நம்மில் பலருக்கும் கணக்கு என்றாலே கசப்புதான் எண்களைக் கண்டாலே சற்று பயம். ஆனால் எண்களை நாம் விட்டு விட முடியாது அவை நமது வாழ்க்கையில் நம்மோடு ஒன்றினைந்து விட்டன. எண்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை வரவு-செலவு பார்க்கவும், எண்ணிச் சொல்லவும் சிலப் பொருட்களைக் குறிப்பிடவும் எண்கள் தேவையாகத்தான் இருக்கின்றன வேறு சிலருக்கோ எண்களோடு விளையாடுவதில் அலாதி இன்பம் எண்கள் அவர்களின் இணை பிரியாத் தோழர்கள்.