Monday, September 12, 2011

அணுவைத் துளைத்த விஞ்ஞானியின் கதை - ('சர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு') வரலாற்று நாயகர்!

'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்' என்று திருக்குறளைப் புகழ்ந்துப் பாடினார் ஒளவையார். திருக்குறள் எவ்வுளவு சிறிய வடிவில் எவ்வுளவு பெரிய விசயங்களைச் சொல்கிறது என்பதை எடுத்துக்காட்டத்தான் அப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மனிதனுக்குத் தெரிந்த ஆகச் சிறியப் பொருள் அணுதான். அந்த அணுவைத் துளைத்து ஏழு கடலையும் புகுத்துவதென்றால் முடியக்கூடியக் காரியமா? ஆனால் ஒருவிதத்தில் அந்த சொற்றொடரைக் கூறிய ஒளவையாரைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால் உலகிலேயே ஆகச்சிறியப் பொருளான அணுவைத் துளைக்க முடியாதா? என்று அவர் சிந்தித்திருக்கிறார் அப்போது வேர்விட்ட அந்த சிந்தனை பல காலத்திற்குப் பிறகு உண்மை என்று நிரூபிக்கப்பட்டது அறிவியல் உலகில். ஆம் அணுவையும் துளைக்க முடியும் என்று செய்து காட்டினார் ஒரு விஞ்ஞானி.



அந்தச் சாதனையின் மூலம் உலகம் பல நன்மைகளையும் கண்டிருக்கிறது, சில தீமைகளையும் கண்டிருக்கிறது. நன்மைகளை மட்டுமே நாம் அளவுகோலாகக் கொண்டுப் பார்த்தால் எந்தக் கண்டுபிடிப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். அணுவைப் பிளக்கும் கண்டுபிடிப்பு அணுகுண்டு உற்பத்திக்குத் துணையாக இருந்தது என்ற ஒன்றை ஒதுக்கி விட்டு நாம் அந்த கண்டுப் பிடிப்பாளரின் கதையைத் தெரிந்துகொள்வோம். அவர்தான் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான 'சர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு'. 

1871 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 30ந்தேதி நியூசிலாந்தின் நெல்சன் எனும் இடத்தில் பிறந்தார் ரூதர்ஃபோர்டு. பனிரெண்டு பிள்ளைகளில் நான்காமவர். அவரது குடும்பம் ஓர் எளிய விவசாய குடும்பம். குடும்பப் பண்ணையில் பெற்றோருக்கு உதவியாக இருந்த அவர் கல்வியில் சிறந்து விளங்கினார் சிறிய வயதிலேயே அவர் கடும் உழைப்பாளியாக இருந்தார். உழைப்பு இருந்த அதே இடத்தில் அவருக்கு நிறைய புத்திக் கூர்மையும் இருந்தது. விளையாட்டுக்களில் கூட ரூதர்ஃபோர்டின் புத்திக்கூர்மை பளிச்சிட்டது. அவருக்கு 11 வயதானபோது ஒரு சோதனையைச் செய்துப் பார்த்தார். பீரங்கிகள் கம்பீரமாக முழங்குவதைப் பார்த்திருந்த அவர் அதே மாதிரி சத்தம் எழுப்பக் கூடிய ஆனால் அழிவை ஏற்படுத்தாத ஒரு பொம்மை பீரங்கியைச் செய்ய விரும்பினார். 


சம வயது பையன்கள் விளையாடும் கோலிக்குண்டுகளை வைத்து சிறிய வெடி மருந்தையும் பயன்படுத்தி பொம்மைப் பீரங்கியைச் செய்தார் அதனை இயக்கி விட்டு ஒரு மரத்திற்குப் பின் ஒளிந்து கொண்டார். பெரும் சத்தத்துடன் விளையாட்டுப் பீரங்கி வெடித்து ஓய்ந்தது. மகிழ்ந்து போன ரூதர்ஃபோர்டு அதோடு நின்று விடவில்லை அந்த பீரங்கியின் வேகத்தையும் அது எழுப்பும் சத்தத்தையும் மேலும் எப்படி அதிகரிக்கலாம் என்று சிந்திக்கத் தொடங்கினார். இப்படி ஓயாமல் சிந்திக்கும் அவரது பண்புதான் பிற்காலத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்ய அவருக்கு உறுதுணையாக இருந்தது.

கல்வியில் சிறந்து விளங்கிய ரூதர்ஃபோர்டுக்கு நெல்சன் கல்லூரி உபகாரச்சம்பளம் வழங்கியது. பின்னொரு அந்த உபகாரச் சம்பளத்தைப் பற்றி குறிப்பிட்ட ரூதர்ஃபோர்டு அது கிடைக்காமல் போயிருந்தால் தான் ஒரு விவசாயியாக போயிருக்கக்கூடும் என்று கூறினார். கல்லூரி முடிந்து நியூசிலாந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்த அவர் தனது 22 ஆவது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்கலைக் கழக நாட்களில் மின் காந்த அலைகளின் சோதனையில் முகுந்த ஆர்வமும் ஈடுபாடும் காட்டினார். அந்தத் துறையில் தொடர்ந்து ஆராய்ட்சி செய்ய அவருக்கு உபகாரச் சம்பளம் வழங்கியது இங்கிலாந்தின் கேம்ஃபிரிட்ஜ் பல்கலைக்கழகம். 24 வயதில் கேம்ஃபிரிட்ஜ் வந்து சேர்ந்த ரூதர்ஃபோர்டு மின்காந்த அலைகள், மின் கதிர்வீச்சு ஆகியவற்றில் ஆராய்ட்சிகள் செய்தார். கெவெண்டிஷ் ஆராய்ட்சிக் கூடத்தில் அவர் யுரேனியம் என்ற தனிமத்தைக் கொண்டும் ஆராய்ட்சிகள் செய்தார். யுரேனியம் வெளியிடும் கதிர்வீச்சை அளக்க ஒரு புதிய கருவியை உருவாக்கினார். அந்தக் கதிர்வீச்சுகளுக்கு ஆல்பா, பீட்டா, காமா என்று பெயரிட்டார்.  

ரூதர்ஃபோர்டின் ஆராய்ட்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த கனடாவின் Montreal பலகலைக்கழகம் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றும்படி அவருக்கு அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று 27 ஆவது வயதில் அங்கு சென்ற ரூதர்ஃபோர்டு தனது ஆராய்ட்சிகளைத் தொடர்ந்ததோடு பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டார். ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் இங்கிலாந்து திரும்பிய ரூதர்ஃபோர்டு இந்த முறை Manchester பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக சேர்ந்தார். யுரேனியம் வெளியிடும் அணுக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததற்காக ரூதர்ஃபோர்டுக்கு 1908 ஆம் ஆண்டுக்கான இராசயனத்துறை நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்தப் பரிசு வழங்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் மிக முக்கியமான இன்னொரு கண்டுபிடிப்பைச் செய்தார் ரூதர்ஃபோர்டு. அணு என்பது ஒரு திடப்பொருளல்ல எப்படி சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருகின்றனவோ அதேபோல் அணுவுக்குள் நியூக்ளியர் என்ற நடுநாயகத்தை எலக்ட்ரான்ஸ் என்பவை சுற்றி வருகின்றன என்பதுதான் அந்த உண்மை. 

அணுவின் தன்மைப் பற்றி அதுவரை அறியப்படாத உண்மை அது. முதல் உலகப்போரின்போது நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் கருவி ஒன்றை உருவாக்கித் தந்தார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புகளை கவுரவிக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரூதர்ஃபோர்டுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தது இங்கிலாந்து அரசு. ரூதர்ஃபோர்டுக்கு அழியாப் புகழ் கிடைத்த ஆண்டு 1919 இந்த ஆண்டில்தான் அவர் அதுவரை முடியாது என நம்ப பட்டதை செய்து காட்டினார் ஆம் அணுவை பிளந்து காட்டினார். யுரேனியத்தில் ஆல்பா துகள்களை செலுத்தினால் எதிர் விளைவுகள் சங்கிலித் தொடர்போல் ஏற்படும் என்பதை விளக்கிக் காட்டினார். அந்த உண்மைதான் பிற்காலத்தில் அணுகுண்டு தயாரிக்க அடிப்படையாக அமைந்தது. ஆனால் அவரது ஆராய்ட்ச்சிகளின் நோக்கம் அழிவுக்கான ஆயுதங்களை உற்பத்தி செய்வதல்ல. அணுசக்தியால் மனுகுலத்திற்கு நன்மைகள் ஏற்படும் என்று அவர் நம்பினார். அதே நோக்கத்துடன் கடைசி வரை உழைத்த ரூதர்ஃபோர்டு 1937 ஆம் ஆண்டு அக்டோபர் 19ந்தேதி தமது 66 ஆவது வயதில் காலமானார். அவரது அஸ்தி  Westminster Abbey யில் நியூட்டன் போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

நல்லவேளையாக ரூதர்ஃபோர்டு வாழ்ந்த காலம்வரை அணுகுண்டுகளோ, ஹைட்ரஜன் குண்டுகளோ உற்பத்தி செய்யப்படவில்லை. இல்லையெனில் எளிமையையே விரும்பிய அந்த விஞ்ஞானி மனம் நொந்து போயிருப்பார். இன்று அணுசக்தியால் உலகம் பல நன்மைகளை அனுபவித்து வருகிறது. மின் உற்பத்தி மற்றும் நெடுந்தூர கடல் பயணம் போன்றவற்றிற்கெல்லாம் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது. இன்னும் பல ஆக்க சக்திகளுக்கு அணுசக்தியை பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் கொண்டே வருகின்றனர். அந்த நன்மைக்கெல்லாம் உலகம் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டுக்குதான் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. தன் வாழ்நாளில் பல பட்டங்களையும், விருதுகளையும் வாங்கிக் குவித்தார் ரூதர்ஃபோர்டு. அவரை கவுரவிக்கும் வகையில் ஸ்வீடன், ரஷ்யா, கனடா, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகள் ரூதர்ஃபோர்டின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டிருக்கின்றன. 

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமானதொரு கண்டுபிடிப்பை நிகழ்த்த ரூதர்ஃபோர்டுக்கு உறுதுணையாக இருந்த பண்புகள் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான். அப்படி விடாமுயற்சியோடு செயல்பட்டு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதால்தான் அவர் மறைந்த பிறகும் அவரது பெயரை வரலாறு பெருமையுடன் நினைவில் வைத்திருக்கிறது. ரூதர்ஃபோர்டைப் போலவே நாமும் இந்த இரண்டு பண்புகளை தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்வில் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் போராடினால் நிச்சயமாக வரலாறும் இடம் தரும் அதன் மூலம் நாம் விரும்பும் வானமும் வசப்படும். 

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

42 comments:

  1. நல்ல தொரு விசயம் பொதிந்த கட்டுரையை பகிர்ந்ததர்க்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பா...பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன் நன்றி!

    ReplyDelete
  3. எனக்கு அணுக்கரு பத்தின விசயங்கள் ரொம்ப பிடிக்கும்னா. விரைவில் அணுவியல் சார்ந்த கட்டுரை அல்லது அறிவியல் கதை எழுதப்போகிறேன் :)

    ReplyDelete
  4. வாழ்க சிம்பு...
    உம்பணி சிறந்திட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ///எனக்கு அணுக்கரு பத்தின விசயங்கள் ரொம்ப பிடிக்கும்னா. விரைவில் அணுவியல் சார்ந்த கட்டுரை அல்லது அறிவியல் கதை எழுதப்போகிறேன் :)///

    செல்வா... நீயும் ஆரம்பிக்கப் போறியா?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  6. //செல்வா... நீயும் ஆரம்பிக்கப் போறியா?
    //

    ஹா ஹா.. :)

    ReplyDelete
  7. ஆமாம் அணு பயன்பாடு இன்று ஆக்கத்திற்கும் அழிவிற்கும் முக்கியாமான ஒன்று. அணுசக்தி இல்லையென்றால் இன்று பல நாடுகள் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும். அந்த அணுசக்தியை பெறுவதற்கு தான் இந்தியா அமெரிக்காவிடம் தன்னை அடகு வைத்துள்ளது.

    இயற்பியல் நாயகரை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி சிம்பு.

    ReplyDelete
  8. அணுக்கள் பற்றி எனக்கு எதுவும் இதுவரை தெரிந்ததில்லை. தகவல்கள் தந்தமைக்கு மாணவனுக்கு நன்றி.

    ReplyDelete
  9. நல்ல தொரு விசயம் பொதிந்த கட்டுரையை பகிர்ந்ததர்க்கு நன்றி :))

    ReplyDelete
  10. ///ரூதர்ஃபோர்டைப் போலவே நாமும் இந்த இரண்டு பண்புகளை தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்வில் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் போராடினால் நிச்சயமாக வரலாறும் இடம் தரும் அதன் மூலம் வானமும் வசப்படும். ///
    உண்மைதான் மாணவன். சிறந்த முறையில் தொகுத்தளிமைக்கு மிக்க நன்றி.

    இங்கேயும் ஒரு பார்வையிட்டுச் செல்லுங்கள். இடுகையின் தலைப்பு: பற்றற்ற ஞானி

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு .பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  12. இன்னும்
    எதிர் பார்க்கின்றோம்
    அன்புடன்
    யானைக்குட்டி

    ReplyDelete
  13. இதுவரைதெரிந்திராத விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  14. ஒவ்வொரு கண்டுபிடிப்புகளின் பயனும் அதை பயன்படுத்துபவர்களின் கையில் தான் இருக்கிறது. சிலர் நன்மைக்காக பயன்படுத்துகிறார்கள், சிலர் தீமைக்காக பயன்படுத்துகிறார்கள். அதனால் ரூதர்ஃபோர்டு அவர்களின் கண்டுபிடிப்புகள் பாராட்டத்தக்கதே!

    தங்களின் தொடர் பகிர்வுகளுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  15. அருமை!!!!

    எங்க நாட்டுக்காரரைப் பற்றி இங்கே தமிழில் கொண்டுவந்ததுக்கு நியூசி மக்கள் சார்பில் என் நன்றி.

    என்றும் அன்புடன்,
    துளசி (நியூசி)

    ReplyDelete
  16. நோபல் என்பவர்தான் அனுவை பிளந்ததாகவும் அனு குண்டை கண்டுபிடித்ஹதாகவும், அந்தக் குறையை போக்கவே, நோபல் பரிசை இருவாக்கியதாகவும் கேள்விப்பட்ட ஞாபகம். அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால், இவருக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. சற்று குழப்பமாக உள்ளது. /

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  17. பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன் நன்றி!

    ReplyDelete
  18. //////Mohamed Faaique said...
    நோபல் என்பவர்தான் அனுவை பிளந்ததாகவும் அனு குண்டை கண்டுபிடித்ஹதாகவும், அந்தக் குறையை போக்கவே, நோபல் பரிசை இருவாக்கியதாகவும் கேள்விப்பட்ட ஞாபகம். அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால், இவருக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. சற்று குழப்பமாக உள்ளது. /////////

    Alfred Nobel என்பவர் கண்டுபிடித்தது டைனமைட் என்னும் வெடிபொருள். அவர் சகோதரர் ஒருவர் இறந்தபோது வந்த ஒரு பத்திரிக்கை தவறாக நோபெல் இறந்தாக குறிப்பிட்டு, மனிதர்களை எளிதில் கொல்லும் வழியை கண்டுபிடித்து பணக்காரனாகிவிட்டார் என கண்டனம் செய்திருந்தது.

    அது கண்டு மனம் வருந்திய நோபெல், தனது சொத்தில் பெரும்பகுதியை வருடாவருடம் சிறந்த மனிதர்களுக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார். அதுவே நோபெல் பரிசாக கொடுக்கப்பட்டு வருகிறது. இவரது காலம் 1833-1896.

    ReplyDelete
  19. // Mohamed Faaique said...
    நோபல் என்பவர்தான் அனுவை பிளந்ததாகவும் அனு குண்டை கண்டுபிடித்ஹதாகவும், அந்தக் குறையை போக்கவே, நோபல் பரிசை இருவாக்கியதாகவும் கேள்விப்பட்ட ஞாபகம். அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால், இவருக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. சற்று குழப்பமாக உள்ளது. ///

    அன்பின் நண்பருக்கு வணக்கம்,

    நீங்கள் நினைப்பதுபோல் அணுசக்தியை பிளந்தது/கண்டுபிடித்தது நோபல் இல்லை நண்பரே ரூதர்ஃபோர்டுதான், நோபல் கண்டுபிடித்தது டைனமைட் எனும் வெடிப்பொருள், அவர் அந்த வெடிபொருளை ஆக்கச்சக்திக்கு பயன்படுத்ததான் அந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் ஆனால் உலகம்தான் அழிவுச்சக்திக்கு பயன்படுத்திக்கொண்டது அதனால் அவர் (நோபல்) பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்தை துடைத்துக்கொள்ளவே நோபல் பரிசை உருவாக்கினார்...

    இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்துபோன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப்போகும் களங்கத்தை துடைத்துக்கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு. அந்த அழிவுசக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து, அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல்.

    நோபல் பரிசை பற்றி மேலும் விளக்கமாக தெரிந்துகொள்ள வரலாற்று நாயகர்கள் தொகுப்பில் முன்னரே பதிவிட்ட (நோபல் பரிசு உருவான கதை - ஆல்ஃப்ரெட் நோபல் (வரலாற்று நாயகர்)
    http://urssimbu.blogspot.com/2011/05/blog-post.html இந்த பதிவைப் படித்துப்பாருங்கள் தெளிவாக புரியும் நன்றி!

    ReplyDelete
  20. @பன்னிக்குட்டியார்....

    நன்றி! நன்றி! நன்றி! :)

    ReplyDelete
  21. // M.R said...
    நல்ல தொரு விசயம் பொதிந்த கட்டுரையை பகிர்ந்ததர்க்கு நன்றி நண்பரே//

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  22. // விக்கியுலகம் said...
    பகிர்வுக்கு நன்றி நண்பா...பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன் நன்றி!///

    வருங்கால அரசியல்வாதிக்கு நன்றி நன்றி! :)

    ReplyDelete
  23. // கோமாளி செல்வா said...
    எனக்கு அணுக்கரு பத்தின விசயங்கள் ரொம்ப பிடிக்கும்னா. விரைவில் அணுவியல் சார்ந்த கட்டுரை அல்லது அறிவியல் கதை எழுதப்போகிறேன் :)//

    கண்டிப்பா எழுது செல்வா விரைவில் நாங்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

    ReplyDelete
  24. // வெளங்காதவன் said...
    வாழ்க சிம்பு...
    உம்பணி சிறந்திட வாழ்த்துக்கள்!//

    வாங்கப்பு எப்படி இருக்கீங்க, நல்லாயிருக்கீங்களா? எங்கப்பு கொஞ்ச நாளா ஆளயே காணும்? மீண்டும் வந்ததற்கு நன்றி இனிதே வரவேற்கிறோம்! :)

    விரைவில் உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து.........

    ReplyDelete
  25. // காந்தி பனங்கூர் said...
    ஆமாம் அணு பயன்பாடு இன்று ஆக்கத்திற்கும் அழிவிற்கும் முக்கியாமான ஒன்று. அணுசக்தி இல்லையென்றால் இன்று பல நாடுகள் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும். அந்த அணுசக்தியை பெறுவதற்கு தான் இந்தியா அமெரிக்காவிடம் தன்னை அடகு வைத்துள்ளது.

    இயற்பியல் நாயகரை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி சிம்பு.//

    தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றிண்ணே!

    ReplyDelete
  26. // இந்திரா said...
    அணுக்கள் பற்றி எனக்கு எதுவும் இதுவரை தெரிந்ததில்லை. தகவல்கள் தந்தமைக்கு மாணவனுக்கு நன்றி.//

    வருகைக்கும், தகவல்களை தெரிந்துகொண்டமைக்கும் நன்றிங்க...

    ReplyDelete
  27. // வைகை said...
    நல்ல தொரு விசயம் பொதிந்த கட்டுரையை பகிர்ந்ததர்க்கு நன்றி :))//

    எல்லாம் தாங்களின் ஆசிர்வாதமே!

    வாழ்த்துங்கள்! வளர்கிறோம்... :)

    ReplyDelete
  28. // தங்கம்பழனி said...
    ///ரூதர்ஃபோர்டைப் போலவே நாமும் இந்த இரண்டு பண்புகளை தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்வில் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் போராடினால் நிச்சயமாக வரலாறும் இடம் தரும் அதன் மூலம் வானமும் வசப்படும். ///
    உண்மைதான் மாணவன். சிறந்த முறையில் தொகுத்தளிமைக்கு மிக்க நன்றி.

    இங்கேயும் ஒரு பார்வையிட்டுச் செல்லுங்கள். இடுகையின் தலைப்பு: பற்றற்ற ஞானி//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. // @நண்டு @நொரண்டு -ஈரோடு said...//

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார் //

    //@யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே//


    //@Lakshmi said...

    மிக்க நன்றிங்கம்மா!

    ReplyDelete
  30. // Abdul Basith said...
    ஒவ்வொரு கண்டுபிடிப்புகளின் பயனும் அதை பயன்படுத்துபவர்களின் கையில் தான் இருக்கிறது. சிலர் நன்மைக்காக பயன்படுத்துகிறார்கள், சிலர் தீமைக்காக பயன்படுத்துகிறார்கள். அதனால் ரூதர்ஃபோர்டு அவர்களின் கண்டுபிடிப்புகள் பாராட்டத்தக்கதே!

    தங்களின் தொடர் பகிர்வுகளுக்கு நன்றி நண்பா!//

    மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பா, வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி நண்பா!

    ReplyDelete
  31. // துளசி கோபால் said...
    அருமை!!!!

    எங்க நாட்டுக்காரரைப் பற்றி இங்கே தமிழில் கொண்டுவந்ததுக்கு நியூசி மக்கள் சார்பில் என் நன்றி.

    என்றும் அன்புடன்,
    துளசி (நியூசி)//

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  32. // முனைவர்.இரா.குணசீலன் said...
    அருமையான பகிர்வு நண்பா.//

    பாராட்டுக்கு மிக்க நன்றிங்கய்யா!

    ReplyDelete
  33. அருமையான பதிவு வாழ்த்துக்கள் http://illamai.blogspot.com

    ReplyDelete
  34. அணு சக்தியை பற்றி பல தவறான கருத்துகளை தான் பலர் வெளியிடுகிறார்கள். உண்மையில் சொல்ல போனால் அணு சக்தியின் ஆக்க பூர்வ பணிகள் ஏராளம். தொடர்ந்து அணு சக்தியை குறித்து எழுதுங்கள். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  35. // Admin said...
    அருமையான பதிவு வாழ்த்துக்கள் //

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  36. // உங்கள் நண்பன் said...
    அணு சக்தியை பற்றி பல தவறான கருத்துகளை தான் பலர் வெளியிடுகிறார்கள். உண்மையில் சொல்ல போனால் அணு சக்தியின் ஆக்க பூர்வ பணிகள் ஏராளம். தொடர்ந்து அணு சக்தியை குறித்து எழுதுங்கள். பகிர்வுக்கு நன்றி//

    உங்களின் கருத்து உண்மைதான் நண்பரே அணுசக்தியின் பயன்பாடுதான் மிக அதிகம்தான் உலகம்தான் அதை தவறான அழிவுச்சக்திக்கும் பயன்படுத்துகிறது.....

    நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து எழுதுகிறேன் நண்பரே நன்றி!

    ReplyDelete
  37. Good post.Helpful.Thanks a lot.samy

    ReplyDelete
  38. துவண்டு விடும் தருணங்களில் இந்த மாணவனின் (சிம்பு) பதிவுகள் தான் பலரையும் நிமிர வைக்கிறது.

    வாழ்த்துக்கள் சிம்பு.

    ReplyDelete
  39. அப்போ ஆட்டோ ஹான் யாரு ஒய் ..,ஆஸ்திரியா நாட்ட சேர்ந்தவரு ..,அப்புறம் சரி விடு ,

    ReplyDelete
  40. அணுவ பிளக்க முடியும்னு சொன்னவரு ..,யாரு ஒய்

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.