Monday, December 27, 2010

அன்பின் மறு உருவம் அன்னை தெரசா - (வரலாற்று மாந்தர்)

ணக்கம் நண்பர்களே,
இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகும்  வரலாற்று மாந்தர் தாம் வாழ்ந்தவரை அன்பும் நேசமும், பாசமும் கருணையும் சேர்ந்து அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர். இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் மறு உருவம் அன்னை தெரசா.

இரண்டு உலகப் போர்களை சந்தித்து விட்டோம், மூன்றாவது உலகப்போர் நிகழ்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, இராணுவ பலமோ, விஞ்ஞான அதிசயமோ அல்ல. அன்பும் நேசமும், பாசமும் கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர், இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரசா.


1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ந்தேதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என்ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்த குழந்தை விளங்கும் என்பது அதன் பெற்றோருக்கு அப்போது தெரியாது. ரோமன் கத்தோலிக்க தேவலாயத்தில் கன்னியாஸ்திரி ஆன பிறகு அவர் சகோதரி தெரசா என்று பெயர் மாற்றிக்கொண்டார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 6 ந்தேதி தனது 19 ஆவது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரசா.

அடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண் சுமார் 17 ஆண்டுகள் லொரட்டா கன்னிமார்களின் குழுவில் சேர்ந்து ஆசிரியராக பணியாற்றியபோது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் வாழ்ந்தோரின் நிலையையும் ஆதரவின்றி மாண்டோரின் நிலைமையும் அன்னை மனத்தை பிழிந்தன 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ந்தேதி ஓய்வுக்காக இந்தியாவின் ஜார்ஜிலிங் நகருக்கு இரயில் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார்.

நலிந்தோருக்கும் நோயாளிக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக்கொண்டு லொரட்டா கன்னிமார்களின் குழுவிலிருந்து அவர் விலகினார். கல்கத்தாவில் மிக ஏழ்மையான சேரிகளில் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் வந்து சேர்ந்தார் அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் 5 ரூபாயும் மன நிறைய அன்புதான் கடுமையான ஏழ்மையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரசா 1950ல் 'Missionaries of Charity' என்ற அமைப்பை உருவாக்கினார்.

1952ல் (Nirmal Hriday) என்ற இல்லத்தை திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியை தந்தது அன்னையின் இல்லம் சுமார் 19 ஆயிரம் பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர் ஆனால் அந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவனைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவினர்.

ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றபோது அந்த செல்வந்தர் அன்னையின் கையில் காரி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா? கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்கு போதும், என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்கு முக்காடிப்போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் விழுந்து கதறி அழுது வாரி வழங்கினார்.

1953ல் ஓர் அநாதை இல்லத்தையும், 1957ல் தொழுநோளிக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரசா. பலர் அருவறுத்து ஒதுங்கும்போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழுநோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயங்களுக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவரது 'Missionaries of Charity' அமைப்பு  தற்பொழுது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன. தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன.

1979ல் அமைதிக்கான “நோபல் பரிசு” 1980 ல் இந்தியாவின் “பாரத ரத்னா” விருது 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கம். அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ந்தேதி  அவரது 87 ஆவது வயதில் நின்றபோது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன. தாம் வாழ்ந்தபோது அவரிடம் இருந்த சொத்தெல்லாம் 3 வெள்ளைச்சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெப மாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அன்னையை....
"சாக்கடையோரச் சந்ததிக்கும் 
சாமரம் வீசிய பூமரம்" 

என்று வருனித்தார். அன்பிற்கு அன்னை தெரசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்னை தெரசா போன்றவர்களை எண்ணித்தான் “நல்லார் ஒருவர் உளறேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற பாடலை அவ்வையார் எழுதியிருக்க வேண்டும். 

நாம் அன்னை தெரசா போல் சக மனிதரை நேசிக்கும் மனிதநேயத்தை உடல் வலிக்கும் வரை கொடுக்க வேண்டியதில்லை, நமது உயிரை உருக்கி ஏழைகளிடமும் ஆதரவற்றோர்களிடமும் அன்பு செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவர்களிடமும், அன்றாடம் நாம் சந்திப்பவர்களிடமும், நமக்கு அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும். 

 (தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்        

69 comments:

  1. அருமையான பதிவு,
    நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையானது அன்பும் கருணையும்தான்....

    ReplyDelete
  2. அருமையான பதிவு!!!

    ReplyDelete
  3. மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...

    நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
    http://sakthistudycentre.blogspot.com
    என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

    ReplyDelete
  4. வெளிநாட்டவராக இருந்த போதும் இந்தியராக வாழ்ந்து தன் வாழ்வை ஏழை எளிய மக்களுக்கு அர்ப்பணித்து கொண்ட அவருக்கு வணக்கங்கள்!

    ReplyDelete
  5. அனைவருக்கும் தேவையான நல்ல பதிவு!

    ReplyDelete
  6. பாராட்டுக்கள் நல்லாருக்கு

    ReplyDelete
  7. அருமையான பதிவு,

    ReplyDelete
  8. நல்ல பதிவு .அன்னைக்கு எனது வணக்கங்கள்

    ReplyDelete
  9. //நமக்கு வேண்டியவர்களிடமும், அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும். //

    நச்.

    ReplyDelete
  10. வணக்கம் . தொடர்ந்து நல்ல ஆக்கங்களை வெளியிடுகின்றீர் பாராட்டுகள் அன்னை தெரேசா நாடுகடந்து இந்தியா வந்து தான் பதின் பருவத்தில் (டீன் ஏஜ் ) ஏழைகளுக்காக தம்மை அற்பனித்து கொண்டவர் . அவரைபற்றிய செய்திகள் இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ளப்பட வேண்டியதே .

    ReplyDelete
  11. மிக நல்ல பகிர்வு .
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  12. சீராக தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது


    வாழ்த்துகள்

    ReplyDelete
  13. சிறப்பான பதிவு, தொடர்ந்து அறிவியலாக போட்டுத்தள்ளுகிறீர்கள், வாழ்த்துக்க்கள்.

    ReplyDelete
  14. அண்ணே அசத்தலான பதிவு ... தொடரட்டும் உங்களின் இந்த அரும் பணி....

    ReplyDelete
  15. நிறைய விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உங்களையும், உங்கள் வலை பக்கத்தையும் பார்த்ததின் மூலம் அடைந்துகொண்டேன் .... இது ஒரு அறிவு களஞ்சியம் என்றே சொல்லலாம்....

    தொடரட்டும் /////

    ReplyDelete
  16. அன்னைக்கு வணக்கம் ....

    ReplyDelete
  17. அன்பின் இலக்கணமாய் வாழ்ந்த அன்னையை பற்றிய இந்த பகிர்வுக்கு மிகுந்த நன்றிகள் !

    ReplyDelete
  18. பகிர்வுக்கு நன்றி

    அன்னைக்கு நிகர் அன்னையே

    ReplyDelete
  19. அருமையான தகவல்

    ReplyDelete
  20. அருமையான பதிவு,
    நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையானது அன்பும் கருணையும்தான்....

    இரு படிச்சிட்டு வரேன்

    ReplyDelete
  21. அன்புத் தகவல் பகிர்வு நன்று

    ReplyDelete
  22. கருணை என்பது கிழங்கின் பெயராகவே எஞ்சிவிட்ட காலத்தில் தனிப்பெருங் கருணையோடு வந்தவர் அன்னை. நல்ல பகிர்வு மாணவன்.

    ReplyDelete
  23. நல்ல பகிர்வுங்க.

    ReplyDelete
  24. மிக அருமையான பகிர்வு மாணவன்.. நன்றி..

    ReplyDelete
  25. // ரஹீம் கஸாலி said...
    அருமையான தகவல்//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  26. // பதிவுலகில் பாபு said...
    நல்ல பதிவு....

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    தொடர்ந்து இணைந்திருங்கள்.........

    ReplyDelete
  27. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    தேவையான தகவல்//

    வாங்கண்ணே வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  28. // MANO நாஞ்சில் மனோ said...
    அருமையான பதிவு,
    நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையானது அன்பும் கருணையும்தான்..//

    ஆமாம் சார் இப்போது நமக்கு தேவை உண்மையான அன்பும் மனிதநேயமும் தான்,

    தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  29. // ஆமினா said...
    அருமையான பதிவு!!//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  30. // வெறும்பய said...
    அருமையான பதிவு!!!//

    மிக்க நன்றி அண்ணே

    ReplyDelete
  31. // sakthistudycentre.blogspot.com said...
    மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...

    நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
    http://sakthistudycentre.blogspot.com
    என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி
    December 23, 2010 5:23 PM

    ReplyDelete
  32. // சே.குமார் said...
    நல்ல பதிவு.

    மிக்க நன்றி நண்பரே

    தொடர்ந்து இணைந்திருங்கள்.........

    ReplyDelete
  33. ரொம்ப அருமை சகோ..

    ReplyDelete
  34. // எஸ்.கே said...
    வெளிநாட்டவராக இருந்த போதும் இந்தியராக வாழ்ந்து தன் வாழ்வை ஏழை எளிய மக்களுக்கு அர்ப்பணித்து கொண்ட அவருக்கு வணக்கங்கள்!//

    இந்த அன்பும் மனிதநேயத்தின் காரணமாகத்தான் இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் மறு உருவம் அன்னை தெரசா.

    வருகைக்கு மிக்க நன்றி நண்பரே
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  35. // வைகை said...
    அனைவருக்கும் தேவையான நல்ல பதிவு!//

    நன்றி அண்ணே

    ReplyDelete
  36. // இரவு வானம் said...
    நல்ல பகிர்வு நண்பா//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  37. // ஆர்.கே.சதீஷ்குமார் said...
    பாராட்டுக்கள் நல்லாருக்கு//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க அண்ணே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  38. // siva said...
    அருமையான பதிவு,//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பா...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  39. // karthikkumar said...
    nice post :)//

    நன்றி அண்ணே

    ReplyDelete
  40. // நா.மணிவண்ணன் said...
    நல்ல பதிவு .அன்னைக்கு எனது வணக்கங்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  41. // அன்பரசன் said...
    //நமக்கு வேண்டியவர்களிடமும், அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும். //

    நச்.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  42. // polurdhayanithi said...
    வணக்கம் . தொடர்ந்து நல்ல ஆக்கங்களை வெளியிடுகின்றீர் பாராட்டுகள் அன்னை தெரேசா நாடுகடந்து இந்தியா வந்து தான் பதின் பருவத்தில் (டீன் ஏஜ் ) ஏழைகளுக்காக தம்மை அற்பனித்து கொண்டவர் . அவரைபற்றிய செய்திகள் இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ளப்பட வேண்டியதே .//

    இன்றைய தலைமுறை நண்பர்களும் தெரிந்துகொள்வதற்காகதான் நண்பரே இதுபோன்ற வரலாற்று தகவல்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன்...

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  43. // நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    மிக நல்ல பகிர்வு .
    பகிர்வுக்கு நன்றி .//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சார்...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  44. // ஜிஎஸ்ஆர் said...
    சீராக தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது


    வாழ்த்துகள்//

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே,
    நிச்சயமாக உங்களைபோன்ற நண்பர்களின் ஆதரவோடும் ஊக்கத்தோடும் தொடர்ந்து செல்வேன்

    தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  45. // எப்பூடி.. said...
    சிறப்பான பதிவு, தொடர்ந்து அறிவியலாக போட்டுத்தள்ளுகிறீர்கள், வாழ்த்துக்க்கள்.//

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே....
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  46. // அரசன் said...
    அண்ணே அசத்தலான பதிவு ... தொடரட்டும் உங்களின் இந்த அரும் பணி....//

    நிச்சயமாக உங்களைப் போன்றவர்களின் ஆதரவோடு.......

    ReplyDelete
  47. // அரசன் said...
    நிறைய விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உங்களையும், உங்கள் வலை பக்கத்தையும் பார்த்ததின் மூலம் அடைந்துகொண்டேன் .... இது ஒரு அறிவு களஞ்சியம் என்றே சொல்லலாம்....

    தொடரட்டும் //////

    நன்றி அண்ணே

    ReplyDelete
  48. // கே.ஆர்.பி.செந்தில் said...
    அன்னைக்கு வணக்கம் ....//

    வருகைக்கு மிக்க நன்றி அண்ணே

    தொடர்ந்து இணைந்திருங்கள்.......

    ReplyDelete
  49. // பாரதி வைதேகி said...
    அன்பின் இலக்கணமாய் வாழ்ந்த அன்னையை பற்றிய இந்த பகிர்வுக்கு மிகுந்த நன்றிகள் !//

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.........

    ReplyDelete
  50. // THOPPITHOPPI said...
    பகிர்வுக்கு நன்றி

    அன்னைக்கு நிகர் அன்னையே//

    உண்மைதான் நண்பரே

    ReplyDelete
  51. // kalpanarajendran said...
    அருமையான தகவல்//

    மிக்க நன்றிங்க......

    ReplyDelete
  52. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    அருமையான பதிவு,
    நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையானது அன்பும் கருணையும்தான்....

    இரு படிச்சிட்டு வரேன்//

    படிக்காமலேயே கமெண்டா.....

    ஹிஹிஹி

    ReplyDelete
  53. // dineshkumar said...
    அன்புத் தகவல் பகிர்வு நன்று//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  54. // செங்கோவி said...
    கருணை என்பது கிழங்கின் பெயராகவே எஞ்சிவிட்ட காலத்தில் தனிப்பெருங் கருணையோடு வந்தவர் அன்னை. நல்ல பகிர்வு மாணவன்.//

    மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே
    தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  55. அருமையான பதிவு
    எதிர்காலத்தில் நான் தொடங்கவிருக்க்கும் பள்ளிக்கு அன்னை தெரஸா பள்ளிதான் பெயரே

    ReplyDelete
  56. // சுசி said...
    நல்ல பகிர்வுங்க.//

    Thanks

    ReplyDelete
  57. // தேனம்மை லெக்ஷ்மணன் said...
    மிக அருமையான பகிர்வு மாணவன்.. நன்றி..//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்கம்மா...

    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  58. // vanathy said...
    நல்ல பதிவு//

    நன்றிங்க....

    ReplyDelete
  59. // சி.பி.செந்தில்குமார் said...
    சூப்பர் போஸ்ட்//

    வாங்கண்ணே,

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணே....
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  60. // ஆனந்தி.. said...
    ரொம்ப அருமை சகோ..//

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க சகோ

    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  61. //நமக்கு வேண்டியவர்களிடமும், அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும். //

    தெய்வத்தாய் !! மனம் சோர்வுற்ற நேரம் இவரை பற்றி படித்தால் போதும், கிடைபதர்கறிய இந்த வாழ்வின் மகத்துவம் புரியும். அன்பால் மட்டுமே எல்லோரையும் வசபடுத்தியவர். அன்பை போதித்தவர்.

    தாயே உங்களின் வார்த்தைகளே இந்த உலகை வழிநடத்த வேண்டும்.

    பகிர்வுக்கு நன்றி மாணவன்.

    ReplyDelete
  62. அன்று மொரார்ஜி தேசாய் மத்தியில் ஆட்சி செய்த நேரம்..ஒரு எம்.பி இந்தியா முழுமைக்கும் மதமாற்ற தடைச்சட்டம் கோரி ஒரு தனி நபர் மசோதாவைக் கொண்டுவந்தார்..அத்அற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஸ்தவர்கள் மும்பையில் ஒரு பேரணி நடத்தினார்கள் அதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,இந்த தெரஸா அம்மையார் உட்பட ஆயிரக்கணக்காணோர் கலந்துகொண்ட பேரணியில் "இந்த நாட்டில் ஒருவரை ஏசுவிடம் கொண்டுவருவதற்கு (அதாவது மதம் மாற்றுவதற்கு )உரிமையில்லையென்றால் இங்கு சேவை செய்து என்ன பயன் "என்று கேட்டது இந்த அன்பின் மறு உருவம்தான்...நண்பர்கள் அதையும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுதல் நல்லது......

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.