Wednesday, August 3, 2011

மூன்றும் உண்டு (தொடர்பதிவு)

வணக்கம் நண்பர்களே, 'மூன்று விஷயங்கள்' தொடர்பதிவுக்கு என்னையும் மதித்து அழைத்த எங்கள் டெரர் கும்மி குரூப்ஸின் பிரமாண்டம் 'ஜோதி புகழ் வெறும்பய - ஜெயந்த்' அவர்களின் வாழ்வில் என்றும் ஜோதி ஒளிரட்டும் என்று வாழ்த்தி நன்றி சொல்லி வாங்க நம்ம பதிவுக்கு போவோம்... :)

1 . விரும்பும் மூன்று விஷயங்கள்
 • வானம் வசப்பட வேண்டும்!
 • கனவு மெய்ப்பட வேண்டும்!
 • மேலே சொன்ன இரண்டும் அனைவருக்கும் நடக்க வேண்டும்.

2 . விரும்பாத மூன்று விஷயங்கள்
 • தேவையில்லாமல் அடுத்தவரின் விசயத்தில் தலையிடுவது
 • சில நண்பர்களின் போலி நட்புகளை
 • எரிச்சலூட்டும் அதிக இரைச்சல் தரும் சத்தங்கள்


3. பயப்படும் மூன்று விஷயங்கள்
 • எனது அலுவலக மேனேஜர் போன் பண்ணும்போது
 • முதுகுக்குப் பின்னால் பேசுபவர்களை நினைத்து
 • மனிதநேயம் கொஞ்சம்கூட இல்லாத மனிதர்களை பார்க்கும்போது

4 . புரியாத மூன்று விஷயங்கள்
 • கணக்குப்பாடத்தில் சூத்திரங்களும், வேதியியல் பாடத்தில் சமன்பாடுகளும்
 • அலுவலகத்தில் சிங்கப்பூர் புள்ளைங்க பேசும் சைனீஸ் மொழி (சீக்கிரம் சைனீஸ் கத்துக்கனும்)
 • டெரர் கும்மியின் சிந்தனை சிற்பி  ரமேஷ் (சிரிப்பு போலீஸ்) அடிக்கடி பிரபல பதிவர் என்று சொல்வது :)

5 . என் மேசையில் இருக்கும் மூன்று பொருட்கள்
 • கைப்பேசி
 • மடிக்கணினி
 • மென்பொருள் குறுந்தகடுகள்

6 . என்னை சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள்
 • லியோனி & சாலமன் பாப்பையா இவர்களின் பட்டிமன்ற பேச்சுகள்
 • காமெடி நிகழ்ச்சிகள் & நண்பர்களின் அரட்டைகள்
 • டெரர் - கும்மி நண்பர்களின் ஃபோரம் கமெண்ட்கள்

7 . செய்துகொண்டிருக்கும் மூன்று விஷயங்கள்
 • அறிவியல் மற்றும் வரலாறு சம்பந்தமான தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்
 • கணினித்துறையில் நெட்வொர்க்கிங் படித்துக்கொண்டிருக்கிறேன்
 • இந்த வருடமாவது ஊருக்கு போய்ட்டு வரலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்

8 . கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்
 • உலக அறிவு சார்ந்த விஷயங்கள்
 • அறிவியல் மற்றும் கணினி அறிவு
 • சைனீஸ், மலாய், தாய்லாந்து மொழிகளைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்
9 . பிடித்த மூன்று உணவு வகைகள்
 • அம்மாவின் சமையல்
 • சப்பாத்தியுடன் வெஜ் குருமா
 • வெஜ் ப்ரைடு ரைஸ்

10 . கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்
 • அலுவலகத்தில் சர்வர் டவுன் என்று மேனேஜரின் போன் அழைப்பு
 • அரசியல்வியாதிகளின் பேட்டிகளை
 • நண்பர்களின் இழப்பு செய்திகளை (மரணங்களை)

11 . அடிக்கடி ஹம்மிங் செய்யும் மூன்று பாடல்கள்
 • அறியாத வயசு புரியாத மனசு (பருத்தி வீரன்)
 • ஒரு கல் ஒரு கண்ணாடி (சிவா மனசுல சக்தி)
 • அய்யயோ நெஞ்சு அலையுதடி (ஆடுகளம்)

12 . பிடித்த மூன்று பொன்மொழிகள்
 • நீ நடந்துபோக பாதை இல்லையே என்று கவலைப்படாதே, நீ நடந்தால் அதுவே ஒரு பாதையாக வேண்டும்.- (Adolf ஹிட்லர்).
 • உன் லட்சியத்தை அடைய ஓராயிரம் முறை முயற்சி செய்! ஆயிரம் முறை தோல்வி வந்தாலும், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்! 
 •  - (சுவாமி விவேகானந்தர்)
 • இறந்தபிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள்; அல்லது பிறர் உங்களைப்பற்றி எழுதும் அளவுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்.- (பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்)

13. ஆசைப்படும் மூன்று விசயங்கள்
 • இந்த வருசமாவது எங்கள் டெரர் கும்மியின் சிந்தனை சிற்பி சிரிப்பு போலீஸ் ரமேசுக்கு கல்யாணம் ஆகனும்னு :)
 • சிங்கையின் சிங்கங்கள் பட்டாபட்டி & வெளியூர்காரன் ரெண்டு பேரையும் ஒருதடவையாவது நேரில் சந்திக்கனும் (இது நிறைவேறாமயே போயிருமோ)
 • வெளிநாடு வாழ் வாழ்க்கையை முடித்துக்கொண்டு சீக்கிரமே சொந்த ஊருக்கு திரும்பனும் (சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரப்போல வருமா)

14 . நிறைவேறாத மூன்று ஆசைகள்
 • விரும்பியதை படிக்க முடியாமல் போனது
 • இந்தியாவில் வேலை
 • தங்கையின் திருமணத்திற்கு ஊருக்குசெல்ல முடியாமல் போனது


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற மூன்று விஷயங்கள்
 • உயிர் மூச்சு
 • நட்பு
 • அம்மாவின் அன்பு

இத்துடன் நம்மளோட மூன்று விஷயங்கள முடிச்சுக்கலாம்.. பதிவுலக சம்பிராதாயப்படி இதை தொடர அழைக்கும் நண்பர்கள் சிங்கையின் சிங்கங்கள் மதிப்பிற்குறிய திரு. பட்டாபட்டி, 'ச்சாக்லெட் பேஜ்ஸ் சைந்தவி' புகழ் வெளியூர்காரன் மற்றும் நண்பர் ரெட்டைவால்ஸ்   :-)

இதை தொடர அழைக்கப்போகும் மேலும் மூன்று பேர்
பாசமிகு அண்ணன்கள்:
அன்புடன் நான் - கருணாகரசு

மனவிழி - சத்ரியன்


நன்றி
நட்புடன்
மாணவன்