கணினி
கண்ணாடி குடுவைக்குள்
அடைப்பட்ட ஆக்சிஜனாய்-இவ்வுலகை
கையலக கணினியின்
கட்டுக்குள் அடக்கிய
மாபெரும் மகானுக்கு
பயன்பட்ட விரல்கள்- இன்று
திரை திறந்து வினாடிக்கு வினாடி
விஞ்ஞான யுக்திகளை
மெய்யான கணினியில்
கணக்கீடு செய்கிறது...
பின்பொரு காலத்தில் சிறுபிள்ளை தனத்தின்
நடைவண்டி பயணமாய் எழுதுகோல்
பிடித்த விரல்கள் இன்று
முடிவு தெரியாத பிரபஞ்ச வெளியாய்
ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளினூடே
சுட்டியில்(மவுசில்) மண்டியிடுகிறது
விசைப்பலகையில்(கீபோர்டு) சடுகுடு ஆடுகிறது..
பனி உறங்கும் புல்லாக மென்மையான உணர்வுகளை
அழகாக சுமந்து சென்று பிரசவிக்கும் தாயாய்
பிரதிபலித்த கடிதங்கள்-இன்று
வின்ணை கிழித்த மின்னலென கொட்டிக்கவிழ்த்த
வைரமென இணையதளத்தில் இமெயில் செய்கிறது...
கட்டண பேசியில் ஆரம்பித்து கைப்பேசியில் கரம்கோர்த்து
பொலிவிழந்த பொழுதுகளை பூரணமாக்கி
மணமகிழ்ந்த வேலைகளில் முகம் பார்த்து
இதயத்தின் கனத்தினை இமை வழியே இறக்க
குறைவான கட்டனத்தில் நிறைவாக பேச
வீடியோச்சாட்டிங் விடியலைப் படைக்கிறது...
சுவாசக்காற்றாக உதிரத்துளியாக....
உயிர்த்துடுப்பாக கிளை நரம்பாக....
நம்முள்
பின்னிப் பிணைந்த இன்னொரு ஜீவன்
கணினி...
வாழ்த்துக்கள் சிம்பு சார்,
ReplyDeleteதொடர்ந்து நிறைய எழுத வேண்டும்
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..
நிறைய நிறங்கள்....நிறைய குழப்பமாய் இருக்கு!கொஞ்சம் சிம்பிள் ஆக மாற்றுங்கள் வலைப்பக்கத்தை!
ReplyDeleteவாழ்த்துக்கள் ,தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் .
ReplyDeleteஎன்றும் அன்புடன் ,
கோவை சக்தி .
http://kovaisakthi.blogspot.com/
தங்களின் வருகைக்கு ரொம்ப நன்றி நண்பா
ReplyDeleteவேலைப்பளுவின் காரணமாக எழுத முடியவில்லை
விரவில் மீண்டும் தொடருவேன் உங்களைப்போன்ற
நண்பர்களின் ஆதரவோடு....
நன்றி