Tuesday, June 4, 2013

ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் - வரலாற்று நாயகர்!

வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்போரும், வாழ்க்கையை வாழ்ந்து முடிப்போரும் மீண்டும் ஒரு பருவத்திற்காக ஏங்குவார்கள் என்றால் அது நிச்சயம் பிள்ளைப்பருவமாகத்தான் இருக்கும். மழலைப்பேச்சும், கள்ளகபடமற்ற சிரிப்பும் நிறைந்த அந்த பிள்ளைப்பருவத்தில் வேறு எந்த தொல்லைகளும் இருக்காது என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் அந்த பருவத்தில்தான் எந்த கட்டுப்பாடுமின்றி கற்பனைகளில் சஞ்சரிக்க முடியும். கனவுலகில் சிறகடிக்க முடியும் என்பது. உங்கள் பிள்ளைப்பருவத்தை சற்று பின்னோக்கிப் பாருங்கள் அந்தப் பருவத்தைப் பற்றி உங்களுக்கு எது ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ ஒன்று மட்டும் நிச்சயமாக நினைவுக்கு வரும். அதுதான் fairy tales எனப்படும் புனைக்கதைகள். பெரும்பாலும் விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டு சின்ன சின்ன நீதிகளையும், கருத்துகளையும் சொல்லும் ஓர் அற்புத புனைக்கதைத் தொகுப்புதான் fairy tales. இன்றும் உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களை கட்டிப்போட்டிருக்கும், சிறுவர்களை கவர்ந்திருக்கும் அந்த புகழ்பெற்ற புனைக்கதைகளை நமக்கு தந்தவரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். அவர்தான் டென்மார்க் தந்த புகழ்பெற்ற கதாசிரியர் Hans Christian Andersen. 

1805-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் நாள் டென்மார்க்கில் பிறந்தார் கிரிஸ்டியன் ஆண்டர்சன். அவரது தந்தை சோகமே உருவான ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. அவருக்கு வாய்த்தது சேரிப்புற வாழ்க்கைதான். தினசரி தன் மகனுக்கு எதாவது கதை படித்து சொல்வார் தந்தை. ஆண்டர்சன் சிறுவயதில் உடல் மெலிந்தும், சுத்தமில்லாமலும் இருப்பார். பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லாததால் அவரை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை. சிறுவயதில் பிள்ளைகளுக்கு நிறைய கனவுகள் இருக்குமல்லாவா! ஆண்டர்சனுக்கும் ஒரு கனவு இருந்தது பெரிய பாடகராக வரவேண்டும் என்று. வறுமையைப் போக்கிக்கொள்ளவும், வாய்ப்புகளைத் தேடிக்கொள்ளவும் அவர் தமது பதினான்காம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி டென்மார்க் தலைநகர் Copenhagen வந்து சேர்ந்தார். 

Copenhagen தெருக்களில் பாட்டு பாடி மக்களை கவர முயன்றார். ஆனால் அவருக்கு பாட்டுப் பாட வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர, அதற்கான குரலோ ஞானமோ அறவே இல்லை. அதனை சில நாட்களில் புரிந்துகொண்ட ஆண்டர்சன் இசையோடு நடனமாடி நடித்து மக்களை கவர நினைத்தார். அதிலும் அவருக்கு தோல்விதான் மிஞ்சியது. ஆனால் எதையாவது செய்து புகழ்பெற வேண்டும் என்ற அவரது எண்ணமும் அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் எதிர்பாரத ஒரு பலனை அவருக்கு பெற்று தந்தன. அப்போது டென்மார்க்கின் மன்னனாக இருந்தவர் ஆறாம் Frederick அவருக்கு தெரிந்த ஒரு பிரமுகர் ஆண்டர்சனின் முயற்சிகளைப் பார்த்துவிட்டு மனமிறங்கி அவரது கல்விக்காக உதவி செய்யும்படி மன்னரிடம் கேட்டுக்கொண்டார். மன்னரும் ஆண்டர்சனின் கல்விக்காக ஏற்பாடு செய்து தந்தார்.  

கல்வி கற்று பெரியவர் ஆனதும் பிள்ளைகளைக் குறியாகக் கொண்டு எழுதத் தொடங்கினார் ஆண்டர்சன். 1828-ஆம் ஆண்டு அவர் சிரிப்பும், பொழுதுபோக்கும் நிறைந்த  A Journey on Foot என்ற நகைச்சுவை கதையை எழுதினார். ஏழு ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய The Improvisatore என்ற நாவல் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுதந்தது. அவரது திறமையை மெச்சிய டென்மார்க் மன்னர் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்ய ஆண்டர்சனுக்கு நிதியுதவி வழங்கினார். அந்த பயணத்தின்போது பல புகழ்பெற்ற மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பின்னாளில் Thumbelina, The Little Mermaid, The Emperor's New Clothes,  Picture-Book without Pictures, The Tinderbox,  Fairy Tales போன்ற புகழ்பெற்ற படைப்புகளை வழங்கினார். தம் வாழ்நாளில் சுமார் 350 கதைகளை எழுதினார். 

ஆண்டர்சனின் படைப்புகளில் அவருக்கு உலக புகழைப் பெற்று தந்தவை அவர் எழுதிய 'Fairy Tales' என்ற புனைக்கதைகள்தான். அந்த புனைக்கதைகளில் ஒன்று The ugly duckling அதாவது அழகில்லாத வாத்து. அந்த கதையில் மற்ற வாத்துகளைப்போல் தாம் அழகாக இல்லை என்று கவலைப்பட்ட ஒரு வாத்து பின்னர் அன்னமாக மாறுகிறது. ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சனின் வாழ்க்கைக்கும், அந்த கதைக்கும் அவ்வுளவு வேறுபாடு இல்லை. ஆண்டர்சனும் தன் உருவத்தைப் பற்றி கவலைப்பட்டவர்தான். ஆனால் டென்மார்க் மன்னரின் கவனம் கிடைத்தவுடன் தன்னம்பிக்கை பெற்று தாழ்வு மனப்பான்மையை மறந்து பிள்ளைகளின் வாழ்க்கையில் நீங்கா இடம் பிடித்தார். வெளித்தோற்றத்தை வைத்து எவரையும் மதிப்பிடக்கூடாது அவர்களது உள்ளம் அழகாக இருக்கும் என்ற கருத்தை அவர் பல கதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். 

தன் வாழ்நாளில் இருமுறை காதல் வயப்பட்டார் ஆண்டர்சன். ஆனால் இரண்டுமே ஒருதலை காதலாக இருந்தது. 1875-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் நாள் தமது 70-ஆவது வயதில் அவர் தனிமையிலேயே காலமானார். அவரது வாழ்க்கை தனிமையில் முடிந்திருக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் சிறுவர்களின் வாழ்க்கையில் தனிமையில்லாமல் பார்த்துக்கொள்பவை அவர் உருவாக்கித் தந்த Fairy Tales தான். மக்களை குறிப்பாக சிறுவர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டவைதான் The Fairy Tales. தன்னைபோன்ற சோகமான பிள்ளைப்பருவம் பிறருக்கு வாய்க்கக்கூடாது என்பதும் ஆண்டர்சனின் எண்ணமாக இருந்தது. உலக குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்த அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த தினத்தை 'Odin's story day' என கொண்டாடுகிறது டென்மார்க். புதிய பொருட்கள் வாங்குவதில் அவருக்கு எப்போதுமே பிரியம். ஆனால் ஏழ்மை காரணமாக அவரால் விரும்பியவற்றை வாங்க முடிந்ததில்லை. 

ஓர் ஏழையாக பிறந்தாலும் உலக குழந்தைகளை கவரும் உன்னத படைப்புகளை தந்ததால் உலகப் புகழ் பெற்றார் ஆண்டர்சன். பல வரலாற்று நாயகர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துணை வந்த வறுமைதான் இவருக்கும் துணை வந்திருக்கிறது. ஆனால் வறுமைக்கும், திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை மெய்ப்பித்ததால்தான் வரலாறு ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் போன்றவர்களை நினைவில் வைத்திருக்கிறது. அவருக்கு 'புனைக்கதைகள்' என்ற வானம் வசப்பட்டதால்தான் அவரது நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சனைப் போல் வறுமைய மறந்து திறமையை மூலதனமாக்கி விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் உழைத்தால் நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.  

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

1 comment:

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.