு நன்றி...

  ReplyDelete
 2. விரிவான அழகான முழுவிவரங்களுடன் இருக்கிறது...

  ReplyDelete
 3. எல்லாரும் டிவில படத்தக் காட்டுவாங்க. டிவிய கண்டுபிடித்தவர் படத்தைக் காட்டிய அண்ணன் வாழ்க.

  ReplyDelete
 4. ஏற்கெனவே தெரிந்து வரலாறென்றாலும் சில புதிய தகவல்கள் :)

  தொடர்ந்து எழுதுங்க :))

  நன்றி!

  ReplyDelete
 5. சிறப்பான பகிர்வுப்பதிவு........

  ReplyDelete
 6. அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்..!

  இதையும் ஒருதடவைப் பாருங்களேன்..! இனி தடைகள் இல்லை உனக்கு..!

  ReplyDelete
 8. நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்டீர் நன்பரே...

  அனேகமான கண்டு பிடிப்புகளை கண்டு பிடித்தோர் அதன் புகழ் வந்து சேரும் முன்னரே இறந்து விடுவதை நினைக்கும் போது மனசு கனக்கிறது

  ReplyDelete
 9. இதே வயதில் உங்கள் பிள்ளைகளும் சிறுவயதிலேயே எதாவது சோதனைகளை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்களா!! அவர்களைத் தட்டிகொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.


  .... well-said!

  ReplyDelete
 10. தினமும் தொலைக்காட்சி முன் சிறிதளவாவது நேரம் செலவிடுகிறோம். அதனை குறித்த தகவல்களை சேகரித்து தொகுத்து வழங்கியதற்கு நன்றி.

  ReplyDelete
 11. ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளவேண்டிய செய்திகளை மிக அழகாகவும் எளிமையாகவும் தொகுத்து வழங்கிவருகிறீர்கள் நண்பரே..

  அருமை.

  தொடர்க.

  ReplyDelete
 12. அருமையான தகவல்களை அழகாக சொல்லியுள்ளீர்கள் நண்பரே , பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 13. தமிழ் மணம் 12

  ReplyDelete
 14. அறிவியல் பதிவிற்கு என்றும் எனது ஆதரவே .தொடருங்கள் .வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 15. கண்ணுக்கு விருந்தான பதிவு.
  தொடரட்டும் தங்கள் மகத்தான பணி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. நல்ல ஒரு பதிவு.அனைவரும் தெரிந்துகொள்ளப்பட வேண்டிய செய்தி.பகிந்தமைக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 17. தொடர்ந்து வரலாற்றுப் பதிவுகளை வழங்கிவரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. அவரது அயராத முயற்சியால் “காலத்தால்” அழிக்க முடியாத அரிய சாதனத்தைக் கண்டு பிடித்து உலகுக்கு அளித்தார்.

  ஆனால்,

  நம் நாட்டில் பெரும்பாலானோரின் பொன் போன்ற “காலத்தை” அப்பெட்டியின் முன்பு அமர்ந்து வெட்டியாய் கழித்துக் கொண்டிருப்போரை எண்ணும் போது தான் மனம் கனக்கிறது.

  ReplyDelete
 19. சில நேரங்களில் கண்டு பிடிப்புகள் எப்படி யாரால் என்பது அறியப்படாமலே போகிறது இப்படுயான வரலாற்று பதிவுகள் உண்மையில் தேவையே இடுகைக்கு பாராட்டுகள் நன்றி .

  ReplyDelete
 20. நான் இதுவரை அறிந்திராத செய்தியை வழங்கிய உமக்கு நன்றிகள் அண்ணே ..

  ReplyDelete
 21. அருமையான பதிவு.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 22. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 23. தகவல்கள் அருமை தம்பி..

  \\கற்பனை செய்பவர்கள்தானே கண்டுபிடிப்புகளையும் செய்கிறார்கள்\\

  எதார்த்தமான உண்மை ....

  ReplyDelete
 24. அருமையான பதிவு!!
  தொடரட்டும் உங்கள் வரலற்றுபயணம்!!

  ReplyDelete
 25. அன்றாட வாழ்வில் தொலைக்காட்சி இல்லையென்றால், சந்தோஷமே தொலைந்து போனதாய் புலம்பும் கால கட்டத்தில், அதனை கண்டிபிடித்தவரின் உழைப்பை எடுத்து சொல்லி அருமையாகப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 26. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்வையிடவும் :-)

  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_26.html

  தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. பலரும் அறிந்து கொள்ளும் விதத்தில் உள்ளது பதிவு.

  அருமை

  ReplyDelete
 28. arumaiyana tagaval pagirdhu kondadharku nandri..... melum tholaikatchiyal varum payangalayum,theengugalayum solungalen. athu ennum payan vulathaga irukum

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.