Monday, January 3, 2011

தியானம் (மனதை ஒருமுக படுத்துதல்)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத 
தமிழென்று சங்கே முழங்கு...!

சிந்தனைக்கு: அறிவின் எதிரில் அறியாமை தலை வணங்குகிறது - பிளாட்டோ

Avoid unnecessary involvement and interference. Do not slip away from duty without proper justification. Yogiraj Vethathiri Maharishi


ஜென் குருவிடம் ஒருவன் வந்து, ‘எப்படி தியானத்தில் ஈடுபடுவது?’ என்று கேட்டான். ‘என்னைப் பார்த்துக் கொண்டிரு. தியானம் உனக்குக் கைவரும்’ என்றார் ஜென். அவனும் சம்மதித்தான். காலையில் குரு எழுந்தார். குளித்தார். பகல் முழுவதும் தோட்ட வேலையில் ஈடுபட்டார். உணவு வேளையில் உண்டார். ஆனால் வழிபாடு, பிரார்த்தனை, தியானித்தல், படித்தல் என்றெல்லாம் செய்யவில்லை. 


இதில் மனம் சலித்த சீடன், ‘எப்போது நான் தியானம் கற்பது?’ என்றான். நான் குழி வெட்டியதும் தியானம்தான். தோட்டம் போட்டதும் தியானம்தான். உணவு உண்டதும் தியானம்தான். எனது வாழ்வே தியானம்தான். எனது வாழ்வில், தியானம் என்ற ஒன்று தனியாக இல்லை’ என்று சிரித்தபடி சொன்னார் ஜென் குரு. மாசற்ற மனம் உள்ளவர் விழி மூடி அமர்ந்திருக்க அவசியமில்லை.

நாம் அனைவரும் ஜென் குரு அல்ல. ஆயிரம் எண்ணங்கள் அலையடிக்கும் மனது நம்முடையது. ஆசை, அச்சம், கோபம், காமம், வெறுப்பு, பகை என்ற சிலந்திவலைப் பின்னலில் சிக்கித் தவிப்பவர்கள். நெருப்புக்கும் வெள்ளத்துக்கும் நடுவில் நிற்பதுபோல், நல்ல எண்ணங்களும், தீய விருப்பங்களுக்கும் இடையில் நடப்பதே வாழ்க்கை. ‘நல்லதையே நாடு’ என்று அறிவு சொல்கிறது. எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்று மனக் குரங்கு தினமும் பாடம் நடத்துகிறது. இந்தக குழப்பத்திலிருந்து எப்படி எப்போது நமக்கு விடுதலை என்பதுதான் கேள்வி?


நாம் ஒன்று செய்வோம். காலை-மாலை இரு வேளையும் தனிமையில் கொஞ்ச நேரம் கண்மூடி மெளனமாக அமர்ந்து உள்முகமாக யோசிப்போம்.

நமது பலம்-பலவீனம், நிறை-குறைகளை நெஞ்சில் நிறுத்தி அன்றாடம் அலசுவோம். தவறுகளைத் தவிர்க்க முடிவெடுப்போம். பகையை வேரறுத்து, அன்பை விதைத்து விருட்சமாக வளர்க்க முயலுவோம். ஒரே பிறவியில் புத்தனாக முடியாது என்கிறது பெளத்தம். 


ஒரே நாளில் நாம் அனைவரும் முனிவர்களாகிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மனதில் படிந்திருக்கும் அழுக்கை அகற்ற உள்முகத் தேடலில் ஈடுபடுவோம். எத்தனை நாள்தான் வெளியே தேடி, வாழ்வை வீணாக்குவது? விழிப்பு உணர்வு இல்லாத விலங்குகளா நாம்? தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு, தினமும் பத்து நிமிடமேனும் கண்மூடி தியானிப்போம்.
ஒன்றி புள்ளியாய் ஒடுங்கி நீ இரு,
அன்றி விரிந்திடில் ஆராய்ச்சியோடிரு,
நின்றிடு அகண்டாகார நிலையினில்
வென்றிடுவாய் புலன் ஐந்தையும் வெற்றியே...!

குறிப்பு: படித்த ஜென் கதையின் தாக்கத்தின் காரணமாக அமைந்த சிறு முயற்சி இந்த பதிவு, இதை உங்களிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் நன்றி.......!

**********************************************************************
வீரத்திற்கு பிறந்த நாள்:
இன்று 3 ஜனவரி வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் வீர வணக்கங்களுடன் வணங்குகிறேன் வீரத்தின் மொத்த உருவத்தையும்
வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு சிறு குறிப்பு:

ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பிப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
தகவல் உதவி நன்றி - விக்கிபீடியா


புத்தாண்டு பிறந்தது அனைவரின் மனதிலும் நல் எண்ணங்களும் உண்மையான அன்பும் மனித நேயமும் மலரட்டும் எங்கும் மனிதம் செழிக்கட்டும்.
சோதனைகளை புறம்தள்ளி
வேதனைகளை வேரறத்து
சாதனைக்கு கைகொடுப்போம்
சரித்திரத்தில் இடம் பிடிப்போம்
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறை

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

76 comments:

  1. நல்ல பகிர்வு நண்பா

    ReplyDelete
  2. நல்ல பகிர்வுங்க..

    இன்னைக்கு கட்டபொம்மன் பிறந்தநாளா? நல்லது..

    கட்டபொம்மன்னாலே.. சிவாஜிதான் ஞாபகம் வர்றார்..

    ReplyDelete
  3. என்னைக் கவர்ந்த வரிகள்..::>>நமது பலம்-பலவீனம், நிறை-குறைகளை நெஞ்சில் நிறுத்தி அன்றாடம் அலசுவோம். தவறுகளைத் தவிர்க்க முடிவெடுப்போம். பகையை வேரறுத்து, அன்பை விதைத்து விருட்சமாக வளர்க்க முயலுவோம்<<::

    நன்றி..! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  4. அனைவரும் அறியவேண்டிய தகவல்
    பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  5. நல்ல பதிவு..

    ஒரே நாளில் நாம் அனைவரும் முனிவர்களாகிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மனதில் படிந்திருக்கும் அழுக்கை அகற்ற உள்முகத் தேடலில் ஈடுபடுவோம். எத்தனை நாள்தான் வெளியே தேடி, வாழ்வை வீணாக்குவது? விழிப்பு உணர்வு இல்லாத விலங்குகளா நாம்? தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு, தினமும் பத்து நிமிடமேனும் கண்மூடி தியானிப்போம்.///////

    அருமையான வரிகள்...

    ReplyDelete
  6. பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.///

    OK. Super . Excellent. Brilliant

    ReplyDelete
  7. இங்கும் தியானமா காலைல எங்க அம்மா ARAMBIKKIRA ஒரே வார்த்த்த இது தான்
    இங்கயும் ஆரம்பிச்சுடிங்கள..
    போங்க நான் கோபமா போறேன்

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு நன்றி

    ReplyDelete
  9. புத்தாண்டிற்கு ஏற்ற பதிவு, ஜென் கதையின் தாக்கத்திற்கு, மறுதலிப்பாகவும் தியானம் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள்.
    வீர பாண்டிய கட்டப்பெம்மனுக்கு எம் வீரவணக்கங்கள். நினைவு கூர்ந்தற்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. கதையில் வருவது போல, செய்யும் தொழிலே தெய்வம் எனக்கொள்ளுதல் வேண்டும்.
    நீங்கள் நல்ல வாசிப்பாளர் என்று தெரிகிறது தொடருங்கள்.
    ரசித்த வரிகள்.
    //நமது பலம்-பலவீனம், நிறை-குறைகளை நெஞ்சில் நிறுத்தி அன்றாடம் அலசுவோம். //

    ReplyDelete
  11. கட்டப்பொம்மன் பற்றிய தகவலுக்கு நன்றி, ஜென் குருவின் தியான கதையும் சிந்திக்க வைக்கும்படி உள்ளது. வாழ்த்துக்கள், தொடர்ந்தும் கலக்குங்கள்.

    ReplyDelete
  12. எதுக்கு மைனஸ் ஒட்டு?

    ReplyDelete
  13. நான் தூங்கிட்டு இருக்கேன்.யாரும் கண்டுக்க மாட்டீங்களா?
    வந்து வாழ்த்திட்டுப் போங்க.இல்லையென,காட்டுப்பக்கம் வந்தா உங்களை சும்மா விட மாட்டேன்!
    ஆமா! இப்பவே சொல்லிட்டேன்.
    -"குறட்டை" புலி
    sleepingtiger007.blogspot.com

    ReplyDelete
  14. நல்ல பகிர்வு நண்பா

    ReplyDelete
  15. அண்ணே அசத்தல் பதிவு ... கனகச்சிதமாய் சுருக்கமாகவும் , அதே நேரத்தில் நல்ல விடயங்களை விரிவாகவும் சொல்லி அசத்தி புட்டிங்க ....
    வாழ்த்துக்கள் அண்ணே ....

    ReplyDelete
  16. சோதனைகளை புறம்தள்ளி
    வேதனைகளை வேரறத்து
    சாதனைக்கு கைகொடுப்போம்
    சரித்திரத்தில் இடம் பிடிப்போம்
    வாழ்வது ஒருமுறை
    வாழ்த்தட்டும் தலைமுறை//

    அற்புதம் அண்ணே .... மிக அவசியமான பதிவு.....
    அண்ணனின் இந்த பயணம் .... தொடர்ந்து பயணிக்கட்டும்,...

    ReplyDelete
  17. அருமை

    இதுக்கு நெகடிவ் ஓட்டு போட்டு இருக்காங்க என்றால் என்ன சொல்ல.

    ReplyDelete
  18. நல்ல விஷயம்..
    பகிர்விற்கு நண்றிகள்..

    ReplyDelete
  19. கட்டபொம்மனை நினைவு கூர்ந்ததுக்கு நன்றி!

    ReplyDelete
  20. பயபுள்ளக இங்கயும் மைனஸ் வோட்டு போட்ருக்குதுக....ஒரு வேளை பிரபல பதிவர் ஆயாச்சா?!!

    ReplyDelete
  21. நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி....
    http://sakthistudycentre.blogspot.com/

    ReplyDelete
  22. //வைகை said...

    பயபுள்ளக இங்கயும் மைனஸ் வோட்டு போட்ருக்குதுக....ஒரு வேளை பிரபல பதிவர் ஆயாச்சா?!!///

    இருக்கும் இருக்கும். தம்பி ட்ரீட் எப்போ?

    ReplyDelete
  23. தியானம் பற்றி நல்ல தகவல் ஏம்பா யாரு அது உங்களுக்கு இந்த பதிவு பிடிக்கலையா மைனஸ் ஒட்டு...யாராவது தெரியாமா போட்டு இருப்பாங்க

    ReplyDelete
  24. வீர பாண்டிய கட்டப்பெம்மனுக்கு எம் வீரவணக்கங்கள்...

    ஜென் குரு கதை மிக அருமை!!

    என் வலைப்பூவை தங்களது தளத்தில் இணைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  25. தியானம் - அருமை!

    ReplyDelete
  26. //மாசற்ற மனம் உள்ளவர் விழி மூடி அமர்ந்திருக்க அவசியமில்லை.///

    உண்மை....

    அருமையான பதிவுன்ங்க. அப்ப இனிமே சுட்டாலும் தனியா உக்காந்து கண்ண மூடி தியானம் பண்ண மாட்டேன்.

    //இதுக்கு நெகடிவ் ஓட்டு போட்டு இருக்காங்க என்றால் என்ன சொல்ல. //
    நெகட்டிவ் ஓட்டு போடுரது இப்ப பேஷனா போச்சு சார்....

    பிரபல பதிவராகுறதுக்கு இதான் முதல் அறிகுறி!!!

    பிரபல பதிவர் வாழ்க..... நாளைய முதலமைச்சர் வாழ்க.....

    ReplyDelete
  27. மிகவும் பயனுள்ள பகிர்வு பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  28. ஹ்ம்ம்ம்.... ஒரு பத்து நிமிடமாவது கண் மூடி...த்யானத்தில் இருக்க முயற்சி பண்றேன்...
    பகிர்வுக்கு நன்றி...

    வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு.. வணக்கம்.. :-)

    ReplyDelete
  29. நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பா...

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  30. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  31. அருமையான பதிவு. கட்டப்பொம்மன் குறித்த பகிர்வு சிறப்பு. உங்கள் வாழ்த்துக்கு நன்றி... உங்களுக்கு இந்த 2011 சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. // இரவு வானம் said...
    நல்ல பகிர்வு நண்பா//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  33. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    no vadai. im crying. im going to lunch.//

    சரி அழுவாதீங்க இங்க வரும்போது கரிபாவ் வாங்கி தரேன்...

    ReplyDelete
  34. // பதிவுலகில் பாபு said...
    நல்ல பகிர்வுங்க..

    இன்னைக்கு கட்டபொம்மன் பிறந்தநாளா? நல்லது..

    கட்டபொம்மன்னாலே.. சிவாஜிதான் ஞாபகம் வர்றார்..//

    ஆமாம் அண்ணே அந்தளவுக்கு செவாலியே சிவாஜி கட்டபொம்மனாகவே வாழ்ந்தவர் அந்த படத்தில்.....

    நன்றி அண்ணே

    ReplyDelete
  35. // தங்கம்பழனி said...
    என்னைக் கவர்ந்த வரிகள்..::>>நமது பலம்-பலவீனம், நிறை-குறைகளை நெஞ்சில் நிறுத்தி அன்றாடம் அலசுவோம். தவறுகளைத் தவிர்க்க முடிவெடுப்போம். பகையை வேரறுத்து, அன்பை விதைத்து விருட்சமாக வளர்க்க முயலுவோம்<<::

    நன்றி..! வாழ்த்துக்கள்..!//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  36. // மகாதேவன்-V.K said...
    அனைவரும் அறியவேண்டிய தகவல்
    பகிர்வுக்கு நன்றி நண்பா.///

    நன்றி நண்பரே

    ReplyDelete
  37. // ஜெ.ஜெ said...
    நல்ல பதிவு..

    ஒரே நாளில் நாம் அனைவரும் முனிவர்களாகிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மனதில் படிந்திருக்கும் அழுக்கை அகற்ற உள்முகத் தேடலில் ஈடுபடுவோம். எத்தனை நாள்தான் வெளியே தேடி, வாழ்வை வீணாக்குவது? விழிப்பு உணர்வு இல்லாத விலங்குகளா நாம்? தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு, தினமும் பத்து நிமிடமேனும் கண்மூடி தியானிப்போம்.///////

    அருமையான வரிகள்...//

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க சகோ

    ReplyDelete
  38. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.///

    OK. Super . Excellent. Brilliant//

    புகழ்றீங்களா இல்ல ஓட்டுறீங்களான்னு தெரியல....எனிவே நன்றி அண்ணே

    ReplyDelete
  39. // கல்பனா said...
    இங்கும் தியானமா காலைல எங்க அம்மா ARAMBIKKIRA ஒரே வார்த்த்த இது தான்
    இங்கயும் ஆரம்பிச்சுடிங்கள..
    போங்க நான் கோபமா போறேன்//

    ஹலோ கொஞ்சம் நில்லுங்க இந்த கோபம் வேண்டான்னுதான் தியானம் பண்ண சொல்றோம்....

    ReplyDelete
  40. // Speed Master said...
    நல்ல பகிர்வு நன்றி//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  41. // சங்கவி said...
    நல்ல பகிர்வு....

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  42. // பாரத்... பாரதி... said...
    புத்தாண்டிற்கு ஏற்ற பதிவு, ஜென் கதையின் தாக்கத்திற்கு, மறுதலிப்பாகவும் தியானம் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள்.
    வீர பாண்டிய கட்டப்பெம்மனுக்கு எம் வீரவணக்கங்கள். நினைவு கூர்ந்தற்கு நன்றிகள்.//

    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிங்க பாரதி

    ReplyDelete
  43. // பாரத்... பாரதி... said...
    கதையில் வருவது போல, செய்யும் தொழிலே தெய்வம் எனக்கொள்ளுதல் வேண்டும்.
    நீங்கள் நல்ல வாசிப்பாளர் என்று தெரிகிறது தொடருங்கள்.
    ரசித்த வரிகள்.
    //நமது பலம்-பலவீனம், நிறை-குறைகளை நெஞ்சில் நிறுத்தி அன்றாடம் அலசுவோம். //

    தங்களின் பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் நன்றிங்க பாரதி தொடர்ந்து இணைந்திருங்கள்....

    ReplyDelete
  44. // எப்பூடி.. said...
    கட்டப்பொம்மன் பற்றிய தகவலுக்கு நன்றி, ஜென் குருவின் தியான கதையும் சிந்திக்க வைக்கும்படி உள்ளது. வாழ்த்துக்கள், தொடர்ந்தும் கலக்குங்கள்.//

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  45. // எப்பூடி.. said...
    எதுக்கு மைனஸ் ஒட்டு?//

    விடுங்க நண்பா இதேல்லாம் நமக்கு ஒரு பிரச்சினையேயில்லை.....

    ReplyDelete
  46. // "குறட்டை" புலி said...
    நான் தூங்கிட்டு இருக்கேன்.யாரும் கண்டுக்க மாட்டீங்களா?
    வந்து வாழ்த்திட்டுப் போங்க.இல்லையென,காட்டுப்பக்கம் வந்தா உங்களை சும்மா விட மாட்டேன்!
    ஆமா! இப்பவே சொல்லிட்டேன்.
    -"குறட்டை" புலி
    sleepingtiger007.blogspot.com//

    அய்யயோ என்னங்க இப்படி பயமுறுத்தீரீங்க...

    ReplyDelete
  47. // சசிகுமார் said...
    நல்ல பகிர்வு நண்பா//

    நன்றி சசி

    ReplyDelete
  48. // அரசன் said...
    அண்ணே அசத்தல் பதிவு ... கனகச்சிதமாய் சுருக்கமாகவும் , அதே நேரத்தில் நல்ல விடயங்களை விரிவாகவும் சொல்லி அசத்தி புட்டிங்க ....
    வாழ்த்துக்கள் அண்ணே //

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணே

    ReplyDelete
  49. // அரசன் said...
    சோதனைகளை புறம்தள்ளி
    வேதனைகளை வேரறத்து
    சாதனைக்கு கைகொடுப்போம்
    சரித்திரத்தில் இடம் பிடிப்போம்
    வாழ்வது ஒருமுறை
    வாழ்த்தட்டும் தலைமுறை//

    அற்புதம் அண்ணே .... மிக அவசியமான பதிவு.....
    அண்ணனின் இந்த பயணம் .... தொடர்ந்து பயணிக்கட்டும்,...//

    நிச்சயமாக உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவோடும் ஊக்கத்தோடும் தொடரும்.............

    ReplyDelete
  50. // THOPPITHOPPI said...
    அருமை

    இதுக்கு நெகடிவ் ஓட்டு போட்டு இருக்காங்க என்றால் என்ன சொல்ல.//

    பாராட்டுக்கு நன்றி நண்பரே நெகடிவ் ஓட்டு யாராவாது நம்ம ப்ரியமான எதிரியா இருப்பாங்க....

    ReplyDelete
  51. // Madhavan Srinivasagopalan said...
    நல்ல விஷயம்..
    பகிர்விற்கு நண்றிகள்.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  52. // வைகை said...
    கட்டபொம்மனை நினைவு கூர்ந்ததுக்கு நன்றி!//

    நன்றி அண்ணே நினைவு கூறுவது நமது பொறுப்பு அண்ணே

    ReplyDelete
  53. // வைகை said...
    பயபுள்ளக இங்கயும் மைனஸ் வோட்டு போட்ருக்குதுக....ஒரு வேளை பிரபல பதிவர் ஆயாச்சா?!!//

    விடுங்கண்ணே பிரபல பதிவரா?
    அப்படீன்னா? ஹிஹிஹி

    ReplyDelete
  54. // sakthistudycentre.blogspot.com said...
    நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி....
    http://sakthistudycentre.blogspot.com///

    கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  55. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    //வைகை said...

    பயபுள்ளக இங்கயும் மைனஸ் வோட்டு போட்ருக்குதுக....ஒரு வேளை பிரபல பதிவர் ஆயாச்சா?!!///

    இருக்கும் இருக்கும். தம்பி ட்ரீட் எப்போ?//

    அதான் இங்க ஏப்ரல் மாசம் வர்றீங்களே அப்ப பெரிய விருந்தே வச்சிடுவோம்.......

    ReplyDelete
  56. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    25//

    ஓகே ரைட்டு

    ReplyDelete
  57. // சௌந்தர் said...
    தியானம் பற்றி நல்ல தகவல் ஏம்பா யாரு அது உங்களுக்கு இந்த பதிவு பிடிக்கலையா மைனஸ் ஒட்டு...யாராவது தெரியாமா போட்டு இருப்பாங்க//

    நன்றி அண்ணே

    ReplyDelete
  58. // பலே பாண்டியா/பிரபு said...
    வீர பாண்டிய கட்டப்பெம்மனுக்கு எம் வீரவணக்கங்கள்...

    ஜென் குரு கதை மிக அருமை!!

    என் வலைப்பூவை தங்களது தளத்தில் இணைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.//

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  59. //
    பிரஷா said...
    நல்ல பகிர்வு நன்றி//

    நன்றிங்க சகோ

    ReplyDelete
  60. // ஜீ... said...
    தியானம் - அருமை!//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  61. /// ஆமினா said...
    //மாசற்ற மனம் உள்ளவர் விழி மூடி அமர்ந்திருக்க அவசியமில்லை.///

    உண்மை....

    அருமையான பதிவுன்ங்க. அப்ப இனிமே சுட்டாலும் தனியா உக்காந்து கண்ண மூடி தியானம் பண்ண மாட்டேன்.

    //இதுக்கு நெகடிவ் ஓட்டு போட்டு இருக்காங்க என்றால் என்ன சொல்ல. //
    நெகட்டிவ் ஓட்டு போடுரது இப்ப பேஷனா போச்சு சார்....

    பிரபல பதிவராகுறதுக்கு இதான் முதல் அறிகுறி!!!

    பிரபல பதிவர் வாழ்க..... நாளைய முதலமைச்சர் வாழ்க.....//

    நன்றிங்க சகோ ஹிஹிஹி

    ReplyDelete
  62. // தமிழ்த்தோட்டம் said...
    மிகவும் பயனுள்ள பகிர்வு பகிர்வுக்கு மிக்க நன்றி//

    தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி நண்பரே

    ReplyDelete
  63. // Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
    ஹ்ம்ம்ம்.... ஒரு பத்து நிமிடமாவது கண் மூடி...த்யானத்தில் இருக்க முயற்சி பண்றேன்...
    பகிர்வுக்கு நன்றி...

    வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு.. வணக்கம்.. :-)//

    நன்றிங்க சகோ

    ReplyDelete
  64. // ஆ.ஞானசேகரன் said...
    நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பா...

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்//

    வாங்க நண்பரே தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்

    நன்றி நண்பரே

    ReplyDelete
  65. // விக்கி உலகம் said...
    பகிர்வுக்கு நன்றி//

    நன்றிங்க நண்பரே

    ReplyDelete
  66. ////அறிவின் எதிரில் அறியாமை தலை வணங்குகிறது - ///

    நல்லதொரு ஆரம்பத்துடன் ஆரம்பித்து வீரத்துக்கு தலைவணங்கி வாழ்த்தும் தந்ததற்கு வாழ்த்துக்கள்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

    ReplyDelete
  67. // சுசி said...
    பகிர்வுக்கு நன்றி.//

    நன்றிங்க சகோ

    ReplyDelete
  68. // சி.பி.செந்தில்குமார் said...
    good post. but y negative vote even to a good post//

    நன்றி அண்ணே

    ReplyDelete
  69. // ஆயிஷா said...
    நல்ல பகிர்வு.//

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க....

    ReplyDelete
  70. // சே.குமார் said...
    அருமையான பதிவு. கட்டப்பொம்மன் குறித்த பகிர்வு சிறப்பு. உங்கள் வாழ்த்துக்கு நன்றி... உங்களுக்கு இந்த 2011 சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.//

    தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  71. //ம.தி.சுதா said...
    ////அறிவின் எதிரில் அறியாமை தலை வணங்குகிறது - ///

    நல்லதொரு ஆரம்பத்துடன் ஆரம்பித்து வீரத்துக்கு தலைவணங்கி வாழ்த்தும் தந்ததற்கு வாழ்த்துக்கள்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.//

    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  72. THIYANAM APPADINNALE *SALANAMILLATHA AMAITHI*.ADU IRUNTHUVITTAL THIYANAM THEVAI ILLAI..,AANAL IRAIVANAI THEDAVENDUM ENDRAL "ANBIN" VALI NAAM VALA VENDUM..,

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.