Saturday, October 23, 2010

படித்ததில் ’ரசித்த’ வரிகள்

என்ன செய்கிறாய் இப்போது
இனிமேல் நானும் கேட்கலாம்
ஏனென்றால் எனக்கும் வேலை
கிடைத்துவிட்டது...

***********************************************

சிறகு கிடைத்தால் பறப்பது
மட்டும் வாழ்க்கையல்ல.....
சிலுவை கிடைத்தாலும்
சுமப்பதுதான் வாழ்க்கை.....
***********************************************

கடவுள் படைத்த உலகில்
மனிதன் வாழ்கிறான்
மனிதன் வடித்த சிலையில்
கடவுள் வாழ்கிறார்...
************************************************

தடைகளால் தளர்ந்து போகிறான்
சாதாரணமானவன்....
தடைகளை தகர்த்து போகிறான்
சாதனையாளன்....
************************************************

உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய
சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே
உனக்கு துனையாக இருப்பவர் எவ்வளவு
பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்!
*************************************************

சிகரெட்
என்னைப்பற்ற வைத்து
கொஞ்சம் கொஞ்சமாய் எரித்து
சாம்பலாக்குகிறாய்....
முடிவில் ஒருநாள் நான் உன்னை
முழுவதும் எரித்து சாம்பலாக்கப்போகிறேன்
என்று தெரியாமல்.....
*************************************************

ஆலம் விழுதுகள்
ஆலமரமே
உனக்குக்கூட
காதல் தோல்வியா
தாடி வளர்க்கிறாயே!
*************************************************

நேரத்தின் அருமை
நேரத்தை வீனாக்கும்போது
கடிகாரத்தைப்பார்.....
ஓடுவது வினாடியல்ல
உன் வாழ்க்கை என்பது புரியும்!
*************************************************

ஒவ்வொரு நாளும் தூங்கப்போகும்போது
நான் இறக்கிறேன்...
அடுத்த நாள் எழும்போது
மறுபடியும் பிறக்கிறேன்....
                        - மகாத்மா காந்தி
ஒவ்வொரு நாளும் தூங்கப்போகும்போது
நான் மறுபடியும் பிறக்கிறேன்....
அடுத்த நாள் எழும்போது
மறுபடியும் இறந்து போகிறேன்...
                        - சாப்ட்வேர் இன்ஜினியர்
*************************************************

பெண்கள்
அன்று - சமையல்
இன்று - சாப்ட்வேர்
*************************************************

திருமணம்
கடவுள் சேர்த்து வைத்த ஒன்றை
மனிதன் கடைசிவரை
பிரிக்காமல் இருப்பானாக...
*************************************************

என்னவளின் நினைவுகள்
என் நிழலுக்கும் அவளுக்கும்
ஒரு போட்டி என்னிடம்
அதிகமாய் இருப்பது யார் என்று
தோற்றது என் நிழல்தான்...
ஆம்!
என் நிழலில்லாமல்கூட இருந்திருக்கிறேன்
அவளின் நினைவில்லாமல் இருந்ததில்லை
இதுநாள் வரை.....
*************************************************

விடுதலை
விரும்பாமல் கேட்கிறேன் விடுதலை
அவளின் நினைவுகளிலிருந்து...
*************************************************

காத்திருப்பு
நீ வரவேண்டும் என்பதில்லை
வரக்கூடும் என்பதே போதுமெனக்கு....
**************************************************

கொஞ்சம் அறிவியல் தெரிந்துகொள்வோம்:
 • .மனிதனின் நுரையீரலில் 35 கோடி சுவாசப்பைகள் உள்ளன
 • நாம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 21 ஆயிரத்து 600 தடவை மூச்சை இழுத்து வெளியிடுகிறோம்
 • நம்முடைய இதயம் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறது
 • நமது உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை மொத்தம் 276
 • மனிதன் முதன்முதலில் தோன்றிய நாடு கிழக்கு ஆப்பிரிக்கா

இந்த பதிவு எழுத காரணமாய் அமைந்த அனைத்து ஆக்கங்களுக்கும் , படைப்பாளிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்!

குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். (நன்றி நண்பர் ஜி எஸ்ஆர் அவர்கள்)

8 comments:

 1. கவிதைகளும் தகவல்களும் அருமை!

  ReplyDelete
 2. //எஸ்.கே said...
  கவிதைகளும் தகவல்களும் அருமை! //

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்

  வாழ்க வளமுடன்
  என்றும் நட்புடன்
  மாணவன்

  ReplyDelete
 3. //Thanglish Payan said...
  ippadi korpathe migavum arumai.//  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...
  வாழ்க வளமுடன்
  என்றும் நட்புடன்
  மாணவன்

  ReplyDelete
 4. ஒரு சிலவற்றை தவிர மற்ற எல்லாமே அருமை அதில் எதை குறிப்பிட்டு பாரட்டுவது என தெரியவில்லை வாழ்த்துகள்

  தொடர்ந்து சிறப்பான சிந்திக்ககூடிய பதிவுகளை தாருங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சியம் வருவேன்

  ReplyDelete
 5. //ஜிஎஸ்ஆர் said...

  ஒரு சிலவற்றை தவிர மற்ற எல்லாமே அருமை அதில் எதை குறிப்பிட்டு பாரட்டுவது என தெரியவில்லை வாழ்த்துகள்

  தொடர்ந்து சிறப்பான சிந்திக்ககூடிய பதிவுகளை தாருங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சியம் வருவேன்//

  மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாக உள்ளது நண்பா, உங்களின் வருகை பெருமையாக உள்ளது
  நிச்சயமாக சிறப்பான சிந்திக்ககூடிய பதிவுகளையே எழுதுவேன் நான் உங்கள் மாணவன் என்றென்றும் உங்கள் வழியில்..........
  என்றும் நட்புடன்
  உங்கள் மாணவன்

  ReplyDelete
 6. மாணவன் என்று பெயரை வைத்து கொண்டு சிறந்த தேர்ந்த ஆசிரியரை போல் எழுதி இருக்கீங்க .எல்லாம் வெகு அருமை மாணவரே.

  ReplyDelete
 7. //PalaniWorld said...
  மாணவன் என்று பெயரை வைத்து கொண்டு சிறந்த தேர்ந்த ஆசிரியரை போல் எழுதி இருக்கீங்க .எல்லாம் வெகு அருமை மாணவரே.//

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி நண்பரே
  உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவுதான் என்னைத்தொடர்ந்து சிறப்பாக எழுதவைக்கிறது

  வாழ்க வளமுடன்
  என்றும் நட்புடன்
  மாணவன்

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.