Monday, October 25, 2010

தமிழரின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

 இந்த பதிவு நண்பர் சசிகுமாரின் வந்தேமாதரம் தளத்திலிருந்து....

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்

வயது : 29

இருப்பிடம் : மதுரை


அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்க்கவும் முடியாத கருணை செயல்.




நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!

யார் இந்த கிருஷ்ணன்...?!!
சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில் வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின் கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது! இந்த மாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக உதவணும் என்று இவர் முடிவு செய்த போது இவரது வயது வெறும் 21தான்

இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!



இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது!
சி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....!

கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது
இவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
லிங்க் http://heroes.cnn.com/vote.aspx


* இதில் நான் கட்டம் போட்டு காட்டி இருப்பது தான் நம்மாளு அவர் படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.

* உடனே அவருடைய படம் கீழே இருக்கும் காலி கட்டத்தில் வந்திருக்கும்.

* அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள்.

* அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.

* முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.

* பதிவர்கள் நினைத்தால் இதை அனைவருக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும். பதிவர்களே தமிழனுக்காக ஒரு பதிவை போடுங்கள்.

நண்பர் சசிகுமார் அவர்களின் பதிவை பார்த்து இந்த பதிவை போட எண்ணம் எனக்கு தோன்றியது. அது போல் உங்களுக்கு பதிவு போட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் உடனே போடவும். தாமதிக்க வேண்டாம். கடைசி தேதி நவம்பர் 18 வரை மட்டுமே.

நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்
அலட்சியபடுத்தாமல் மறக்கமால் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்

நண்பர் சசிகுமாருக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்



28 comments:

  1. 4 முறை ஓட்டு போட்டு விட்டேன்! மீண்டும் உங்களுக்காக!

    ReplyDelete
  2. //எஸ்.கே said...
    4 முறை ஓட்டு போட்டு விட்டேன்! மீண்டும் உங்களுக்காக!//
    ரொம்ப நன்றி நண்பரே
    நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்
    நமது நண்பர்களுக்கும் தெரியபடுத்தி நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்...
    நன்றி

    வாழ்க வளமுடன்
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  3. ஒட்டுபோட்டுவிட்டேன் சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  4. உங்களுக்காக மறுபடியும் ஓட்டு போட்டு விட்டேன் நண்பா....!தமிழனின் சேவைக்கு தலை வணங்குவோம்..!

    ReplyDelete
  5. நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்லை. என் பங்குக்கு நானும் ஒருமுறைக்கு இருமுறை ஓட்டு போட்டாச்சு.

    ReplyDelete
  6. வணக்கம் நண்பா நான் உங்கள் பதிவை கவணிக்கவில்லை நான் நினைத்தேன் நாம் தான் படத்தை இனைத்து எழுதியிருக்கிறோமென ஆனால் நீங்களும் அப்படித்தான் எழுதியிருக்கிறீர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஒரு விஷயத்தை கவணித்தீர்களா! நீங்கள் மின்னஞ்சலைல் கேட்டிருந்ததை பதிவை எழுதிவிட்டு என் தளத்தை பார்த்தால் நீங்கள் அதை கருத்துரையிலும் கேட்டிருந்தீர்கள் அது போல இன்றும் திரு. நாரயணன் கிருஷனன் அவர்களை பற்றி ஒரு குட்டி பதிவை எழுதிவிட்டு தளத்தை பார்த்தால் நீங்களும் அதை பற்றி நம் தளத்தில் எழுதியிருக்கிறீர்கள் அப்படியே உங்கள் தளத்திற்கு வந்தால் இங்கும் எழுதியிருக்கிறீர்கள் நல்லது நண்பா இது தான் எண்ண ஓட்டமாக இருக்குமோ?

    நான் வாக்களித்துவிட்டேன் ஆனால் ஒருமுறை மட்டுமே அளித்தேன்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  7. \\பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் தைரியமாக சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்....
    தங்களின் கருத்துரை என் எழுத்துக்களை வளப்படுத்தும்\\

    இது

    பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்....
    தங்களின் கருத்துரை என் எழுத்துக்களை வளப்படுத்தும்

    என்பதாக இருந்தால் நன்றாக இருக்குமே ( நான் மாற்றியிருக்கும் வார்த்தை தைரியமாக என்பதற்கு பதிலாக உரிமையோடு என மாற்றியிருக்கிறேன்)

    ReplyDelete
  8. //வேலன். said...
    ஒட்டுபோட்டுவிட்டேன் சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.//

    ரொம்ப நன்றி சார்
    இது தமிழராகிய நாம் ஒவ்வொருத்தரின் பொறுப்பும் பங்களிப்புமாகும் சார்
    நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்...

    என்றும் நட்புடன்
    உங்கள்.மாணவன்

    ReplyDelete
  9. //சசிகுமார் said...
    நன்றி நண்பரே//

    நாந்தான் நண்பரே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் இப்படி ஒரு பதிவை வெளியிடுவதற்கு வாய்ப்பு வழங்கியதற்காக ரொம்ப நன்றி நண்பரே
    இது தமிழராகிய நாம் ஒவ்வொருத்தரின் பொறுப்பும் பங்களிப்புமாகும்
    நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்...

    ReplyDelete
  10. //சாதாரணமானவள் said...
    நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்லை. என் பங்குக்கு நானும் ஒருமுறைக்கு இருமுறை ஓட்டு போட்டாச்சு/

    தங்கள் வருகைக்கும் ஓட்டுபோட்டதற்கும் மிக்க நன்றி சகோ

    இது தமிழராகிய நாம் ஒவ்வொருத்தரின் பொறுப்பும் பங்களிப்புமாகும்
    நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்...

    வாழ்க வளமுடன்
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  11. //Praveen-Mani said...
    உங்களுக்காக மறுபடியும் ஓட்டு போட்டு விட்டேன் நண்பா....!தமிழனின் சேவைக்கு தலை வணங்குவோம்..!//

    ரொம்ப நன்றி நண்பரே முதன்முதலாக என் தளத்தின் வருகைக்கும் திரு கிருஷ்ணன் சாருக்கு ஓட்டுபோட்டதற்கும் மீண்டும் நன்றி
    இது தமிழராகிய நாம் ஒவ்வொருத்தரின் பொறுப்பும் பங்களிப்புமாகும்
    நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்...

    வாழ்க வளமுடன்
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  12. //ஜிஎஸ்ஆர் said...

    வணக்கம் நண்பா நான் உங்கள் பதிவை கவணிக்கவில்லை நான் நினைத்தேன் நாம் தான் படத்தை இனைத்து எழுதியிருக்கிறோமென ஆனால் நீங்களும் அப்படித்தான் எழுதியிருக்கிறீர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஒரு விஷயத்தை கவணித்தீர்களா! நீங்கள் மின்னஞ்சலைல் கேட்டிருந்ததை பதிவை எழுதிவிட்டு என் தளத்தை பார்த்தால் நீங்கள் அதை கருத்துரையிலும் கேட்டிருந்தீர்கள் அது போல இன்றும் திரு. நாரயணன் கிருஷனன் அவர்களை பற்றி ஒரு குட்டி பதிவை எழுதிவிட்டு தளத்தை பார்த்தால் நீங்களும் அதை பற்றி நம் தளத்தில் எழுதியிருக்கிறீர்கள் அப்படியே உங்கள் தளத்திற்கு வந்தால் இங்கும் எழுதியிருக்கிறீர்கள் நல்லது நண்பா இது தான் எண்ண ஓட்டமாக இருக்குமோ?//

    என் தளத்திற்கு தங்களின் வருகை மிகவும் பெருமையாக உள்ளது நண்பா..
    நான் உங்கள் மாணவன் என்றென்றும் உங்கள் வழியில்.......
    திரு கிருஷ்ணன் சாருக்கு ஓட்டுபோட்டதற்கு மீண்டும் நன்றி
    இது தமிழராகிய நாம் ஒவ்வொருத்தரின் பொறுப்பும் பங்களிப்புமாகும்
    நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்...
    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    உங்கள் மாணவன்

    ReplyDelete
  13. //ஜிஎஸ்ஆர் said...
    பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்....
    தங்களின் கருத்துரை என் எழுத்துக்களை வளப்படுத்தும்

    என்பதாக இருந்தால் நன்றாக இருக்குமே ( நான் மாற்றியிருக்கும் வார்த்தை தைரியமாக என்பதற்கு பதிலாக உரிமையோடு என மாற்றியிருக்கிறேன்)//

    மாற்றிவிட்டேன் நண்பா...

    தாங்கள் எப்போதுமே என்னிடம் குறைகளை களைந்து என்னை நல்வழிப்படுத்துவதற்கும் வழிநடத்திசெல்வதற்கும் உரிய பொறுப்பும் உரிமையும் ஒரு ஆசானாக உங்களுக்கு உண்டு

    என்றென்றும் உங்கள் வழியில்..
    உங்கள் மாணவன்

    ReplyDelete
  14. கிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்கனவே அந்த தளத்தில் வோட் பண்ணிவிட்டேன்.. நன்றி

    ReplyDelete
  15. உங்களுக்கு என் நன்றிகள்....பலமுறை வோட் போட்டாலும் திருப்தி இன்னும் வரவில்லை சகோ....அதனால் உங்களுக்காக மீண்டும் ஒருமுறை வோட் பண்ணிடுறேன்.

    ReplyDelete
  16. //Ananthi said...

    கிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்கனவே அந்த தளத்தில் வோட் பண்ணிவிட்டேன்.. நன்றி//

    மிகவும் நன்றி சகோ,
    இது தமிழராகிய நாம் ஒவ்வொருத்தரின் பொறுப்பும் பங்களிப்புமாகும்
    நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்...

    வாழ்க வளமுடன்
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  17. // Kousalya said...

    உங்களுக்கு என் நன்றிகள்....பலமுறை வோட் போட்டாலும் திருப்தி இன்னும் வரவில்லை சகோ....அதனால் உங்களுக்காக மீண்டும் ஒருமுறை வோட் பண்ணிடுறேன்.//

    தங்களின் வருகைக்கு முதலில் பெரிய நன்றி சகோ,
    இந்த பதிவிற்காக நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்
    பலமுறை வோட் போட்டாலும் திருப்தி இன்னும் வரவில்லை சகோ....
    உங்களுக்கு திருப்தி வரும்வரை வோட் போட்டுகொண்டே இருங்கள் ஒரு தமிழரின் சாதனையை உலகெங்கும் எடுத்துசெல்வது தமிழராகிய நாம் ஒவ்வொருத்தரின் பொறுப்பும் பங்களிப்புமாகும்
    நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்...

    உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்
    வாழ்க வளமுடன்
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  18. நண்பரே சரி செய்து விட்டேன். டெம்ப்ளேட்டில் சிறிய பிரச்சினை இருந்தது இப்பொழுது சேர்த்து பாருங்கள் சேர்ந்து விடும்.

    ReplyDelete
  19. தினம் ஒரு ஓட்டு போட்டு வருகிறேன்..

    ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!

    http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html

    ReplyDelete
  20. // சசிகுமார் said...
    நண்பரே சரி செய்து விட்டேன். டெம்ப்ளேட்டில் சிறிய பிரச்சினை இருந்தது இப்பொழுது சேர்த்து பாருங்கள் சேர்ந்து விடும்.//

    இப்போது இனைத்துவிட்டேன் நண்பா..
    சரிசெய்தற்கு மிகவும் நன்றி

    வாழ்க வளமுடன்
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  21. // ஈரோடு தங்கதுரை said...
    தினம் ஒரு ஓட்டு போட்டு வருகிறேன்..
    ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!
    http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html

    மிகவும் நன்றி நண்பரே

    உங்களுக்கு திருப்தி வரும்வரை வோட் போட்டுகொண்டே இருங்கள் ஒரு தமிழரின் சாதனையை உலகெங்கும் எடுத்துசெல்வது தமிழராகிய நாம் ஒவ்வொருத்தரின் பொறுப்பும் பங்களிப்புமாகும்
    நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்...

    உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்
    வாழ்க வளமுடன்
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  22. very great post !

    உன்மையில் இவர் நல்ல மனித நேயர் !

    வாழ்க பல நன்புகழை பெற்று ! ...


    thanks 2 share மாணவன்.

    ReplyDelete
  23. ///எஸ்.முத்துவேல் said...
    very great post !
    உன்மையில் இவர் நல்ல மனித நேயர் !
    வாழ்க பல நன்புகழை பெற்று ! ...
    thanks 2 share மாணவன்.///

    தாங்கள் வருகை தந்து எனது தளத்தில் இனைந்து கருத்துரை வழங்கியதற்கு மிக்க நன்றி நண்பா

    ஒரு தமிழரின் சாதனையை உலகெங்கும் எடுத்துசெல்வது தமிழராகிய நாம் ஒவ்வொருத்தரின் பொறுப்பும் பங்களிப்புமாகும்
    நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்...

    உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்
    வாழ்க வளமுடன்
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  24. @Dhosai

    மிகவும் நன்றி நண்பரே

    நவம்பர் 18ந்தேதி வரை உங்களுக்கு திருப்தி வரும்வரை வோட் போட்டுகொண்டே இருங்கள் ஒரு தமிழரின் சாதனையை உலகெங்கும் எடுத்துசெல்வது தமிழராகிய நாம் ஒவ்வொருத்தரின் பொறுப்பும் பங்களிப்புமாகும்
    நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்...

    உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்
    வாழ்க வளமுடன்
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  25. முழு மனதுடன் ஓட்ட்ட்டட்ட்ட்டளித்துவிட்டேன்!!

    ReplyDelete
  26. @முனைவர்.இரா.குணசீலன்

    மிகவும் நன்றி சார்,

    நவம்பர் 18ந்தேதி வரை உங்களுக்கு திருப்தி வரும்வரை வோட் போட்டுகொண்டே இருங்கள் ஒரு தமிழரின் சாதனையை உலகெங்கும் எடுத்துசெல்வது தமிழராகிய நாம் ஒவ்வொருத்தரின் பொறுப்பும் பங்களிப்புமாகும்
    நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்...

    உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்
    வாழ்க வளமுடன்
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.