Monday, May 9, 2011

நோபல் பரிசு உருவான கதை - ஆல்ஃப்ரெட் நோபல் (வரலாற்று நாயகர்)

ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கவுரவுக்கிறது. நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலைபெற்றிருக்கிறது.

இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்துபோன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப்போகும் களங்கத்தை துடைத்துக்கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு. அந்த அழிவுசக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து, அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல்.

1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ்பெற்ற பொறியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தவர் கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர். ஆனால் ஆல்பர்ட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம் நொடித்துப்போனது. பின்னர் ரஷ்யாவுக்கு சென்று தொழில் செய்து பணம் சேர்த்தார் தந்தை, தனது குடும்பத்தையும் அங்கு அழைத்துக்கொண்டார். தனது நான்கு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தனியாக பாடங்கள் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தார்.  

ஆல்ஃப்ரெட் நோபலுக்கு 17 வயதானபோது ஸ்விடிஸ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியும். நோபலை வேதியல் பொறியாளராக ஆக்க வேண்டும் என விரும்பிய தந்தை அவரை மேல்படிப்புக்காக பாரிஸ்க்கு அனுப்பி வைத்தார் பாரிஸில் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தை கண்டுபிடித்திருந்தார். அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார். ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.

கிரைனியன் போர் காரணமாக அவர்களது தொழில் மீண்டும் நொடித்துப்போனது எனவே அவர்கள் மீண்டும் ஸ்விடனுக்கு திரும்பினர். ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார். ஆனால் அதற்கு அவர் செலுத்திய விலை அதிகமாக இருந்தது. அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராட்சிகளை தொடர்ந்தார் நோபல். ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது.

மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார். கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டுபிடித்தார். அந்த தனது கண்டுபிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1866. கிரேக்க மொழியில் டைனமைட் என்றால் சக்தி என்று பொருள். அவரது அந்த கண்டுபிடிப்பு பல தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது. 

ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட்தான் பேருதவி புரிந்தது. அவரது கண்டுபிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத்தொடங்கியது. ஆனால் ஆக்கசக்தியாக தான் உருவாக்கியதை அழிவுசக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல். 1888 ஆம் ஆண்டு நோபலின் சகோதரர் லுட்விக் காலமானார். ஆனால் நோபல்தான் இறந்துவிட்டார் என நினைத்த பத்திரிகைகள் அழிவுசக்தியை உருவாக்கி கோடிஸ்வரரான ஆல்ஃப்ரெட் நோபல் காலமானார் என்று செய்தி வெளியிட்டன. அதனை படித்து அதிர்ந்து போன நோபல் தனது உண்மையான மரணத்துக்குபின் உலகம் தன்னை பழிக்கப்போகிறது என்று கலங்கினார்.

அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவதுதான் என்று முடிவு செய்தார். உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற்சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தைகொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார். 1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அந்தத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக்கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ந்தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.

ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின. ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக்கொண்டது. இன்றுவரை 770 பேர் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர். தன்னை அழிவுசக்தியை கண்டுபிடித்த நோபல் என்றில்லாமல் அறிவாளிகளை கவுரவிக்கும் நோபல் என்று உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார் ஆல்ஃப்ரெட் நோபல். அவரது எண்ணம் வீண்போகவில்லை 

ஆண்டுதோறும் நோபல் பரிசின் பெயர் உச்சரிக்கப்படும் போதேல்லாம் அந்த உன்னத மனிதனைத்தான் உலகம் நினைவு கூறுகிறது. உண்மையில் அவர் அழிவுசக்தியை கண்டுபிடிக்கவில்லை.ஆக்கசக்தியாக நோபல் கண்டுபிடித்ததை உலகம்தான் அழிவுசக்திக்கு பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்துகிறது. இருப்பினும் டைனமைட்டை கண்டுபிடித்ததிலும் பின்னர் நோபல் பரிசை அறிமுகம் செய்ததிலும் ஆல்ஃப்ரெட் நோபலின் நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தன. அதனால்தான் இன்றும் அவரது பெயர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது.  

ஆல்ஃப்ரெட் நோபலுக்கு வசப்பட்ட வானம் நமக்கும் வசப்படும், நமது நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தால்..!!

(தகவலில் உதவி - நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்) 

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன் 

36 comments:

  1. ஆல்பர்ட் நோபலுக்கு வசப்பட்ட வானம் நமக்கும் வசப்படும்//

    வானம் சிங்கப்பூர்லயும் ரிலீசா?

    ReplyDelete
  2. ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் ஒரு பதிவு

    வாங்க வாங்க நலமா

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு நன்றி

    ReplyDelete
  4. நோபல் பரிசுக்குப்பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா! ரொம்ப நல்லா இருந்தது மாணவன்.

    ஒரு நல்ல விஷயத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி (குறிப்பா போர் அடிக்காம)

    ReplyDelete
  5. வெகு நாளைக்கு பிறகு அறிய செய்திகளுடன் வந்திருக்கும் மாணவரை வருக என அழைக்கிறோம்..

    ReplyDelete
  6. வாங்க வாங்க மாணவன்.

    ReplyDelete
  7. oவழக்கம் போலவே பெறுமதியான தகவல் தந்திருக்கீங்க! புக் மார்க் பண்ணி வச்சிருக்கேன்!!

    ReplyDelete
  8. நல்ல பதிவு...! நன்றி மாணவன் அவர்களே..!

    ReplyDelete
  9. மச்சி, சூபரா இருக்குது...........
    நானும் ஒரு வரலாறு சம்பவத்தை ரெடி பண்ணிட்டு இருக்கேன். பதிவு விரைவில்.........

    ReplyDelete
  10. இத ரெண்டு பார்ட் ஆக எழுத்து மக்கா ...ஒரே அடியாக படிக்க ..கச்ட்டமாக இருக்கு

    ReplyDelete
  11. ஆல்பர்ட் நோபல். மனித குலம் மறக்க முடியாத பெயர். அருமையான பதிவு.

    ReplyDelete
  12. மீண்டும் ஒரு சிறப்பான தேர்வு...
    மிக அழகான விவரிப்பு...
    "ஏஞ்சல் ஆஃப் டெத்" என்று தூற்றப்பட்ட ஆல்ஃப்ரெட் நோபலின் பெயரில்தான் உலகின் மிக உயரிய அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.... அவரின் நல்ல மனதை அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்....
    வாழ்த்துக்கள் நண்பா.... தொடருங்கள் .....

    ReplyDelete
  13. என்னுடைய மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல எத்துனை உபயோகமான பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. ரொம்ப நாளா பதிவே பதிவு போடவில்லையோ, அடிக்கடி போடு மாப்ள உங்களை போல பதிவர்கள் கண்டிப்பா எழுதனும் மிக்க நன்றி சிம்பு.

    ReplyDelete
  15. அண்ணா வழக்கம்போல ரொம்ப நல்ல பதிவு!
    எனக்கும் இது கொஞ்சம் தெரியும். ஆனா அவுங்க அண்ணன் இறந்ததால பத்திரிக்கைச் செய்தி தவறாக வந்து அதைப் பார்த்து அவர் நொந்துபோனது எனக்குப் புதிய தகவல்!

    ReplyDelete
  16. நலமா சகோ?... நீண்ட நாளுக்குப் பிறகு பதிவு...அதிலும் ஆல்பர்ட் நோபல் போன்ற அழியாப் புகழ் பெற்ற அறிஞர்களைப் பற்றிய பதிவு...படிக்க படிக்க ஏதோ ஒரு வேகம்...வாழ்த்துக்கள் சகோ...நோபல் பரிசை பற்றித் தெரியுமே தவிர, அதற்க்கு காரணமாய் இருந்தவரை பற்றி கொஞ்சமே அறிந்திருந்தேன்...இன்று முழுதாய் தெரிந்து கொண்டேன்..நன்றி சகோ உன் பதிவுக்கு...

    ReplyDelete
  17. தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவதுதான் என்று முடிவு செய்தார். உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேறபட்ட டைனமைட் தொழிற்சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தைகொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார். 1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அந்தத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக்கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார்.

    இருக்கிற சொத்த எல்லாம் எப்படி சுருட்டுறதுன்னு எல்லாரும் யோசிக்கிற, இந்த காலத்துல உலக மக்கள் நன்மைக்காக இவர் செய்த விஷயம் சிம்ப்லி சூப்பர்..சகோ ஸ்கூல் படிக்கும் போது, எனக்கு இதெல்லாம் மண்டைல ஏறல...நன்றி உனக்கு....

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் சகோ...நீ பதிவுலகில் ஒரு ஆசிரியர் எங்களுக்கு....தொடர்ந்து எழுது...

    ReplyDelete
  19. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  20. மிகச் சிறந்த பதிவு...

    ReplyDelete
  21. மிக சிறந்த மனிதர்..
    நல்ல பதிவு பாஸ்

    ReplyDelete
  22. மிகவும் அருமை. நிறைய விஷ
    யங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி

    ReplyDelete
  23. ஆல்ஃப்ரெட் நோபல் பற்றிய அத்தனை விபரஙகளும் அடங்கிய பூர்ணத்துவம் பெற்ற தொகுப்பாக உங்கள் பதிவு மிளிர்கிறது. புகைப்படங்களும் மிக பொருத்தமானவையாக இருக்கின்றன.

    ReplyDelete
  24. நல்ல தகவல் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றிங்க. தொடர்ந்து நிறைய எழுதுங்க.

    ReplyDelete
  25. தங்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  26. நல்ல தகவல்
    மாணவரே

    ReplyDelete
  27. நெடு நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு ...
    அசத்தல் பதிவு அண்ணே,..
    உங்களின் இது போன்ற பதிவுகளை
    படித்து ரொம்ப காலம் ஆச்சு ...
    இனி தொடர்ந்து பதிவு போடுங்கள் அண்ணே ///

    ReplyDelete
  28. இதை பற்றிய செய்திகளை தொகுத்து வழங்கிய உங்களுக்கு அன்பு நன்றிகள ..

    ReplyDelete
  29. ஆல்ஃப்ரெட் நோபலுக்கு வசப்பட்ட வானம் நமக்கும் வசப்படும், நமது நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தால்..!!
    Interesting.

    ReplyDelete
  30. கருத்துக்களையும் பாராட்டுக்களையும் பகிர்ந்துகொண்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இதயங்கனிந்த நன்றி நன்றி நன்றி :)

    ReplyDelete
  31. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.