Friday, January 6, 2012

டெரர் கும்மி விருதுகள் 2011 - பதிவுகளை இணைக்கலாம்!

அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்,
டெரர்கும்மி நண்பர்களின் சார்பில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் கடந்தகால கால கசப்புகள், கவலைகள் மறந்து புது வருடத்தில் பல இனிமையான நிகழ்வுகள் அமைய எல்லோரும் வணங்கும் இறைவனை வேண்டிக்கொள்கிறோம். நாங்கள் அறிவித்த டெரர்கும்மி விருதுகள்-2011 க்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நண்பர்கள் பலரும் தங்கள் படைப்புகளை விருதுகளுக்கு பதிவுசெய்து வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் எங்களது நன்றிகள்.
படைப்புகளை இணைக்க இன்னும் குறைந்த அளவே கால அவகாசம் உள்ளது. அதாவது ஜனவரி 10 -ஆம் தேதி வரை இணைக்கப்படும் பதிவுகள்தான் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகளை இணைக்காதவர்கள் கூடுமானவரை விரைவாக தங்கள் பதிவுகளை இணைக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்வதில் அல்லது பதிவுகளை இணைப்பதில் ஏதேனும் சந்தேகம் அல்லது குழப்பம் இருந்தால் தயங்காமல் எங்களை தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு உதவுவதற்காக காத்திருக்கிறோம். நீங்கள் கருதுரைகளிலும் கேட்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் எதில் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள்.



எங்கள் டெரர் கும்மி விருதுகள் இணைப்பை தங்கள் முகப்பில் வைத்து எங்களை கௌரவப்படுத்திய யுடான்ஸ் திரட்டி நிர்வாகிகளுக்கு எங்களது நன்றிகள். மேலும் டெரர்கும்மி விருதுகளைப்பற்றி தங்கள் வலைப்பதிவில் எழுதிய பல நண்பர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள். கால அவகாசம் குறைவாக இருப்பதால் இன்னும் இணைக்காமல் இருக்கும் நண்பர்கள் விரைவாக தங்கள் பதிவுகளை இணைக்கவும். அப்படி நீங்கள் இணைத்துவிட்டால் உங்கள் நண்பர்களிடமும் சொல்லி அவர்களையும் ஊக்கப்படுத்தவும். நண்பர்கள் முடிந்தவரை தங்களது படைப்புகளை விரைவாக இணைத்து தங்களது படைப்புக்களுக்கேற்ற பிரிவுகளில் டெரர் கும்மி விருதுகளையும், பரிசுகளையும் வசப்படுத்த அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறிக்கொண்டு மீண்டும் ஒரு இனிய சந்தர்ப்பத்தில் உங்களை சந்திக்கிறோம். நன்றி.


      
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

11 comments:

  1. வெற்றி பெறும் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. அடடா... நல்லவேளையாக கால அளவு நீட்டியது. போட்டி நடத்தப்போவதாக அறிவிப்பு வந்தது மட்டும் தான் தெரியும். விடுமுறையால் தெரியாமல் போய்விட்டது.

    தகுதியானவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வெற்றி பெறும் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. வெற்றியடைய போகும் எனக்கு வாழ்த்துக்கள்.. (ஓவர் கன்ஃபிடன்ஸோ???)

    ReplyDelete
  5. நான்:சொக்கா அந்த ஆயிரம் பொன்னும் எனக்கே கிடைக்க அருள் புரியனும்..
    கடவுள்: சனியனே முதல்ல பதிவை இணை
    நான்: ஓஓஓ. பரிசு பெறனும்னா முதல்ல பதிவை இணைக்கனுமா?

    ReplyDelete
  6. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. // ராஜி said...

    நான்:சொக்கா அந்த ஆயிரம் பொன்னும் எனக்கே கிடைக்க அருள் புரியனும்..
    கடவுள்: சனியனே முதல்ல பதிவை இணை
    நான்: ஓஓஓ. பரிசு பெறனும்னா முதல்ல பதிவை இணைக்கனுமா? //

    அதுக்கும் முன்னால.. முக்கியமா பதிவு எழுதணும்.. ஆமா..

    ReplyDelete
  8. பகிர்வுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. வணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.