Wednesday, October 20, 2010

நட்பு (நண்பேன்டா)

தேசமே!
நெஞ்சம் கொள்ளும்
தன்னலம் இல்லாத 
நட்பினில்!
சுவாசமும் விசுவாசம்
கொள்ளும்
சுயநலம் இல்லாத
நட்பினில்!


ஆண்பாலும்
பெண்பாலும்
அசைகின்ற 
அழகான பசுமை
ஆம்!
 ஏழ்மையும் சற்றே
 நிமிர்ந்து நிற்கும்
செழுமையும்
ஒய்யாரமாய்
ஓடிவரும்

செங்கனி சுவையோ
இதன் வரவு...
செங்குறுதி உணர்வோ
இதன் உறவு...

பேசுகிறபோது
மலர்கிறது....
பிரிகின்றபோது
தொடர்கிறது....
மொத்தத்தில்
மணமேடை முதல்
மயானம் வரை!

மதம் ஓர் தடையில்லை
இனம் ஓர் இடையூரில்லை
அது தன்மானம் தந்து 
துயர் நீக்கும் நின்று
வயதே ஆனாலும் 
வரவேற்கும் வந்து...
நட்பு:
       ஒரு வளர்பிறைபோல் வளரும்
        வானிருக்கும் வரை...
        உயிருடன் வாழும்
        உலகிருக்கும் வரை...

என்றும் நட்புடன்...
 உங்கள்.மாணவன்

16 comments:

  1. அருமையான கவிதை தொகுப்பு சிம்பு சார்....

    குறை ஒன்றும் இல்லை..அனைத்தும் அருமையான வரிகள்...

    வாழ்த்துக்கள்....


    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  2. பதிவுலகத்திற்கு வருக வாழ்த்துக்கள் ,
    தொடர்ந்து எழுதவும் .ஞானசேகர் மற்றும் வேலன் சார் பலருக்கு ஆசிரியர்கள், பிரதிபலன் பாரா நட்புடையவர்கள்,பதிவுலகத்தில் எனக்கு பிடித்தது பிரதிபலன் பாரா நட்பு நெறைய கிடைக்கும் .

    நட்புடன் ,
    கோவை சக்தி.

    http://kovaisakthi.blogspot.com/

    ReplyDelete
  3. சூப்பராக உள்ளது கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. மிக்க நன்றி வேலன் சார், தங்கள் வருகை புரிந்து கருத்துரையிட்டு வாழ்த்தியதிற்கு ரொம்ப பெருமையாக உள்ளது உங்களின் ஆசிர்வாதத்தோடு இனிதே தொடர்கிறேன்
    நன்றி

    ReplyDelete
  5. ”சக்தி சொன்னது
    பதிவுலகத்திற்கு வருக வாழ்த்துக்கள் ,
    தொடர்ந்து எழுதவும் .ஞானசேகர் மற்றும் வேலன் சார் பலருக்கு ஆசிரியர்கள், பிரதிபலன் பாரா நட்புடையவர்கள்,பதிவுலகத்தில் எனக்கு பிடித்தது பிரதிபலன் பாரா நட்பு நெறைய கிடைக்கும்”

    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா நிச்சயமாக உங்களைப்போன்ற நண்பர்களின் துனையோடு தொடர்ந்து எழுதுவேன்...
    நன்றி
    என்றும் நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  6. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி எஸ்.கே சார்,
    என்றும் நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  7. அன்பின் நண்பா நீங்கள் என்னை குரு என அழைக்கும் அளவிற்கு எனக்கு தகுதி இருக்கிறதா எனத் தெரியாது ஆனால் நல்ல நண்பனாய் இருப்பேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சியம் வருவேன் என் கருத்துகளை பகிர்வேன், பதிவுலகம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும், எழுதுங்கள் நல்ல விஷயங்களை எழுதுங்கள், சோர்ந்து விடாதீர்கள், இடையில் தளர்ச்சி வரும் அப்போது நம்மையறியாமல் நமக்குள் அயற்சியும் வரும். நல்ல நண்பர்களை பழக்கபடுத்திக்கொள்ளுங்கள் எப்போதும் உங்கள் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள்.

    \\நட்பு:
    வளர்பிறைபோல் வளரும்
    வானிருக்கும் வரை...
    உயிருடன் வாழும்
    உலகிருக்கும் வரை...\\

    மனதை தொட்ட வரிகள.

    நீங்கள் என்னை உரிமையோடு அழைத்திருப்பதால் நானும் உரிமையோடு இரு கருத்துகளை முன்வைக்கிறேன்

    1. டெம்ப்ளேட் தரவிறக்கம் வேகம் குறைவாக இருக்கிறது சோதித்து பார்த்து மாற்றி விடுங்கள்

    2. அவசியமில்லாத விட்ஜெட்களை எடுத்துவிடுங்கள் அது ஒழுங்கீனமாக தெரிகிறது

    3. வேர்டு வெர்பிகேசன் எடுத்து விடுங்கள்

    4. கருத்துரை இட நேரம் அதிகம் எடுக்கிறது சோதித்து பாருங்கள்

    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  8. அன்பின் நண்பா நீங்கள் என்னை குரு என அழைக்கும் அளவிற்கு எனக்கு தகுதி இருக்கிறதா எனத் தெரியாது ஆனால் நல்ல நண்பனாய் இருப்பேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சியம் வருவேன் என் கருத்துகளை பகிர்வேன், பதிவுலகம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும், எழுதுங்கள் நல்ல விஷயங்களை எழுதுங்கள், சோர்ந்து விடாதீர்கள், இடையில் தளர்ச்சி வரும் அப்போது நம்மையறியாமல் நமக்குள் அயற்சியும் வரும். நல்ல நண்பர்களை பழக்கபடுத்திக்கொள்ளுங்கள் எப்போதும் உங்கள் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள்.

    \\நட்பு:
    வளர்பிறைபோல் வளரும்
    வானிருக்கும் வரை...
    உயிருடன் வாழும்
    உலகிருக்கும் வரை...\\

    மனதை தொட்ட வரிகள.

    நீங்கள் என்னை உரிமையோடு அழைத்திருப்பதால் நானும் உரிமையோடு சில கருத்துகளை முன்வைக்கிறேன்

    1. டெம்ப்ளேட் தரவிறக்கம் வேகம் குறைவாக இருக்கிறது சோதித்து பார்த்து மாற்றி விடுங்கள்

    2. அவசியமில்லாத விட்ஜெட்களை எடுத்துவிடுங்கள் அது ஒழுங்கீனமாக தெரிகிறது

    3. வேர்டு வெர்பிகேசன் எடுத்து விடுங்கள்

    4. கருத்துரை இட நேரம் அதிகம் எடுக்கிறது சோதித்து பாருங்கள்

    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  9. மிக்க மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது ஜிஎஸ்ஆர் நண்பரே தாங்கள் வருகைபுரிந்து கருத்துரையிட்டு வாழ்த்தியதற்கு...
    என்னால் முடிந்தளவு நான் கற்றுகொண்ட படித்த நல்ல விஷயங்களை எழுதுவேன்...

    ”நீங்கள் என்னை உரிமையோடு அழைத்திருப்பதால் நானும் உரிமையோடு சில கருத்துகளை முன்வைக்கிறேன்”
    கண்டிப்பாக எந்த குறைகளாக இருந்தாலும் உரிமையோடு சொல்லலாம் நண்பா...

    நீங்கள் சொன்ன குறைகளை விரைவில் சரிசெய்துவிடுகிறேன்
    மிக்க நன்றி
    என்றும் நட்புடன்
    உங்கள்.மாணவன்

    ReplyDelete
  10. நண்பர் சிம்புவிற்கு-
    யு டியுப் பில் படத்தை அப்லோடு செய்து படத்தை ஓடவிடு்ங்கள். அதில் கீழே பார்த்தீர்களேயானால் அதில் எம்பெடட் என்று இருக்கும் அதை காப்பி செய்து உங்கள் பிளாக்கில் எச்டிஎம்எல்லில் பேஸ்ட் செய்து எழுது ஒப்பன்செய்து பார்க்கவும். சரியாக வரும்.தேவையானால் பதிவாக பதிவிடுகின்றேன்.
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. அருமையான நட்பின் வரிகள்..
    உங்கள் நட்பிற்கு நன்றி :-))

    ReplyDelete
  12. வேலன் சொன்னது:
    ”நண்பர் சிம்புவிற்கு-
    யு டியுப் பில் படத்தை அப்லோடு செய்து படத்தை ஓடவிடு்ங்கள். அதில் கீழே பார்த்தீர்களேயானால் அதில் எம்பெடட் என்று இருக்கும் அதை காப்பி செய்து உங்கள் பிளாக்கில் எச்டிஎம்எல்லில் பேஸ்ட் செய்து எழுது ஒப்பன்செய்து பார்க்கவும். சரியாக வரும்.தேவையானால் பதிவாக பதிவிடுகின்றேன்”.

    செய்துபார்த்தேன் நன்றாக வருகிறது மிக்க நன்றி வேலன் சார்....

    ReplyDelete
  13. ஆனந்தி சொன்னது:
    ”அருமையான நட்பின் வரிகள்..
    உங்கள் நட்பிற்கு நன்றி :-))”

    தங்கள் வருகைக்கும் நட்பிற்கும் நன்றிங்க சகோ

    ReplyDelete
  14. கவிதை நல்லாயிருக்கு பின்குறிப்பு அது இது என எல்லாம் தவிர்த்து விடுங்கள் உங்கள் குரு சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன்..மேலும் சிறப்பா எழுத வாழ்த்துக்கள் மாணவன் விரைவில் ஆசானாக வாழ்த்துக்கள் மீண்டும்

    ReplyDelete
  15. ”தமிழரசி சொன்னது
    கவிதை நல்லாயிருக்கு பின்குறிப்பு அது இது என எல்லாம் தவிர்த்து விடுங்கள் உங்கள் குரு சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன்..மேலும் சிறப்பா எழுத வாழ்த்துக்கள் மாணவன் விரைவில் ஆசானாக வாழ்த்துக்கள் மீண்டும்”

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க
    அடுத்த பதிவில் தவிர்த்துவிட்டு இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்
    நன்றி
    என்றும் நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  16. நட்பு:
    ஒரு வளர்பிறைபோல் வளரும்
    வானிருக்கும் வரை...
    உயிருடன் வாழும்
    உலகிருக்கும் வரை...
    நறுமணம் வீசும் வரிகள்.

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.